Posted inகவிதைகள்
இரு கவிதைகள்
அகதிக் காகம் - பத்மநாபபுரம் அரவிந்தன் - நீண்டதோர் கடற் பயணத்தின் மூன்றாம் நாள் அதிகாலை கண்ணில்ப் பட்டது முன்புறக் கொடிமர உச்சியில் அமர்ந்திருந்த அக்காகம் .. சில நூறு மைல்கள் கரையே இல்லாப் பெருங் கடல் நடுவே எப்படி வந்ததோ, கண்டம் கடக்கும் பறவைகள் பலவும் ஓய்வெடுக்க வந்திருந்து மீண்டும் போகும்.. காகங்கள் பொதுவாக இத்தனை தூரம் பார்ப்பதே இல்லை.. இக்காகம் வழி தவறிப் பெருங் காற்றில் அடித்துவரப் பட்டிருக்கலாம்.. தொலை பயணக் கப்பல்கள் ஓவ்வொன்றாய் அமர்ந்தமர்ந்து வந்திருக்கலாம்.. எம்பிப் பறக்க எத்தனித்து பெருங் காற்றின் வேக வீச்சில் தடுமாறித் தத்தளித்து மீண்டுமது கப்பல் தளத்தினில் வந்தமரும் தட்டில் அரிசி, கடலை, மாமிசத் துண்டுகள் கிண்ணத்தில் தண்ணீரும் கொண்டுவந்து தளத்தில் வைத்து தள்ளி நின்றுப் பார்த்திருந்தேன்.. …