அறிவிருந்தும் கல்லூரியில் சேரமுடியாதவர்களுக்கு….

This entry is part 29 of 41 in the series 8 ஜூலை 2012

சில முகங்கள் வாடும் போது மனதை பிழிகிறது…
பத்தாவது படிக்கும் போதே பெருவாரியான பள்ளிகளில் ஒரு ஃபார்ம் கொடுக்கப்பட்டு ஜாதி என்ன என்று கேட்கும் போது, பழைய உண்மை புதிதாய் புலப்படுகிறது…
அன்றோரு நாள் சில ஜாதிகள் எல்லா நிலைகளிலும் பரவ, சமத்துவ உலகம் காண ஒரு அரிய கண்டுபிடிப்பு செய்தார்கள்…. அது தான் 99 = 42 என்று…
என்ன செய்திருக்க வேண்டும், எல்லா கோவில் பிரகாரங்களில் இரவு பகல் பார்க்காமல், படிப்பு சம்பந்தமான கோச்சிங்குகளை படிப்பால் உயர்ந்தவர்கள் பிறருக்கு தர வேண்டும் என்று சட்டம் போட்டிருக்கலாம்…
பகுதி நேரம் படிப்பு பின் தெரிந்த தொழில் என்றவரை, குலக்கல்வி என்று சொல்லி கோஷம் போட்டவர்கள், எல்லாருக்கும் எல்லா தொழிலும் பயிற்றுவிக்கப் பட வேண்டும் என்று சட்டம் கொணர்ந்து எந்த தொழிலும் யார் வேண்டுமானாலும் செயல்முறை பயிற்சி கொள்ள செய்திருக்கலாம்… செய்யவில்லை..
ஆனால், தொடர்ந்து அறிவார்ந்தவர்களுக்கு பணமில்லை எனும் பொருளாதார நிலையால் காசில்லாதவன் எனும் பெயராலும் அல்லது FC என்று ஜாதியின் பெயராலும், இன்று கல்லூரிகளில் வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
இதில் கொடுமையான விடயம், பொருளாதார ரீதியாக கல்லூரியில் பொருள் ஈட்டும் நிலையமாக தொழிலாக கொண்டவர்கள் 90 சதவிகிதம் நம்ம ஜாதிக்காரனுக தான்… அய்யரோ ஐயங்கார்களோ இல்லை…
சரி, தொழிற்கூடங்கள் என்ன சொல்லுகின்றன..? தேறி வருபவர்களில் 90சதவிகிதம் பேர் வேலைக்கே லாயக்கில்லை என்று…
பலர் தொலைதூரக்கல்வியில் எம் பி ஏ சேர்கிறார்கள். அதிலும் ,ஒண்ணு வாங்கினால் பல பல எம் பி ஏ இலவசங்கள் எனும்படியான திட்டங்கள்… எப்படி..? ஒரு எம்பிஏ டிகிரி செய்தால் , இரு வருடங்கள் –அதுவும் போஸ்டலில், முடிந்தவுடன், உங்களுக்கு எம் பி ஏ பட்டம் கிடைக்கும். பின் மற்ற எம்பிஏக்களுக்கு இரண்டாவது வருடம் மட்டும் படிக்கலாம். அதனால் எம்பிஏ, ஹச்சார், ஃபென்னான்ஸ், ஹோட்டல் மானேஜ்மெண்ட், ஆஸ்பிடல் மேனேஸ்மென்ட் என்று எம்பிஏ யை ஆடித்தள்ளுபடி போல் அள்ளலாம்…
இந்த மாதிரி ஆளுங்கள இண்டர்வியூ பண்ணிப் பாருங்க , நொந்து நூலாயிடுவீங்க…
எதுவும் எப்படியும் போகட்டும்…
ஆனால், +2 ரிசல்ட் வந்து பின் இந்த பொறியியற், மருத்துவ, பொருளாதார அட்மிஷன்கள் முடிந்த பின் சில அறிவார்ந்த பிள்ளைகளின் வாடிய முகங்கள் பார்க்கும் போது வருத்தம் மேலிடுகிறது…
அவர்களுக்கு சில வார்த்தை…
கவலைப்படாதீர்கள்… நல்லதே நடந்திருக்கிறது…
இந்த தேசத்தில் பல கல்லூரிகளில் வாத்தியாரின் தரம் கேவலமான நிலையில் உள்ளது…
ஐஐடியில் கூட ஜாதியின் பெயரால் கோமாளித்தனம் அதிகமாகி விட்டது…
ஆனால், படிப்பு அவசியம்… அறிவுசார்ந்து வாழும் நிலை மேன்மையைத் தரும்..
தமிழகத்தில் மட்டுமே பொழுதுபோக்கு திரை சார்ந்தே வாழ்வு பெரும்பாலுமென்றாகிப் போனதை மாற்ற வேண்டுமானால், நீங்கள் புதிதாய் படிக்க வேண்டும்…
அதற்கு விடை, “இண்டர்நெட்…”
உங்களுக்குப் பிடித்த துறை எதுவென தேர்ந்தெடுங்கள்..
பின் கூகுளிடுங்கள்…
யூடியூப் சென்று பாடங்களைத் தேடுங்கள்..
படியுங்கள்.. படியுங்கள்…
அதே சமயம்.. ஏதாவது ஒரு ஒபன் யூனிவர்சிட்டியில் ஒடு பட்டத்திற்காக கோர்ஸ் ஒன்றில் சேர்ந்து கொள்ளுங்கள்…
உங்களுக்கென ஒரு ஃபேஸ்புக் அக்கவுண்டில் அந்த துறை சார்ந்த குரூப்புகளில் இணைத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் தேடலுக்கு பக்கபலமாக இருப்பது கூகுள் (G – 4th GOD ) , மற்றும் யூடியூப்…
கூகுள் மூலமாக துறைகளில் என்ன ரிசர்ச் நடக்கிறது, அதில் கிடைக்கும் பல காப்பி ரைட் பிஃரி தகவல்கள் என படியுங்கள்.
பின் தொடர்பு கொள்ளுங்கள்..
முகமறியாதவர்கள் தான்.. ஆனால், மூளையின் அளவீட்டால் தொடர்பாளர் ஆகுபவர்கள்…
தொடர்பால் என்ன ஆகிடும் என்பவருக்கு சில வரிகள்:
இந்த தேசத்தில் அறிவு தீட்சத்தியத்துடன் சுடரொளியாய், அம்மனின் அருளே தன் அறிவு என்றிருந்த ராமானுஜன் , இங்கு யாருக்கும் பிடிபடாத போது அவர் எழுதிய ஒரு கடிதம் ஹார்டிக்கு போய், பின் நடந்தது நீங்கள் அறிவீர்கள்…
அது போலவே, இன்று God Particle ( God Damn Particle என முன்பு பெயரிடப்பட்ட ) வார்த்தைகளுக்கு மூலம் இருந்த சத்யேந்தரநாத் போஸ், தன் எண்ணங்கள் பற்றி ஐன்ஸ்டினுக்கு எழுத , அவருக்கு அங்கீகாரம் கிடைத்தது… போஸின் கண்டுபிடிப்பில் உடன்படாமல் இருந்த ஹாப்கின்ஸ் தனது போஸ் கூற்று இன்று நிரூபிக்கப்படும் நிலையில், தனது நிலை தோல்வியென்று சொல்லி தான் கட்டிய பெட் 100 டாலரை இழந்து விட்டதாக போன வாரம் அறிவித்துள்ளார்…
அதனால், அறிவாளிகளுடன் தொடர்பு கொள்ளுங்கள்… அறிவார்ந்த இணைய தளங்களுக்கு சென்று அறிவை வளருங்கள்.
இந்தியாவின் பல கல்லூரியில் சேர்வதால் உங்கள் வாழ்வில் ஒன்றும் நடந்து விடாது..
ஆனால், கல்லூரி செல்வது கம்யூனிட்டி ஃபார்ம் ஆகும் என்பார்கள்…
சட்டக்கல்லூரியில் என்ன கம்யூனிட்டி ஃபார்ம் ஆனது..? கம்யூனிட்டி சண்டை தான் நடந்தது..
அதனால், இணையத் துணையுடன் உங்கள் அறிவு , பொழுதுபோக்கு ஒத்த குரூப்புகளில் இணைத்துக் கொள்ளுங்கள்.
கல்லூரி போனால் கெட்டுப் போக சான்ஸ் இருப்பது போல் தான் இணையத்திலும் இருக்கும்… அதனால் சில தற்காப்பு செயல்களை கொள்ளுங்கள்.
உங்களின் தகவல் பரிமாற்றம் , உங்கள் பெற்றோர் அறியும் வண்ணம் கொள்ளுங்கள்.
நிச்சயம் , அதற்காக நீங்கள் நிர்ணயக்கிப்பட்ட சில அந்தரங்க எல்லைகளை நீங்கள் பகிர வேண்டியதில்லை… ஆனால் அந்த அந்தரங்க எல்லைகளை உங்கள் பெற்றோரிடம் பகிருங்கள். பெற்றோர்கள் இந்த விஷயத்தில் நிறைய மாற வேண்டும் என்பதே உண்மை.
சரி, இன்னொரு முக்கியமானது…
உங்களது மொழி, தேசம், மதத்தின் மேன்மையை தெரிந்து கொள்ள இணையம் உதவும்..
விவேகானந்தர், பாரதி, காந்தி, படேல், அத்வானி ,மோடி, காமராஜர், ராஜாஜி, என உங்களை சுற்றிய தலைவர்கள் அறிஞர்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.
தாகூர், கீட்ஸ், திருக்குறள், தாமஸ் கிரே, என்று படியுங்கள்…
இன்று உலகமே கவனிப்பு மையமாக இருக்கும் CERN ன் அலுவலக வாயிலில் இருக்கும் நடராஜர் சிலையின் காரணம் அறியுங்கள். நடராஜர் சிலை பற்றி, கார்ல் சாகன் சொன்னதை படியுங்கள். இன்று லார்ஜ் ஹார்டன் கொலைடர் Large Hardon Collidar ஆராய்ச்சியாளர்களுக்கு சிதம்பர நடராஜரின் நாட்டிய சிலையில் கிடைத்த தத்துவம் பற்றி அறியுங்கள்…
மொழி இனம் என்பது பற்றி அறியுங்கள்…
உலகத்தின் ஒரு இனத்தை தேடி தேடி அழித்த இனம் இப்போது எப்படி மற்றவர்களுடன் இணைந்து வாழ்கிறதென்பதறிய நாஸிகள், யூதர்கள் பற்றி படியுங்கள்.
உலக பொருளாதரம் எப்படி சும்மா பொழுது போக்கு விளையாட்டு போல் கையாளப்படுகிறது என்று அறியுங்கள்…
மேன்மையானவர்களை உருவாக்க வேண்டிய இந்திய கல்லூரிகளின் தாளாளர்கள் யார் என்று உறைக்கும் உண்மைகள் அறியுங்கள்..
அறிவுப் புரட்சிக்கு இணையம் இருக்கிறது… சாதி மத பெயரால் இனி அறிவார்ந்தவர்களுக்கும், பணமில்லாதவர்களுக்கு எந்த தடையும் இனி வராது…
ஒரு எல்லைக்கு மேல் அறிவே வெல்லும்… எந்த ஜாதி அரசியல்வாதியாவது பிளேனில் பறக்கும் போது நம்ம ஜாதிக்காரனா ஓட்டுறான் என்று கேட்டதுண்டா…?
அதனால், இணையத்தின் துணை கொள்ளுங்கள்…
இதை படிக்கும் யாருக்காவது, ஹோம் ஸ்கூலிங், இணைய படிப்பு பற்றி தகவல்கள் இருந்தால் எழுதங்கள்…
இதற்கும் மேலாக, நமது மதம், வெறும் சாதிய வேற்றுமை கொண்டதல்ல என்று அறிய, இணையம் துணையாகும்.
யோகா, தியானம், சக்ரா பற்றி இணையத்தில் கொட்டிக் கிடக்கிறது. அது பற்றி வெளிநாட்டுக்காரனின் யூடியூப் வீடியோக்கள் அதிகம். இவ்வளவு ஏன் காயத்ரி மந்திரத்தை , இயேசு நாதர் வீடியோவுடன் இருக்கும்…
நாம் யாருக்கும் கொடுப்பதற்கு தயங்கியதில்லை… நமது அடையாளத்தை தங்களை காக்கும் போர்வையாக பலர் கொள்ளுவது நமக்கு பெருமை தானே… ஆனால், அதன் பெயரால் நமது அடையாளத்தை தொலைக்கத் தேவையில்லை..
ஒரு நேர மேலாண்மை:
+2 முடித்தவர்களுக்கு:

ஒரு போஸ்டலில் உங்களுக்கு பிடித்த கோர்ஸ் சேருங்கள். IGNOU போன்ற உலகம் அறிந்த பல்கலைக் கழகமாக இருத்தல் நன்று.
இண்டெர்நெட் இணைப்பு வாங்குங்கள். மாதம் ஹோம்500 பிஎஸென்னில் இருப்பது போதும்.
கம்யூட்டர் இத்யாதி, ஒரு 23 ஆயிரம்.

காலையில், 5 மணிக்கு எழுந்து உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் கோவிலுக்குச் செல்லுங்கள், கோவில் இல்லையென்றால், வீட்டிலேயே, தியானம், யோகா செய்யுங்கள்.
இதில் யோகா மிக மிக அவசியம். உடலின் மேன்மைக்கு அதிகம் உதவும்.
அதற்கு இணையத்தில் தேடி சில தளங்களை பாருங்கள்.
பின் சாப்பாடு.
கம்யூட்டரில், உங்களது படிப்பிற்க்காக இணையத்தில் தேடி தேடி பயிற்சி பெறுங்கள்.. படியுங்கள்.
இடையில் கொஞ்சம் ஃபேஸ் புக் அரட்டை..
பின் இணைய வகுப்பு,.
போதும் 6 மணிக்கு மேல், வீட்டிற்கு நேரம், அருகில் இருக்கும் நண்பர்கள்.. என்று செலவிடுங்கள்
ஒரு நாள் விட்டு ஒரு நாள் உலக சினிமாக்களை பாருங்கள். நமது தரம் உயரும்.. நம்மை எவ்வளவு கேனைப்பயல்களாக நமது திரைப்படங்கள் நினைக்கின்றன புரியும். வடிவேலு, சந்தானத்திற்கு சிரிப்பது தொடரட்டும்.. அதே சமயம் நாளை நம்மை பார்த்து சிரித்துவிடாமல் இருக்க நமது தரம் உயர வேண்டும்..
பின் இணையத்தின் மூலமாக சிறு சிறு வேலை செய்தால் பணம் ஈட்டலாம். அதற்கு ESCROW என்றால் என்னவென்று அறியுங்கள்…
அதனால், கல்லூரியில் , அறிவிருந்தும் அட்மிஷன் கிடைக்காமல் இருந்தால் நல்லதே நடந்திருக்கிறது என்று உங்கள் நெஞ்சம் நிமிர்த்தி இணையம் மூலம் முதல் அடி தொடங்குங்கள்… வாழ்த்துக்கள்…

Series Navigationமலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 33செர்ன் விரைவாக்கி யந்திரத்தில் கடவுள் துகள் எனப்படும் ஹிக்ஸ் போஸான் தடம் கண்டுபிடிப்பு
author

கோவிந்த் கோச்சா

Similar Posts

10 Comments

  1. Avatar
    arkswamy says:

    Very forward looking and positive article. Malice towards none but providing detailed information how to take forward steps with self discipline and self motivation. Yes please do not get disheartened but challenge the world with the advised path. Success would come at right time with divine grace.

  2. Avatar
    R. Sathishkumar says:

    Lot of seats are vacant in engineering colleges every year. Those who are having thorough knowledge and self motivation then there is no need of IIT stamp and NIT stamp.

  3. Avatar
    மலர்மன்னன் says:

    காலம் அறிந்து, இடம் அறிந்து, அளிக்கப்பட்ட அறிவார்ந்த வழிகாட்டுதல். இந்த ஆண்டு ஒரு மாணவனை பாலிடெக்னிக்கில் சேர்ப்பதற்குப் பணம் திரட்டிக் கொடுப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. என்னிடம் வரும் இளைஞர்களிடம் இக்கட்டுரையைப் படிக்குமாறு கூறிவருகிறேன்.

  4. Avatar
    TruthisFire says:

    மிகச் சிறந்த படைப்பு, மிக்க மகிழ்ச்சி கோவிந்த் கோச்சா அவர்களே. இதை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்தேன். அருமை! சில உயிர்ப்பான கருத்துக்கள் இதை மிகச் சிறந்தவையாக்குகின்றன:

    // குலக்கல்வி என்ற முறையை அரசியல் ஆதாயத்திற்குத் தவறாக பயன்படுத்தி பிரச்சாரம் செய்ததன் விளைவு //

    // திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்களை ஏதோ தேவதூதர்களைப் போலச் சித்தரிக்கும் பத்திரிக்கை, தொலைக்காட்சி சேனல்கள் போன்றவை. இதில் விகடன் போன்ற இருவேடம் பூண்ட, நடுநிலைமை பற்றியெல்லாம் வெறுமனே பேசும் பத்திரிக்கையின் பங்கு வெகு பிரபலம். //

    // நம்மை எவ்வளவு கேனைப்பயல்களாக நமது திரைப்படங்கள் நினைக்கின்றன என்பது // —– மிக மிக உண்மையான கருத்து.

