நீலம்

This entry is part 35 of 40 in the series 1 ஏப்ரல் 2012

தோழி
காலமாய் நுரைகள் உடைகிற மணலில்
சுவடுகள் கரைய
சிப்பிகள் தேடிய உலா நினைவிருக்கிறதா?
கடலிலிலும் வானிலும் தொடர்கிற நீலமாய்
நம்மிலும் எதோ படர்கிற தென்றேன்.
மீன்கொத்திய நாரையாய் நிமிர்ந்தாய்
உன் கண்களில் எனது பிம்பம் அசையும்.

ஆண்டு பலவாகினும்
நரையிலா மனசடா உனக்கென்றாய்.
தோழி
இளமை என்பது வாழும் ஆசை.
இளமை என்பது கற்றிடும் வேட்கை.
இளமை என்பது முடிவிலா தேடல்;
இளமை பிறரைக் கேட்டலும் நயத்தலும்.
இளமை என்பது வற்றாத ரசனை
இளமை என்பது நித்திய காதல்.
இளமை என்பது
அயராத ஆடலும் பாடலும் கூடலும் என்றேன்.

தோழா உனக்கு எத்தனை வயசு?
தோழி எனக்கு
சாகிற வரைக்கும் வாழ்கிற வயசு.

Series Navigationஇறக்கும்போதும் சிரிநெய்தல் பாடல்
author

வ.ஐ.ச.ஜெயபாலன்

Similar Posts

3 Comments

  1. Avatar
    சோமா says:

    Very nice man.What you say is obsolutely correct. Youth should br classified with the feelings and confidence nor age.

  2. Avatar
    Karunanithy says:

    ஆனந்தவிகடனில் இக்கவிதையை,முன்பு படித்திருக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *