இஸ்லாமிய வழியில் வந்த மத ஸ்தாபகர்களில் ஒருவராக பஹாவுல்லா அவர்களை முன்பு பார்த்தோம்.
இந்த வாரம் இந்தியாவில் பிறந்து இஸ்லாமில் ஒரு பிரிவாகவே தொடர விரும்பும் அஹ்மதியா பிரிவை தோற்றுவித்த மிர்ஸா குலாம் அஹ்மது அவர்களை பார்க்கலாம்.
இஸ்லாமில் நிறைய பிரிவுகள் இருந்தாலும் இரண்டு மிக முக்கியமான பிரிவுகளாக ஷியா பிரிவையும் சுன்னி பிரிவையும் குறிப்பிடலாம். இதற்கு முக்கிய காரணம் இந்த பிரிவுகளே சரியான பிரிவுகள் என்று கருதும் அரசாங்கங்கள் ஆட்சியில் இருப்பதே. அரேபியாவை ஆளும் சவுதி வமிசம் அரேபியாவுக்கு சவுதி அரேபியா என்று பெயரிட்டு அதில் அதிகாரபூர்வ மதமாக இஸ்லாமை அறிவித்துள்ளது அறிவோம். ஆனால், அது சுன்னியில் ஒரு பிரிவான வஹாபி இஸ்லாமே என்பது கூறாமல் விளங்குவது. அதே போல சுன்னி பிரிவினர் பெரும்பான்மையாக இருக்கும் பல நாடுகளில் சுன்னி பிரிவே சரியான இஸ்லாமிய வழியாக அங்கீகரிக்கப்படுவது போலவே ஷியா பிரிவு ஆளும் மதமாக உள்ள ஈரானில் ஷியா பிரிவே அதிகாரப்பூர்வமான சரியான இஸ்லாமாக பறைசாற்றப்படுகிறது.
அப்படி அதிகாரப்பூர்வமாக இல்லாமல் இருந்தாலும் ஏராளமான பிரிவுகள் இஸ்லாமில் உண்டு. அதில் சமீபத்தில் தோன்றி பரவி வரும் ஒரு பிரிவு அஹ்மதியா பிரிவு. இந்த பிரிவை ஷியாக்களும் சுன்னிகளும் முஸ்லீம்கள் அல்ல என்று நிராகரிக்கிறார்கள். பாகிஸ்தான் போன்ற சில நாடுகளில் இந்த பிரிவினர் தங்களை முஸ்லீம்கள் என்று கூறிகொள்வதும், அவர்களது மதவழிபாட்டுத்தலங்களை மசூதிகள் என்று அழைப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியா உட்பட பல நாடுகளில் அப்படிப்பட்ட தடை எதுவும் இல்லை.
மிர்ஸா குலாம் அஹ்மது பெப்ரவரி 13 ஆம் தேதி 1835 ஆம் ஆண்டு பஞசாப் மாநிலத்தில் இருக்கும் குவாதியான் என்ற நகரில் பிறந்தார். இவர் ஈரானிலிருந்து இந்தியா வந்து தங்கிய முஸ்லீம்களின் வழியில் பிறந்தவர். தனது 40 ஆவது வயதில் இறைவன் தன்னிடம் பேச ஆரம்பித்ததாக கூற ஆரம்பித்தார். 1886இல் ஹோசியார்பூர் என்ற ஊருக்கு சென்ற போது தன்னிடம் இறைவசனங்கள் இறங்க ஆரம்பித்ததாக கூறுகிறார். அந்த நேரத்தில் சூபி ஞானிகள் செய்யும் சில்லா நாசினித்தில் (பெரும்பாலும் இந்திய ஈரானிய சூபிகளிடம் இருக்கும் பழக்கம்) ஈடுபட்டிருந்தார். இது தனிமையில் ஒரு வட்டத்துக்குள் இருந்து 40 நாட்கள் தூக்கமும் உணவும் இல்லாமல் இருப்பதாகும். இது இயேசு நாற்பது நாட்கள் வனத்தில் இருந்ததையும், மோஸஸ் சினாய் மலையில் நாற்பது நாட்கள் இருந்ததற்கும், எலிஜா என்ற தீர்க்கதரிசி நாற்பது நாட்கள் பட்டினியாக இருந்ததோடும் ஒப்பிடப்படுகிறது. ஆனால், குலாம் மிர்ஸா பட்டினியுடன் இருக்கவில்லை. அவ்வப்போது உணவு உண்டதாக கூறுகிறார். இந்த காலத்தில்தான் அவருக்கு ஒரு மிகச்சிறப்பான மகன் பிறக்கப்போவதாக இறைவன் கூறியதாக கூறினார்.
இதற்குப் பின்னர் தன்னை ஒரு முஜாதித் (சீர்திருத்தவாதி) என்று கூறிகொண்டு தன்னை இஸ்லாமிய நபியாக முன்னிருத்திக்கொண்டார். இறுதித்தீர்ப்பு நாளன்று இயேசு வருவார் என்ற இஸ்லாமிய நம்பிக்கையை முன்னிருத்தி தன்னையே அப்படிப்பட்ட இயேசு என்று கூறிக்கொண்டார். இஸ்லாமியர்கள் எதிர்பார்ப்பது போல மிலிட்டரி தலைவராக இயேசு வரமாட்டார் என்றும் ஆன்மீக தலைவராகவே வருவார் என்றும், இனி ஜிஹாத் என்னும் இஸ்லாமிய போர் இந்த காலத்தில் தேவை இல்லை என்றும் அறிவித்தார்.
இது பல இஸ்லாமிய தலைவர்களை இவருக்கு எதிராக திருப்பியது. இப்போதும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு உதவியாக முஸ்லீம்களின் ஜிஹாத் உணர்வை மழுங்கடிக்க இவர் பயன்படுத்தப்பட்டார் என்று இதர முஸ்லீம் தலைவர்கள் இவரை குற்றம் சாட்டுகிறார்கள். தன்னை இறுதி மெஹ்தியாகவும் வாக்களிக்கப்பட்ட மெசியாவாகவும் அறிவித்துகொண்டபின்னால், பல முஸ்லீம் தலைவர்கள் இவரை காபிர் என்றும், இவரையும் இவரது சீடர்களையும் கொல்லத்தகுந்தவர்களாக அறிவித்து பத்வா விதித்தனர். அந்த பத்வா இந்தியாவெங்கும் எடுத்து செல்லப்பட்டு 200க்கும் மேற்பட்ட முஸ்லீம் தலைவர்கள் கையெழுத்திட்டனர்.
ஈத்-உல்-அதா திருவிழாவன்று 1900இல் இவர் அரபிய மொழியில் ஒரு மணிநேரம் தியாகத்தை பற்றி உரையாற்றினார். இந்த உரை இறைவனால் அவருக்கு அளிக்கப்பட்டது என்று அவரை பின்பற்றுபவர்கள் கொண்டாடுகின்றார்கள். இந்த உரையின் போது அவர் குரல் மாறியதாகவும், அவர் ஒரு மோன நிலையிலிருந்து இந்த உரையை ஆற்றியதாகவும் கூறுகிறார்கள். இந்த உரையை பற்றி பின்னால் மிர்சா குலாம் எழுதும்போது
It was like a hidden fountain gushing forth and I did not know whether it was I who was speaking or an angel was speaking through my tongue. The sentences were just being uttered and every sentence was a sign of God for me.
— Mirza Ghulam Ahmad, Haqeeqatul-Wahi[41]
என்று எழுதினார்.
இஸ்லாமிய பாரம்பரியத்தின் படி இயேசு இரண்டாம் முறை வரும்போது டமாஸ்கஸ் நகருக்கு கிழக்கே வெள்ளை மினாரட்டுக்கு அருகே உதிப்பார் என்று இருப்பதாக கூறிய இவர், தன்னையே இயேசு என்று கூறிகொள்வதால், தனது ஊரான குவாதியான் நகரிலேயே 1903இல் வெள்ளை மினாரட் கட்ட அஸ்திவாரம் போட்டார். இந்த மினாரட் 1916 இல் கட்டி முடிக்கப்பட்டது. இது அஹ்மதியா இஸ்லாமின் சின்னமாக கருதப்படுகிறது.
ஆர்ய சமாஜ் அமைப்பினரோடும், கிறிஸ்துவ மிஷனரிகளோடும், இதர இஸ்லாமிய தலைவர்களோடு விவாதத்தில் ஈடுபட்டார்.
லாகூரில் அவரது மருத்துவர் டாக்டர் சையத் முகம்மது உசேனின் வீட்டில் இருக்கும்போது வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மரணமடைந்தார்.
—
இவரது காலத்திலேயே ஏராளமான முஸ்லீம்கள் இவரை பின்பற்றினர். இவரது காலத்துக்கு பின்னர் அந்த இயக்கம் இரண்டாக உடைந்தது. ஒன்று லாகூர் அஹ்மதியா இயக்கம் அடுத்தது அஹ்மதியா முஸ்லீம் இயக்கம்.
அஹ்மதியா முஸ்லீம் இயக்கம் இன்று 200 நாடுகளில் உள்ளது. இந்த இயக்கத்தில் சுமார் இரண்டு கோடிக்கு மேல் உள்ளனர். லாகூர் அஹ்மதியா இயக்கம் 17 நாடுகளில் உள்ளது. பாகிஸ்தானில் இவர்கள் முஸ்லீம்கள் என்று அங்கீகரிக்கபப்டவில்லை என்றாலும் அவர்கள் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே உள்ளது. பாகிஸ்தானின் ஒரே நோபல் பரிசு விஞ்ஞானி அப்துஸ் சலாம் அஹ்மதியா பிரிவை சேர்ந்தவர்
அல்லாஹ் சுமார் 7000 வருடங்களுக்கு முன்னால், முதல் மனிதரான ஆதாமை உருவாக்கியதாகவும் அதன் பின்னால் முகம்மது நபி 4508 ஆண்டுகளுக்கு பின்னால் தோன்றியதாகவும் கூறியிருக்கிறார். (Lecture Sialkot – Page 11, Lecture Sialkot – Page 15) இருந்தாலும் இன்றைய அஹ்மதியா பிரிவினர் பரிணாமவியலை ஒப்புகொள்வதாக கூறுகின்றனர்
–
மிர்ஸா குலாம் அஹ்மதுவுக்கு டெம்போரல் வலிப்பு நோய் இருந்திருக்கலாம் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.
முதலாவது அவர் தன்னை கடவுளோடு உரையாடுபவராக கூறிகொள்கிறார்.
“On one occasion I saw in a vision that I had written certain divine decrees setting out events in the future and then presented the paper to God Almighty for His signature… In my vision I presented the document containing divine decrees to the form which was a manifestation of an attribute of beauty of God Almighty for His attestation. He was in the form of a Ruler. He dipped His pen in red ink and first flicked it in my direction and with the rest of the red ink which remained at the point of the pen He put His signature to the document. Thereupon the vision came to an end and when I opened my eyes I saw several red drops falling on my clothes and two or three of them also fell on the cap of one Abdullah of Sannaur in Patiala State who was at the time sitting close to me. Thus the red ink which was part of the vision materialized externally and became visible�” (Tadhkirah – Page 166, 167 & 168)
மற்றொரு இடத்தில் கடவுள் இவரிடம் சொன்னதாக எழுதியதில்
நீ என்னுடைய ஒருமையைப் போல இருக்கிறாய். என்னுடைய தனித்துவத்தை போல இருக்கிறாய். என்னுடைய ஆசனம் போல இருக்கிறாய். என்னுடைய மகனைப் போல இருக்கிறாய்
இவருக்கு வலிப்பு நோய் இருந்திருப்பதை இவரது மருத்துவரும் மற்றவர்களும் குறித்து வைத்துள்ளனர்
தனக்கு இருந்த வலிப்பு நோய் போல இயேசுவுக்கும் இருந்திருக்கிறது என்று எழுதியிருக்கிறார்
�Jesus actually suffered from epilepsy and that was the reason that he used to see dreams�Jesus had actually become insane due to epilepsy.� (Roohani Khazain, Satt Bachan – Volume 10 – Page 295)
இவர் எதிர்காலத்தில் நடக்கப்போவதாக நிறைய சொல்லியிருக்கிறார். அந்த தீர்க்கதரிசனங்கள் அனைத்தையும் அல்லாவே தன்னிடம் கூறியதாக சொன்னார்.
தேவதைகள் இவருக்கு அருகே இருப்பதாகவும் கூறுகிறார்
��.I have a special resemblance to Jesus, on account of which I have been sent with his name so that I should demolish the doctrine of the cross. I have been sent to break the cross and to slaughter the swine. I have descended from heaven with angels on my right and left� the angels� have been furnished with powerful maces with which to break the cross and to demolish the temple of the worship of creatures.� (Ahmadiyyat Renaissance Of Islam – Page 141)
இது போன்ற ஏராளமான வாசகங்களை அவர் எழுதிய நூற்றுக்கும் மேலான புத்தகங்களில் காணலாம்.
இவருக்கு இருந்த சில நோய் அறிகுறிகள் இவருக்கு இந்த டெம்போரல் லோப் வலிப்பு இருந்திருக்கலாம் என்று கருத இடமளிக்கிறது.
1) தேவதைகள் தன்னிடம் பேசுவதாக கருதியது
2) கடவுள் தன்னிடம் அடிக்கடி பேசுவதாகவும், எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்று கூறுவதாகவும் கூறியது
3) கடவுளும் இவரும் என்னென்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்வதாக கூறிகொண்டது.
4) hypergraphia என்னும் ஏராளமாக எழுதுவது
5) paranoid என்னும் தன்னை மற்றவர்கள் கொடுமைப்படுத்துகிறார்கள் என்று காரணமில்லாமல் கருதிகொள்வது
6) மிக அதிகமான ஆன்மீக உணர்வு
7) வலிப்பு நோயே இருந்திருப்பது
- கல்விச்சாலை
- சுஜாதாவின் ” விரும்பி சொன்ன பொய்கள் ” நாவல் விமர்சனம்
- அள்ளிக்கொண்டுபோன மரணம் – தி.சு.சதாசிவம் – அஞ்சலிக்குறிப்புகள்
- இந்த வார நூலகம்
- பேஸ்புக் பயன்பாடுகள் – 2
- ‘ஜான் மார்டெலி’ன் (Yann Martel) ‘பை’யின் வாழ்வு (Life Of Pi)!
- இவள் பாரதி கவிதைகள்
- நினைவுகளின் சுவட்டில் – (85)
- வாப்பாவின் நாட்குறிப்பைப் போல
- பழமொழிகளில் எலியும் பூனையும்
- பாண்டிராஜின் ‘ மெரினா ‘
- பரிகாரம்
- புள்ளியில் மறையும் சூட்சுமம்
- கம்பன் கழகத்தின் பொங்கல் விழா
- மனக்கட்டுப்பாடு தியானத்திற்கு உதவாது-ஜே.கிருஷ்ணமூர்த்தி – பகுதி 3
- அகர முதல “எழுத்தெல்லாம்”….(ரஜினி விருது விழா)
- மெஹந்தி
- அதோ ஒரு புயல் மையம்
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 13
- முன்னணியின் பின்னணிகள் – 26
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) தெறித்த முத்துக்கள் ! (கவிதை -60)
- பாத்தென்றல் முருகடியான் இயற்றிய திண்ணப்பர் பிள்ளைத் தமிழ் நூல் வெளியீடு
- ராஜ்கிருஷ்ணாவின் ‘ ஒரு நடிகையின் வாக்குமூலம் ‘
- விஜய் நந்தாவின் ‘ விளையாட வா ‘
- மாதா+ பிதா +குரு < கொலைவெறி
- செல்லாயியின் அரசாங்க ஆணை
- “வரும்….ஆனா வராது…”
- எருதுப் புண்
- ”மகாபலிபுரம்.. உங்களுடன் வரும் ஒரு வழிகாட்டி” எழுதியவர் ஸ்ரீநிவாஸ். ஓவியர் ஜெ. பிரபாகர்.
- புகுஷிமா விபத்துக்குப் பிறகு அணுமின் நிலையங்களின் எதிர்கால இயக்கம் பற்றி உலக நாடுகளின் தீர்மானங்கள் – 2
- கார்பொரேட் கூட்டங்களின் கடைசி நிமிடங்கள்
- சிற்றேடு – ஓர் அறிமுகம்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்)அங்கம் -3 பாகம் – 10
- ரயிலடிகள்
- தோனி – நாட் அவுட்
- மோகம்
- பஞ்சதந்திரம் தொடர் 30- முட்டாள் நண்பன்
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 6) எழில் இனப் பெருக்கம்
- அடை மழையில் நனையும் ஞாபகங்கள் – வளவ.துரையனின் “விடாததூறலில்” கவிதைத் தொகுப்பை முன்வைத்து
- கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 9