    // பொருள் ஈட்டல் குறித்து: – MTurk என்று அமேசான் நிறுவனம் ஒரு இணைய வழி சம்பாத்தியத்தை நடத்துகிறது. இதில் கொடுக்கப்பட்டிருக்கும் எளிதான வேலைகளைச் செய்தும் பொருள் ஈட்டலாம். PayPal அக்கவுண்ட் இருந்தால் நலம். //

    தமிழ் உணர்வாளர்கள் என்று ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது. இதில் உண்மையில் தமிழும் இல்லை, உணர்வும் இல்லை, வெறும் அரசியல் ஆதாயம் மட்டுமே. அதில் சிலர் வீரப்பன் என்ற கொள்ளை, கொலை, கடத்தல்காரனின் சமாதியில் (?!) போய் ஏதோ வீரமுழக்கம் எல்லாம் செய்து வந்திருக்கிறார்கள். இத்தகைய மடையர்கள் வாழும் பூமியாக மாறிக் கொண்டிருக்கிறது தமிழகம்.

    எல்லாவற்றிற்கும் மேலாக ஊழல் செய்தவர்களை விமான நிலையத்தில் ஏதோ சுதந்திரப் போரில் ஈடுபட்டு கைதாகி வந்தவர்களை வரவேற்கச் செல்வது போல வரவேற்கச் செல்லும் ஒரு கேடு கெட்டக் கூட்டம். சிறை நிரப்பும் போராட்டம். இதற்கு ஒரு “இனத் தலைவர்” என்ற மதியூகி வேறு. வெட்கம்!!

  5. Avatar
    K M vijayan says:

    Drift away from Dravidan party propoganda and equip knowledge to reach a world standard. If you are attached to Tamilnadu media and political value you may start believing after a decade Udayanithi stalinin Ezam ariuvu means there was such a person lived in TN who had seventh sense!

    1. Avatar
      K M vijayan says:

      what moderation What i said is true and nothing un parliamentary there. When I heard in Kalingar TV add about Ezam arivu for atleast 20 times a day I felt like bothi dharmar TN politicians and cinema directors will say after 10 years what i Commented

  6. Avatar
    dharmaraj.A says:

    There is no guidance for poor who works and eat then and there.If an educated one is brilliant he/she will be placed in proper position. The ideas proposed in this article is only for those who purchased educational qualification.also it seems to be an one sided arquement.The past so called indian history must be kept in mind while these types of proposals are put forth.

  7. Avatar
    dharmaraj.A says:

    These type of Hi-tech false ideas can not confuse and misguide yet.That is adding a false statement along with truths is that theory.Appreciating a false theory will lead to the down fall of developement.As the author opined one sect of people are now also educated [only religious but not for all] in schools[veda ahama padasalai] attached with temples.

  8. Avatar
    நடராஜன் says:

    //இதில் கொடுமையான விடயம், பொருளாதார ரீதியாக கல்லூரியில் பொருள் ஈட்டும் நிலையமாக தொழிலாக கொண்டவர்கள் 90 சதவிகிதம் நம்ம ஜாதிக்காரனுக தான்… அய்யரோ ஐயங்கார்களோ இல்லை…//

    அறிவிருந்தும் கல்லூரியில் சேர முடியாதவர்களுக்கு என்று தலைப்பீட்டு உருப்படியா இளைஞர்களுக்கு யோசனை சொல்லும் கட்டுரையில் ஜாதி எப்படி உள்ளே நுழைகிறது? அறிவிருந்தும் கல்லூரியில் சேர முடியாததற்கு வறுமை, வழி காட்டலின்மை மற்றும் குடும்ப சூழல் மட்டுமே காரணமாக இருக்க முடியும். FC என்ற காரணமெல்லாம் ஏற்பதற்கில்லை.

    //அன்றோரு நாள் சில ஜாதிகள் எல்லா நிலைகளிலும் பரவ, சமத்துவ உலகம் காண ஒரு அரிய கண்டுபிடிப்பு செய்தார்கள்…. அது தான் 99 = 42 என்று…// இது போன்ற வசனங்களில் எவ்வளவுதூரம் உண்மையும் யதார்த்தமும் கலந்திருக்கிறது?

    உங்கள் யோசனைகள் அறிவிருந்தும் கல்லூரியில் சேர முடியாதவர்களுக்கு மட்டுமல்ல அறிவுக்காக கல்லூரியில் சேர முடியாதவர்களுக்கும் சென்று சேரட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *