பள்ளி மணியோசை

This entry is part 27 of 42 in the series 29 ஜனவரி 2012

பிடிக்காத வாத்தியாரின்
பாட நேரங்களில்
கூர்ந்து கவனிக்கிறார்கள்
அடுத்த பாட வாத்தியாரை
வரவேற்க போகும் மணியோசையை

அந்த நாளின்
இறுதி பாடத்தின்
கடைசி பத்து
நிமிடங்களில்
போர்கால அடிப்படையில்
ஆயத்தமாகிறார்கள்
விடுப்பு மணியின்
மூன்றாவது மணி
யாரும் கேட்காமல்
ஆனாதையாய்

வகுப்பறையில்
உட்கார்ந்தபடியே
ஒளிந்துக் கொள்கிறார்கள்
வீட்டுப்பாடம்
செய்யாத நாட்களில்

கடமையை செய்
பலனை எதிர் பார்க்காதே
கத்துக் கொடுத்தார்
ஆசிரியர்
முதன் முறையாக
வீட்டுப்பாடம் முடித்தும்
படித்தும் வந்தவனிடம்
அவர் ஒன்றும் கேட்கவில்லை

வாத்தியார்
அடிக்கும்போது வலித்தாலும்
அடிவாங்கியவர்களிடம்
பெருமைக்காய் சொல்லிக்கொண்டான்
தனக்குத் தான்
அடி பலம் என்று
——————

parthasarathy.balaraman@gmail.com

Series Navigationஅப்பாவின் நினைவு தினம்கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) தெறித்த முத்துக்கள் ! (கவிதை -58)
author

ப.பார்த்தசாரதி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *