ஆன்மீகக் கனவுகள்

This entry is part 11 of 26 in the series 22 செப்டம்பர் 2013

சூர்யா

 

உங்களில் மிகச் சிறந்த ஆன்மீகவாதிகள் யார் என்று தலையில் தலைப்பாகையுடன், கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு, தீர்க்கமான பார்வையுடன் அவர் (விவேகானந்தர்) அந்தக் கேள்வியை கேட்டபோது நான் மட்டும் தான் வேகமாக கையை தூக்கினேன் அவ்வளவு பெரிய கூட்டத்தில்….

 

 

‘வெரிகுட் என்று என் முதுகில் தட்டிக் கொடுத்தார் விவேகானந்தர்

 

—————————————-

 

இடம் : மனநல மருத்துவமனை

 

டாக்டர் : தூங்கிகிட்டு இருக்கும் போது அடிக்கடி ஒரு கையை மட்டும் படக்குன்னு மேலே தூக்குறீங்களாமே………….. ஏன்? உங்க மனைவி ரொம்ப பயப்படுறாங்க. உங்களுக்கு என்ன பிரச்னைன்னு என்கிட்ட சொல்லுங்க. எதுவானாலும் பரவாயில்லை.

 

என்று கூறிவிட்டு இமைகளை அகற்றாமல் வெறித்து பார்த்தார். ஒருவேளை உண்மையை கூறினால் காரி துப்பிவிடுவாரோ என்று பயமாக இருந்தது அவருக்கு.

 

‘சார் ஏன் சார் அப்படி முறைச்சு பாக்குறீங்க”

 

டாக்டர் பார்வையை அகற்றவே இல்லை. பின் டேபிளில் கையை ஊன்றி முன்னே குனிந்தார். ஏதோ சொல்ல வருவதைப் போல குரலை தாழ்த்திக் கொண்டு

 

டாக்டர் : எவ்வளவு கேவலமா இருந்தாலும் பரவாயில்லை. தயங்காம சொல்லுங்க. நான் தப்பா எடுத்துக்க மாட்டேன்.

 

 

அவர் : இல்லை டாக்டர், தூங்கும்போது ஒடம்ப முறுக்கனும்போல இருந்திருக்கும். அதனால் அப்படியே கையைத் தூக்கி ஒரு முறுக்கு……

 

டாக்டர் : பொய்

 

அவர் : இல்லை நெஜந்தான், அதாவது………………….

 

டாக்டர்: உங்க மனைவி செல்ஃபோன்ல படம் எடுத்திருக்காங்க. அஞ்சு நிமித்டதுல 10 தடவை கையை மேலே தூக்கியிருக்கீங்க. உண்மையை சொல்லுங்க.

 

திடீரென காவல்துறை அதிகாரியைப் போல குரலை உயர்த்தினார்.

 

டாக்டர் : நீங்க கனவுல யாரையாவது கொலை செஞ்சிங்களா. கத்திய எடுத்து சதக், சதக்குன்னு யாரையாவது குத்தினீங்களா…..

 

அவர்: ஐயையோ இல்லைங்க…..

 

டாக்டர் : இங்க பாருங்க என் அனுபவத்துல நான் நெறைய பாத்துருக்கேன். நீங்க உண்மையான கொலைகாரனா மாறுவதற்குள் உங்களுக்கு ட்ரீட்மென்ட் தேவை, தயவு செஞ்சு கோஆப்ரேட் பண்ணுங்க

 

அவர் : டாக்டர் பிலீவ் மீ ப்ளீஸ். நான் யாரையும் கொலை செய்யல

 

டாக்டர் : சரி நம்புறேன். நீங்க கொலை செய்யல…. தென், வாட் டு யு டூ…..

 

அவர் : நா……. நான் …….(தயக்கத்துடன்) நான் நைட் ராக்கி படம் பார்த்தேன். அப்படியே தூங்கிட்டேன். கனவுல ஸ்டோலன் கூட குத்துச்சண்டை பயிற்சி எடுத்துக்கிட்டிருந்தேன்.

 

டாக்டர்: ஒத்த கையிலையேவா…. ஏன் பிராக்டீஸ் பண்ணும்போது 2 கையையும் யூஸ் பண்ணல.

 

அவர் : இல்லை அவர் முதல்ல ஒத்த கையிலதான் பிராக்டீஸ் பண்ணச் சொன்னார்.

 

டாக்டர் : நம்புற மாதிரி இல்லையே.

 

அவர் : டாக்டர் இதுக்கெல்லாம் நான் என்ன வீடியோ ஆதரமா காட்ட முடியும். சொன்னா நம்புங்களேன்.

 

புலி இரைக்காக பதுங்குவது போல் டாக்டர் சற்று பதுங்கினார். ஒற்றைக் கண்ணில் ஓரமாக விழியை நிறுத்தி சந்தேகத்துடன் பார்த்தார்.

 

டாக்டர் : 10 வருடத்துக்கு முன்னாடி அமெரிக்காவுல இப்படித்தான் ஒருத்தருக்கு அடிக்கடி கொலை பண்ணுற மாதிரியே கனவு வந்திருக்கு. அவர் அதை சாதாரணமா நெனைச்சு ஃபரீயா விட்டுட்டாரு….. ஆனா 2 மாசத்துல அவர் கனவுல வந்த மாதிரியே ஒருத்தரை கொன்னுட்டாரு.

 

அவர் : ஓஹோ….

 

டாக்டர் : அவருக்கு அமெரிக்கா கோர்ட்ல 60 வருஷம் ஜெயில் தண்டனை கொடுத்துட்டாங்க.

 

அவர் : அப்படியா…..

 

டாக்டர் : அவர் மட்டும் சரியான நேரத்துல ட்ரீட்மென்ட் எடுத்திருந்தார்னா இதெல்லாம் நடந்திருக்காதுல…..சோ……. யோசிங்க…… உண்மையை சொல்ல முயற்சி பண்ணுங்க.

 

அவர் : கண்டிப்பா முயற்சி பண்றேன் டாக்டர்.

 

டாக்டர் : (கடுப்புடன்) என்னைப் பாத்தா உங்களுக்கு எப்படித் தெரியுது….

 

அவர் : டாக்டர் …. அமெரிக்காவுல நடந்த இன்னொரு விஷயத்தை பத்தியும் நீங்க தெரிஞ்சுக்கனும்.

 

டாக்டர் : என்னது…..

 

அவர் : அது…. அது…. நடக்காத ஒரு விஷயத்தை ஒத்துக்க சொல்லி வற்புறுத்துன டாக்டர் ஒருத்தர் கொலை செய்யப்பட்டது பற்றியது……. அதை பற்றி முழுவதுமாக தெரிஞ்சுக்க ஆசைப்படுறீங்களா?  அமெரிக்காவுல என்னதான் நடக்கல…

 

——————————————————————————-

 

இடம் : அழகான ஏரி… ஏரியில் ஜீசஸ்

 

ஜீசஸ் : பீட்டர் தண்ணீரில் இறங்கி நடந்து வா

 

பீட்டர் : ஒரு வேளை நான் மூழ்கிவிட்டேன் என்றால்…..? எனக்கு பயமாக இருக்கிறது

 

ஜீசஸ் : பீட்டர் பயம் கொள்ளாதே….. என்னை நம்பு… தண்ணீரில் இறங்கி நடந்து வா…. இல்லை என்றால் ‘டவுட்டிங் பீட்டர்” என்று உனக்கு பட்டப்பெயர் வைத்து விடுவார்கள்.

 

பீட்டர் : சரி ……. தேவகுமாரனே இதோ இறங்கி வருகிறேன்.

 

——————————————————————————-

 

இடம் : காவல் நிலையம்

 

இன்ஸ்பெக்டர் : வீட்டு மாடியிலிருந்து ஒரு அப்பாவி கிழவி மேல குறிபாத்து குதிச்சிருக்கீங்க. அந்த கிழவி இப்போது அபாய கட்டத்துல இருக்காங்க

 

அவர் தரையில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தார்.

 

 

இன்ஸ்பெக்டர் : அங்க  என்ன பாத்துக்கிட்டு இருக்கீங்க.

 

அவர் : ஒண்ணுமில்ல சார்….

 

இன்ஸ்பெக்டர் : நியாயமா…. அட்டம்ட் மர்டர் கேஸ்தான் ஃபைல் பண்ணணும். ஆனா உங்க மனைவி சொல்றாங்க உங்களுக்கு தூக்கத்துல நடக்குற பழக்கம் இருக்குன்னு.

 

அவர் தரையை பார்த்துக் கொண்டிருந்தார். இன்ஸ்பெக்டர் குனிந்து தரையை உற்று நோக்கினார். அங்கே ஒன்றுமே இல்லை. முகத்தை சுழித்தபடி

 

இன்ஸ்பெக்டர் : அங்க ஒண்ணுமே இல்லையே. ரொம்ப நேரமா அங்க என்ன பாத்துகிட்டு இருக்கிங்க.

 

அவர் : (பதறியபடி) ஒண்ணுமில்லை சார்…..

 

இன்ஸ்பெக்டர் : (முறைப்புடன்) நீங்க ட்ரீட்மென்ட் எடுக்குற டாக்டர்கிட்ட ஒரு சர்டிபிக்கேட் வாங்கி குடுங்க…..அதுமட்டுமில்ல. அவர் வந்து வாக்குமூலம் கொடுக்கணும். அவர் குடுக்கப்போற குட் சர்டிபிக்கேட்ல தான் உங்க வாழ்க்கை இருக்கு….. அப்புறும்…… ஏட்டுகிட்ட அப்படியே ஒரு 50 ஆயிரம் ரூபாய் பீஸ் கட்டிருங்க…… புரியுதா…..

 

அவர் : புரியுது சார்….

 

இன்ஸ்பெக்டர் : அதுசரி….. அதெப்படி ஃபஸ்ட் ஃபுளோர்ல இருந்து, 5 மீட்டர் தள்ளி நடந்து போய்கிட்டு இருந்த கிழவி மேல தாவி குதிச்சீங்க. ஒலிம்பிக்லேயே 7 மீட்டர் தூரம்தான் தாண்டுறாங்க….. உங்களால எப்படி முடிஞ்சது.

 

அவர் : அது ….. அது வந்து சார்…… எனக்கு ஜீசஸ்னா ரொம்ப புடிக்கும் சார் (அவர் பயத்தில் உண்மையை உளறினார்)

——————————————————————————-

 

இடம் : மன நல மருத்துவமனை

 

டாக்டர் : கடைசில நான் சொன்னது நடந்துருச்சா…..

 

அவர் : நீங்க கத்தியால குத்துனியான்னு தான கேட்டீங்க…. இப்ப மாத்தி பேசுறீங்க…

 

டாக்டர் : இவர் தேற மாட்டாரு…. தயவு செஞ்சு கூட்டு போங்க மேடம் உங்க புருஷன

 

அவர் மனைவி : (கையில் ஏதோ அலுமினியக் குண்டா வைத்திருப்பதாக நினைத்துக் கொண்டு, தலையில் ஒரு அடி அடித்தார். அது அவருக்கு மட்டும் புரிந்து கலவரமானார்) அவர் கெடக்காரு டாக்டர்…. அவர ஒரு நோயாளியா நெனைச்சு நீங்கதான் டாக்டர் காப்பாத்தணும். நீங்க சர்டிபிக்கெட் கொடுத்தாத்தான் அவர இந்த கேஸ்ல இருந்து காப்பாத்த முடியும் ப்ளீஸ் டாக்டர்.

 

டாக்டர் : உங்க முகத்துக்காக பாக்க வேண்டியிருக்கு….. சார் தயவு செஞ்சு கோஆப்ரேட் பண்ணுங்க சார்….

 

அவர் சரியென்று தலையாட்டினார் ஒரு குழந்தையைப்போல.

——————————————————————————-

 

இடம் : போர்க்களம்

 

கிருஷ்ணர் : அர்ஜுனா…. செய்பவனும் நானே…. அழிவுறும் பொருளும் நானே…. அனைத்தும் நானே…. பரம்பொருளாகிய என்னைத்தவிர வேறு ஒன்றும் இல்லை இந்த உலகில்…..

 

அவர் : நான் எப்படி எனக்கு ட்ரீட்மெண்ட் குடுக்குற டாக்டரை கொல்ல முடியும் பரம்பொருளே…. அது என்னால் முடியாது……

 

கிருஷ்ணர் : நீயே செயல்படுவதாக நினைப்பது வெறும் மாயை. அனைத்தையும் செய்பவன் நானே… ஆகையால் உன் அகந்தையை கொன்றுவிடு.

 

அவர் : அகந்தையையும், டாக்டரையும் கொன்றே ஆக வேண்டுமா கிருஷ்ணா

 

கிருஷ்ணர் : ஆம்…. அது அத்வைத நிலையில் நடைபெற வேண்டும். பரம்பொருளோடு ஒன்றினைந்து….. செயல்படுவது நானல்ல பரம்பொருளே என்ற நிலையில் செயல் நடைபெற வேண்டும்…. புரிகிறதா….

 

அவர் : புரிகிறது பரம்பொருளே….

 

——————————————————————————-

 

இடம் : காவல் நிலையம்

 

அவர் : தரையையே பார்த்துக் கொண்டிருந்தார்.

 

இன்ஸ்பெக்டர் : (மனதிற்குள்ளாக) கொள்ளைக்காரனுக எல்.கே.ஜி.க்கே 35 ஆயிரம் ரூபாய் ஃபீஸ் கேக்குறானுக. இவன்கிட்டயிருந்து 50 ஆயிரத்த கறக்குறதுக்குள்ள உசிர் போயி உசிர் வருது. கடவுளே என்ன பொழப்பு இது…. பேசாம 4 எருமை மாட்ட வாங்கி மேய்க்க போகலாம்.

 

 

யோவ் அங்க என்னத்தையா பாத்துக்கிட்டு இருக்க பதில் சொல்லுயா…. கையில் கடப்பாறையோட அந்த டாக்டரை 4 தெரு தொரத்திருக்க. இதையும் தூக்கத்துலதான் செஞ்சேன்னு  சொல்லப் போறியா…… சொல்லித் தொலையா……

Series Navigationதாகூரின் கீதப் பாமாலை – 82 ஆத்மாவின் அமுதம் .. !அப்பா ஒரு நாய் வளர்க்கிறார்
author

சூர்யா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *