பெரும்பாலான உணவகங்களில் பணிபுரிவோருக்கு சுகாதாரம் பற்றி ஏதும் தெரியாது. அவர்களின் கைகள் சுத்தமாக இருப்பதில்லை. மேசையையும் துடைப்பார்கள். மூக்கையும் சிந்துவார்கள்.கைகளை சவுக்காராம் போட்டு கழுவாமல் உணவையும் குறிப்பாக பரோட்டா, சப்பாத்தி தயாரிப்பார்கள்! அதையே நாம் சுவையாக எண்ணி உண்கிறோம்.
வைரஸ் , பேக்டீரியா , வேதியியல் நஞ்சு , உணவில் கலப்பதின் மூலமாக உண்டாகும் வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்படுவதையே உணவு நச்சூட்டம் என்கிறோம்.
நச்சூட்டம் உண்டாகும் காரணங்கள்
* உணவு தயாரிப்பவர்களுக்கு நோய்த் தோற்று இருப்பின், அவர்கள் மூலமாக ஸ்ட்டெபல்லோகாக்கஸ் ( Staphylococcus ) என்ற பேக்டீரியா உணவு மூலம் நம்மைத் தாக்கலாம்.
* உணவிலும் நீரிலும் ஈ கோலை ( E. Coli ) என்ற பேக்டீரியா கலந்திருந்தால் பிரயாணிகள் வயிற்றுப் போக்கு ( Travellers’ Diarrhoea ) உண்டாகலாம்.
* கொடிய தன்மைமிக்க பேக்டீரியாக்கள் சமைத்த அல்லது சமைக்காத இறைச்சி, மீன் போன்றவற்றில் தொற்றலாம் .
* உணவில் மையோனேஸ் பயன்படுத்தி சமைத்தால் நோய்க் கிருமிகளின் தோற்றும் அதிகம் இருக்கும்.
* வீடுகளில் தயார் செய்யும் டின்களில் அடைக்கப்பட்ட உணவு வகைகளில் ஒரு வகையான நோய்க் கிருமி தோற்றலாம். இந்த கிருமி பெருக பிராண வாயு தேவை இல்லை. இவற்றை சமைத்தாலும் அழிக்க முடியாது! இந்த கிருமி போட்டுலிசம் ( Botulism ) என்ற கொடிய வியாதியை உண்டு பண்ணுகிறது.
* சரிவர சமைக்காத கடல் மட்டி வகைகளை ( shell – fish ) உட்கொண்டால் வைரஸ் தொற்று உண்டாகலாம்.
* சரியாகப் பாதுகாக்கப் படாத பழங்கள், காய்கறிகள், தானியங்கள், கொட்டைகள் போன்றவற்றில் பூஞ்சணம் பூக்கலாம். இவற்றை உட்கொள்ளுதல் ஆபத்து.
* உணவை சுத்தம் இல்லாத இடங்களில் தயாரிப்பதும், வைத்திருப்பதும், பரிமாறுவதும்கூட கிருமித் தொற்றை உண்டுபண்ணும்.
* பேக்டீரியா தொற்று – கடும் வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, வாந்தி போன்றவை உணவை உட்கொண்ட ஒரு மணி நேரத்தில் தொடங்கி நான்கு நாட்கள் வரை நீடிக்கலாம்.
* இரசாயன கலப்பு – வாந்தி, வயிற்றுப் போக்கு, வியர்வை, தலை சுற்றுதல், கண்களில் நீர் வழிதல், அதிக உமிழ்நீர் சுரத்தல், குழப்பம், வயிற்று வலி போன்றவை உணவை உட்கொண்ட 30 நிமிடங்களில் ஏற்படலாம்.
இவற்றில் எந்த வகையான நச்சூட்டம் உண்டானது என்பதை மலம், இரத்தம், வாந்தி பரிசோதனைகளின் வழியாகக் கண்டறியலாம்.
உண்மையில் வாந்தியும் வயிற்றுப் போக்கும் வயிற்றிலும் கூடலிலும் உள்ள நச்சுப் பொருளை வெளியேற்றும் முயற்சியாகும். இது உடலின் தற்காப்பு நடவடிக்கையாகும்.
ஆகவே 24 மணி நேரம் அவற்றை தடுக்காமல் நச்சை வெளியேற்றுவதே நல்லது. நீர் ஆகாரத்தை 12 மணி நேரம் பருகலாம். அதன்பின்பு கஞ்சி, சூப்பு போன்றவற்றை ஒரு நாள் பருகலாம்.
உணவு நச்சூட்டம் தடுப்பு முறைகள்
* உணவு தயாரிக்கு முன் கைகளை எப்போதும் சுத்தமாகக் கழுவ வேண்டும்.
* இறைச்சி, மீன் வகைகளை சமைத்த பாத்திரத்தை சுடுநீரில் சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
* பார்வைக்கு கெட்டுப்போனதாகவும், நாற்றம் அடிப்பதாகவும் இருந்தால் அதை உண்ண வேண்டாம்’
* டின்களில் அடைக்கப்பட்டுள்ள உணவு வகைகளை உட்கொள்ளுமுன், அந்த டின் உப்பியிருந்தால் ( bulging cans ) அதை உட்கொள்ள வேண்டாம்.
* சுகாதாரமற்ற உணவகங்களிலும் அங்காடிகளிலும் ஈக்கள் மொய்த்த உணவுகளை உண்ண வேண்டாம்.
( முடிந்தது )
- எதிரி காஷ்மீர் சிறுகதை
- உணவு நச்சூட்டம்
- நட்பு
- புகழ் பெற்ற ஏழைகள் – 24
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – வங்க மூலம் –பக்கிம் சந்திர சட்டர்ஜி
- ஜாக்கி சான் 7. வாலுப் பையனாக வளர்ந்த கதை
- டௌரி தராத கௌரி கல்யாணம் ……19
- தனித்து விடப்பட்ட பாதையில் தனித்து நடந்து வந்த ஒரு மனிதர் – பி.என். ஸ்ரீனிவாசன்
- ஐம்பது வருடங்களின் வளர்ச்சியும் மாற்றங்களும் – (3)
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 27
- நாசாவின் காஸ்ஸினி விண்ணுளவி சமீபத்திய சனிக்கோளின் பூதப்புயல் ஆழ்தள நீரைக் கலக்கி வெளியேற்றி உள்ளதைக் காட்டியுள்ளது.
- தாகூரின் கீதப் பாமாலை – 81 காதலர் பிரிவுத் துயர் .. !
- கம்பராமாயணக் கருத்தரங்கம்
- மனுஷ்ய புத்திரன் கவிதைகள் ‘அருந்தப் படாத கோப்பை’ தொகுப்பை முன் வைத்து…
- முக்கோணக் கிளிகள் [5]
- ஞாநீ
- ஆமென்
- துகில்
- அப்பா என்கிற ஆம்பிளை
- சரித்திர நாவல் “போதி மரம்” இறுதி அத்தியாயம் – 36
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -41 என்னைப் பற்றிய பாடல் – 34 (Song of Myself) கடந்த காலம், நிகழ் காலம்.. !
- தமிழ்த் திரைப்படத்தில் இலக்கியத்தின் தாக்கம் என்ற பொருளில் சாகித்ய அகாதமி இருநாள் கருத்தரங்கு