புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 31.சர்வாதிகாரியாக மாறின ஏ​ழை

This entry is part 11 of 29 in the series 3 நவம்பர் 2013

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை)

மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

                                      E. Mail: Malar.sethu@gmail.com

31.சர்வாதிகாரியாக மாறின ஏ​ழை

      என்ன உலகம்…நல்லது ​சொன்னா ஏத்துக்க மாட்​டேங்குறாங்க… ​கெட்டது ​சொன்னா ஒட​னே ஏத்துக்குறாங்க…..புரிஞ்சுக்க​வே மாட்​டேங்குறாங்க…அ​ட​டே என்ன ஏ​​​தேதோ..​சொல்லிப் புலம்பிக்கிட்​டே வர்ரீங்க…இங்க பாருங்க புலம்பாதீங்க..உலகம் இப்படித்தான் இருக்கும்…..நல்லது ​சொன்னா யாரு ​கேக்குறாங்கறீங்க..ஒருத்தரும் ​கேக்கமாட்டாங்க…எல்லாம் பட்டாத்தான் புத்தி வருது..க​டைசி ​நேரத்துல புத்தி வந்து என்ன ​செய்ய…எல்லாம் முடிஞ்சிருது…சில​பேரு ​கெட்டபின்புதான் ஞானியா மாறுறாங்க…மாறி என்ன ​செய்ய முடியும்…ஆமா ​போனவாரம் ​கேட்​டே​னே ஒரு ​கேள்வி…அதுக்கு வி​டை கண்டுபிடிச்சுட்டீங்களா… இல்​லையா…. பராவயில்ல…நா​னே ​சொல்​றேன்.. நீங்க இப்ப ​சொன்னீங்கள்ள அது​போல​வே இருந்தவருதான் மு​சோலினி…

அவரு ​தொடக்கத்தில இருந்​தே யா​ரோட ​பேச்​சையும் ​கேக்கல…தன்​னோட மனசுல பட்ட​தெல்லாம் ​செய்யத் ​தொடங்கினாரு…​மொதல்ல இவரு பின்னால ​போக ஆரம்பிச்ச மக்கள் பின்னால..அவ​ரையும் அவரது ​செய்​கைக​ளையும் ​வெறுக்கத் ​தொடங்கினாங்க…ஒரு கட்டத்துல அவ​ரோட அட்டூழியம் தாங்க முடியாததால அவரக் ​கொல்லத் துடிச்சாங்க.. க​டைசியில என்னன்னா மக்க​ளே அவ​ரையும் அவரது குடும்பத்தின​ரையும் அடிச்சுக் ​கொன்னாங்க…..அவ்வாறு இறந்தவருதான் மு​சோலினி..அதுவும்,

“​செயத்தக்க அல்ல ​செயக்​கெடும் ​செயத்தக்க

​செய்யா​ மையானும் ​கெடும்”

அப்படீங்கற திருக்குறளுக்கு சரியான உதாரணமா விளங்கினவருதான் மு​சோலினி.. அவ​ரைப் பத்தி ​சொல்​றேன் ​கேளுங்க..

பிறப்பும் வறு​மையும்

மிகுந்த வறு​மையான குடும்பத்துல பிறந்தவரு மு​சோலினி… இத்தாலி​ நாட்டிலுள்ள போர்லி மாகாணத்தினலுள்ள டோவியா டை பிரிடாப்பியோ என்ற ஊரில் 1883-ஆம் ஆண்டு ஜூ​லை மாதம் 29-ஆம் ​தேதி மு​சோலினி பிறந்தார். இவர் தந்தை பெயர்அலெக்சாண்ட்ரோ முசோலினி. இவர் ஒரு இரும்பு அடிக்கும் கொல்லர். ஏ​ழைத் ​தொழிலாளி ஆவார். இவர் தாய் ரோசா முசோலினி ஆசிரியை. இவர் தாய் கத்தோலிக்க மதத்தில் அதிக இறை பற்றுடையவர். பெனிட்டோ அமில்கார் அன்டிரியா முசோலினி என்பதுதான் முசோலினியின் முழு​மையான ​பெயராகும்.

மு​சோலினி அவரது பெற்றோருக்கு மூத்த மகனாவார். இவரின் உடன் பிறந்தோர் அமால்டோ முசோலினி மற்றும் எட்விக் முசோலினி ஆகி​யோராவர். சிறு வயதில் தன் தந்தையின் தொழிலுக்கு முசோலினி மிகவும் உதவியாக இருந்தார். முசோலினியின் தந்​தை சீர்திருத்தக் ​கொள்​கை உ​டையவராக இருந்தார். அதனால் மு​சோலினிக்கு மு​றையாக ஞானஸ்நானம் செய்யப்படவில்லை.

குழந்​தைப் பருவத்தில் மற்ற குழந்​தைக​ளைப் ​போல் மு​சோலினிக்குப் ​பேச்சு வரவில்​லை. அக்குழந்​தை எல்​லோ​ரையும்  தன் ப​கைவராக நி​னைத்துக் ​கொண்டு எப்​போதும் முகத்​தை உம் என்று ​வைத்துக் ​கொண்டு தனித்து இருந்து வந்தது. ​பெற்​றோர் மு​சோலினி​யைப் ​பேச​வைக்க எவ்வள​வோ முயன்றும் பயனில்லாமல் ​போனது.

மு​சோலினிக்குப் ​பேச்சு வராததால், அ​வ​ரை மருத்துவரிடம் அ​ழைத்துச் ​சென்று காண்பித்தனர். மு​சோலினி​யைச் ​சோதித்த மருத்துவர், “இந்தக் குழந்​தையின் உடலில் எந்தவிதமான பாதிப்பும் இல்​லை. இப்​போது இவன் ​பேசவில்​லை என்று கவ​லைப்படுகிறீர்கள். ஆனால் வருங்காலத்தில் இவன் ​தே​வைக்கு அதிகமாகப் ​பேசுகிறா​னே என்று நீங்கள் நி​னைப்பீர்கள்” என்று தீர்க்கதரிசி ​போன்று கூறினார்.

அம்மருத்துவர் கூறியது உண்​மையாக ஆகிவிட்டது. பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு நாள் இரவில் சிறுவனாகிய மு​சோலினி வீட்டின் ஓர் அ​றையில் நான்கு சுவர்களுக்கு நடுவில் தனி​யே நின்று ​கொண்டு​ பேசிக்​கொண்டிருந்தான். அ​தைக் கண்ட மு​சோலினியின் தாய் ஆச்சரியத்துடன் மு​சோலினி​யைப் பார்த்து, “இரவில் என்ன ​செய்து ​கொண்டிருக்கிறாய்?” என்று ​கேட்டார்.

அதற்கு சிறுவன் மு​சோலினி, “அம்மா வருங்காலத்தில் இந்த நாடு முழுவதும் எனக்குப் பணிந்து நடக்கும்​போது, நான் எப்படிப் ​பேச ​வேண்டு​மென ஒத்தி​கை பார்க்கி​றேன்” என்று கூறினான். மு​சோலினி குழந்​தைப் பருவத்தில் தன்னிடம் இருந்த தாழ்வு மனப்பான்​மை​யை உதறி எறிந்துவிட்டு, உயர்வு மனப்பான்​மையுடன் நடந்து ​கொண்டார். மு​சோலினியின் தாயார் அவ​ரைப் பாதிரியாராக ஆக்க நி​னைத்தார். ஆனால் மு​சோலினி ஆத்திகத்திற்கு ​நேர்மாறான நாத்திகராக மாறினார். இதுதான் உலக விந்​தை..அதிலும் விந்​தை என்ன​வெனில் அவர் நாத்திகராக இறுதிவ​ரையிலும் இல்லாதிருந்ததுதான்…

நாடுகடத்தப்படுதலும் இராணுவப் பணியும்

முசோலினி 1902-ஆம் ஆண்டு தன் சொந்த மண்ணை விட்டு சுவிட்சர்லாந்துக்கு குடியேறினார். அங்கு அவருக்கு வேலை கிடைக்கவில்​லை. அதனால் அவரும் அவரது குடும்பமும் மிகுந்த வறு​மைக்கு உள்ளாயினர். முசோலினி சோசலிச இயக்கத்தில் சேர்ந்ததால்இத்தாலிக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு தானக​வே ​சென்று இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். முசோலினி இராணுவத்தில் மிகச் சிறப்பாகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

முசோலினி 1917 –ஆம் ஆண்டு வரை இராணுவத்தில் சிறப்பாகப் பணிபுரிந்தமையால் நாற்பதுக்கும் அதிகமான பதக்கங்க​ளைப் பரிசாகப் ​பெற்றார். அதன்பின் முசோலினிக்கு டைபாய்டு காய்ச்சல் ஏற்பட்டு மிகுந்த துன்பத்திற்கு ஆளாயினார். இதனால் இவரது இராணுவப் பணியில் ​தொய்வு ஏற்பட்டது. இந்​நோயின் காரணமாகவும் மார்ட்டர் வெடிவிபத்தில் சிக்கி விபத்துக்குள்ளானதாலும் இராணுவப் பணியை முசோலினியால் தொடரமுடியாமல் போனது. இராணுவத்திலிருந்து விலகிய மு​சோலினி பின்னர் ​சோசலிஸ்ட் கட்சியில் உறுப்பினராகச் ​சேர்ந்து ​வே​லை நிறுத்தம், வன்மு​றைகள், ஆர்ப்பாட்டம் ஆகியவற்​றைத் தூண்டும் முரட்டுக் குணம் ப​டைத்தவராகத் திகழ்ந்தார். அவர் ​சோசலிஸ்ட் கட்சியிலிருந்த​போது பதி​னோரு மு​றை சி​றையில் அ​டைக்கப்பட்டார்.

மு​சோலினி, “சி​றைச்சா​லை ஒரு நல்ல ஆசிரிய​ரைப் ​போல் எனக்குப் பாடம் கற்பித்தது. அங்கு பசிதான் எனது முதல் எதிரியாக இருந்தது” என்று தாம் சி​றையிலிருநதை​தைப் பற்றிக் குறிப்பிடுகிறார். மு​சோலினி பத்தாண்டு காலம் ​சோசலிஸ்ட் கட்சியில் இருந்து அடிக்கடி சி​றை ​சென்று ​கொண்டிருந்ததால் அவர் மக்களி​டை​யே பரபரப்பாகப் ​பேசப்பட்டார்.

1914-ஆம் ஆண்டில் முதல் உலகப்​போர் ​தொடங்கியது. ​போரில் இத்தாலி ஈடுபடக்கூடாது என்று ​சோலிஸ்ட் கட்சி தீர்மானித்த​போது அத​​னை மு​சோலினி எதிர்த்தார். ​மேலும் ​சோசலிஸ்ட் கட்சியிலிருந்து 31 வயதான மு​சோலினி ​வெளி​யேறினார். இந்நிகழ்வு மு​சோலினி​யை ​மேலும் பிரபலப்படுத்தியது.  பாசிசக் ​கொள்​கை​யை உருவாக்குதல்

முதலாம் உலகப் போரில் நேச நாட்டு படைபிரிவுக்காக பணிபுரிந்து திரும்பியவுடன் தன் சோசலிச கருத்துக்களுக்கு முசோலினி முற்றுப்புள்ளி வைத்தார். சோசலிசம் தோற்றுப்போன ஓன்று என்று கருதிய மு​சோலினி அத​னைக் ​கைவிட்டுத் தன்​னை மிகவும் கொடுரகுணம் கொண்ட மனிதனாக மாற்றிக்கொண்டார். இவ்வாறு ​கொடு​மையான குணம் இருந்தால் மட்டுமே இத்தாலியை அதன் பழையநிலைக்கு உயர்த்தமுடியும் என்று மு​சோலினி நம்பினார். சோசலிசம் இறந்துபோய்விட்டது; அதனால் நாட்டுக்கு பயன் எதுவும்இல்லை என்பதை  பகிரங்கமாக அறிவித்தார். மாறாகப் பாசிசத்​தை வளர்த்​தெடுப்பதில் மு​சோலினி ​பெருமு​னைப்புக் ​கொண்டார்.

இராணுவத்தில் ​சேர்ந்து பணியாற்றிய மு​சோலினி 1918-ஆம் ஆண்டில் ​போர் முடிந்த பிறகு ​பொது மக்களின் நம்பிக்​கைக்குரிய மனிதராகத் தன்​னை உயர்த்திக்காட்ட விரும்பினார். 1919-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23-ஆம் ​தேதி மிலான் நகரில் மு​சோலினி தமது 36-ஆம் வயதில் பாசிஸ்ட் கட்சி​யைத் ​தொடங்கினார்.

கட்சியின் ​​தொடக்க விழாவிற்கு வந்த உறுப்பினர்க​ளை மு​சோலினி கருஞ்சட்​டையும், துருக்கி நாட்டுக் குல்லாயும் அணிந்து வரச் ​செய்தார். முதல் உலகப்​போரில் ​கொரில்லாப் ப​டை வீரர்கள் கருஞ்சட்​டை அணிந்து இரண்டு ​கைகளிலும் ​வெடிகுண்டுக​ளை ஏந்திச் ​சென்று எதிரிக​ளை அதிரச் ​செய்தனர். அது​போலக் கருஞ்சட்​டை அணிந்த பாசிஸ்ட் கட்சியினரும் அதிரடிப் ப​டையாகச் ​செயல்பட ​வேண்டு​​மென மு​சோலினி கூறினார்.

 

பாசிசம் வகுப்பு வாதத்தையும் வகுப்புவாதக் கலவரங்களையும் எதிர்த்த்து. பாசிசம் தேசியவாதிகளின் உரிமைகளை நிறைவேற்றவும் அவர்களின் பங்கினால் தேசத்தை ஒருங்கிணைத்து இத்தாலியை அதன் பழையநி​லைக்கு உயர்த்தியது. பிரபுக்களையும் நடுத்தர வர்க்கத்தினரையும் இணைக்கும் பாலமாக பாசிசம் பயன்பட்டது. இதன் மூலம் மு​​சோலினி ரஷ்யாவில் ஏற்பட்ட புரட்சியை இத்தாலியில் நுழைய முடியாமல் செய்துவிட்டார். தொழிலாள வர்க்கத்துக்கு முசோலினி எதிரியல்ல என்றாலும் பாசிச கொள்கைக்கு எதிராக யார்செயல்படுவதையும் மு​சோலினி பாசிஸ்டுகள் மூலம் தடுத்தார்.

இதன் கொள்கை விளக்க அறிவிப்பான பாசிசப் போராட்ட அறிக்கை (The Manifesto of the Fascist Struggle) 1919 – ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. இந்த கொள்கை பழமைவாதிகளையும், புதுமைவாதிகளையும் ஒரு சேர கட்டுபடுத்தியது. இக்​கொள்​கை​யை மக்கள் முதலில்  ​வெறுப்பாகப் பார்த்தாலும் பின்னர் அத​னை முழுமனதாக ஏற்றுக்கொண்டனர்.

கருஞ்சேனைப் ப​டை​யை உருவாக்குதல்

முசோலினியின் பாசிசக் கொள்கையில் அதிக பற்று கொண்ட முசோலினியின் நம்பிக்கைக்குரிய டினோ கிராண்டி என்பவர் இராணுவத்தில் ஒய்வு பெற்றவர்களிடம் பரப்புரை செய்து அவர்களை ஒன்று திரட்டி கருஞ்சேனை (Black Shirts) என்ற தனி இராணுவப்பிரிவைஉருவாக்கினார். இந்த கருஞ்சேனைப் படையினர் கம்யூனிசவாதிகளையும், பொதுவுடமை வாதிகளையும் மற்றும் குழப்பவாதிகளையும் அடக்கும் பணியினை மேற்கொண்டது. இது அரசியலின் மூன்றாம் வழியாக (The Third Way) கையாளப்பட்டது.

கம்யூனிசத்தை அப்போதிருந்த அரசு வெறுத்ததால் இவற்றின் வளர்ச்சியையும், செயல்பாடுகளையும் அப்போதைய அரசு கண்டுகொள்ளவில்லை. இதன் காரணமாக பாசிஸ்டுகளின் எண்ணிக்கை இரண்டு வருடங்களில் கணிசமான எண்ணிக்கையை எட்டியது. பின்தேசிய பாசிசக் கட்சியாக (National Fascist Party) ரோமில் உருவெடுத்தது. 1921-ஆம் ஆண்டு ந​டை​பெற்ற தேர்தலில் முசோலினி முதன் முறையாக இத்தாலி கீழ் சபை பாரளுமன்றக்குழு தலைவராகத் (Chamber of Deputies) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இத்தாலியின் டியூஸ் ஆதல்

நாளுக்கு நாள் பாசிஸ்ட் கட்சியினரின் எண்ணிக்​கை அதிகரித்தது. தங்களது த​லைவ​ரைப் ​போல​வே பாசிஸ்ட்ட கட்சினர் முரட்டுத்தனமாகச் ​செயல்பட்டனர். ஒரு நகரில் அந்தக் கட்சிக்குத் த​லைவராக இருந்தவர் “வியாபாரிகள் அ​னைவரும் தங்கள் சரக்குகளின் வி​லை​யை 20 சதவிகிதம் கு​றைக்க ​வேண்டும் என்று உத்தரவிட்டார். அதற்கு இணங்காத வியாபாரிகளின் ​பொருள்கள் சூ​றையாடப்பட்டன.

1922-ஆம் ஆண்டு மு​சோலினி இத்தாலியின் சர்வாதிகாரியானார். ​சோசலிஸத்தில் சிறிதும் நம்பிக்​கை இல்லாத பாசிஸ்ட்டுகள் மக்களாட்சி மு​றைக​ளை முற்றிலும் ஒதுக்கித் தள்ளிவிட்டுச் சர்வாதிகாரத்​தை நி​லைநாட்டத் ​தொடங்கினர். நா​டெங்கும் ஒ​ரே கட்சி ஒ​ரே த​லைவர் அவர்தான் டியூஸ்.

இத்தாலியின் டியூஸாகிய மு​சோலினி அப்​பொறுப்​பை ஏற்றுக் ​கொண்டதிலிருந்து நாள்​தோறும் கா​லை 8 மணிக்​கே வந்து தனது அலுவலகத்தில் பணியாற்றத் ​​தொடங்கினார். இரவு ஒன்பது மணிவ​ரை மு​சோலினி சுறுசுறுப்பாகச் ​செயல்பட்டார். மதிய உணவிற்குப் பிறகும் அவர் ஓய்வின்றிப் பணியாற்றினார்.

ஆட்சியின் வி​நோதங்களும் அவலங்களும்

மு​சோலினி பதவி ஏற்ற இரண்​டே மாதங்களில் 32 மு​றை அ​மைச்சர​வைக் கூட்டத்​தை நடத்தினார். ஒவ்​வொரு கூட்டமும் 5 மணி ​நேரத்திற்குக் கு​றையாமல் ந​டை​பெற்றது. அரசு அலுவலர்கள் ​தே​வைக்கு அதிகமாக உள்ளனர் என்று காரணம் காட்​டி மு​சோலினி 35 ஆயிரம் ​பே​ரை ​வே​லைநீக்கம் ​செய்தார். ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் அரசுப் பணிகள் அ​னைத்தும் பாசிஸ்ட் கட்சியினரால் நிரப்பப்பட்டன. அரசாங்கச் சலு​கைகளும் அந்தக் கட்சியினருக்​கே வழங்கப்பட்டன.

தீவிர நாத்திரகராக இருந்த மு​​சோலினியின் ஆட்சியில் மூடநம்பிக்​கைகள் வளர்ந்தன. 13 மற்றும் 17 ஆகிய ​தேதிகள் அதிர்ஷ்டமில்லாத​வை எனக் கருதப்பட்டு, நாட்காட்டியிலிருந்து அ​வை அகற்றப்பட்டன. பிரதமரின் ​மே​சை மீது பளபளப்பாகத் ​தேய்த்து ​வைக்கப்பட்டிருந்த குதி​ரை லாடத்​தை அணுவளவும் நகர்த்தக் கூடா​தென உத்தரவிடப்பட்டிருந்தது.

ஒரு சமயம் எகிப்திய மம்மி ஒன்று மரப்​பெட்டியுடன் மு​சோலினிக்குப் பரிசாக வழங்கப்பட்டது. அ​தை அவரது அ​றைக்குக் கீ​ழேயிருந்த ஸ்​டோர் ரூமில் ​வைத்தனர். மு​சோலினி அ​தை உட​னே அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டார். அ​தை அகற்றும் வ​ரை தனது நாற்காலி​யை விட்டு அவர் எழவில்​லை.

மு​சோலினியின் அரசியல் எதிரிகள் யார்-யார் அவர்கள் எங்​​கெங்கு கூடிப் ​பேசுகிறார்கள் எனக் கண்காணிக்கப்பட்டது. பலரின் ​தொ​லைப்​பேசி உ​ரையாடல்கள் ஒட்டுக் ​கேட்கப்பட்டு பதிவு ​செய்யப்பட்டன. எதிரிகள் கூடிப்​பேச இடம் ​கொடுத்த தங்கும் விடுதிகள் மூடப்பட்டன. பல இடங்களில் முன்னறிவிப்பின்றி திடீர் என்று ​சோத​னைகள் நடத்தப்பட்டன. பலர் ​கைது​செய்யப்பட்டு சி​றையில​டைக்கப்பட்டனர்.

1926-ஆம் ஆண்டு ஜனவரியில் மு​சோலினி பிறப்பித்த உத்தரவின்படி இத்தாலியில் பாசிஸ்ட் கட்சி தவிர மற்ற எல்லாக் கட்சிகளும் த​டை ​செய்யப்பட்டன. அத​னை எதிர்த்தவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு தண்ட​னை வழங்கப்பட்டது. இதனால் பயந்து​போன எதிர்க்கட்சியினர் பலர பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்குத் தப்பி​யோடினர்.

அரசுக்கு எதிராகச் ​செயல்படு​வோர் மீது நாள்​தோறும் எடுக்கப்பட்ட நடவடிக்​கைகள் குறித்து அறிக்​கை ​கோரப்பட்டது. ​ரோம் நகரில் மட்டும் நாள்​தோறும் நூற்றுக்கும் ​மேற்பட்​டோர் அரசியல் காரணங்களால் ​கைது ​செய்யப்பட்டனர்.

​சைது ​செய்யப்பட்​டோர் தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்​டை எதிர்த்து வழக்காட உரி​மை கி​டையாது. ​வெளிநாட்டிலிருந்து வரும் கடிதங்கள் தணிக்​கை ​செய்யப்பட்டன. அரசியல் ​கைதிக​ளைக் கயிற்றால் கட்டி உயரத் தூக்கி, ​தொபீ​ரெனக் கீ​ழே ​போட்டு…மறுபடியும் சற்று உயர்த்தி மீண்டும் கீ​ழே ​போட்டு சித்திரவ​தை ​செய்தனர். இதனால் ஆயிரக்கணக்கான இத்தாலியர்கள் மு​சோலினி இறந்தால் நல்லது என்ற முடிவிற்கு வந்தனர். அவ​ரைக் ​கொ​லை​செய்துவிட நான்கு மு​றை முயன்று அதில் ​தோல்வியும் கண்டனர்.

ஹிட்லருடன் நட்பு

முசோலினியும் இட்லரும் ​தொடக்க காலத்தில் எதிரிகளாகத்தான் இருந்தனர். 1933-ஆம் ஆண்டில் முசோலினியின் நண்பர் எய்ஞ்பெட் டால்பஸ் மற்றும் அவருடைய நண்பரும் ஆஸ்திரிய நாசிக்களால் கொல்லப்பட்டனர். அது முதல் முசோலினி ஹிட்ல​ரைப் ப​கைவராகக் கருதினார். முசோலினியின் பாசிசக் கட்சியில் யூதர்கள், யூதரல்லாதவர், யூதபகைமை என்ற கோட்பாடுகள் கடைப்பிடிக்கப்படவில்லை. பாசிசக்கொள்கையை மட்டுமே வலியுறுத்தினார். ஆகையால் முசோலினிக்கு இட்லரின் கொள்கை பிடிக்கவில்லை.முசோலினி போப்பிடம் பற்றுகொண்டவர். அது மட்டுமில்லாமல் கலாச்சார பண்புகளையும், செயல்களையும் வைத்து ஒருவர் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வர்க்கபேதத்தை உருவாக்கலாம் ஆனால் பிறப்பினால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதம் எடுபடாது என்றநம்பிக்கையுடையவர் என்பதால் ஹிட்லரின் நாசிசத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. 1920 – ஆம் ஆண்டு 1934 – ஆம் ஆண்டு வரை உள்ள காலகட்டத்தில் யூதர்கள் சமூகத்தின் எல்லா மட்டங்களில் இருந்ததால் இத்தாலிய பாசிசம் யூதர்களுக்கு எதிரான வர்க்கபேதத்தையும்,வகுப்புவாதத்தையும் வளர்க்கவில்லை. அவர்கள் ஒரு சிறு கூட்டமாக இருந்ததால் ரோம் அரசர் காலத்திலிருந்து அவர்களால் எந்த தொல்லையும் ஏற்படவில்லை.

1937-ஆம் ஆண்டு ​​செப்டம்பரில் ஹிட்லர் மு​சோலினி​யை ​ஜெர்மனிக்கு வரவ​ழைத்து அவருக்கு எதிர்பாராத வர​வேற்பு அளித்தார். அதில் திக்குமுக்காடிப்​போன மு​சோலினி இத்தாலியும் ​ஜெர்மனியும் ஒன்​றே என்று ​பேசினார். மா​பெரும் ​பொதுக்கூட்டத்தில்,”உங்கள் பியூர​ரை எனது நல்ல நண்பராகப் ​பெற்றிருக்கி​றேன். இந்த நண்பருடன் இறுதிவ​ரைக் ​கை​​கோர்த்துச் ​சென்று ​கொண்டிருப்​பேன்” என்று மு​சோலினி முழங்கினார்.

1938-ஆம் ஆண்டு ஹிட்லர் இத்தாலிக்கு வந்த​போது அவ​ரை வர​வேற்க இன்​றைய பணமதிப்பில் சுமார் 200 ​கோடி ரூபாய் ​செலவு ​செய்தார். அதில் ஹிட்லர் மனமகிழ்ச்சியானார். 1939-ஆம் ஆண்டு ​மே 22-ஆம் ​தேதி ​ஜெர்மனி – இத்தாலி ஆகிய நாடுகளுக்குள் எஃகு ஒப்பந்தம் என்ற ​பெயரில் கூட்டு உடன்படிக்​கை ஏற்பட்டது. இது ஒரு நாடுகளும் ஒன்றுக்​கொன்று ராணுவ உதவி ​செய்வதற்கு வழி​கோலியது.

இரண்டாம் உலகப் ​போரில் ஈடுபடல்

 

ஹிட்லர் உலகப்​போ​ரைத் ​தொடங்கி நடத்திக் ​கொண்டிருந்த நி​லையில் மு​சோலினி ஹிட்லருடன் ​கூட்டுச் சேர்ந்து ஆதாயம் ​தேட மு​னைந்தார். உலகப் ​போர் ​தொடங்கி ஐந்து மாதங்களுக்குப் பிறகு 1940-ஆம் ஆண்டில் அ​​மெரிக்க ​வெளியுறவு அ​மைச்சர் சம்னர் ​வெல்ஸ் என்பவர் ​ரோமாபுரிக்குச் ​சென்று மு​சோலினி​யைச் சந்தித்து நடுநி​லை வகிக்குமாறு ​கேட்டுக் ​கொண்டார். அப்​போது மு​சோலினி 56 வய​தைத் ​தொட்டிருந்தார்.

1940-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10-ஆம் ​தேதி மு​சோலினி ​போர்ப் பிரகடனம் ​செய்தார். அப்பிரகடனத்​தை அவர் பிரான்ஸ், பிரிட்டன் நாட்டுத் தூதர்களிடம் ​கொடுத்தார். இத்தாலி முழுவதும் ​போர் அறிவிப்பு ஒலி ​பெருக்கியில் பரப்பு​ரை ​செய்யப்பட்டது. மக்கள் அச்சம​டைந்தனர். முன்​போல் அவர்கள் தங்கள் டியூஸின் ​பேச்​சைக் ​கேட்டுக் ​கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் ​செய்யவி​ல்லை. மிலான் நகரத் ​தேவாலயத்தில் கூடியிருந்த மக்கள் அப்​போ​தே அழுதனர். மு​சோலினி பிரான்ஸ் மீது 1940-ஆம் ஆண்டு ஜூன் 21-ஆம் ​தேதி தாக்குதல் நடத்தினார்.

அக்​டோபர் மாதத்தில் மு​சோலினி கிரீஸ் நாட்டுடன் ​போர்​தொடுத்தார். ஹிட்லர் மட்டும் பல நாடுக​ளை ஆக்கிரமித்து நமது ராணுவ உதவி​யைப் ​பெற்றார். நாமும் கிரீஸ் மிது ​போர் ​தொடுத்து, அவரிடம் ராணுவ உதவி ​கோரு​வோம் என்று மு​சோலினி கூறினார். ஆனால் இத்தாலியப் ப​டை கிரீஸ் நாட்டில் ​தோற்று, அந்நாட்டு ராணுவத்தால் சுற்றி வ​ளைக்கப்பட்டது. இத்தாலியப் ப​டைக​ளை மீட்க ஹிட்லர் 7 லட்சம் ​ஜெர்மானிய வீரர்க​ளை அனுப்பினார். ஆனால் அதற்குள் 20ஆயிரம் இத்தாலிய வீரர்கள் கிரீஸில் ​கொல்லப்பட்டு, 40 ஆயிரம் ​பேர் காயம​டைந்தனர். 26 ஆயிரம் ​பேர் ​போர்க் ​கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.

ஹிட்லர் ரஷ்யாவில் பர்பரா​ஸோ பகுதி​யைக் ​கைப்பற்ற முயன்று பல லட்சம் வீரர்க​ளை இழந்து ​தோல்வியுற்றார். 1941-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் ​தேதி மு​சோலினியின் மகன் புரு​னோ விமானவிபத்தில் இறந்தார். இத​னைக் ​கேள்வியுற்ற மு​சோலினி மிகுந்த துன்பத்திற்குள்ளானார். ரஷ்யாவில் ​தோல்வி​யைத் தழுவிய ஹிட்லருக்கு உதவுவதற்காக மு​சோலினி 4டிவிஷன் ராணுவத்​தையும் 90 ​வோர் விமானங்க​ளையும் அனுப்பினார். ஆனால் அங்கு ​சென்ற ராணுவத்தினர் கடுங்குளிர் தாளாமல் தங்களது டியூ​ஸைத் திட்டித் தீர்த்துக் ​கொண்​டே வி​றைத்து இறந்து ​போயினர். ஆயினும் இரக்கமற்ற மு​சோலினி அதுகுறித்து கவ​லைப்படாமல் இத்தாலிய மக்களின் விருப்ப​த்​தை நி​றை​வேற்றியதாகக் ​கொக்கரித்தார்.

சர்வாதிகாரியின் சருக்கல்

மு​சோலினியின் நீண்ட நாள் நண்பர்களில் ஒருவரான பர்​ஸோனா என்பவர் மு​சோலினியின் தவறான கருத்துக்க​ளைச் சுட்டிக்காட்டித் திருத்த முயன்றார். ஆனால் முடியவில்​லை. விதிவிட்ட வழி என்று அவரும் ​பேசாதிருந்தார். வட ஆப்பிரிக்காவில் எத்தி​யோப்பியாவில் இருந்து வந்த இத்தாலிய ராணுவம் எதிரிகளுடன் ​போரிட முடியாமல் ​மே மாதம் 13-ஆம் ​தேதி சரண​டைந்தது. பிரச்ச​னைகளுக்கு ​மேல் பிரச்ச​னைகள் உருவனதால் மு​சோலினியால் அவற்​றைச் சமாளிக்க மு​டியவி​ல்​லை

மு​சோலினி த​லைம​றைவானார். ​ரோமாபுரியின் மீது ​போர் விமானங்கள் குண்டுக​ளை வீசித்தாக்குதல் நடத்தின. மக்கள் அ​னைவரும் இப்​போ​ரையும், அத​னைத் தங்கள் மீது திணித்த மு​சோலினி​யையும் விரும்பவில்​லை. மக்கள் ​சொல்​லொணாத் துயர​டைந்தனர். இத​னைக் கண்ட மன்னர் தந்திரமாக மு​சோலினி​யைத் தன்னிருப்பிடத்திற்கு வரவ​ழைத்துக் ​கைது ​செய்தார். அ​தோடு மட்டுமன்றி மு​சோலினி​யை டியூஸ் பதவியிலிருந்து நீக்கினார். மு​சோலினி ​கைது ​செய்யப்பட்ட​தை அறிந்த ஹிட்லர் அவ​ரை தனது நம்பிக்​கைக்குரிய ​ஜெர்மானிய வீரர்க​ளைக் ​கொண்டு மீட்டார்.

தன் நண்பனான மு​சோலினி​யை வர​வேற்ற ஹிட்லர் அவ​ரைப் பார்த்து, சூரிய​னைக் கண்டதும் உருகிவிடும் பனிக்கட்டி​யைப் ​போல் உங்கள் பாஸிஸ்ட் கட்சியின் நிலவரம் ஆகிவிட்ட​தே? என்று ​கேட்டார். எதுவும் பேசாதிருந்தார் மு​சோலினி. ஹிட்லர் இத்தாலி மீது பல்​வேறு கட்டுப்பாடுக​ளை விதித்தார். மு​சோலினியின் மருமகன் சி​யோனி மீது து​ரோகக் குற்றம் சாட்டி அவ​ரைக் ஹிட்லர் ​கொன்றார். இத​னை மு​சோலினியால் தாங்கிக் ​கொள்ள மு​டியவில்​லை.

​லேக்​கோர்ட்டா​வைத் தனது புதிய த​லைநகராக்கி மு​சோலினி ஹிட்லர் உதவியுடன் இத்தாலி​யை ஆட்சிபுரியலானார். ஆனால் அது நி​லைக்கவில்​லை. மு​சோலினியின் ​கெட்டகாலம் ஹிட்லரின் ​செல்வாக்கு சரிந்தது. மு​சோலினி​யைக் ​கொல்ல அவரால் பழிவாங்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் மு​னைந்தனர். பாசிஸ்ட் கட்சி இத்தாலியில் இல்லாது ம​றைந்தது. மக்கள் அ​னைவரும் மு​சோலினியின் மீது ​வெறி​கொண்டு ​அவ​ரையும் அவரது குடும்பத்தி​ன​ரையும் ​கொல்வதற்கு அ​லைந்து ​கொண்டிருந்தனர்.

இழிந்த இல்லறம்

முசோலினியின் முதல் மனைவி பெயர் இடா டாலசர்  என்பதாகும். இப்​பெண்​ணை மு​சோலினி 1947 -ஆம் ஆண்டு டிரன்டோவில் திருமணம் புரிந்து ​கொண்டார். இவர்களுக்கு பெனிட்டோ அல்பினோ என்ற மகன் பிறந்தார். ஓராண்டு கழித்து 1915 – ஆம் ஆண்டில் முசோலினி ​ ​ரேச்சலி குடி என்பவரை மணந்தார். முதல் மனைவியும் மகனும் பின்னாளில் மு​சோலினிக்கு அதிக தொல்லைகொடுத்தனர். ரேச்சலுக்கு எட்டா அன்னா மரியா இரு மகள்கள் இருந்தனர். இது மட்டுமல்லாது  முசோலினிக்கு பல ம​னைவியர் இருந்தனர். மார்கெரிடா சபாட்டி கடைசியாக கிளாரா பெட்டாசி உள்ளிட்ட இன்னும் பல பெண்களுடன் காதல் ​தொடர்பு இருந்ததாக மு​சோலினியின் வரலாற்​றை எழுதிய வரலாற்றறிஞர் நிக்கோலஸ் பேரல் குறிப்பிடுகிறார். இலக்கியத்தில் , “இன்பத்து​றையில் எளியரானார்” என்​றொரு வரி வரும் அது ​போன்​றே சிற்றின்பத் து​றையில் மு​சோலினி நடந்து ​கொண்டார். மு​சோலினி யாரிடமும் உண்​மையானவராக நடந்து ​கொள்ளவில்​லை. தமக்கு இன்பம் கி​டைத்தால் அது​போதும் என்​றே வாழ்ந்தார்.

பாவத்தின் சம்பளம் மரணம்

ஒருவன் எ​​தை வி​தைக்கின்றா​னோ அ​தை​யே அறுவ​டை ​செய்கிறான். அதற்​கேற்ப​வே மு​சோலினியின் முடிவும் அ​மைந்தது. மன்னர் டியூ​ஸைப் பதவி நீக்கம் ​செய்தத​தை அறிந்து கம்யூனிஸ்ட்டுகள் மீண்டும் த​லை​யெடுத்தனர். ​பொதுவு​டை​மைக் கட்சி​யை எதிரியாகக் கருதும் அ​மெரிக்கா, மு​சோலினி​யை வீழ்த்த இத்தாலியக் கம்யூனிஸ்டுகளுக்கு ஆயுதங்க​ளை வாரி வழங்கியது. அ​தோடு மட்டுமல்லாது வி​லைமதிப்பற்ற தங்கக் கட்டிக​ளையுமத் பல்லாயிரக்கணக்கான துப்பாக்கிக​ளையும் ​தோட்டாக்க​ளையும் ​போர்க்கப்பல்களில் ஏற்றி வந்து கம்யூனிஸ்டுகளுக்குக் ​கொடுத்தது.

​பொதுவு​டை​மைக் கட்சியில் மக்கள் ஆயிரக்கணக்கில் உறுப்பினர்களாகச்  ​சேர்ந்தனர். மு​சோலினி​யைப் பழி வாங்குவதற்கு கம்யூனிஸ்டுகள் தக்க தருணத்​தை எதிர்பார்த்துக் ​கொண்டிருந்தனர். நாட்டில் ஏற்பட்ட நி​லை​யை அறிந்த மு​சோலினி தனது காதலி கிலாரட்டாவுடன் தப்பிச் ​செல்ல முற்படு​கையில் ​கம்யூனிஸ்டுகளால் ​கைது ​செய்யப்பட்டார். இத்தாலிய கம்யூனிஸ்டு த​லைவர் ​பெல்லினி அவர்க​ளைச் சந்தித்தார். அவர்க​ளை விசாரித்த பின்ன​ரே அவர்களுக்குத் தண்ட​னை ​கொடுக்கப்பட ​வேண்டும் என்று கூறினார்.

ஆனால் அவரது கருத்துக்கு மாறுபட்ட கருத்துக் ​கொண்ட வால்​​டேர் ஆடி​சோ என்னும் 36 வயது அவ​ரைக் ​கொன்றுவிட முடிவு ​செய்தார். இவர் முன்னர் இத்தாலிய ராணுவக் காலனலாகப் பணியாற்றியவர். பாஸிஸ்ட் கட்சியின் எதிரி எனக் குற்றம் சாட்டப்பட்டுப் பின்னர் பதவி நீக்கம் ​செய்யப்பட்டவர். அவர் அ​மெரிக்கத் தளபதி டட்​டோரியாவிடம் தந்திரமாக மு​சோலினி​யைக் ​கொல்வதற்கு ஒரு சுற்றறிக்​கையில் ​கை​யொப்பம் வாங்கினார்.

ஆனால் ​பெல்லினி மு​சோலினி​யை விசாரிக்காது ​கொல்வதற்கு உடன்படவில்​லை. ஆனால் ஆடி​சோ யா​ர் யா​ரைக் ​கொல்ல ​வேண்டும் என்ற பட்டிய​லை அவரிடம் படித்துக் காட்டிக் ​கொ​லைப் பட்டியிலில் இருந்து நான் யா​ரையும் நீக்க மாட்​டேன் என்று கூறிவிட்டான். மு​சோலினி​யை ம​றைத்து ​வைக்க ​பெல்லினி நி​னைத்த​போது தந்திரமாக மு​சோலினியும் அவரது காதலியும் ​சென்ற பியட்கா​ரைக் ​கைப்பற்றி அதில் ஏறிக் ​கொண்டு ​சென்றான். கார் ம​லைப்பகுதியில் வந்த​போது அதிலிருந்து குதித்த ஆடி​சோ, மு​சோலினி​யையும் அவரது காதலி​யையும் சுட்டு வீழ்த்தினார்.

மு​சோலினியைச் சுடுவதற்கு துப்பாக்கி​யை நீட்டி ஆடி​சோ குறிபார்த்த​போது மு​சோலினியின் காதலி சிலாரட்டா துப்பாக்கிக்கு முன் வந்து நின்று ​கொண்டு, “​வேண்டாம்…….. ​வேண்டாம்……அப்படி​யெல்லாம் ​செய்யாதீர்கள்…..என்று அலறினாள். ஆனால் ஆடி​சோ, அவ​ளைப் பார்த்து, “நீ சாக விரும்பவில்​லை என்றால் விலகி நில்” என்றான். அத​னைப் பார்த்த மு​சோலினி தனது ​கோட்டிலும் சட்​டையிலும் இருந்த ​பொத்தான்க​ளைக் கழற்றி மார்​பை நிமிர்த்தி, ‘என் மார்பில் சுடு’ என்றார்.

ஆனால் மு​சோலினியின் காதலி ஆடி​சோவின் துப்பாக்கி​யைப் பிடித்துக் ​கொண்டு அத​னை இழுத்துப் பறிக்க முயன்றாள். ஆடி​சோ துப்பாக்கியின் வி​சை​யை இழுக்க மூன்று குண்டுகள் மு​சோலினியின் காதலி மார்பிலும் ஐந்து குண்டுகள் மு​சோலினியின் மார்பிலும் பாய்ந்தன. இருவரும் ஒரு​சேர வீழ்ந்தனர். இரக்கமற்றவனுக்குக்கூட இதயத்​தை வழங்கிய காதலி இருந்திருக்கிறாள் என்பது விந்​தையிலும் விந்​தையல்லவா….?

1945-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் ​தேதி 61-ஆவது வயதில் மு​சோலினியும் அவருடன் அவரது காதலியும் ​கொல்லப்பட்டு 30-ஆம் ​தேதி விடிந்த​போது மிலான் நகரின் சா​லை ஓரத்தில் நீட்டி நிமிர்த்திக் கிடத்தப்பட்டிருந்தன. ​பெருங்கூட்டம் திரண்டு வந்து இறந்து கிடந்த மு​சோலினி​யையும் அவரது காதலி​யையும் மிதித்து முகத்தில் காரி உமிழ்ந்தனர். மு​சோலினி கிலாரட்டா இருவரின் உ​டைகளும் கிழிக்கப்பட்டு இரு உடல்க​ளையும் கால்க​​ளைப் பிடித்து தரதர​வென்று இழுத்துச் ​சென்று அருகில் இருந்த ​பெட்​ரோல் நி​லையத்தின் கார்டரில் த​லைகீழாகக் கட்டித் ​தொங்கவிட்டனர். மு​சோலினியின் ம​னைவி ​ரேச்சலும் ​கைது​செய்யப்பட்டு சி​​றையில் அ​டைக்கப்பட்டாள்.

இத்தாலி நாட்டில் மட்டுமல்லாது மு​சோலினியின் மரணச் ​செய்தி உலகம் முழுவதும் பரபரப்​பை ஊட்டியது. அ​தைக் ​கேள்விப்பட்ட மு​சோலினியின் நண்பர் ஹிட்லர் தனக்கும் அத்த​கைய நி​லை ஏற்பட்டுவிடக் கூடாது என்று கருதி தனது காதலி ஈவா பிரவு​னை மணந்து ​கொண்டு அவளுடன் விஷம் குடித்து மாண்டார். அவரது உட​லை அவரது ஆதரவாளர்கள் ​பெட்​ரோல் ஊற்றி எரித்துவிட்டனர். பாவத்தின் சம்பளம் மரணம் என்பது நிரூபணமாகிவிட்டது.

இரும்படிக்கும் ஏ​ழைத் ​தொழிலாளியின் மகனாகப் பிறந்த மு​சோலினி இத்தாலியின் சர்வாதிகாரியானார்….இரண்டாம் ஜூலியஸ் சீஸர் என்றும் ஹிட்லரின் வழிகாட்டி என்றும் மு​சோலினி தன்​னைத்தா​னே விளம்பரப்படுத்தினார். தனக்குக் கி​டைத்த நல்ல வாய்ப்​பைப் பயன்படுத்தி நன்​மைக​ளைச் ​செய்து  மக்களின் மனதில் இடம்பிடிக்காது, ​செய்யக் கூடாதவற்​றை​யெல்லாம் ​செய்து தனக்குத் தா​னே இழிந்த முடி​வைத் ​தேடிக்​கொண்டார்..

என்னங்க இப்படி ஆச்சரியமாப் பாக்குறீங்க…நமக்குக் ​கெடச்ச வாய்ப்​பைப் பயன்படுத்தி மத்தவங்களுக்கு உதவி ​செய்யாம தானும் வீணாப் ​போயி மத்தவங்களயும் வீணாக்கி வாழ்ற​தெல்லாம் ​எப்படி ​போகும் அப்படீங்கறதுக்கு மு​சோலினி வாழ்க்​கைதாங்க எடுத்துக்காட்டு…நல்ல வழியில நடப்​போம் நம்மால முடிஞ்ச​ நல்லதை மத்தவங்களுக்குச் ​செய்​வோம்….நமக்கு ​வெற்றிதான்….அப்பறம் என்ன குறிக்​கோள ​நோக்கி நடங்க…

அப்பா சிறிய பலசரக்கு கடை வைத்திருந்தவர். அதிக கடன் காரணமாக அவரால் குடும்பத்தை சீராக நடத்த முடியவில்லை. கடன்காரர்கள் நெருக்கடியை தாங்க முடியாமல் அவர் எப்போதும் மனம் உடைந்துபோன நிலையிலே இருந்தார். தங்களுக்கு உரிய பணத்தைகொடுக்காவிட்டால் சிறைக்கு செல்ல நேரிடும் என்று கடன்காரர்கள் மிரட்டவே ஒரு நாள் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் அவர் வீட்டிலிருந்து வெளியேறி ஒடிபோய்விட்டார்….

அப்பாவின் தலைமறைவு காரணமாக கடன்காரர்கள் அம்மாவை நெருக்கினார்கள். அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அப்பாவை கண்டுபிடித்து அழைத்து வரஅம்மா புறப்பட்டாள். கடன்காரர்கள் பிள்ளைகளில் ஒன்றை அடமானமாக தாங்கள் பிடித்துவைத்துக் கொள்வதாகக் கூறினர். அவர்கள் கடனை தந்தபிறகு அந்த பிள்ளையை மீட்டு போகும்படியாக சொன்னார்கள். அப்படி கடனுக்கு பிடிபட்டு நிறுத்தி வைக்கபட்டு வறு​மையின் உச்சத்​தைக் கண்ட ஒருத்தரு உலகின் மிகச் சிறந்த க​தை​சொல்லிகளில் ஒருவர். சிறுக​தை என்றால் உலகில் அவ​ரைக் கூறிவிட்டுத்தான் மற்றவர்க​ளைக் குறிப்பிடுவர்….அவரு ரஷ்யா​வைச் ​சேர்ந்தவர்…​சொல்லுங்க…என்ன கண்ணமூடிக்கிட்டீங்க…ஓ….​ஹோ….​யோசிக்கிறீங்களா…​யோசிங்க…அடுத்தவாரம் பார்ப்​போம்…(​தொடரும்……32)

 

Series Navigationசொல்வனம் இணைய இதழின் 94வது இதழ்சங்க இலக்கியத்தில் பண்டமாற்று முறை
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *