அடுத்து நாம் ஸ்ரீ கிருஷ்ணரை சந்திக்கும் இடம் சுபத்ராவின் ஹரணத்தில்தான். ஒரு ஹரணத்தில் அன்று தான் செய்ததை இந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஸ்ரீ கிருஷ்ணரால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஒரு ஆடவன் தான் விரும்பும் பெண்ணை மணந்து கொள்வதற்காக அவளை கவர்ந்து செல்வதற்கு ஹரணம் என்று பெயர். ராக்ஷச மணம் என்பது இவ்வாறு விருப்பப்பட்ட பெண்ணை ஹரணத்தில் கவர்ந்து சென்று செய்து கொள்ளும் திருமணமாகும். தேசங்கள் தோறும் சமூக சட்டங்கள் மாறுகின்றன. இவற்றைக் கடந்து மனித செயல்பாடுகளுக்கென்று பொதுவான பிரபஞ்ச விதி ஒன்று உண்டு. இந்த காலத்திற்கும் தேச எல்லைகளுக்கும் கட்டுப் படாது.ஸ்ரீ கிருஷ்ணரின் செயல்களையும் அப்படி ஒரு பிரபஞ்ச விதிக்கு உட்படுத்தி ஆய்வு செய்வோம்.
ஸ்ரீ கிருஷ்ணரின் இந்த செய்கை மூலம் அவரது சிறுமை பெருமைகளை அலசி ஆராயத் தொடங்கும் முன்னர் முதலில் இந்த சுபத்ராவின் திருமணமே மகாபாரதத்தின் மூல நூலில் இருக்கிறதா என்று பார்ப்போம்.
ஸ்ரீ கிருஷ்ணர் ஆதரிக்கும் இந்த ஹரணம் மகாபாரதத்தின் மூல நூலில் இடம் பெற்றுள்ளது .நூலின் பூர்வாங்கத்திலும் பர்வங்கள் மற்றும் அதில் இடம் பெறும் பட்டியலிலும் சுபத்ரா கல்யாணம் குறிப்பிடப் பட்டுள்ளது. இதன் சுலோக வடிவம் மூல நூலின் சுலோகங்களின் இலக்கண முறைப்படியே அமைந்துள்ளதால் இது இடைச் செருகலாக இருப்பதற்கு வாய்ப்பில்லை. மேலும் இப்பகுதியை நீக்கி விட்டு பார்த்தால் மகாபாரதம் என்ற காவியம் முழுமை பெறாமல் போய் விடும்.. அபிமன்யுவின் மகன் பரிக்ஷித்து அவன் மகன் ஜனமே ஜெயன் என்று குரு பரம்பரையே அடி பட்டுப் போய் விடும். ஏன் என்றால் பரிட்சித்து மன்னனும் ஜனமே ஜெயனும் சற்றேறக் குறைய நூறு ஆண்டுகள் இந்த தீப கற்பத்தை ஆட்சி புரிந்திருக்கிறார்கள். பரிட்சித்து அபிமன்யுவின் மகன். அபிமன்யு சுபத்ராவின் மகன். எனவே சுபத்ராவின் பேரன்கள்தான் இந்த பூமியை ஆண்டிருக்கிறார்களே அன்றி திரௌபதியின் பேரன்கள் அல்லர். இதன் மூலம் திரௌபதியின் சுயம்வரத்தைக் கூட மகாபாரதத்திலிருந்து நீக்கி விடலாம். ஒன்றும் நேராது. ஆனால் சுபத்திராவின் திருமணத்தை அப்படி நீக்கி விட முடியாது.
சுபத்ரையின் திருமணத்தில் அதாவது இந்த ஹரண முறையில் உள்ள சோக நீக்கு போக்குகளை அலசி ஆராயும் முன்பு என் வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள். சுபத்ரையின் திருமணம் குறித்து இதுவரை நீங்கள் தெரிந்து வைத்திருக்கும் அனைத்து கட்டு கதைகளையும் ஒரு நிமிடம் ஒதுக்கி வையுங்கள்.அந்த பரவசமூட்டும் கட்டுக் கதைகளில் எல்லாம் சுபத்திரை அர்ஜுனனைப் பார்த்ததும் காதல் என்ற ரீதியில் கூறப்படுபவை. சுபத்திரை தன் மீது மையல் கொநிருக்கிறாள் என்பதை சத்தியபாமை மூலம் அறிய வரும் அர்ஜுனன் அவளைக் கவந்து சென்று திருமணம் புரிகிறான்.
ஆனால் இது இப்படி நிகழவில்லை. பாண்டவர்கள் திரௌபதியை மணந்து கொண்டு இந்திரப்ரஸ்தத்தில் குடியேறிய பிறகு ஒரு சில காரணங்களுக்காக அர்ஜுனன் அவர்களை விட்டு பன்னிரண்டு வருடங்கள் தேசாந்திரம் மேற்கொண்டு பல தேசங்களுக்கு செல்கிறான். அப்படி அவன் சென்ற தேசம்தான் துவாரகை .யாதவர்கள் அவனை மகிழ்வுடன் வரவேற்று அங்கயே தங்கும்படி வற்புறுத்துகின்றனர். அந்த ஊரில் உள்ள மக்கள் – ஆடவர் மகளிர் இளம் யுவன்கள் யுவதிகள் –அனைவரும் ரைவாத்ரா மலையில் நடைபெற உள்ள விழாவில் ஒன்று கூடுகின்றனர். அந்த விழாவிற்கு தன் தோழிகளுடன் சுபத்ராவும் வருகிறாள். திருமணம் ஆகாத அழகிய கன்னிப் பெண் அவள். அர்ஜுனன் அவளைப் பார்த்ததும் மையல் கொள்கிறான்.
ஸ்ரீ கிருஷ்ணர் அவனை சீண்டுகிறார்.” அழகுதான் போ. காட்டில் வனாந்தரியாக திரியும்பொழுது இப்படித்தான் கன்னிப்பெண்களைக் கண்டால் மையல் கொள்வாயா?” என்கிறார். அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணரிடம் தன் பலவீனத்தை ஒத்துக் கொண்டு சுபத்ராவை மனமகளாக மாலையிடும் உபாயத்தை அவரிடமே கேட்கிறான்.
ஸ்ரீ கிருஷ்ணர் அவனுக்கு இவ்வாறு அறிவுரை கூறுகிறார்.” அன்புள்ள அர்ஜுனா! ஒரு பெண்ணின் கரம் பிடிக்க சத்திரியர்களுக்கு விதிக்கப் பட்ட முறை சுயம்வரமாகும். ஆனால் இந்த முறையில் மணப்பெண்ணின் மனதை அறிந்து கொள்வது கடினம். இந்த முறையில் நீ சுபத்ராவை மணந்து கொள்ள விரும்பினால் அது ஆபத்தில் கொண்டு விட்டு விடும். நீ கழுத்தை நீட்டி கொண்டிருக்க அவள் வேறு ஒருவனின் கழுத்தில் மாலை சூடி விட்டால் என்ன ஆகும்? தர்ம சாத்திரங்களின்படி ஒரு சத்திரியனுக்கு தான் விரும்பும் பெண்ணை திருமணம் புரிந்து கொள்ள வேறு ஒரு வழி இருக்கிறது. தான் விரும்பும் பெண்ணை வலுக்கட்டாயமாக கவர்ந்து சென்று மணந்து கொள்ளும் முறை ஒன்று உள்ளது. கை வலிமையால் என் சகோதரியை வெல்வாயாக. யாருக்குத் தெரியும் அவள் மனதில் யார் இருக்கிறார் என்று” என்கிறார்.
ஸ்ரீ கிருஷ்ணரிடம் அறிவுரை கேட்ட பின்பு அர்ஜுனன் ஒரு தூதுவனை அனுப்பி யுதிஷ்டிரன் மற்றும் குந்தியின் அனுமதியைக் கேட்கிறான் .இருவரின் சம்மதமும் ஆசீர்வாதமும் பெற்ற பின்பு ரைவத்ரா மலையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த சுபத்ரையை வலுக்கட்டாயமாக தன் தேரில் கவர்ந்து சென்று விடுகிறான்.
அர்ஜுனனின் இந்த செய்கையை இந்த காலத்தில் குற்றம் என்று தான் கருத முடியும். இதில் எவருக்கும் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை. தன் சொந்த தங்கையையே கவர்ந்து செல்லுமாறு கூறும் அண்ணனின் செயலும் கண்டனத்துக்குரியதாகும் . கடும் விமர்சனத்திற்கு உள்ளாக நேரிடும். ஆனால் இந்த நிகழ்ச்சி இன்று நேற்று நடந்தது கிடையாது. நான்காயிரம் வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த நிகழ்ச்சியாகும். முதலில் அந்த காலத்தில் இருந்த திருமண முறைகள் குறித்துப் பார்ப்போம்..
மனு சம்கிதை அனுமதித்துள்ள எட்டு திருமண முறைகள்.1.ப்ரும்ம திருமண முறை.2. தெய்வ திருமணம்.3. ஆரிய திருமணம்.4.பிரஜாபத்திய திருமணம். 5. அசுர திருமணம்.6 .காந்தர்வ திருமணம். 7. ராக்கத திருமணம்.8. பைசாச திருமணம்.மேற்சொன்ன எட்டு திருமண வழக்கங்களில் சத்திரியனுக்கு விதிக்கப் பட்டவை கடைசியில் உள்ள நான்காகும்.இந்த நான்கிலும் அசுர திருமண வழக்கமும் பைசாச திருமண வழக்கமும் வேறு எவருக்குமே பரிந்துரைக் கப் படாத திருமண முறைகளாகும். எனவே ஒரு உத்தமமான சத்திரியனுக்கு விதிக்கப் பட்ட திருமண முறை காந்தர்வமும் ராக்கதமும் ஆகும்.
இந்த காலத்தில் உள்ளவர்கள் இவ்வாறு கேள்வி எழுப்பலாம்.” மனு ராக்ஷச முறையை அனுமதித்தார் என்று கூறுகிறீர்கள் சரி.ஆனால் சுபத்ரையின் திருமணம் நிகழ்ந்த போது மனு சம்கிருதை இருந்ததற்கு என்ன ஆதாரம்?”
சுபத்ரையின் ஹரணம் ந்கழ்வதற்கு முன்பாகவே மனுசம்கிதை வழக்கத்தில் இருந்தது என்றோ அல்லது ஒரு தர்ம நூலாக தொகுக்கப் பட்டிருந்தது என்றோ நம்மால் அடித்துக் கூற முடியாதுதான். ஆனால் மனுசம்கிதை என்பது அந்த காலத்தில் நிலவி வந்த பழக்கங்களின் தொகுப்புதான் என்பதை அறிஞர்கள் ஒப்புக் கொள்கின்றனர்.இதை ஒப்புக் கொள்கிறோம் என்றால் சத்திரிய திருமண முறைகளில் ராட்சச திருமணமுறையும் ஒன்று என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
இதுவன்றி மகாபாரதமும் அந்த காலத்தில் ஹரண முறையில் திருமணம் நடைபெறுவது வழக்கம் என்று கூறுகிறது. சுபத்திரை அருஜ்ணன் திருமண பகுதிகளிலேயே ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு பெரும் சமூகத்தின் உன்னதமான தலைவன் என்ற நிலையிலிருந்து கொண்டு இந்த ஹரண முறை திருமணம் குறித்து தனது கருத்துக்களை வெளியிடுகிறார்.
அந்த நிகழ்ச்சி இவ்வாறு விவரிக்கப் படுகிறது
அர்ஜுனன் சுபத்திரையை வலுக்கட்டாயமாக கவந்து சென்றதும் யாதவர்கள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். வெகுண்டெழுகின்றனர். அர்ஜுனனைத் தாக்குவதற்கான நடவடிக்கைகளில் தங்களை ஆயத்தப் படுத்திக் கொள்கின்றனர். அவர்களை தடுக்கும் பலதேவர் “ ஒரு பெரும் மோதலில் ஈடுபடுவதற்கு முன்பு நாம் கிருஷ்ணரிடம் அவரது யோசனையை கேட்போம். ஏன் என்றால் இது வரையில் கிருஷ்ணன் எதுவும் கூறாமல் மெளனமாக இருக்கிறார்.” என்கிறார்.
அர்ஜுனனின் இந்த செய்கையினால் தங்கள் யாதவ குலத்திற்கு நேர்ந்த அவமானத்தை பலராமர் ஸ்ரீ கிருஷ்ணனிடம் தெரிவிக்கிறார். இப்படி ஒரு சூழலில் யாதவர்கள் அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கேட்கிறார்.
ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்.” நீங்கள் குறிப்பிடுவது போல அர்ஜுனன் நமது குலத்திற்கு இழிவையோ அல்லது அவமானத்தையோ ஏற்ப்படுத்தவிலை. மாறாக நமது குலப் பெருமையை உயர்த்தி இருக்கிறான் .சுபத்ராவைக் கரம் பிடிக்க அவன் நமக்கெல்லாம் பரிசுகளும் வெகுமதிகளும் அளித்து நம்மை சிறுமை படுத்த முயலவில்லை. நாம் அசூயை பிடித்தவர்கள் கிடையாது என்பது அவனுக்குத் தெரியும். தன் மனதிற்கு பிடித்தவளை சுயம்வரம் மூலம் மணப்பது என்பது எளிதான காரியமில்லை. எனவே இந்த முறையில் அர்ஜுனன் சுபத்ராவை அடைய முடியாது. அர்ஜுனனைப் போன்ற ஒரு மாவீரனுக்கு ஒரு பெண்ணை அவள் பெற்றோரிடமிருந்து கன்யாதானமாக பெற்று கொள்வது அத்தனை சிறந்த விஷயமில்லை. நமது மருமகன் அர்ஜுனன் சுபத்திரையை வெல்வதற்கான அனைத்து வழிகளையும் ஆராய்ந்து பார்த்த பின்பு முடிவாகத்தான் இந்த ஹரண முறையை கை மேற்கொண்டுள்ளான். எனவே இந்த திருமணம் நமது இரண்டு குலத்திற்கும் ஏற்புடையது என்றே நான் கருதுகிறேன். இது அர்ஜுனனுக்கு கிடைத்த வெற்றி இல்லை. சுபத்திரைக்குக் கிடைத்த வெற்றி. ஏன் என்றால் சுபத்திரையைக் கவர்ந்து சென்றவன் உயர் குலத்தை சேர்ந்தவன். சிறந்த கல்விமான். மிகவும் புத்திசாலி.”
நான் ராட்சச திருமண முறையினை ஒத்துக் கொள்வதாக என் வாசகர்கள் ஒருக்காலும் நம்பிவிடக் கூடாது.அது இந்த காலத்தில் முற்றிலும் நிராகரிக்கப் பட வேண்டிய, தடை செய்யப் பட வேண்டிய திருமண முறையாகும்.ஆனால் இந்த முறை அந்த காலத்தில் வழக்கத்தில் இருந்ததும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதும் ஸ்ரீ கிருஷ்ணரின் தவறில்லை.
இந்த காலகட்டத்தில் நாம் அனைவரும் ஒரு சமூக சீர்திருத்தவாதியையே ஒரு முழுமையான மனிதன் என்று நம்பத் தொடங்கி உள்ளோம். எனவே அவர்கள் ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு சிறந்த சமூக சீர்திருத்தவாதியாகவும் இருக்க வேண்டும் சமூக நோயாக கருதப்படும் ராட்சச மணத்தை அவர் ஒழித்துக் கட்டியிருக்க வேண்டும் என்று கூற முற்படுவார்கள். ஒரு சீர்திருத்தவாதியாகவே நமது நாயகன் இருக்க வேண்டும் என்று என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை..இதன் மீது விவாதம் செய்யவும் நான் தயாராக இல்லை.( ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு சீர்திருத்தவாதி இல்லை என்று கூற வரவில்லை. ஏன் எனில் அவர் புதுமையான திட்டங்களை கண்டுபிடித்து அதன் மூலம் ஒரு சமூகத்தை திட்டமிட்டு வழி நடத்தி செல்ல முயன்றவர் கிடையாது. அவருடைய நோக்கமே தர்மம் எங்கெல்லாம் தாழ்ந்து கிடக்கிறதோ அங்கெல்லாம் அதை நிலை நிறுத்தி மனித குளத்தை உய்விப்பதாகும்.தர்மம் என்பது கூட அந்த காலத்தில் நிலவி வந்த ஒரு பழம்பெரும் கருத்தாக்கமே.)
இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் பல்வேறு தேசங்களில் நிலவி வந்த சமூக சட்ட திட்டங்களை தாண்டி பொதுவான மனித சமுதாயதிற்கான பிரபஞ்ச விதி ஒன்றினை இந்த மக்கள் நம்புகின்றனர். அந்த விதி காலத்திற்கும் தேசங்களுக்கும் கட்டுப் படாது. இந்த பிரபஞ்ச பொதி விதியின் வழியாக இந்த ஹரணமுறை திருமணத்தைப் பற்றி ஆராய்வோம்.
மணமகளை வலுக்கட்டாயமாக கவர்ந்து செல்வதற்கு எதிராக முன் வைக்கும் வாதங்களுக்கான காரணங்கள்.
*மணமகளுக்கு உடல் ரீதியில் ஊறுகள் விளையும்
*மணமகளின் குடும்பத்தினருக்கும் ஊறு ஏற்படும்.
*ஒட்டு மொத்த சமூகத்திற்கும் ஊறு விளையும்.
சுபத்ராவின் இந்த ஹரணத்தில் அர்ஜுனன் நல ஒழுக்கம் மிக்க தீரன் என்பதால் சுபத்திராவிற்கு ஊரு விளையாமல் நன்மையே மேலிட்டது.
பெண்ணின் குடும்பத்திற்கு ஊறு விளையும் என்பது இந்த திருமணத்தில் கிடையாது.ஏன் என்றால் ஸ்ரீ கிருஷ்ணர் இந்த திருமணம் எவ்வாறு அவர்கள் குலத்திற்கு மேன்மையானது என்பதைத் தெளிவாகக் கூறி விட்டார்.அதன் பிறகே யாதவர்கள் முறைப்படி அர்ஜுனனையும் சுபத்ராவையும் அழைத்து வந்து மணம் முடித்து வைக்கின்றனர்.
மேலும் அந்த காலத்தில் நிலவி வந்த திருமண முறை என்பதாலேயே அர்ஜுனன் சுபத்திராவை கவர்ந்து சென்று மணம் புரிந்து கொள்கிறான் என்பதால் இதன் காரணமாக சமூகத்திற்கு எவ்வித ஊறும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. எனவே சமூக சட்ட திட்டங்களை மீறி அர்ஜுனன் இதனைப் புரிந்தான் என்று கூறுவதற்கில்லை.
இதனால்தான் நான் இதனை இவ்வளவு விரிவாக எழுதுகிறேன்.மேலை நாட்டு அளவுகோல்களைக் கொண்டே எல்லாவற்றையும் நாம் சீர் தூக்கிப் பார்ப்பதையை வழக்கமாகக் கொண்டுள்ளோம். நமது பண்டைய கலாச்சாரங்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் இன்றைய மேலை நாட்டு அளவுகூல்களை சற்றே தள்ளி வைக்க வேண்டியது அவசியம்.
- புதிய கோடாங்கிச் சிற்றிதழ்களில் சமூக மாற்றுச் சிந்தனைகள்
- மருமகளின் மர்மம் – 4
- வெள்ளையானை நாவல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்
- திண்ணையின் இலக்கியத்தடம் -10
- மாத்தளை சோமுவின் கதைகளில் செவ்வியல் இலக்கியத் தாக்கம்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 50 ஆதாமின் பிள்ளைகள் – 3
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம் – 10 சுபத்ராவின் ஹரணம்
- எப்படி முடிந்தது அவளால் ?
- டௌரி தராத கௌரி கல்யாணம்….! -26
- காசேதான் கடவுளடா
- துளைகளிடப்பட்ட இதயங்களோடு தேர்தலை நோக்கிப் பயணிக்கும் வடக்கு
- United Nations : URGENT APPEAL: RENOWNED TAMIL POET ARRESTED AND DETAINED
- நாஞ்சில் நாடனின் “கம்பனின் அம்பறாத்தூணி”
- மரணம்
- ஜூனோ (அமெரிக்கா, இயக்குநர் – ஜேசன் ரைட்மன்) மற்றும் ஆதலால் காதல் செய்வீர் (தமிழ்நாடு, இயக்குநர் – சுசீந்திரன்) இரண்டு கலாச்சாரங்களும் ஒரு நிகழ்வும்
- நீங்காத நினைவுகள் – 24
- ஜாக்கி சான் 17. குருவின் இளவல்
- தாகூரின் கீதப் பாமாலை – 90 தென்றல் நாட்டியங்கள் .. !
- கரிக்கட்டை
- புகழ் பெற்ற ஏழைகள் – 34
- சீதாயணம் நாடகம் -8 படக்கதை -8
- பாரதியின் பெண்ணுரிமைக் குரல்;
- மகேந்திரனின் உதிரிப்பூக்கள் – ஒரு மறுபார்வை
- நாசா விண்ணுளவி காணாமல் போன பூர்வ பூமியின் இரண்டாம் நிலவைப் பற்றித் தெளிவாய் வெளிப்படுத்தும்