ஷிவானி

1
0 minutes, 25 seconds Read
This entry is part 27 of 45 in the series 4 மார்ச் 2012

ரிஷ்வன்

ராம் ஒரு கணம் அதிர்ச்சியில் சிலையாகிவிட்டான், அவன் அதைப் பார்த்த பொழுது, .

அந்த எட்டுக்கு எட்டுக்கு அலுவலக அறையில், நான்கு சேர்கள் இருக்க, அதில் மூன்று சேர்கள் காலியாக, அதில் ஒன்றில், ஷிவானி அமர்ந்திருந்தாள், இல்லை இல்லை அப்படியே பின்புறம் சரிந்து, மேல் கூரையைப் பார்த்தபடி, அணிந்திருந்த துப்பட்டா விலகி, நாடு மார்பில் குத்திய கத்தியு டன், ரத்தம் சேரில் வழிந்து, மார்ப்லஸ் தரை எங்கும் ஒரே ரத்தமயமாய், கண்கள் மேலே பார்க்க, நிறைய போராடி இருக்க வேண்டும், முகமெல்லாம் ஒரே ரத்தமாய், எதிரில் உள்ள மானிட்டரில் கடைசியாக அவள் டைப் செய்த ப்ரோக்ராம் அப்படியே இருந்தது.. கொலை அப்பொழுதுதான் நடந்திருக்க வேண்டும், சுவரில் இருந்த கடிகாரம் 2 AM காட்டியது….

ராம், அந்த மென்பொருள் MNC கம்பெனியில், ஒரு சீனியர் ப்ரோக்ராமராக வேலை செய்து வருகிறான், அவனுக்கு கீழ் மூன்று ஜூனியர் மற்றும் இரண்டு ட்ரெயினி ப்ரோக்ராமர்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்களில், கடைசியாக வந்து சேர்ந்தவள் தான் இந்த ஷிவானி.

போன் அடித்தது.. எடுத்தான் ராம்..

‘ராம், கொஞ்சம் என்னோட ரூமுக்கு வரமுடியுமா’

‘எஸ், இப்பவே வரேன் சார்’

அழைத்தது கோபால், அவனுடைய பாஸ் மற்றும் ப்ராஜெக்ட் மேனேஜர். எப்பொழுதும் எதாவது முக்கியமான வேலை என்றால், இவனைத்தான் அழைப்பார், இன்று என்ன பிரச்சனையோ என்று மனதில் சொல்லியபடியே அவர் அறைக்குச் சென்றான்.

‘சார், மே ஐ கம் இன் ‘

‘வாங்க ராம்’

அந்த அறையில், அவனுக்கு முன்பே ஒரு பெண் அமர்ந்திருந்தாள், ஒரு நிமிடம் தயங்கினான், உள்ளே செல்ல.

‘வாங்க ராம், அந்த சேர்ல உக்காருங்க’

அவன் தயங்கியபடியே, அந்த இளம் பெண் அருகில் உள்ள சேரில் அமர்ந்தான்.

‘ஷிவானி, மீட் மிஸ்டர் ராம், ஹி இஸ் லீடிங் திஸ் ப்ரொஜாக்ட், நீங்க அவர் கிழே தான் வேலை செய்யப்போறிங்க..

‘ஹாய்…’ கை குலுக்கினாள்

‘நம்ம ப்ராஜெக்ட்க்கு புதுசா ஒருத்தர் வேணுமின்னு கேட்டோம் இல்லையா, அது இவங்க தான், இனிமே அவங்கள, நீங்க தான் நல்லபடியா தயார் பண்ணனும்’

‘கண்டிப்பா, சார்’

‘ஷிவானிக்கு ரெண்டு வருஷம் முன் அனுபவம் இருக்கு, இருந்தாலும் இந்த ப்ராஜெக்ட் புதுசு, சோ, நீங்க தான் கொஞ்சம் சொல்லித்தரனும்’

என்று வழக்கம் போல் கூறிவிட்டு,

‘நொவ், யு கேன் கேரி ஆன்’

‘ஓகே ஷிவானி, ஹி வில் டேக் யு டு யுவர் சீட், ஆல் தி பெஸ்ட்’

விடைபெற்று அவர்கள் இருவரும் வெளிய வந்தனர்.

அப்பொழுதான் பார்த்தான், தலை பாப் கட்டிங் செய்து, பச்சை நிற துப்பட்டா அணிந்திருந்தாள், அணிந்திருந்தாள் என்பதை விட, ஒரு மப்ளர் போல, தலையைச் சுற்றிருந்தாள், பளிச்சிடும் அவள் பெண்மை தெரிய, அதற்கு மாட்சாக, பிங்க் கலர் டிரஸ் அவளை எடுப்புடன் காட்டியது, காதில் பொன்னகை எதுவும் இல்லாமல், புன்னகையே போதும் என்று நினைத்து விட்டாளோ, பிங்க் கலரில் பிளாஸ்டிக் ஹூக் மாட்டிருந்தாள், கழுத்தில் ஒரு சின்ன செயின், அதில் ஹாட்டின் வடிவ டாலர் தொங்கியது.

‘ஷிவானி, எப்ப இந்த கம்பெனியில ஜாயின் பண்ணிங்க’

எதோ பேசவேண்டும் என்பதற்காக ஆரம்பித்தான்,

‘நான் அண்ணா யுனிவெர்ர்சிட்டில பி டெக் முடிச்சு, ரெண்டு வருஷம் ஒரு கம்பெனியில வொர்க் செய்து, இந்த கம்பெனியில லாஸ்ட் மந்த் தான் சேர்ந்தேன்’

கேட்ட ஒரு கேள்விக்கு மேலே கூறிவிட, அடுத்து என்ன கேட்பது என்பது அவனுக்குத் தெரியவில்லை.

‘சரி வாங்க, இந்த சீட்ல டெம்பரவரியா உக்காருங்க, அப்புறமா, பெர்மனென்ட்டா ஒரு சீட் ஏற்பாடு செய்றேன்’

பின்னர், அழைத்து சென்று, தன்னுடைய டீமில் உள்ள அனைவருக்கும் அவளை அறிமுகபடுத்தினான்.

சேர்ந்த ஒரே வாரத்தில் அவள் அணைத்து விஷயங்களையும் புரிந்து கொண்டாள், மேலும் அவளுடையே பேச்சும், கனகச்சிதமாக செய்யும் வேலையும் அவள் மீது அனைவருக்கும் ஒரு ஈர்ப்பு ஏற்ப்பட்டது என்றே சொல்லவேண்டும். சில சமயம் மிக முக்கியமான் வேலை இருந்தால், அவள் ஒத்துழைப்பு அலாதியானது, இரவு முழுவதும் இருந்து முடித்து கொடுத்து விட்டுத் தான் செல்வாள்.

ராமுக்கும் அவள் மிக நெருங்கிய தோழியாகி விட்டாள். மதிய உணவு இடைவெளியும், மற்ற அலுவலக விடயங்களிலும், புதிய நுட்பங்களை கற்பதில் உள்ள ஆர்வமும், அவள் அழகும், பேச்சும் அவளை அவனுள் நெருக்கமாக்கியது.
ஒரு விடுமுறையன்று, ராம் அருகில் உள்ள ஷாப்பிங் மாலுக்குச் சென்று ஒரு புத்தக கடையில் தான் வாங்க வேண்டிய புத்தகத்தை தேடிக்கொண்டிருந்த சமயம்,

தூரத்திலிருந்து ஷிவானி, ‘ஹலோ, ராம் … என்ன இங்க..’

‘புக் வாங்கலாம்ம்னு வந்தேன்..நீங்க எப்டி இங்க ‘

‘சும்மா வீட்ல ஒரே போர், அதான், ஷாப்பிங் வந்தேன், உங்களுக்கும் புக் படிக்கும் பழக்கம் உண்டா’

‘ஒ எஸ்… எனக்கு நாவல், கதை, கவிதை ரொம்ப இஷ்டம்’

‘அப்படியா, எனக்கும் கல்கி, சாண்டில்யன், பிரபஞ்சன், ஜெயகாந்தன், சுஜாதா நாவல்ஸ் எல்லாம் பிடிக்கும்.. அப்புறம் கண்ணாதாசன், வரைமுத்து, மேத்தா கவிதையும் பிடிக்கும்’

‘குட், நீங்களும் இப்ப என்னோட ஜாதி ஆயிட்டிங்க’

அவர்களுக்கு வேண்டிய புத்தகத்தை வாங்கிக்கொண்டு, அவன் விடைபெற.

‘என்ன அதுக்குள்ள கிளம்பிட்டிங்க, எனக்கு ரூமுக்கு போன, போரடிக்கும், வாங்களேன் காபி ஷாப் போயிட்டு கொஞ்சம் நேரம் பேசிட்டு போகலாம்’

அவனுக்கும் கூச்சமாக இருந்தது, இருந்தாலும் எதையும் வேளிக்காட்டாமல்,

‘சரி’ தலையாட்டினான்.

சுமார், இரண்டு மணி நேரம், நாவல், கவிதை, கதைகளை அலசி ஆராய்ந்தனர்,

‘உங்கள பார்க்கும் பொது, எனக்கு ஒரு கவிதை நினைவுக்கு வருது’

‘என்ன சொல்லுங்களேன்’

‘அழகாய் இருக்கிறாய்
நட்பாய் பழகுகிறாய்
பயமாய் இருக்கிறது
எங்கே உன்னை
காதலித்து விடுவேனென்று’

ஒரு கணம் வெட்கப்பட்டவளாய்…

‘ஒ நைஸ், நல்ல இருக்கே…யார் எழுதினது’

‘யாரும் எழுதல.. எனக்கு தோணினது’

‘நீங்க கவிதை கூட எழுதுவிங்களா’

‘எப்போவாச்சும் தோணிச்சுன்ன … இந்த மாதிரி கிறுக்குவேன்’

‘நீங்க நல்லாவே எழுதுறிங்க, ட்ரை பண்ணுங்க…பெரிய ஆள வரலாம்
எப்பாவது வீட்டுக்கு வாங்களேன்..நெறைய பேசலாம், நான் என்னோட பிரண்டு கூட தனியா வீடு எடுத்து தங்கிருக்கேன்’

‘அதற்கென்ன, ஒரு நாள் அவசியம் வர்றேன் ‘
இப்படியாக, அவர்கள் பேச்சு, அடிக்கடி தொடர, அவனுள் நட்பு சிறுகச் சிறுக குறுகி, காதலாக மாறியது.

ஒரு சனிக்கிழமை, அவள் அவனை வீட்டிற்கு அழைக்க,

வருவதாகச் சொன்னான்.
அவன் சென்ற சமயம் இருட்டி இருந்தது, அவள் வீட்டில் தனியாக இருந்தாள், ஆள் அரவமற்ற அமைதியாய் இருந்தது அந்த வீடு,

‘என்ன, நீங்க மட்டும் தனியா..எங்க மத்தவங்க எல்லாம்’

‘நாங்க அஞ்சு பேரு தங்கிருக்கோம், மூணு பேரு ஊருக்கு போய்ட்டாங்க, என்னோட ஒருத்தி மட்டும் தான் இருக்கா, அவளுக்கு உடம்பு சரியில்லன்னு இப்பதான் டாக்டர பாக்க போயிருக்கா ..;

அவள் பேசியது விதமும், கண் அசைவும், அபிநயம் பிடிப்பது மாதிரி இருந்தது,

‘நீங்க கிளாசிகல் டான்சரா’

‘எப்டி கண்டு பிடிச்சிங்க’.

‘ஒரு கெஸ் தான்.’

‘கரெக்ட் தான், ரெண்டு வருட டான்ஸ் பிராக்டிஸ் செஞ்சேன், அப்ப ஒரு சின்ன அச்சிடென்ட், காலல அடிப்பட்டு மூணு மாசம் பெட் ரெஸ்ட், அப்புறம் ஆடாக்கூடாது சொல்லிட்டாங்க..அதனால ஸ்கூல், காலேஜ் ப்ரோக்ராம்ல மட்டும் ஆடுவேன்’

பாவமாக சொல்ல… பாவமாக இருந்தது .

‘ ஒ… சாரி ‘

‘ஆனா, எனக்கு டிராமா, மாடலிங் பண்றதுல ரொம்ப ஆசை..

ஒ. ..அப்படியா…’

‘அப்ப, எனக்கு உங்க டான்ஸ் பாக்கணும் போல இருக்கே, எதாவது வீடியோ இருந்த கொடுங்களேன், பாக்கலாம்,’

வீடியோ எதுவும் இல்ல, போட்டோ ஆல்பம் இருக்கு பாருங்களேன், இது போன கம்பெனியில இருக்கும் போது, ஆண்டு விழவில ஆடினது’

அவள் பெரிய போட்டோ ஆல்பம் கொண்டு வந்தாள். அவன் ஒவ்வொரு பக்கமாய் தள்ளிக்கொண்டு வர…அவள் அழகும், பிடித்த அபிநயமும், அணிந்திருந்த உடையும், பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தது ,

ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு பாவனையும், நவ ரசங்களையும் தன முகத்தில் காட்டிக்கொண்டிருந்தாள், பார்த்துக்கொண்ட வந்தவன், அடுத்த பக்கத்தை புரட்டும் பொழுது,

ராம் ஒரு கணம் அதிர்ச்சியில் சிலையாகிவிட்டான், அவன் கண்ட காட்சி அப்படி…..அவன் கண்ட காட்சி..

அந்த எட்டுக்கு எட்டுக்கு அலுவலக அறையில், நான்கு சேர்கள் இருக்க, அதில் மூன்று சேர்கள் காலியாக, அதில் ஒன்றில், ஷிவானி அமர்ந்திருந்தாள், இல்லை இல்லை அப்படியே பின்புறம் சரிந்து, மேல் கூரையை பார்த்தபடி, அணிந்திருந்த துப்பட்டா விலகி, நாடு மார்பில் குத்திய கத்தியுடன், ரத்தம் சேரில் வழிந்து, மார்ப்லஸ் தரை எங்கும் ஒரே ரத்தாமாய், கண்கள் மேலே பார்க்க, நிறைய போராடி இருக்க வேண்டும், முகமெல்லாம் ரத்த மயமாய், எதிரில் உள்ள மானிட்டரில் கடைசியாக அவள் டைப் செய்த ப்ரோக்ராம் அப்படியே இருந்தது.. கொலை அப்பொழுதுதான் நடந்திருக்க வேண்டும், சுவரில் இருந்த கடிகாரம் 2 AM காட்டியது….
….
….
‘ என்ன பயந்திட்டிங்களா.. ஒரு ஷார்ட் பிலிம் ஆக்ட் பண்ணும் பொது, இந்த மாதிரி கோரமா மேக்கப் போட்டுட்டாங்க…’ தலையை விரித்து போட்டபடி, விகாரமாய் அவனைப்பார்த்து, பற்கள் வெளியே தெரிய, கோரமாய் சிரித்தாள் ஷிவானி.

************முற்றும்*****************

Series Navigationகசீரின் யாழ்வசந்தபாலனின் ‘ அரவான் ‘
author

ரிஷ்வன்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *