திண்ணையின் இலக்கியத் தடம் -20

This entry is part 1 of 22 in the series 2 பெப்ருவரி 2014

நவம்பர் டிசம்பர் 2002

நவம்பர் 2, 2002 இதழ்:

தமிழ் நவீனப் பயன்பாட்டுக்கு உதவுகிறதா?- ஜெயமோகன்- மலையாளத்தையும் கன்னடத்தையும் ஒப்பிட்டால் நவீன சொற்களுடன் எழுத தமிழ் பன்மடங்கு எளியதும் முறையான இலக்கணம் உள்ளதும் ஆகும் (என் குறிப்பு- அப்புறம் ஏன் ஜெயமோகன் தமிழ் எழுத்துரு மீது ஈடுபாடு காட்டாமல் ஆங்கிலத்தில் எழுதலாம் என்கிறார் 2013ல்?)

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20211021&edition_id=20021102&format=html )

வளரும் நாடுகளின் மனித உரிமையைக் காப்பாற்றும் மதமாற்றத் தடுப்புச் சட்டம் – அரவிந்தன் நீலகண்டன்
ஆஸ்திரியா, வெனிசுவேலா மற்றும் சில லத்தீன் அமெரிக்க நாடுகள் கத்தோலிக்க கிறித்துவர்கள் மத மாற்றம் செய்யப் படாமல் இருக்க சட்டங்களை நிறைவேற்றி உள்ளன.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20211022&edition_id=20021102&format=html )

கலாச்சாரமும் கலங்கரை விளக்கங்களும்- (எனக்குப் பிடித்த கதைகள் – 34- கர்த்தார் சிங் துக்கலின் ‘விந்தைச் செயல்’- )- பாவண்ணன்- மிகவும் மனதைத் தொடும் வரலாற்று அடிப்படையிலான கதை. சீக்கிய புராணங்களின் படி ஒரு இடத்தில் குரு நானக் மர்தானா என்னும் இளைஞனை ஒரு பாறையைப் புரட்டும் படி சொல்லுவார். உடனே அவன் புரட்ட அங்கேயே இருவருக்கும் தேவையான குடி நீர் கிடைக்கும். அந்த ஊரில் உள்ள ரயில் நிலையைத்தைத் தாண்டி ஒரு ரயில் நிறைய சுதந்திரப் போராட்டத்தில் கைது செய்யப் பட்டவர்கள் அழைத்துச் செல்லப் படுகிறார்கள். அவர்களுக்கு அந்த ஊர் மக்கள் நீரும் உணவும் கொடுக்க விரும்புகிறார்கள். அரசும் ரயில்வே அதிகாரியும் அனுமதி மறுக்கும் போது பலர் ரயில் தண்டவாளத்தில் படுத்துத் தம் உயிரைக் கொடுத்து ரயிலை நிறுத்துகிறார்கள்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60211021&edition_id=20021102&format=html )

நவம்பர் 10 2002 இதழ்:
தமிழக ஆறுகளை சிதைக்கும் மணல் குவாரிகள்- கோ.ஜோதி
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20211101&edition_id=20021110&format=html )

வாழ்வும் கலையும் – பாலு மகேந்திராவுடன் யமுனா ராஜேந்திரன் உரையாடல் – மோக முள் போன்ற இலக்கிய நாவல் சினிமா என்னும் ஊடகத்தில் ஏன் எடுபடாமல் போகிறது என்று விளக்கி எழுத்து- சினிமா என்னும் ஊடகங்களின் வேறுபடும் வீச்சு மற்றும் விளிம்பு பற்றிய புரிதலுக்கு நம்மை இட்டுச் செல்கிறார். பாலு மகேந்திரா.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20211103&edition_id=20021110&format=html )

அ.முத்துலிங்கத்தின் படைப்புலகம்- வளவ. துரையன்- முத்துலிங்கத்தின் எல்லாப் படைப்புகளின் அவரது எள்ளல் நிறைந்த அங்கத நடையைக் காண முடிகிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60211101&edition_id=20021110&format=html )

இனிப்பும் ஆபத்தும் – (எனக்குப் பிடித்த கதைகள்- 35- சார்வாகனின் ‘கனவுக் கதை’- பாவண்ணன்-நான்கு நண்பர்கள் ஒரு இனிப்புக் கடைக்காரரிடம் அரட்டை அடிக்கும் போது கடைக்காரர் மூன்று தட்டுள்ள தராசு கூட்டத்தை சமாளிக்க உதவும் என்று விளக்குகிறார். அப்போது ஒரு சாமியார் நிறைய இனிப்புகள் வாங்கிஸ் செல்கிறார். தெருவில் தான் ஒரு சாமியார் என்றும் தான் சொல்லும் படி கேட்கும் படியும் கூறி மக்களை உட்கார் என்று உட்கார வைக்கிறார். எழுந்திருக்க வைக்கிறார். திடீரென இனிப்புகளைத் தூக்கி எறிய மக்கள் அதைக் கைப்பற்றப் போட்டி போடுகிறார்கள். அவர் நகர்ந்து சென்று விடுகிறார்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60211102&edition_id=20021110&format=html )

நவம்பர் 18, 2002 இதழ்:

என் குர் ஆன் வாசிப்பு – ஜெயமோகன்- குரான் என்ன சொல்கிறது என்னும் வினாவுக்கு என் எளிய வாசிப்பறிவைக் கொண்டு ” அறத்தின் மாற்றமின்மையை, முழு முதலான நிரந்தர மதிப்பீடுகளை என்று சொல்வேன்”
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20211181&edition_id=20021118&format=html )

சிந்து சமவெளி நாகரிகம் ஒரு மறு பார்வை- அரவிந்தன் நீலகண்டன்
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20211183&edition_id=20021118&format=html )

வாழ்வும் கலையும் – பாலு மகேந்திராவுடன் யமுனா ராஜேந்திரன் உரையாடல் -(நிறைவுப் பகுதி)- அரசியல் ரீதியாக (சக கலைஞர்கள் செய்யும் அரசியல்) பாதிக்கப் பட்டது பற்றியும் தமது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியும் பாலு மகேந்திரா இந்தப் பகுதியில் விவரிக்கிறார். உண்மையில் ஒரு கலைஞனாக இருப்பது குறிப்பாக கற்பனைத் திறன் கொண்டவனாக இருப்பது மிகவும் வலி மிகுந்தது. அந்த வலியுடன் மேலும் படைப்புகளைக் கொண்டு வரும் நீண்டகால கட்டத்தில் சமூக விழுமியங்களுக்குள் அவன் தன்னுள் உள்ள படைப்பாளியை உயிரோடு வைத்துக் கொள்ளுவது பெரிய சவால் தான். இதை அவரின் பேட்டியில் புரிந்து கொள்கிறோம்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20211184&edition_id=20021118&format=html )

ஊசியும் காதும் ஒடுங்கிய தெருவும்- கபீர் தாஸரின் சிந்தனைகள் பற்றிய சில குறிப்புகள்- எச். பீர் முஹம்மது-

இந்தக் கொடி மிகவும் விசித்திரமானது
அதை வெட்டின் அது வளரும் அதிகமாக
அதற்கு நீர் பாய்ச்சின் அது வாடி வதங்கும்
பல குணமுள்ள இந்த்க் கொடி
பகர முடியாத ஒன்றாகிறது
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60211181&edition_id=20021118&format=html )

ஆவலும் அப்பாவித்தனமும் – (எனக்குப் பிடித்த கதைகள்-36- வைக்கம் முஹம்மது பஷீரின் ‘ஐஷூக்குட்டி’ – பாவண்ணன்- ஒரு கூட்டுக் குடுமபத்தில் தனது இரண்டாவது பிரசவத்தின் போது மருத்துவர் கண்டிப்பாக வரவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறாள் மூத்த மருமகள். காரணமென்ன இளைய மருமகள் தனது பிரசவத்துக்கு வீட்டுக்கு டாக்டரை வரவழைத்ததே.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60211182&edition_id=20021118&format=html)

நவம்பர்-24,2002: மறக்கப்பட்ட்வர்கள்- மலேசியாவில் ஏழைகள் இந்திய வம்சாவளியினரே
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20211242&edition_id=20021124&format=html )
மாட் பார்லோ & டோனி கிளார்க் – மூன்று கட்டுரைகள்-

தண்ணீர் யாருக்குச் சொந்தம? (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20211244&edition_id=20021124&format=html)

தண்ணீர் இனவெறி
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20211245&edition_id=20021124&format=html)

தண்ணீர் பொலிவியாவில் எதிர்ப்பு
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20211246&edition_id=20021124&format=html)

பாவண்ணனின் எனக்குப் பிடித்த கதைகளில் லாசராவின் கதை- இந்த இதழ் (நவம்பர் 24 2002க்கு பதிலாக) அக்டோபர் 27 2002 இத்ழில் பகுதியில் வந்து விட்டது. கவனக் குறைவுக்கு வருந்துகிறேன்.

விட்டுப் போன அக்டோபர் 27 2002 வாசிப்பு இங்கே:

மத மாற்றம் பற்றி காந்தி- தொகுப்பு- ஸ்வாமி அட்சரானந்தா

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20210271&edition_id=20021027&format=html )

லுடோ டெ விட்டே எழுதிய ‘லுமும்பா படுகொலை – நூல் விமர்சனம்- ஸ்ரீராம் சந்தர் சவுலியா- லுமும்பா பெல்ஜிய காலனியாதிக்க ஆட்சியாளர்களை விரட்டி காங்கோவின் விடுதலைக்காகப் போராடினார்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20210274&edition_id=20021027&format=html)

தலித்துகள், இந்து மதம், மதமாற்றம்- சின்னக் கருப்பன் – மதமாற்றத்தால் ஜாதி ஒழிந்து விடுவதில்லை. இதுதான் உண்மை. இதுதான் நிதர்சனம்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20210275&edition_id=20021027&format=html )

சிறைக்குள்ளிருந்து ஒரு கவிதை- ரஷியக் கவிஞர் மூஸா ஜலீல் பற்றி- எச்- பீர் முஹம்மது
நீ என்னைக் கொல்வதற்கு
என் முட்டியை நோக்கிக் காத்திருக்கிறாய்
நான் மரணத்திற்குக் காத்திருக்கிறேன்
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60210272&edition_id=20021027&format=html )

விருப்பமும் விருப்பமின்மையும்- (எனக்குப் பிடித்த கதைகள்- 33- வண்ணதாசனின் ‘தனுமை’) பாவண்ணன்- ஒரு இளைஞன் மிக நுட்பமாக ஒரு பள்ளி மாணவி மீது காதலை வெளிபடுத்துகிறான். அவளது ஆசிரியை அவனை அணைத்துத் தன் காதலை வெளிப்படுத்துகிறாள்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60210273&edition_id=20021027&format=html )
டிஸம்பர் 1 2002 இதழ்:

கள்ளர் சரித்திரம்- நாவலர் பண்டித ந மு வேங்கடசாமி நாட்டார்- தமிழரில் கள்ள வகுப்பினரின் நாடு கள்ள நாடு எனவும் கள்ளகம் எனவும் வழங்கப் படுகிறது. தென்னம நாடு, உரத்த நாடு, பாப்பா நாடு, பைங்கா நாடு என பல்வேறு உட்பிரிவுகளைக் கொண்டதாய் கள்ளர் நாடு இருந்தது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20212014&edition_id=20021201&format=html )

தப்பிக்க இயலாத பொறி- எனக்குப் பிடித்த கதைகள்- 38 (தி.ஜானகிராமனின் ‘கண்டாமணி’- ஒரு உணவு விடுதி நடத்தும் தம்பதியினர் ஒரு கிழவர் சாப்பிட்டு சென்ற பின் தான் கவனிக்கிறார்கள்- சாம்பாரில் ஒரு குட்டிப்பாம்பு விழுந்து இறந்திருக்கிறது. ஊர் முழுவதும் செய்தி பரவாமல் காப்பாற்றினால் கோயிலுக்கு பெரிய கண்டாமணியாக வாங்கி மாட்டுவதாக வேண்டிக் கொள்கின்றனர். மறு நாள் அந்தக் கிழவர் இறந்தாலும் மாரடைப்பே காரணம் என்றே செய்தி பரவுகிறது. வேண்டிக் கொண்டபடியே கண்டாமணியை வாங்கி மாட்டுகிறார்கள். ஆனால் அது ஒலிக்கும் போதெல்லாம் மனம் குற்ற உணர்வு கொள்கிறது.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60212011&edition_id=20021201&format=html )

டிஸம்பர் 7,2002 இதழ்:

ஜின்னாவும் இஸ்லாமும்- குதுபுதீன் அஜீஸ்
1948 பெப்ரவரியில் அமெரிக்க மக்களுக்கு ஆற்றிய உரையில் இஸ்லாம் முஸ்லீம்களுக்கு மனிதனின் சமத்துவத்தையும் நீதியையும் எல்லோருக்கும் சம வாய்ப்பையும் கொடுக்கச் சொல்லி போதித்திருக்கிறது என்று குறிப்பிட்டுக் காட்டினார்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20212072&edition_id=20021207&format=html )

வரவிருக்கும் தண்ணீர் யுத்தங்கள் – பகுதி 1- சாம் வாக்னின்- இஸ்ரேலிகள் விவசாயத்துக்காகத் தண்ணீர் எடுக்கும் போது சிரியர்களால் சுடப் பட்டார்கள்
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20212073&edition_id=20021207&format=html )

மலேசியாவின் இனப் பிரச்சனை- குவா கியா சூங்- மலாய் மக்களை மையப்படுத்திய ‘பூமி புத்திரர்கள்’ என்னும் கொள்கை தான் மலேசியாவில் வாழ்பவர்களை மிகவும் பாதித்திருக்கிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20212075&edition_id=20021207&format=html )

ஊடறு – ஓர் பார்வை- ரதன்-
ஆழியான் கவிதை-

நீயும் நானும்
வரையறைகளை கடக்க வேண்டும்- நான்
உன் விவேகத்தோடும்
நீ என் வீரியத்தோடும்
கடக்க வேண்டும்
எனினும்
என் கருவறையை
நிறைப்பது உன் குறியல்ல
என்று புரிதலோடு
வா
ஒன்றாய்க் கட்டுவோம்
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60212073&edition_id=20021207&format=html )

பித்தான ஆர்வம் பற்றிய பித்தான ஆர்வம்- ADAPTATION – தழுவல் திரைப்பட விமர்சனம்
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60212074&edition_id=20021207&format=html )

கட்டியம்- உலகத் தமிழர் அரங்க ஆய்விதழ்- கோபால் ராஜாராம்
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60212075&edition_id=20021207&format=html )

விடைகளால் நிறைவுறாத கேள்வி- (எனக்குப் பிடித்த கதைகள் – 39- சம்பத்தின் ‘நீலரதம்’- பாவண்ணன்- ஒரு விவசாயி அழைக்கும் போது நிஜமாகவே வருண தேவன் வானத்தில் இருந்து வந்து எந்தத் தலைமுறை உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கேட்க இன்றைய தலைமுறைதான் என்கிறார் அந்த மூத்த விவசாயி.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60212071&edition_id=20021207&format=html)

டிசம்பர் 15 2002 இதழ்:
ஹெப்சிகா ஜேசுதாசனுக்கு விளக்கு அமைப்பின் விருது – நா.கோபால்சாமி
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20212152&edition_id=20021215&format=html )

இலங்கைத் தமிழ் எழுத்தாளருக்கு கனடாவின் இலக்கிய விருது- என்.கே .மகாலிங்கம்
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60212151&edition_id=20021215&format=html )

நிழல் பரப்பும் வெளி- நகுலனின் கவிதைகள் பற்றி- எச்.பீர் முகம்மது-
நந்தனை போல்
நான் வெளியில் நிற்கிறேன்
நானும் ஒரு பறையன் தான்
அதில் தான் எவ்வளவு
சௌகரியங்கள்
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60212152&edition_id=20021215&format=html )

மலைகத்தின் மூத்த எழுத்தாளர் கே.கணேஷ்- தெளிவத்தை ஜோசப்- இந்தியாவில் உள்ள அமைப்பைப் போலவே இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை நிறுவியவர் இவரே.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60212153&edition_id=20021215&format=html )

மனம் என்னும் பறவை (எனக்குப் பிடித்த கதைகள்-40- சுஜாதாவின் ‘முரண்’ )- பாவண்ணன்- ஒரு பள்ளியில் இருபத்தைந்து வருடத்துக்கு மேல் பள்ளி வாகனம் ஓட்டுபவனாக வேலை பார்க்கும் ஒருவர்ன் திடீரென ஒரு நாள் கடைசியாக இறங்க வேண்டிய மாணவியுடன் வண்டியை பாதையை மாற்றி இரவு நேரத்தில் ஓட்டியபடி சென்று விடுகிறான். கதை இத்துடன் முடிகிறது. எல்லா கற்பனைகளும் வாசகர் செய்ய வேண்டியவையே.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60212155&edition_id=20021215&format=html)

டிசம்பர் 21,2002 இதழ்:
ஹெப்சிகா ஜேசுதாசனின் புத்தம் வீடு- அருண்மொழி நங்கை- ஒரு விவசாய குலத்துப் பெண் படிப்பதற்கும் வெளிக்காற்றை சுவாசிப்பதற்கும் விரும்பியவனைக் கல்யாணம் செய்து கொள்வதற்கும் எந்த அளவு போராட்ட வேண்டியுள்ளது என்பதை அவர்கள் தம் அனுபவம் வாயிலாக அறிந்து வைத்திருந்தார்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60212211&edition_id=20021221&format=html )

நகுலன் படைப்புலகம்- சங்கர ராமசுப்ரமணியன்-
வெயில் வண்ணத்துப்பூச்சிகள் பறந்து
கொண்டிருக்கின்றன
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60212212&edition_id=20021221&format=html )

அண்டங்காக்காய்களும் எலும்பு கூடுகளும்- (பாபா பரீதின் சிந்தனைகள் குறித்து)- எச் பீர்முஹம்மது-
என் விழிகளை மட்டும் விட்டு விடுங்கள்
என் நேயத்துக்குரிய இறைவனை அவற்றினால் பார்க்க நினைக்கிறேன்
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60212218&edition_id=20021221&format=html )

டிசம்பர் 30,2002 இதழ்:
ஹெப்சிபா ஜேசுதாசனுக்கு விருது விழா- ஜெயமோகன்
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20212302&edition_id=20021230&format=html )

கிரிஸ்தவ சர்ச்சும் அடிமை வியாபாரமும்- ஸ்டாவ் காங்கஸ்- ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் வரலாறு அடிமை முறையிலிருந்து தான் துவங்குகிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20212303&edition_id=20021230&format=html )

தீவிர பிரச்சனையில் இருக்கும் இந்திய விவசாயம்- சூரஜ் பான் தாஹியா- இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 26 சதவிகிதம் விவசாயம் அளிக்கிறது. தொழிற்துறை 22 சதவிகிதமே அளிக்கிறது. இருந்தும் விவசாயத்தில் முதலீடு ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே போகிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20212304&edition_id=20021230&format=html )

சி.மோகனின் பட்டியல்கள்- கோபால் ராஜாராம்- எளிமையின் ஏமாற்றைத் தாண்டி உள்ளே செல்ல முடியாத மனத்தடை மோகனுக்கு இருப்பதால் தான் அவருக்கு ஆ.மாதவன், ஜெயகாந்தன், தி.ஜாங்கிராமன் போன்றோர் இருக்கும் பரப்பில் தீவிர படைப்பாளுமை அவர் கண்களுக்குப் புலப்படவில்லை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60212303&edition_id=20021230&format=html )
கரிசனமும் கடிதமும் – (எனக்குப் பிடித்த கதைகள்-42 – எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் ‘தபால் கார அப்துல் காதர்”- பாவண்ணன்- தன்னை விட வயதில் இளைய தபால் காரனை ஒப்பிட இரண்டு மணி நேரம் தாமதமாக வந்தாலும் சிறந்த மனித உறவுகளைப் பேணுகிறார் ஒரு மூத்த தபால் காரர்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60212301&edition_id=20021230&format=html)

Series Navigationஜோதிர்லதா கிரிஜாவின் “மாறாத மனிதர்கள்”சூரிய மண்டலத்தில் பூமியை நெருங்கச் சுற்றித் திரியும் மூர்க்க முரண் கோள்கள் [Rogue Asteroids]வால்ட் விட்மன் வசனக் கவிதை – 60 ஆதாமின் பிள்ளைகள் – 3சீதாயணம் நாடகப் படக்கதை – 18
author

சத்யானந்தன்

Similar Posts

3 Comments

  1. Avatar
    ஷாலி says:

    அனைத்து மதங்களும் மக்களிடம் அன்பை விதைத்து பிரியத்தையும்,நேசத்தையும் அறுவடை செய்யச் சொல்கிறது.ஆனால் மனிதனோ வேதங்களுக்கு சுயநல விளக்கத்தை கொடுத்து மனித உறவுகளை வெட்டி வீழ்த்தவே முயற்சி செய்கிறான்.
    “ என் குர் ஆன் வாசிப்பு “ எனும் கட்டுரையில் திரு.ஜெயமோகன் அவர்கள் மிக அழகாக விளக்குகிறார். இந்து,முஸ்லிம்,கிருஸ்துவ மக்கள் தங்கள் வேதத்தை விட்டு வெளியேறி அதற்க்கு சுய விளக்கம் கொடுத்து மதங்கொண்ட மனிதர்களாக மாறி விட்டனர் என்கிறார்.திரு.ஜெய மோகனைப்பற்றிய கூடிய புரிதலுக்கு இக்கட்டுரை உதவுகிறது.

    //எந்த நூலிலிருந்தும் மேலும் அறியாமை நோக்கி போக முடியும் என்பதை வரலாறு முழுக்க மக்கள் நிரூபித்து வந்திருக்கிறார்கள். மனிதர்களின் இயல்பான சுயநலம் எதையும் தாண்டிச் செல்லும் வல்லமை கொண்டது. இந்துக்கள் மூலநூல்களை முடிவின்றி மறுவிளக்கம் செய்வதனூடாக அவற்றை நிராகரிக்கிறார்கள். கிறித்தவர்கள் கிறிஸ்துவை மதநிறுவனமாக்கி செயலிழக்கச் செய்துவிட்டார்கள் . இஸ்லாமியர் கைகால் கழுவிவிட்டு ஓதி வணங்கவேண்டிய புனித நூலாக குர் ஆனை மாற்றி அதன் ஆணைகளிலிருந்து தங்களை விலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
    நடைமுறையில் ஒவ்வொருவரும் இம்மூலநூல்களை வெறுமே தங்கள் குழு அடையாளமாக மாற்றிக் கொள்கிறார்கள். அவ்வடையாளத்துக்காக சாகவும் ,கொல்லவும் தயாராகிறார்கள். உலகம் முழுக்க வரலாறு முழுக்க நடந்ததும் நடந்துகொண்டிருப்பதும் இதுவே. நானறிந்த ராமாயணம் மாபெரும் கருணையின் இதிகாசம் . தியாகம் மூலம் மனித உறவுகளைக் கனிய வைக்க முடியுமென்பதே அதன் செய்தி. பான் பராக் குதப்பித் துப்பி கொடியுடன் கொலைவெறிகொண்டு தெருவில் நடனமிடும் இன்றைய ராமபக்தர்களை தொலைகாட்சியில் பார்க்கும்போது அவர்கள் படித்த ராமாயணமே வேறு என்று படுகிறது.//
    http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20211181&edition_id=20021118&format=html

  2. Avatar
    ஷாலி says:

    தேவாலயத்தில் காசுக்களை வைத்து வியாபாரம் (Money Exchange) செய்வதைக்கண்ட இயேசு கிருஸ்து அவைகளை தம் காலால் தட்டி விட்டு,”எம் பிதாவின் ஆலயத்தை வணிகஸ்தலமாக ஆக்கிவிட்டிர்களா?”என்று கோபமுற்றார். ஆனால் பின்னால் வந்த சர்ச் பீடங்கள் மனித வியாபாரத்திற்க்கே லைசன்ஸ் கொடுக்கும் அதிகாரத்தை போப் வசம் கொடுத்தன.ஆக வேதம் சொல்வது ஒன்று.தேவ பிரதிநிதிகள் செய்வது வேறொன்று. அன்றைய ஆப்பிரிக்க அடிமை வியாபாரத்தப்பற்றிய அருமையான கட்டுரை.திரு.சத்யானந்தன் அவர்களுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.
    //போர்ச்சுக்கீஸ் 1452இல் போப் ஐந்தாவது நிக்கலஸ்இிடம் மேற்கு ஆப்பிரிக்காவின் கடற்கரைபிரதேசங்களிலிருந்து அடிமைகளை கடத்திக்கொண்டு வர அனுமதி கேட்டார்கள். கத்தோலிக்க சர்ச்சின் ‘நியாயமான அநியாயமான அடிமைமுறை ‘ சட்டங்களின் படி அப்பாவியான மக்களை அடிமைமுறைக்காக கடத்திக்கொண்டுவரக்கூடாது. ஆனால், போரில் தோற்றவர்களை, கைது செய்யப்பட்ட எதிர்ப்படைபோர்வீரர்களை அடிமைகளாக உபயோகப்படுத்திக்கொள்ள கிரிஸ்தவர்களுக்கு அனுமதி அளிக்கும். ஆகவே போப்பாண்டவர் ஆப்பிரிக்கர்களை கடத்திக்கொண்டுவந்து அடிமைகளாக விற்பதற்காக, ஆப்பிரிக்கர்களை ‘சாரசன் ‘கள் அதாவது கிரிஸ்தவர்கள் சிலுவைப்போரில் வெகுகாலம் போரிட்டு வரும் முஸ்லீம் துருக்கர்கள் என்று வகைப்படுத்தி அனுமதி அளித்தது. சுமார் 2500 மைல் தொலைவில், வெவ்வேறு கண்டங்களில் வசிக்கும் துருக்கர்களையும், ஆப்பிரிக்கர்களையும் எந்தவகையிலும் யாரும் ஒன்றாகச் சேர்த்துக் குழப்பிக்கொள்ள முடியாது. ஆனால், இதுவெல்லாம் அப்பாவி ஆப்பிரிக்கர்களை கடத்திக்கொண்டு வந்து அடிமைகளாக விற்க, ஏற்கெனவே வக்ரமான சர்ச்சின் ‘நியாயமான,அநியாயமான அடிமைமுறை ‘ சட்டங்களையும் சட்டரீதியாக வளைத்து, நியாயப்படுத்திய முறை இது.
    வெள்ளை அமெரிக்கர்கள், பைபிளின் பக்கங்களைக்கொண்டு இந்த கொடுமைகளை தொடர்ந்து நியாயப்படுத்தி வந்தார்கள். The Bible itself commanded: ‘Slaves, obey your earthly masters with respect and fear ‘ (Ephesians 6:5). பைபிளே கட்டளையிட்டது, ‘அடிமைகளே, பூமியில் உள்ள உங்கள் எஜமான்களுக்கு மரியாதையுடனும் பயத்துடனும் அடிபணியுங்கள் ‘(Ephesians 6:5). மேலும், பைபிள் எஜமான்கள் தங்கள் அடிமைகளை இரண்டு நாட்களுக்கு எழுந்திரிக்க முடியாத வண்ணம் தீவிரமாக அடிக்க அனுமதி அளித்தது(Exodus 21:21).. பைபிள் பல பொத்தாம்பொதுவான, மறைமுகமான வாதங்களை அடிமைத்தனத்துக்கு எதிராக கொண்டிருந்தாலும், அவை பைபிள் விதிகள் அடிமைமுறையை அங்கீகரிக்கவும், அதனை எவ்வாறு நடைமுறையில் உபயோகப்படுத்தவேண்டும் என்று இருப்பது போன்று நேரடியாகவும், வெளிப்படையாகவும் இல்லை.

    போப் பதின்மூன்றாம் லியோ உலகம் முழுவது இருக்கும் தனது பிஷப்புகளுக்கு அடிமைமுறையை பகிஷ்காரம் செய்து கடிதம் எழுதியது 1890இல் தான். அதே நேரத்தில் சர்ச்சின் கொடுமையான வரலாற்றை அடிமைமுறைக்கு எதிரான வரலாறாக திருத்தி எழுதியபின்னரே இந்த கடிதம் அனுப்பப்பட்டது. இதை விட நம்ப முடியாததாக, 1965இல்தான், இரண்டாவது வாடிகன் கவுன்ஸில் இறுதியாக தனது ‘நியாயமான,அநியாயமான அடிமைமுறை ‘ கொள்கையை கைவிட்டு, எல்லா வகை அடிமைமுறைகளும் ஒழுக்கரீதியில் தடைசெய்யப்பட்டவை என்று அறிவித்தது.//
    http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20212303&edition_id=20021230&format=html

  3. Avatar
    IIM Ganapathi Raman says:

    இப்படி ஒரே நிறமாகப் பார்த்தல் சரியா?

    இரு நிறங்களைக்கொண்டவையே மதங்கள்.

    இராமாயணத்தைப் படித்து ஆன்மிக பலனைப்பெற்று தம் வாழ்க்கையைச் செம்மைப்படுத்தியோர் கோடி. அதே இராமாயண்த்தைபப்டித்து இராமர் கோயில் கட்டுவோம் என மசூதியை உடைக்கச்சொல்பவரும் உண்டு.

    குகனோடு ஐயவாரனோம் என ஒரு தலித்தையும் சபரி எனற தலித்துப்பெண்ணுக்கு மகனாக நின்று அவள் விருப்பத்தின்படி ஈமக்கிரியைச் செய்த இராமனப்படித்தோர்தான் பெரிய நம்பி மாறனேரிக்கு ஈமக்கிரியைச் செய்ததால் அவரைத் தள்ளிவைத்தார்.

    ஆக, இராமாயணம் இருவகை மக்களால் இருவகையாகவும் படிக்கப்படுகிறது. ஜயமோஹன் போன்றோர் ஒருவகையினரை மட்டுமே பார்க்கிறார்கள்.

    இராமாயணத்தைப்பற்றி மட்டுமே சொல்லிவிட்டதாக நினைக்ககூடாது. இசுலாமியர் கிருத்துவர் கதைகளும் அவ்வாறே. பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே என்ற இயேசுவின் போதனைகளைப் படித்தோர்தான் ஜெருசலேமைக்காப்பாற்றுவோம் என சிலுவைப்போர்களை நடாத்தி லட்சககணக்கான இசுலாமியரைக்கொன்றார். ஜிஹாத் என்ற பெயரால்தான் தாலிபான்களும் ஒசாமா பின் லேடன் ஆட்களும் மக்களைக்கொன்று குவிக்கிறார். அதே மதத்தின் நல்வாழ்க்கை வாழ்ந்துவரும் மக்களும் கோடி.

    ஒன்றும் சொல்லிமுடிக்கலாம்: இவர்தான் எமமதத்தில் சேரவேண்டும்; அவர் சேரக்கூடாது என்று வாயிலில் செக்கப் பண்ணி நிறுத்தவியலாதபடியாலே, எல்லோரும் நுழைந்துவிடுகிறார். அப்படி நுழைவோரில் கிரிமினல் மைண்ட்ஸ் உடையோரும் பலர். இவர்கள் மதத்தை தன் மனோவிஹாரங்களுக்கு ஒரு வடிகாலாகப்பயனபடுத்தி அவரின் மத அரசியலுக்கு அங்கிருக்கும் நல்லோரையும் பக்கம் இழுக்க முயல்கிறார். ஒன்றுமே செய்ய முடியாது. புரிந்து அவர்களிடமிருந்து விலக்கிக்கொள்வதே நல்ல மனம் படைத்த மதவாதிகளில் செயலாக இருக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *