திண்ணையின் இலக்கியத் தடம்- 19

This entry is part 11 of 18 in the series 26 ஜனவரி 2014

செப்டம்பர் 2,2002 இதழ்:
உலகெலாம்.. (சேக்கிழாரின் கனவு)- ஜெயமோகன்-
உலகெலாம் உணர்ந்து ஓதற் கரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகிற் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர்ச்சிலம்பொலி வாழ்த்தி வணங்குவாம்
என்னும் பாடலை ஒட்டிய சிந்தனை.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60209021&edition_id=20020902&format=html )

குரூரமும் குற்ற உணர்வும்- பாவண்ணன் ( எனக்குப் பிடித்த கதைகள்-25- கு.ப.ரா.வின் “ஆற்றாமை”- இரு இளம் பெண்கள். இருவருமே புதிதாக மணமானவர்கள். பக்கத்துப் பக்கத்து “வாடகைச் சிறு வீடுகள்” அவர்களது குடியிருப்புகள். ஒரு பெண்ணின் கணவன் ராணுவச் சேவைக்காக வெளியூரில் இருக்கும் போது மற்றொருத்தி குடியிருப்பிலோ நெருக்கமான சூழல். இதில் முதலாமளவள் பொறாமை கொண்டு அண்டை வீட்டுக் காரிக்கு ஒரு தலை குனிவை ஏற்படுத்துகிறாள். பிறகு வருந்துகிறாள்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60209022&edition_id=20020902&format=html )

பிறவழிப்பாதைகள்- அன்னம் மீரா- கோபால் ராஜாராம்- அன்னம் பதிப்பாசிரியரும் கவிஞருமான மீராவின் மறைவுக்கு அஞ்சலி
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60209023&edition_id=20020902&format=html )

செப்டம்பர் 9,2002 இதழ்:

குழந்தைகளைப் புதைத்து எடுத்த குழிமாற்றுத் திருவிழாவில் தப்பேதும் இல்லை- சின்னக்கருப்பன்
(www.thinnai.com/index.php?module=displaysection&edition_id=20020909&format=html )

பொருளின்மை என்னும் கணம் நோக்கி- பாவண்ணன் ( எனக்குப் பிடித்த கதைகள்- 26- தாராசங்கர் பானர்ஜியின் ‘அஞ்சல் சேவகன்’

ஒரு கடின உழைப்பாளியும் நேர்மையாளருமான தபால்காரரின் மகன் திருடும் அளவு போகும் கெட்ட பழக்கங்கள் உள்ளவன். ஒரு நாள் அவன் தன் அப்பாவின் கையில் உள்ள தபால் நிலையப் பையையே திருட முயலும் போது அப்பாவின் விடாப்பிடியான போராட்டத்தால் ஓடி விடுகிறான். ஆனால் காவல் துறை அவனைத் தேடுகிறது. காணாமலேயே போன அவன் மரணமடைந்தான் என்னும் செய்தியுடன் வெகு நாள் கழித்து ஆப்பிரிக்காவில் இருந்து ஒரு கடிதமும் பணமும் வருகின்றன. அதன் பின் தன் வேலையையே விட்டு விடுகிறார் அந்தத் தபால்காரர்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60209094&edition_id=20020909&format=html )

செப்டம்பர் 17, 2002 இதழ்:

பெண் கவிகள் சந்திப்பு -2002- இடம்- புதுவை-நாள்: 11.9.2002- ஏற்பாடு-மாலதி மைத்ரி, இரா.மீனாட்சி, க்ருஷாங்கினி, குட்டி ரேவதி
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60209171&edition_id=20020917&format=html )

ஆழத்தில் உறங்கும் கனவு- எனக்குப் பிடித்த கதைகள்27- எம்.வி.வெங்கட் ராமின் “புதியதாய்”- பாவண்ணன்
ஒரு கடையில் குமாஸ்தாவாக வேலை பார்க்கும் இளைஞன் ஒரு பெரிய தொகை (அந்தக் காலத்து ஆயிரம் ரூபாய்) யுடன் சென்னையில் துணி கொள்முதல் செய்ய வருகிறான். விடுதியில் சீட்டாட்டம், ஒரு பெண்ணுடன் இனிய பொழுது என அவனுக்கு இதுவரை அனுபவிக்காததெல்லாம் கிடைக்கின்றன. முதலாளி கொடுத்த பணம் பெரும்பகுதி செலவான நிலையில் ஊருக்குத் திரும்ப ரயில் நிலையம் போகும் போது மனம் மாறி மும்பைக்குச் சீட்டு எடுக்கிறான். அவனுக்குள் புதைந்து கிடக்கும் கனவுகள் விழித்துக் கொண்டன.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60209173&edition_id=20020917&format=html )

செப்டம்பர் 24,2002 இதழ்:

பி.வி.காரந்த்- வெளி ரங்கராஜன்- செப்டம்பர் 1,2002 அன்று காலமான காரந்த் இந்திய நாடகத் துறையிலும் ‘நியூ வேவ் கன்னட சினிமா’வுக்கும் பெரும் பங்கு ஆற்றியவர்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60209175&edition_id=20020917&format=html )

விநாயக தாமோதர சாவர்க்கார்- பிரச்சாரமும் உண்மையும்- அரவிந்தன் நீலகண்டன்- அவர் பிரிட்டிஷாரின் அடி வருடி, நாஜிக் கோட்பாடுடையவர் என்றெல்லாம் நடக்கும் பிரச்சாரங்கள் உள் நோக்கம் கொன்டவை. பொய்யானவை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20209243&edition_id=20020924&format=html )

காலத்தை பின்னோக்கும் நிழல்- சிரிய கவிஞர் நிஸார் ஹப்பானி ஓர் அறிமுகம் – எச்.பீர் முகம்மது

என் ஆடைகள் கிழிக்கப் படுகின்றன
உன் நாயின் நகங்களால்
கிழிப்பதற்கு அனுமதித்தார்கள்
உன் உளவாளிகள்
ஒவ்வொரு நாளும் தட்டினார்கள்
உன் படையாட்கள் என்னைத்
தின்றார்கள் என் காலணியைக் கூட
நீ இரு தடவை
உன்னை இழந்தாய்
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60209241&edition_id=20020924&format=html )

பசி என்னும் அரக்கன்- (எனக்குப் பிடித்த கதைகள்- 28- கிஷன் சந்தரின் நான் யாரையும் வெறுக்கவில்லை- பாவண்ணன்- ஒரு பொது நண்பர் உபசரிப்பில் ஒரு பகல் பொழுதில் மூன்று நண்பர்கள் அளவளாவுகிறார்கள். மூவரில் ஒருவருக்கு வேலையில்லை. இருவருக்கு நிரந்தர வருமானமில்லை. அப்பாஸ் என்னும் நல்ல நிலையில் இருப்பவர் பற்றிப் பேச்சு வரும் போது வேலையில்லாதவர் அப்பாஸைக் கடுமையாகச் சாடிப் பேசுகிறார். வற்புறுத்திய பின் மூவரும் வயிறு நிரம்பச் சாப்பிடுகிறார்கள். சாப்பிட்ட பின் நண்பர் கேட்ட கேள்விக்கு வேலையற்றவர் பதில் கூறுகிறார் “நான் யாரையும் வெறுக்கவில்லை”. மூன்று நாள் கழித்து அவர் அப்போது தான் சாப்பிட்டிருக்கிறார்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60209242&edition_id=20020924&format=html)

அக்டோபர் 1, 2002 இதழ்:
திவாலாகும் தமிழக விவசாயம்- ஜோதி- ஏற்கனவே மணற்கொள்ளையால் நிலத்தடி நீர் மிகவும் கீழே போய் விட்டது. இப்போது தொழிற்சாலைகளால் மேலும் மோசமாகிறது நீராதாரம்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20210012&edition_id=20021001&format=html )

சென்னை நாடக சந்திப்பு- நாதன்
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20210017&edition_id=20021001&format=html )

தேவகாந்தனின் கனவுச்சிறை நாவல்- ஒரு விமர்சன அறிமுகம்- நா.சுப்ரமணியம்- ஈழத் தமிழரின் பண்பாட்டையும் அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளையும் மையமாகக் கொண்ட நாவல்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60210011&edition_id=20021001&format=html )

அக்கினியும் மழையும்- கூர்மையான உரையாடல்களைக் கொண்ட நாடகம்- பாவண்ணன் மொழிபெயர்த்துள்ள கிரிஷ் கர்நாடின் நாடகம்- எஸ்ஸார்சி- மகாபாரதத்தில் வனபர்வத்தில் இடம் பெறும் யவத்கிர்தனைப் பற்றிய சிறு விளக்கம் -தருமனால் பெறப்படுகிற விளக்கம் – இந்த நாடகம் உருக்கொள்ளத் தூண்டுதலாயிருக்கிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60210013&edition_id=20021001&format=html )

வாக்குறுதியும் வாழ்க்கையும்- (எனக்குப் பிடித்த கதைகள்- 29- அசோகமித்திரனின் ‘அம்மாவுக்காக ஒரு நாள்’- தனக்காக எல்லாவற்றையும் குறையில்ல்லமல் செய்து வைக்கும் அம்மா ஒரு திரைப்படம் போவதற்காகத தன்னை மாலை சீக்கிரம் வரச் சொல்லியும் முடியாமற் போகிறது மகனால். அது அவனுக்குக் குற்ற உண்ர்ச்சியைத் தருகிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60210012&edition_id=20021001&format=html )

அக்டோபர் 13,2002 இதழ்:

காவிரி- மறுக்கப் பட்ட உரிமைகள்- கோ.ஜோதி- கர்நாடகத்தில் அனுமதிக்ககூடிய பாதுகாப்பான அளவு கூட நிலத்தடி நீர் உபயோகிக்கப் படுவதில்லை. தமிழகத்தில் அளவுக்கு மீறிய நிலத்தடி நீர் உபயோகம் மழை பொய்க்கும் காலங்களில் நடக்கிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20210131&edition_id=20021013&format=html )

நாஸா கண்டுபிடித்த ராமர் கட்டிய பாலம்? -அரவிந்தன் நீலகண்டன்- இயற்கையாக உருவான பவளப்பாறையின் படத்தை நாஸா வெளியிட்டால் அது ராமர் கட்டியது என்று நாஸாவை ஆதரமாகக் காட்டுவது அபத்தம்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20210132&edition_id=20021013&format=html )
வேர்களை வெட்டி நந்தவனம் – புலிமலைச் சூழ்ச்சி- சீனப் புரட்சிக் கூத்துத் திரைப்படம்- பயணி
ஒரு கலைப்படைப்பு என்ற அளவில் கலைக்கும், கருத்துக்களுக்கும் இடைப்பட்ட உறவு குறித்த உரையாடல்களில் கிடைக்கும் மோசமான எடுத்துக்காட்டுகளில் ஒன்றாக இத்திரைப்படம் இருக்கலாம்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20210134&edition_id=20021013&format=html )

ஆசையும் அடிப்படைக் குணமும் – (எனக்குப் பிடித்த கதைகள்-31- நகுலனின் “ஒரு ராத்தல் இறைச்சி”)- பாவண்ணன்- காதலி தன் விருப்பத்தால் மனம் மாறி மற்றொருவரைத் திருமணம் செய்து கொள்ள வாய்ப்பு உண்டு என்று புரிகிறார் ஒருவர். தமது குறைபாடுகளால் தமக்குப் பதவி உயர்வு கிடைக்காமற் போயிருக்கலாம் என்னும் பக்குவம் உள்ள ஒருவர் நாயிடம் அளவுக்கு மீறிப் பழகிக் கடி படுகிறார்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60210131&edition_id=20021013&format=html )

நடந்தாய் வாழி- அ.முத்துலிங்கம்-காவேரிக்கு ஒரு அவசரமும் இல்லை. அது ஆடி அசைந்து நடந்து வருகிறது. வருடா வருடம் காவேரிப்பிரச்சனையும் கூடவே வந்து கொண்டிருக்கிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20210221&edition_id=20021022&format=html )

பாலி- சகிப்புத்தன்மையும் அழகும் கொண்ட ஒரு பிம்பத்தை வெடி குண்டுகள் உடைக்கின்றன- டேவிட் ஃபிக்லிங்- (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20210222&edition_id=20021022&format=html )

மார்க்ஸீய சித்தாந்தமும் அறிவியலும்- அரவிந்தன் நீலகண்டன்
புதிய இயற்பியல் மற்றும் மரபணுத் துறைகளினை குறிப்பாகக் கொண்டு மார்க்ஸீய சித்தாந்தப் பற்றே சோவியத் அரசில் அறிவியல் மீது தொடுக்கப்பட்ட கொடுமைகளுக்குக் காரணம் என இக்கட்டுரை சில ஆதாரங்களை முன் வைக்கிறது
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20210224&edition_id=20021022&format=html )

மனசாட்சியின் கதவு- (எனக்குப் பிடித்த கதைகள்- 32- மாஸ்தி வேங்கடேச அய்யங்காரின் ‘மஸுமத்தி’- பாவண்ணன்- ஒரு ஆங்கிலேய ‘துரை’யும் அவரது மனைவியும் ஒரு ஓவியரின் மிக அழகிய ஓவியத்தை விலைக்குக் கேட்கிறார்கள். அவர் மறுத்து விடுகிறார். மறுநாள் வருவோம் என்று கூறித் திரும்பும் வழியில் ஆங்கிலேயப் பெண் ஒரு குளம் வற்றிய ஒரே காரணத்தால் கற்கள் திருடப் பட்டு சிதிலமாகி வருவதைக் காண்கிறாள். இப்படியே போனால் மழை பெய்தாலும் குளம் இல்லாமற் போய்விடும். இந்த சிந்தனைக்குப் பின் அவள் மறுபடி ஓவியரை சந்தித்து வற்புறுத்த நினைத்ததைக் கைவிடுகிறாள்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60210222&edition_id=20021022&format=html )

அக்டோபர் 29 2002 இதழ்:

சிந்து சமவெளி நாகரிகமும் சாதிய சமுதாய அமைப்பும்- அரவிந்தன் நீலகண்டன்- ஆரிய இனவாதம் பொய்ப்பிக்கப் பட்டதன் அடிப்படையில் எழுப்பப்படும் ஒரு தலித் விடுதலையியலே சமுதாய மறுமலர்ச்சியினை உருவாக்க இயலும்
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20211241&edition_id=20021124&format=html )

மறக்கப்பட்டவர்கள்- மலேசியாவில் ஏழைகள் இந்திய வம்சாவளியினரே- சாந்தா ஊர்ஜிதம் (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20211242&edition_id=20021124&format=html)

தண்ணீர் யாருக்குச் சொந்தம்- மாட் பார்லோ- டோனி கிளார்க்- உலக வங்கியின் மூலம் கடன் வாங்கிய மூன்றாம் உலக நாடுகளைப் பல பன்னாட்டு நிறுவனங்கள் தண்ணீர் தாராளமாகத் தங்களுக்கு மட்டுமே தரும் ஒப்பந்தம் போட வற்புறுத்துகின்றன.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20211244&edition_id=20021124&format=html )

சந்தேகத்துக்கு மருந்தில்லை- (எனக்குப் பிடித்த கதைகள்- 37- லா.ச.ராமாமிர்தத்தின் ‘சர்ப்பம்’- பாவண்ணன்- தன் ஊருக்கு விடுமுறைக்கு வரும் தங்கையையும் தன் கணவனையும் ஒன்று சேர்த்து சந்தேகிக்கிறாள் தமக்கை. இதில் பாம்பு போல் தோன்றும் கயிறு படிமமாக வருகிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60211242&edition_id=20021124&format=html)

Series Navigationதினம் என் பயணங்கள் – 2சூரியனைச் சுற்றிவரும் குள்ளக் கோள் செரிஸில் [Ceres] நீர் இருப்பது கண்டுபிடிப்பு
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *