கு.ப.ரா. சிறுகதைகள் – ஒரு பார்வை

This entry is part 9 of 39 in the series 4 டிசம்பர் 2011

முனைவர் சுபாசு சந்திரபோசு தொகுத்த கு.ப.ராஜகோபாலனின் 15 சிறுகதைகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படித்தவுடன் எனக்குத் தோன்றியது இவர் காலத்துக்கு ஏற்ற கதைகளை எழுதவில்லை. அக்காலத்தையும் தாண்டி எழுதி இருக்கிறார் என்பதே.
புத்தகச் சந்தையில் புதுமைப்பித்தனின் பெண்ணியச் சிறுகதைகள் எனும் நூலை வாங்கியபோது சுகன் சொன்னார்: ‘ இப்ப படிச்சா போரடிக்கும் ‘ கு.ப.ரா. கதைகளையும் நான் அப்படியே அணுகினேன். போரடிச்சா வச்சுடலாம்.
ஆனால் ஆச்சர்யம்! அவை போரடிக்கவில்லை. இன்·பாக்ட் கொஞ்சம் சுவாரஸ்யமாகக்கூட இருந்தன. அசோகமித்திரனுக்குப் பிறகு பல தளங்களில் பயணிக்கிறது இவரது கதைகள். பின்னட்டையிலிந்த கருப்புக் கண்ணாடி அணிந்த கோட்டோவியம் கொஞ்சம் தமிழ்வாணனையும் மௌனியையும் ஞாபகப்படுத்தின.
மின்னக்கலை என்றொரு கதை. புல்கட்டு விற்கும் ஒரு பெண்ணைப் பற்றியது. அழகான பெண். அவளைப் பார்ப்பதற்காகவே தேவையில்லையென்றாலும் தினமும் புல்லுக்கட்டு வாங்கும் வயதான ஆள், தாயாகாத நடுத்தர வயது மனைவி,மூன்றாம் வீட்டு கணபதி, மின்னக்கலையின் புருஷன். இக்கதாபாத்திரங்களுக்குள் பின்னிப் புனைகிறார் கதையை. மின்னக்கலையைக் காணாமல் அவள் வீடு தேடி போகும் பெரியவர், அவள் கருவுற்றிருப்பதை காண்கிறார். தான் தினமும் புல்லுக்கட்டிற்குக் கொடுக்கும் ‘ நாலு ரூவா ‘ தான் அவர்கள் வருமானம் என்று அறிகிறார். இப்போது அவளால் புல் வெட்டப் போக முடிவதில்லை. அவள் கணவனை தன் நிலத்தில் பண்ணையாளாகச் சேர்த்துக் கொள்கிறார்.
‘ பிள்ளைக்குட்டி நல்லாயிருக்கணும் ‘ என்று கும்பிட்டான்.
‘ எனக்கு பிள்ளையும் கிடையாது. குட்டியும் கிடையாது, எல்லாம் மின்னக்கலைதான் ‘
மனசு கனத்துப் போகிறது.
திரை என்றொரு கதை. இளம் மனைவி. அவளைத் தேடி வரும் கணவன். அவள் ஆசையாக எழுதிய கடிதங்களை அசைபோட்டபடியே மாடியில் காத்திருக்கிறான். இரண்டு நாட்கள். அவள் வரவே இல்லை. எல்லோரும் வெளியில் கிளம்புகிறார்கள். கீழே வீணை வாசிக்கும் சப்தம் கேட்கிறது.
தாரி சூசுடுகன்னதி நீது ப்ரியா
உன் காதலி உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள். இறங்கி வருகிறான். வாசித்தது தன் மனைவி இல்லை. அவள் தமக்கை. விதவை. அவனுக்கு விளங்கி விட்டது. கடிதம் எழுதியதெல்லாம் இவள் தான். கேட்கிறான். தப்பு. அவள் சொல்லவே நான் எழுதினேன். எனக்கென்று வாழ்வு கிடையாது. மேலே போங்கள்.
வெளியே போனவர்கள் வந்து விட்டார்கள். தமக்கை சொல்கிறாள்.
‘ மாடிக்குப் போ ‘
இலக்கிய சிந்தனை பாரதி சொன்னார்: ‘ அப்படி காலம் கடந்து எழுதியதால்தான் அவர் கதைகள் இன்றும் நிற்கின்றன. ‘
உண்மை.

சிறகு இரவிச்சந்திரன்

Series Navigationமலைபேச்சு – – செஞ்சி சொல்லும் கதை – 3நானும் ஜெயகாந்தனும்
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    லறீனா அப்துல் ஹக் says:

    ஒரு வித்தியாசமான அலசல். புதுமைப் பித்தனின் கதைகள் போரடிக்கும் என்றால், கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது! ஆனால், வாசகரிடையே ஆளுக்காள் ரசனை வேறுபடலாம் என்றே புரிந்துகொள்கிறேன். :)

  2. Avatar
    Dr.G.Johnson says:

    Kaalathai vendra ezhuthukkalPuthumaipithananudaiyavai. Ku.Pa.Ra.vum avvare. Ivargal iruvarum sirukathiyin vazhikaattigalum munnodikalum avaargal.Athanalthan avaragal ezhuthiyavai indrum pesapadugindrana.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *