சொன்னேனே!

வே.ம.அருச்சுணன்- மலேசியா. மாத்திகா மும்முரமாகக் கிளம்பிக்கொண்டிருந்தாள்! “ஏம்மா,மாத்திகா கோயில் திருவிழாவில்தானே கலந்து கொள்ளப் போரே!” அம்மா சிவபாக்கியம் அக்கறையோடு கேட்கிறார். “ஆமாம்மா நம்ம குடியிருப்புப் பகுதியில இருக்கிற அம்மன் கோயில் திருவிழாவுக்குத்தான் போறேன். அதுக்குத்தானே இன்றைக்கு வேலைக்குச் செல்லாமல் விடுப்பு எடுத்தேன்!”…

புராதனத் தொடர்ச்சி

புராதனச் சம்பவங்கள் புத்தியில் படிமமேறி நிகழ் வாழ்வில் நெளிந்து உட்ப் புகவும், வெளி வரவும் முடியாது உறக்கமற்ற சூனியத்தை ஒளிப் பிழம்புகளாய் சுருட்டியள்ள .. நிலை குலைந்து புராதனமனைத்தும் துடைத்தெறியும் வெறியில் புதியன பலவும் படித்தறிந்து புகுத்தி வைக்க எத்தனிக்கும் மனதில்…

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்

ஐம்பது வருடங்களுக்கு மேலாயிற்று. நான் எழுதிய முதல் கட்டுரையிலே நாம் தமிழ் சமூகத்திலிருந்து என்னென்ன எதிர்பார்க்க்லாம். எது அறவே தமிழ்னுக்கு சித்திக்க இயலாத குண்ங்கள் என்று குறிப்பிட்டிருந்தேன். அது தான், திரும்பச் சொல்கிறேன்,. நான் எழுத முயன்ற முதல் முயற்சி. சித்திக்க…

(77) – நினைவுகளின் சுவட்டில்

பட்நாயக்கிற்கு பார்ட்டி கொடுக்க வேண்டுமென்று சொன்னான் மிருணால். “இவ்வளவு நாள் நம்மோடு பழகியிருக்கிறான். இப்போது நம்மை விட்டுப் பிரிகிறான். இனி நாம் எப்போதாவது பார்ப்போம். தினமும் அவனைப் பார்த்துப் பேசி பழகுவது என்பது இனி இல்லை. அவனுக்கு விருந்து கொடுத்து அனுப்ப…

எஸ்டிமேட்

சின்னவன்., ”அம்மா. சீக்கிரம். செய்தாச்சா. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வந்துருவாங்க..” ”சரிடா. சமையல் ஆகிக்கிட்டே இருக்கு. கொஞ்சம் ஃபாண்டாவும்., ஐஸ்க்ரீமும் வாங்கி வந்துரு.” பெரியவன் போனில் நண்பனிடம் .,”டேய் எங்க வீட்டுல என் தம்பி ஃப்ரெண்ட்ஸ் சாப்பிட வர்றாங்களாம். ஒரே மட்டன்…

தமிழர் கலாச்சார மீட்டெடுக்கும் முயற்சிக்கான விண்ணப்பம்

அன்புடையீர் வணக்கம் மண்ணில் ஜனித்த கலைகள் ஆயிரமாயிரம். அவற்றுள் முந்திப் பிறந்தவை தோற்பாவை, கட்டப்பொம்மலாட்டம் , தெருக்கூத்து,முதலான நிகழ்த்துக்கலைகள்தாம் என்றால் அது மிகையில்லை. மனிதனுக்கு மண் அளித்த மாபெருங்கொடையென்று இவற்றைச் சொல்லலாம். நவீனயுகத்தில் இதுபோன்ற மண்சார் நிகழ்த்துக்கலைகள்,மற்றும் கிராமியக்கலைகள் கேலிக்கும், கேள்விக்கும்…

சந்திப்பு

ஒரு உறவு ஏற்படும்போதே அதிலிருந்து விலகிப் பார்ப்பதான சிந்தனையும் தோன்ற ஆரம்பிக்கிறது. எந்நேரமும் பிரியலாம் என்ற அணுக்கத்தோடே பகிரப்படுகிறது எல்லா சொந்த விஷயங்களும் இந்நேரத்தில் இன்னதுதான் செய்து கொண்டிருக்கக்கூடும் என்பது தெரியும் வரை தொடர்கிறது பேச்சு. ஏன் பேசுகிறோம் எதற்கு சந்திக்கிறோம்…

ஒரு விதையின் சாபம்

ஆழத்தில் புதைந்த விதை ஒன்று தனது வாழா வெட்டித்தனத்தை எண்ணியபடி அழுகிறது முளைக்கும் காலத்தில் தூங்கிப் போனதால் இறப்பதற்கும் பிழைக்கவும் வழியற்றது புரிகிறது தன்னோடு விதைக்கப்பட்ட விதைகள் யாவும் முளைத்து செடியாய் அவதரித்தது கண்ணுக்குள் விரிகிறது அந்தச் செடிகளின் வேர்கள் தன்னை…

எடை மேடை

தன்னைத்தானே நீதிமானாகக் கற்பித்துக் கொள்ளும் ஒருவன் பார்க்கும் அனைத்தையும் எடையிட்டுக் கொண்டிருக்கிறான். கடந்து செல்லும் ஒரு பெண்ணை உற்று நோக்குகிறான். அவள் திரும்பப் பார்த்தால் மகிழ்வடைகிறான். பிடித்தமானவள் என்றோ உத்தமி என்றோ குறியீடு இடுகிறான். அவள் அசட்டையாய்க் கடந்தால் திமிர்பிடித்தவளாகிறாள் வேறு…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (மெக்காவை நோக்கி) (கவிதை -49)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா கண்களின் வேலை முன்னுள்ளதைக் காண்ப தற்கு. ! ஆத்மா இருப்பது தனது ஆனந்தத் திற்கு ! மூளையின் பயன் இதுதான் மெய்யாய் ஒருத்தியை நேசிப்ப தற்கு !…