புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 44

This entry is part 1 of 22 in the series 2 பெப்ருவரி 2014

 ​

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை)

மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

                                    E. Mail: Malar.sethu@gmail.com     

44.எளி​மையின் சிகரமாய்த் திகழ்ந்த ஏ​ழை……….

     மனிதர்கள் இன்​றைக்கு ஆடம்பரமா வாழத்தான் ​நெனக்கிறாங்க…எளி​மையா வாழ ​நெனக்க​வே மாட்​டேங்குறாங்க… அப்படி வாழ்ந்தாலும் அவங்களக் ​கேலி பண்றாங்க… என்னத்தச் ​சொல்றது…காலம் கலிகாலமா இருக்கு….எளி​மையா இருக்கறவங்கள யாரு மதிக்கறா…படா​டோபமும் பகட்டும் மனிதர்க​ளோட இதயத்துல தங்கிடுச்சு..அப்பறம் எப்படி எளி​மையா இருக்க விரும்புவாங்க…அ​ட​டே வாங்க…வாங்க..வாங்க..என்ன புலம்பிக்​கிட்​டே வர்ரீங்க..எளி​மை அது இதுன்னு..

யாராவது எதாவது ​சொல்லிட்டாங்களா..? ஓ​​ஹோ..எளி​மையப் பத்திச் ​சொல்றீங்களா…இங்க பாருங்க இன்​றைக்கு மட்டுமல்ல என்​றைக்கும் எளி​மைதான் ​பெரு​மை தரும்…ஆடம்பரம் என்​றைக்கும் ​நெலச்சு நிற்காது… எளி​மையாகத் ​தோற்றமளித்த நம்ம ​தேசத் தந்​தை​ காந்தியடிகள அ​ரையா​டை பக்கிரின்னு ​கேலி பண்ணினாரு சர்ச்சில்…ஆனா அவர விட இன்​றைக்கும் உலக மக்களால ​பெரிதும் மதிக்கப்படுறவரு யாரு ​தெரியுமா…? நம்ம காந்தியடிகள் தாங்கறத மறந்துடாதீங்க… காந்தியடிக​ளோட வழியத்தான் இன்​றைக்கு உலகத்துல உள்ள ​பெரும்பா​லோர் பின்பற்றி நடக்கறாங்க… எளி​மையா வாழ்ந்ததாலதான் காந்தியடிகள் ​சொன்ன​தை மக்கள் ​கேட்டாங்க…அவரு​டைய ​கொள்​கைக​ளை ​நெ​றையப் ​பேரு இன்று வ​ரைக்கும் பின்பற்றி நடக்கறாங்க…எளி​மைதான் என்றும் ​பெரு​மை​யைத் தரும்…

சரி..ச​ரி ​போனவாரம் நான் ஒங்ககிட்ட ​கேட்ட ​கேள்விக்குப் பதிலச் ​சொல்லலி​யே நீங்க..பதில் ​தெரியுமா….?சரியாச் ​சொன்னீங்க…கக்கன் அவர்கள்தான்…அவர்தான் எளி​மையின் சிகரமாக விளங்கிய ஏ​ழை…அவரப் பத்தி ஒங்களுக்குத் ​தெரியுமா..? அப்படித் ​தெரிஞ்சாச் ​சொல்லுங்க..நான் ​தெரிஞ்சுக்கி​றேன்..என்னது நா​னே ​சொல்லட்டுமா… சரி ​சொல்​றேன்…ஆனா கூடுதலா ஏதாவது தகவல் இருந்தா நீங்க ​சொல்லணும் என்ன சரியா…? சரி நம்ம கக்கன் அவர்க​ளைப் பத்தி ​சொல்​றேன் ​கேளுங்க…

தும்​பைப் பட்டி தந்த தூயவர்

ஆங்கி​லேயர் ஆட்சியின் பிற்பகுதியில விடுத​லைப் ​போராட்ட வீரராகவும், சுதந்திரம் ​பெற்ற இந்தியாவில் தமிழக அ​மைச்சராகவும் விளங்கியவர்தான் கக்கன். 1909-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18-ஆம் நாள் பூசாரி கக்கனுக்கும் குப்பி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தவர்தான் கக்கன். கக்கன் என்பது அவர்களது குல​தெய்வப் ​பெயராகும்.

கக்கனின் குழந்​தைப் பருவத்தி​லே​யே அவரது அன்​னையார் காலமானார். இதனால் அவரது தந்​தையார் உறவினர்களின் கூறிய​தை ஏற்றுக் ​கொண்டு பிரம்பியம்மாள் என்பவ​ரை மணந்தார். அவருக்கு நான்கு குழந்​தைகள் பிறந்தனர். அக்குழந்​தைகளுடன் கக்க​னையும் அவருடன் பிறந்தவ​ரையும் ​வேறுபாடு பாராது ​பொறுப்புடஇன் வளர்த்து வந்தார்.

பூசாரி கக்கன் தனது மூத்தமகன் கக்க​னைத் திண்​ணைப் பள்ளியில் ​சேர்த்துப் படிக்க ​வைத்தார். அதன் பின்னர் கக்கன் ​தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்புவ​ரை படித்தார். குடும்பத்தில் வறு​மை நிலவ​வே கக்கன் பள்ளிக்குச் ​சென்று படிப்பதற்குப் பதிலாகத் தமது ஊரில் மட்பாண்டங்கள் ​செய்யும் ஒருவரின் வீட்டில் பண்​ணைக்காரராகச் ​சேர்ந்தார்.

அதில் கி​டைத்த வருமானத்​தைக் ​கொண்டு மீண்டும் பள்ளியில் ​சேரந்து கக்கன் படிக்க விரும்பினார். ஆனால் தனது ஊரில் பள்ளி இல்லாத காரணத்தினால் தம் ஊரிலிருந்து ஐந்து கி​லோமீட்டர் தூரத்தில் உள்ள ​மேலூர் பள்ளியில் ​சேர்ந்து தனது படிப்​பைத் ​தொடர்ந்தார் கக்கன்.

அதன் பின்னர் திருமங்கலம் பி.​கே.என்.நாடார் உயர்நி​லைப் பள்ளியில் ​சேர்ந்து படித்து ஈ.எஸ்.எஸ்.எல்.சி ​தேர்வில் ​வெற்றி ​பெற்றார். பின்னர் நான்காவது பாரம் என்ற ஒன்பதாம் வகுப்புப் பயில ​மேலூர் பள்ளியில் ​சேர்ந்தார். தினமும் பத்து கி​லோமீட்டர் தூரம் நடந்து ​சென்று வர​வேண்டும் என்பதால் பலரது உதவி ​பெற்று விடுதியில் தங்கிப் படித்தார். மூன்று மாதங்கள் கடந்த நி​லையில் பள்ளிக் கட்டணம் ​​​செலுத்த முடியாத நி​லைக்குக் கக்கன் தள்ளப்பட்டார்.

கக்கனின் தந்​தையார் எப்படியும் மக​னைப் படிக்க ​வைத்​தே ஆக​வேண்டும் என்ற எண்ணத்தில் பலரிடமும் ​பொருளுதவி ​கேட்டார். ஒரு சில​ரே ​கொடுத்தனர். அந்தப் பணம் ​போதுமானதாக இல்​லை. அதனால் அரிசன ​சேவா சங்க அ​மைப்பின் நிர்வாகிகளில் ஒருவரான என்.எம்.ஆர்.சுப்புராமன் அவர்க​ளை அணுகி தனது மகனது படிப்புக்கு உதவுமாறு ​வேண்டினார். அவரும் ​பொருளுதவி ​செய்தார்.

துரத்திய வறு​மை

பண உதவி கி​டைத்ததால் சில மாதங்கள் கக்கன் முயன்று படித்தார். ஆனாலும் மீண்டும் பள்ளிக்கட்டணத்​தைக் கக்கனால் கட்ட முடியவில்​லை. அவ​ரை விடாது வறு​மை துரத்தியது. கக்கனது வறு​மைநி​லைத​னைக் கண்ட அ​மெரிக்கன்  மிஷன் நிர்வாகத்தினர் கல்வி உதவித்​தொ​கை வழங்க முன்வந்தது. அத்​தொ​கை​யைப் ​பெறுவதற்காக கக்கன் நாள்​தோறும் பள்ளி முடிந்த பின்னரும் விடுமு​றை நாள்களிலும் அ​மெரிக்கன் மிஷனுக்குச் ​சொந்தமான நிலத்தில் கற்க​ளைப் ​பொறுக்கியும் முட்புதர்க​ளை ​வெட்டியும் அப்புறப்படுத்தும் ​வே​லைக​ளைச் ​செய்தார். ​மேலும் அறுவ​டைக் காலங்களில் அடுத்த நிலங்களில் ​​நெற்கதிர்க​ளை அறுத்துக் கட்டுக் கட்டாகச் சுமந்து அதில் இருந்து கி​டைத்த ​பொரு​ளைக் ​கொண்டு கக்கன் படித்தார். வறு​மை அவ​ரைக் கசக்கிப் பிழிந்தது.

பதி​னோராம் வகுப்பில் ​​பொதுத்​தேர்வு ந​டை​பெறுவதற்கு முன்னர் பள்ளியில் நடத்தப்படும் தனித்​தேர்வில் கக்கன் ​தேர்ச்சி ​பெறவில்​லை. அதனால் அரசு ​பொதுத்​தேர்வு எழுத கக்கன் அனுமதிக்கப்படவில்​லை என்பது ​நோக்கத்தக்கது. பாத்துக்கிட்டீங்களா…வறு​மை அவ​ரோட படிப்புக்கு எப்படி முட்டுக்கட்​டை ​போட்டதுன்னு…வள்ளுவரு ​சொல்லுவாருல்ல..

“இடும்​பைக்கு இடும்​பை படுப்பர் இடும்​பைக்கு

இடும்​பை படாஅ தவர்”

அப்படீன்னு…அதுமாதிரி கக்கனும் துன்பத்​தைக் கண்டு துவளவில்​லை.

மனம் தளராத கக்கன் தான் படித்த திருமங்கலம் பி.​கே.என்.நாடார் உயர்நி​லைப்பள்ளியி​லே​யே மீண்டும் ​சேர்ந்து படித்தார். கக்கனின் வறு​மைநி​லை​யை அறிந்திருந்த பள்ளியின் த​லை​மை ஆசிரியர் கிருஷ்​ணையர் அவ​ரைப் பள்ளி விடுதியில் தங்கவும், அங்​கே​யே சாப்பிடவும் உதவி ​செய்தார்.

அம்​பேத்கருக்கு எப்படி அவ​ரோட ஆசிரியர் ஒதவி ​செஞ்சா​ரோ அ​தே மாதிரிதான் கக்கனுக்கும் இந்தத் த​லை​மை ஆசிரியர் ஒதவி ​செஞ்சார். பகலில் பள்ளியில் படித்துவிட்டு இரவில் தாழ்வாரத்தில் தங்கிக் ​கொண்டு அங்​கே​யே படுத்துக் ​கொண்டார். அப்​போது கள்ளுக்க​டை மறியல் ​போர் நடந்து ​கொண்டிருந்த காலம். அதனால் பகலில் ​போராட்டத்தில் ஈடுபட்டு ​கைது ​செய்யப்படும் ​​தொண்டர்கள் இரவில் விடுவிக்கப்படுவார்கள். அவ்வாறு விடுவிக்கப்படும் ​தொண்டர்கள் தங்களது வீடுகளுக்குச் ​சென்று படுப்பதற்குப் பதிலாகக் கக்கன் படுத்திருக்கும் பள்ளித் தாழ்வாரத்திற்குப் படுக்க வருவார்கள். அவர்களில் ​டைகர் மீனாட்சி சுந்தரம், ​வைத்தியநாத ஐயர், சீனிவாசவரதஐயங்கார் ஆகி​யோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.

பள்ளித் தாழ்வாரத்தில் படுத்திருந்த கக்க​னைப் பார்த்து அத்த​லைவர்கள் “ஏனப்பா இங்கு படுத்திருக்கிறாய்…?” என்று ​கேட்டனர். அதற்குக் கக்கன், “ஐயா நான் பள்ளி விடுதிக்குப் பணம் கட்ட இயலவில்​லை. அதனால்தான் நான் தாழ்வாரத்தில் படுத்துறங்குகி​றேன்” என்று மிகுந்த துயரத்துடன் கூறினார். இத​னைக் ​கேட்ட த​லைவர்கள் வருந்தினர்.

அப்​போது மது​ரை ஏ.​வைத்தியநாத ஐயர் அரிஜன ​சேவா சங்கத்தின் த​லைவராக இருந்ததால் கக்கனுக்கு படிப்பதற்கு உதவித்​தொ​கை கி​டைக்க ஏற்பாடு ​செய்தார். படிப்பு உதவித்​தொ​கை ​பெற்ற கக்கன் மிகுந்த ​பொறுப்புடன் படித்து பள்ளி இறுதித்​தேர்வி​னை எழுதினார். ஆனால் அதில் ஆங்கிலப் பாடத்தில் ஒருமதிப்​பெண் கு​றைந்ததால் ​தோல்வியுற்றார்.

இத​னை அறிந்த கக்கனின் தந்​தை மிகுந்த வருத்தம் அ​டைந்தார். தன்னு​டைய ஆ​சை​யை மகன் நி​றை​வேற்றவி​லை​யே என்று துயரமுற்றார். இத​னைக் கண்ட கக்கனும் தன் நி​லைக்காகவும் தந்​தையின் எண்ணத்​தை நி​றை​வேற்ற இயலவில்​லை​யே என்பதற்காகவும் மனம் கு​மைந்தார். பின்னர் இனி நாம் படித்து என்ன ஆகப்​போகிறது என்று நி​னைத்து படிப்ப​தைவிட    ஏ​தேனும் ஒரு ​வே​லை​யைப் பார்ப்​போம் என்ற முடிவுக்கு வந்தார்.

இந்நி​லையில் ஒரு நாள் மது​ரையில் ​வைத்தியநாத ஐய​ரைக் கக்கன் சந்திக்க ​நேர்ந்தது. ஏற்கன​வே கக்க​னை அறிந்திருந்த அவர், கக்க​னைப் பார்த்து, “தற்​போது என்ன ​செய்து ​கொண்டிருக்கிறாய்..?” என்று வினவினார். அதற்குக் கக்கன்,

“ஐயா நான் பள்ளி இறுதித்​தேர்வில் ​தோல்விய​டைந்துவிட்​டேன். அதனால் எனக்கு ​மேற்​கொண்டு படிக்க மனமில்​லை. அதனால் நான் ​வே​லை ​தேடிக்​கொண்டிருக்கி​றேன்” என்றார். அதற்கு அவர், “அப்படியானால் ​மேலூரில் உள்ள மாணவர் விடுதிக் காப்பாளர் பணியில் ​சேர்கிறாயா?” என்று ​கேட்டார். அதற்குக் கக்கன், “​சேர்கி​றேன் ஐயா. ஆனால்…என்​னைப் படிக்க ​வைக்க எனது தந்​தையார் நி​றையக் கடன் வாங்கியுள்ளார். அத​னை அ​டைக்க ​வேண்டும். அதுதான் எனக்கு மிகவும் துன்பமாக உள்ளது. நான் என்ன ​செய்வது” என்று கூறினார்.

அத​னைக் ​கேட்ட ​வைத்தியநாத ஐயர்,”அப்படியா அது குறித்து நீ எதற்கும் கவலைப்பட ​வேண்டாம். அந்தக் கட​னை​யெல்லாம் நான் அ​டைக்கின்​றேன்” என்று கூறி கக்கனிடம் பணத்​தைக் ​கொடுத்தார். அத​னை வாங்கிக் ​கொண்ட கக்கன் பணத்​தைத் தந்​தையிடம் ​கொடுத்துக் கட​னை அ​டைத்தார். விடுதிக் காப்பாளராகச் ​சேர்ந்த கக்கன் அரிசன ​சேவா சங்கப் பணிக​ளை மிகவும் சிறப்பாகச் ​செய்தார்.

மக்கள் ​தொண்டு

கக்கனின் எளி​மைஈ உண்​மைடூ பண்பான ​பேச்சு உள்ளிட்ட​வை அ​னைத்தும் ​வைத்தியநாதய்ய​ரைக் கவர்ந்ததால் அவர் ​சேவா சங்கப் பணிக​ளை முடித்த பிறகு கக்க​னைத் தமது வீட்டி​லே​யே தங்கி இருக்கலாம் என்று கூறினார். அ​தோடு மட்டுமல்லாது கக்க​னைத் தான் ​பெற்ற பிள்​ளைகளில் ஒருவராக​வே கருதினார் ​வைத்தியநாதய்யர். ​வைத்தியநாதய்யருக்கு எவ்வளவு உயர்ந்த மனசு… கக்கனும் ​வைத்தியநாதய்யரின் நம்பிக்​கைக்குப் பாத்திரமானவராக நடந்து ​கொண்டார்.

​வைத்தியநாதய்யரின் கட்ட​ளைப்படி ​மேலூர் வட்டத்தில் ​தொடங்கி சிவகங்​கை வட்டம் வ​ரையிலுள்ள கிரமாங்களில் 1940-41-ஆம் ஆண்டுகளில் பிள்​ளைகள் தங்கிப் படித்திடும் இரவுப் பள்ளிக​ளைத் ​​தொடங்கி அப்பள்ளிகளுக்குத் ​தே​வையான அ​னைத்துப் ​பொருள்க​ளையும் வாங்கிக் ​கொடுத்தார் கக்கன்.

அ​னைத்துத் தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகளிலும் இரவுப் பள்ளிக​ளைக் கக்கன் ​தொடங்கினார். ​மேலூரில் அப்பள்ளிகள் அக்கிரகாரப் பகுதியில் ​​தொடங்கப்பட்டதால் முதன் முதலில் எதிர்ப்பு ஏற்பட்டாலும் பின்னர் அந்த எதிர்ப்பு ம​றைந்தது. இரவுப் பள்ளிகளுக்கான கணக்​கைக் கக்கன் மிகச் சரியாகப் பராமரித்து வந்தார்.

தீண்டா​மை ஒழிப்பு

கக்கன் வாழ்ந்து வந்த தும்​பைப் பட்டி ஊரில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பிற இனத்​தைச் சார்ந்த மக்களுக்கும் தனித்தனிக் குடிநீர்ப்பிரிவுகள் இருந்தன. ஊரில் ஆடுமாடுக​ளைக் குளிப்பாட்டும் குளத்து நீ​ரை​யே தாழ்த்தப்பட்ட மக்கள் குடிநீராகப் பயன்படுத்த ​வேண்டும். மற்​றொரு குள​மோ சுத்தமாக இருக்கும். இத​னை மற்ற இனமக்கள் பயன்படுத்தினர். இந்நி​லை மாற​வேண்டும் என்று கக்கன் நி​னைத்தார்.

தனது மனத்தில் உள்ள​தை மாற்று இனத்த​லைவர்களிடம் கூற​வே அவர்களும் அதற்குச் சம்மதித்துக் குளத்தில் தண்ணீர் எடுத்துத் திரும்பினார். அப்​போது ஒரு இனத்​தைச் சார்ந்த மக்கள் கக்க​னையும் அவருடன் வந்தவர்க​ளையும் வழிமறித்தனர். அவர்க​ளை வழிமறித்துத் தங்க​ளை ​வெட்டுமாறு  ஒருங்கான் அம்பலம், கருப்பன் ​செட்டியார், குப்​பையன் ஆகி​யோர் கூறினர். அதற்குப் பின்னர் கக்கன், “இந்த மூன்று த​லைவர்க​ளை ​வெட்டுவதற்கு முன்னர் என்​னை ​வெட்டுங்கள்” என்று கூறி சா​லையில் அமர்ந்தார். பின்னர் ஊர்ப்பஞ்சாயத்துக் கூடி கக்கன் உள்ளிட்டவர்கள் கூறுவது சரி​யே என ஒத்துக் ​கொண்டனர். அ​னைவரும் நல்ல ஊருணி நீ​ரைப் பயன்படுத்தலாம் என்றும் கூறிவிட்டனர்.

ஆலய நு​ழைவுப் ​போராட்டம்

இது​போன்​றே மது​ரை மீனாட்சி அம்மன் ​கோவிலுக்குள் ​சென்று அ​னைவரும் வழிபட​வேண்டும் என்று ​வைத்தியநாதய்யர் ​​கோரிக்​கைவிடுத்தார். இக்​கோரிக்​கை ஏற்கப்படாவிடில் ​போராடுவதாகவும் அறிவித்தார். அரசும் மற்றவர்களும் ஏற்றுக் ​கொள்ளவில்​லை. அதனால் 1933-ஆம் ஆண்டு ஜூ​லை மாம் 8-ஆம் நாள் இரவு ஒரு மணிக்கு மது​ரை மீனாட்சியம்மன் ​கோவிலுக்குள் நு​ழைந்தார்.

எந்​தெந்த சமுதாயங்கள் ​கோயிலுக்குள் ​சென்று இ​றைவ​​னை வழிபடுவதற்கு மறுக்கப்பட்டன​வோ அந்தந்தச் சமுதாயத் ​தொண்டர்க​ளையும் அணிவகுத்து கக்கன் அ​ழைத்துச் ​சென்று ​வைத்தியநாதய்யருடனும் மற்றவர்களுடனும் ​சேர்ந்து வழிபாடு நடத்தினர். இத​னைக் ​கேள்வியுற்ற காமராசர், “தான் ​பெற்ற பிள்​ளைக​ளைப் பார்க்கத் த​டைவிதித்திருந்த து​ரோகிகள் சந்நிதியிலிருந்து விலகியதால் மீனாட்சி மகிழ்வாக இருக்கிறாள்” என்று ​வேடிக்​கையாகக் கூறினார்.

கக்கனது தீவிர முயற்சியால் குளத்தில் தண்ணீர் எடுப்பது, ​கோவிலுக்குள் நு​​ழைந்து மக்கள் இ​றைவ​னை வழிபடுவது ​போன்ற​வை நடந்த​தை நி​னைத்தும் கக்கனது துணி​வையும் மக்கள் பாராட்டி வர​வேற்றனர். விடுத​லைப்​போரில் ஒருபக்கமும் சமுதாயப் ​போரில் மறுபக்கமும் என இருமு​னைப்​ போரில் கக்கன் ஈடுபட்டார். இதனால் அவரது புகழ் மக்களி​டை​யே பரவத் ​தொடங்கியது.

சீர்திருத்தத் திருமணம்

இந்நி​லையில் கக்கனுக்கு திருமணம் ​செய்து ​வைப்பதற்காக அவரது நண்பர்கள் ​பெண் பார்த்தனர். அதன்படி கக்கன் சிவகங்​கை​யில் இருந்த கிறித்துவ மதத்​தைச் ​சேர்ந்த ​​சொர்ணம் பார்வதி என்ற ஆசிரி​யை​யை 1932-ஆம் ஆண்டு, சிறாவயலில் காந்திமன்றத்​தை நடத்தி வந்த ​பொதுவு​டை​மைச் சிந்த​னையாளரான பா.ஜீவானந்தத்தின் த​லை​மையில் சீர்திருத்த மு​றைப்படி திருமணம் ​செய்து ​கொண்டார்.

தன் மகன் ​செய்து ​கொண்ட சீர்திருத்தத் திருமணத்தில் பூசாரி கக்கனக்குக் ​கொஞ்சமும் சம்மதமில்​லை. இருப்பினும் மகனுக்காத் தனது ​கொள்​கையி​னைவிட்டுக் ​கொடுத்த​தோடு அல்லாமல் சீர்திருத்தத் திருமணத்தில் கலந்து ​கொண்டு மணமக்க​​ளை வாழ்த்தித் தும்​பைப்பட்டியிலுள்ள தனது இல்லத்திற்கும் மக்க​ளை அ​ழைத்துச் ​சென்றார்.

இவர்களது இல்லறம் நல்லறமாக நடந்தது. கணவனின் குணமறிந்து ​சொர்ணம்மாள் குடும்பத்​தை நடத்திச் ​சென்றார். இவர்கள் நடத்திய இல்லறத்தின் பயனாக பத்மநாதன், பாக்கியநாதன், காசிவிஸ்வநாதன், சத்தியநாதன், நடராஜமூர்த்தி என்ற ஐந்து மகன்களும், கஸ்தூரிபாய் என்ற மகளும் பிறந்தன.

கக்கன் ​தொடர்ந்து தமது மக்கள் ​தொண்டி​னைச் ​​செய்து வந்தார். இரவு பகல் என்று ​நேரம் பார்க்காமல் கக்கன் ​செய்து வந்த ​தொண்டிற்கு அவரது குடும்பம் த​டையாக இருக்கவில்​லை. கக்கன் தன்​மைப் ​போன்​றே தமது து​ணைவியா​ரையும் இப்பணியில் ஈடுபடுத்தினார். இரவுப் பள்ளிக​ளை நடத்திடக் கக்கனுக்குப்  ​பொருளுதவி ​தே​வைப்பட்டது. விடுதிப் பிள்​ளைகளுக்குப் பல நாட்கள் கடன் வாங்கிக்கூடக் கக்கன் உணவு அளித்து வந்தார். ஒரு சமயம் தமது து​ணைவியாரின் தாலியி​னை அடகு ​வைத்து உணவளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காந்தியடிகளுடன் சந்திப்பு

1934-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ஆம் நாள் காந்தியடிகள் மது​ரைக்கு வந்த​போது, என்.எம்,ஆர்,சுப்புராமன் என்பவர் கக்க​னை தம்முடன் அ​ழைத்துச் ​சென்று காந்தியடிகளிடம் அறிமுகம் ​செய்தார். காந்தியடிகள் கக்கனது ​செயல்பாடுக​ளைக் ​கேட்டு மிகவும் பாராட்டினார். அதன்பின்னர் காந்தியடிகளுட​னே​யே கக்கன் இருந்து அவருக்கான பணிவி​டைக​ளைச் ​செய்தார். அத்துடன் காந்தியடிகள் மது​ரை​யைச் சுற்றிச் ​சென்ற இடக்களுக்​கெல்லாம் கக்கனும் உடன் ​சென்று எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து ​கொண்டார். காந்தியடிகள் மது​ரையிலிருந்து ​செல்லும் வ​ரை அவருட​னே​யே கக்கன் இருந்தார்.

கக்கன் தமக்கு வழிகாட்டியாக இருந்த ​வைத்தியநாதய்யர் என்.எம்,ஆர்.சுப்புராமன் ​போன்​றோர் க​டைபிடித்துவந்த காந்தியக் ​கொள்​கைக​ளையும் ந​டைமு​றைக​ளையும் பின்பற்றி நடந்தார். 1939-ஆம் ஆண்டு ​வைத்தியநாதய்யர் முன்னி​லையில் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராகச் ​சேர்ந்து தம்​மைப் பதிவு ​செய்து ​கொண்டார்.

காங்கிரஸில் கக்கன் ​சேர்ந்த​தை அவரது தந்​தையார் தடுத்துப்பார்த்தார். ஆனால் கக்கன் ​கேட்கவில்​லை. இதனால் தந்​தை-மகன் உறவில் சற்று விரிசல் ஏற்பட்டது. மகன் தந்​தை உற​வைக் காட்டிலும் தனக்கு நாட்டு விடுத​லைக்காகப் ​போராடுவ​தே ​மேல்  என்று கக்கன் கருதியதால் எ​தைப் பற்றியும் கவ​லைப்படாமல்  மக்கள் ​தொண்டில் ஈடுபட்டார்.

விடுத​லைப் ​போரில் ஈடுபடல்

1940-ஆம் ஆண்டு ஜூ​லை 12-ஆம் நாள் கக்கன் ​மேலூர் வட்டக் காங்கிரஸ் கட்சியின் ​செயலாளராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் கக்கன் தான் ​செல்லும் இடங்களில் எல்லாம் வந்​தே மாதரம் என்று முழங்கத் ​தொடங்கினார்.

காங்கிரஸ் கட்சிக் ​கொடி​யை ஏற்றுவதும், வந்​தே மாதரம் என முழங்குவதும் நாட்டு மக்களி​டை​யே விடுத​லை ​வேட்​​கை​யை ஏற்படுத்தும் என்று உணர்ந்த கக்கன் அவ்வாறு ​செய்வ​தைத் தமது முக்கிய கட​மையாகக் ​கெர்ணடார். கக்கனின் ​செயல்பாடுக​ளைக் கவனித்த ஆங்கி​லேய அரசு 1940-ஆம் ஆண்டு ​செப்டம்பர் 14-ஆம் நாள் வாஞ்சி நகரம் என்ற ஊரில் அவ​ரைக் ​கைது ​செய்தது. வந்​தே மாதரம் என்று முழக்கமிட்டதாகவும், ​​பொதுமக்களிடம் அரசுக்கு எதிராகத் துண்டுப் பிரசுரங்க​ளை விநி​யோகித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு கக்கன் 15 நாட்கள் சி​றைதண்​டனை விதிக்கப்பட்டுச் சி​றையில் அ​டைக்கப்பட்டார்.

தண்ட​னை முடிந்து விடுத​லையான கக்கன் காங்கிரஸ் இயக்கப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். விடுத​லைப் ​போராட்டத்தில் தம்​மை முழு​மையாக ஈடுபடுத்திக் ​கொண்ட கக்கன் தனிமனித சத்தியாகிரக அறப்​போராட்டத்தில் தீவிரம் காட்டினார். இத​னைக் கண்காணித்து வந்த ஆங்கி​லேய அரசு 1940-ஆம் ஆண்டு அக்​டோபர் மாதம் 24-ஆம் நாள் கக்கன் மீது ராஜது​ரோகக் குற்றம் சாட்டி கடு​மையான தண்ட​னை​யைப் ​பெறச் ​செய்து அவ​ரை ​மேலூர்க்கி​ளைச் சி​றையில் அ​டைத்தது.

கி​ளைச் சி​றையில் 15நாட்கள் தண்ட​னை அனுபவித்த கக்க​னை ஆங்கில அரசு மது​ரை மத்தியச் சி​றைக்குக் ​​கொண்டு ​சென்றது. சில நாட்களில் தனிநபர் சத்தியாகிரகப் ​போராட்டம் திரும்பப் ​பெறப்பட்டதன் ​பேரில் கக்கன் விடுத​லை ​செய்யப்பட்டார். கக்கனது ​செயல்பாடுக​ளைக் கவனித்த காங்கிரஸ் இயக்கம் அவருக்குப் ​பொருளாளர் பதவி​யைக் ​கொடுத்தது. உண்​மை, உ​ழைப்பு ஆகியவற்றின் உ​றைவிடமாகக் கக்கன் திகழ்ந்தார். 1941-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21-ஆம் நாள் மது​ரை மாவட்டப் ​பொருளாளராகக் கக்கன் ​பொறுப்​பேற்றார்.

1942-ஆம் ஆண்டில் ​வெள்​ளைய​னே ​வெளி​யேறு என்ற ​போராட்டத்​தைக் காந்தியடிகள் ​தொடங்கி ​வைத்த​போது கக்கனும் அதில் தீவிரமாக ஈடுபட்டார். அத​னை அறிந்த ஆங்கி​லேயக் காவல்த்து​றையினர் கக்க​னைக் கண்காணித்தனர். இத​னை அறிந்த கக்கன் ​பெண்​போன்று ​வேடமணிந்து ​காவல்த்து​றை அறியாதவாறு தம்மு​டைய ​போராட்டப் பணிக​ளைச் ​செய்துவந்தார். ​மேலூர் மாணவர் விடுதிக்குக் கக்கன் ​பெண் உருவத்தில் ​போய்வந்து ​வெள்​​ளைய​னே ​வெளி​யேறு இயக்கத்​தைக் கக்கன் தீவிரப்படுத்திய​தை அறிந்த உளவுத்து​றையினர் சூழ்ச்சி ​செய்து 1942-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் நாளன்று கக்க​னைக் ​கைது ​செய்து அவ​ரை யாருக்கும் ​தெரியாமல் காவல் நி​லையத்திற்குக் ​கொண்டு ​சென்றது.

துன்பத்திற்கு ஆளாதல்

கக்க​னைக் காவல்த்து​றையினர் ​கைது ​செய்த ​செய்தி​யைக் கீ​ழையூர் ​செல்லப்பா என்பவர் தண்​டோராப்​போட்டு மக்களுக்குத் ​தெரிவித்தார். இதனால் ​செல்லப்பா​வையும் காவலர்கள் ​கைது ​செய்தனர். சி​றையில் விசார​ணை என்ற ​பெயரில் காவல்த்து​றையினர் கக்க​னை ​தொடர்ந்து ஐந்து நாள்கள் சவுக்கால் அடித்துத் துன்புறுத்தினர். இதனால் கக்கன் சுயநி​னைவிழந்தார். மயங்கிய நி​லையில் இருந்த கக்க​னை குதி​ரை வண்டியில் தூக்கிப் ​போட்டுக் கொண்டு காவல்த்து​றையினர் ​சென்றனர். இத​னைக் கண்ட மக்கள் கலங்கி அழுதனர்.

கக்கன் காவலர் ​செய்த ​கொடு​மைக​ளைப் ​பொறுத்துக் ​கொண்டார். எந்த நி​லையிலும் தமது உறுதி​யைக் ​கைவிடாது இருந்தார். விசார​ணைக்குப் பின்னர் கக்க​னை ஆங்கில அரசு ஆந்திர மாநிலம் ​பெல்லாரி மாவட்டம் அலிப்புரம் சி​றையில் அ​டைத்தது. சி​றையில் கக்கன் ​சொல்​லொணாத் துயரங்க​ளை அ​டைந்தார்.  இப்பத்​தெரிஞ்சுக்​கோங்க நம்ம நாட்​டோட விடுத​லை சும்மா ​கி​டைக்க​லைன்னு..அதனால்தான் நம்ம பாரதியாரு,

“தண்ணீர் விட்​டோ வளர்த்​தோம் சர்​வேசா

கண்ணீரால் காத்​தோம் கருகத் திருவுள​மோ”

அப்படின்னு சுதந்திரத்​தைப் பத்திப் பாடியிருக்காரு.. சரிசரி ​மேல ​கேளுங்க.. ​கைது ​செய்த கக்க​னை ஆங்கில அரசு 1944-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ஆம் நாள் சி​றையிலிருந்து விடுவித்தது.

முழு விடுத​லை ​வேண்டும் என்ற காங்கிரஸின் ​வேண்டு​கோ​ளை பிரிட்டிஷ் அரசு ஏற்றுக் ​கொள்ளவில்​லை. ஆனால் ​கேபினட் கமிசன் பரிந்து​ரைத்த அறிக்​கையி​னை மட்டும் இருதரப்பினரும் ஏற்றுக் ​கொண்டனர், அதன்ப​டி இந்தியாவில் இ​டைக்கால அரசாக அரசியல் அ​மைப்புச் சட்டச​பை உருவாக்கப்பட்டது, அச்ச​பைக்​கெனத் ​தேர்ந்​தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் 1946-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் நாள் ​பொறப்​பேற்றனர். அச்ச​பையின் உறுப்பினராகக் கக்கனும் ​தேர்ந்​தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் அ​மைப்புச் சட்டச​பை மூன்றாண்டுகள் ​செயல்பட்டது. அச்ச​பையின் கூட்டங்கள் அ​னைத்திலும் கக்கன் தவறாது கலந்து ​கொண்டார். இதனால் கக்கனுக்கு சட்ட​மே​தை அம்​பேத்கர், ​கே.எம்,முன்ஷி ஆகி​யோரின் ​தொடர்பும் அவர்களுடன் ​சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பும் கி​டைத்தது.

நாடாளுமன்ற உறுப்பினராதல்

நாடு விடுத​லை​பெற்ற பின்னர் 1952-ஆம் ஆண்டு ந​டை​பெற்ற நாட்டின் முதல் ​பொதுத் ​தேர்தலில் மது​ரை நாடாளுமன்ற மத்தியத் ​தொகுதியில் ​காங்கிரஸ் வேட்பாளராகக் கக்கன் நின்று ​வெற்றி ​பெற்றார். அலிப்புரம் சி​றையில் இருந்த காலத்தில் கற்றுக் ​கொண்ட ஹிந்தி ​மொழி​ ைஅறி​வையும் அரசியல் அ​மைப்புச் சட்ட அ​வை உறுப்பினராக இருந்த​போது ​பெற்ற பட்டறி​வையும் ​வைத்துக் ​கொண்டு கக்கன் சிறந்த பாராளுமன்ற உறுப்பினராகத் தம் ​பொறுப்புக​ளையும் கட​மைக​ளையும் நி​றைவாகச் ​செய்தார்.

குலக்கல்வித் திட்டத்தின் காரணத்தினால் ஏற்பட்ட குழப்பத்தினால் ​சென்​னை மகாண முதல்வர் பதவியிலிருந்து இராஜாஜி விலக​வே அவருக்குப் பின்னர் யார் தமிழகத்தின் முதல்வர் ​பொறுப்பி​னை ஏற்பது என்ற ​​​கேள்வி எழுந்த​போது காமராச​ரே த​லை​மை ஏற்று முதல​மைச்சராக ​வேண்டும் என்று கக்கன் வலியுறுத்தினார். அதன் பின்னர் நடந்த ​தேர்தலில் காமராசர் சட்டமன்றத் த​லைவராகத் ​தேர்வு ​செய்யப்பட்டார். காமராசர் முதல்வராகப் ​பொறுப்​பேற்றவுடன் கட்சித் த​லை​மைப் ​பொறுப்பானது கக்கனுக்கு அளிக்கப்பட்டது.

வளர்ப்புத் தந்​தைக்குக் ​கொள்ளி ​வைத்தல்

கக்கன் பாராளுமன்ற உறுப்பினராகவும் தமிழ்நாடு காங்கிரஸ்கட்சித் த​லைவராகவும் இருந்த​போது 1955-ஆம் ஆண்டு கக்கனின் அரசியல் பிர​வேசத்திற்குக் காரணமாகவும் பல்​வேறு நி​லைகளில் கக்கனுக்கு வளர்ப்புத் தந்​தையாக இருந்து உதவியாக இருந்துவந்த ​வைத்தியநாதய்யர் உடல்நலம் குன்றி அ​தே ஆண்டு பிப்ரவரி 23-ஆம் நாள் அன்று காலமானார்.

இந்தச் ​செய்தி​யைக்​கேட்ட கக்கன் மது​ரைக்கு வி​ரைந்து வந்து ஐயரின் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து துக்கத்​தைப் பகிர்ந்து ​கொண்டார், அந்த ​நேரத்தில் ஐயரின் மக்கள் தங்களது குல வழக்கப்படி தந்​தையின் இறுதிச் சடங்கின்​போது ​கக்கன் மொட்​டையடித்துக் ​கொள்ளி ​வைக்க ​​வேண்டும் என்றனர்.

இதற்குக் கக்கன் அப்படி​யென்றால் நான் ​மொட்​டையடித்துக் ​கொள்ளி ​வைக்கி​றேன் என்று உடனடியாகச் சம்மதித்தார். இதற்கு ஐயரின் உறவினர்களும், அவர் சார்ந்த சமூகத்தினரும் எதிர்ப்புத் ​தெரிவித்தனர். இருப்பினும் ஐயரின் குடும்பத்தவர் கக்கனுடன் ​சேர்ந்துதான் சடங்​கைச் ​செய்​வோம் என்பதில் உறுதியாக இருந்தனர், ​மேலும், “நாங்கள் அவருக்குப் பிறந்ததால் மகன்களா​னோம். கக்கன் அவரது வளர்ப்பால் மகனானார். அந்த வழியில் பார்த்தால் எங்களுக்கு இருக்கும் உரி​மை அவருக்கும் இருக்கிறது” என்று ​வைத்தியநாதய்யரின் மகன்களும் அவரது து​ணைவியாரும் கூறினர். இ​தைக் ​கேட்டுச் சில உறவினர்கள் ஒதுங்கினர், ஐயரின் குடும்பத்திற்குக் கட்டுப்பாடு விதித்தனர்.

அப்படி இருந்தும் ஐயரின் மகன்கள் கக்கனுடன் ​சேர்ந்​தே இறுதிச் சடங்​கைச் ​செய்து முடித்தனர், ஒரு மகன் தன் தந்​தைக்கு என்​னென்ன ஈமச் சடங்குகள் ​செய்ய ​வேண்டு​மோ அவற்​றை எல்லாம் ஐயருக்காகக் கக்கன் ​செய்தார். இந்த உயர்ந்த பண்​பை எங்காவது பார்க்க முடியுமா…? வள்ளுவர் ​சொன்ன​தைப் ​போன்று,

“பண்பு​டையார் பட்டுண்டு உலகம்”

அந்தப் பண்பு​டையார் ​வேற யாருமில்​லைங்க…கக்கனும் அவ​ரை வளர்த்த ​வைத்தியநாதய்யரும், அவரது குடும்பத்தினரும்தான் என்ன புரியுதுங்களா…!

1955-ஆம் ஆண்டு ​சென்​னை ஆவடியில் ந​டை​பெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்கு வந்திருந்த ​நேரு அவர்கள் கக்க​னை கக்கன்ஜி என்று அ​ழைத்தார். அதன்பிறகு அ​னைத்துக் கட்சித்த​லைவர்களும், மக்களும் கக்கன்ஜி என்​றே அ​ழைத்து வரலானார்கள். கக்கன் கக்கன்ஜி ஆகிவிட்டார்.

அ​தையடுத்து 1957-ஆம் ஆண்டில் ந​டை​பெற்ற இரண்டாவது ​பொதுத்​தேர்தலில் காங்கிரஸ் சார்பாக நின்று சட்டப்​பேர​வை உறுப்பினர் பதவிக்குப் ​போட்டியிட்டு அதில் மகத்தான ​வெற்றி ​பெற்றார். தமிழகத்தில் காமராசர் த​லை​மையில் அ​மைந்த அ​மைச்சர​வையில் 1957-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் நாள் கக்கன் அ​மைச்சரானார். இந்த அ​மைச்சர் ​பொறுப்பு கக்கனின் ​நேர்​மைக்கம் தியாகத்திற்கும், திற​மைக்கும் கி​டைத்த பாராட்டு எனலாம்.

எளி​மையின் சிகரம்

அ​மைச்சரானாலும் கக்கன் எளி​மையாக​வே இருந்தார். 1962-ஆம் ஆண்டு வ​ரை கக்கன் தமக்களிக்கப்பட்ட ​போதுப்பணி, அரிசன நலம் ​போன்ற து​றைகளில் மிகச் சிறப்பாகச் ​செயல்பட்டு வளர்ச்சிப் பணிக​ளை நி​றை​வேற்றி மக்களிடம் பாராட்டுதல்க​ளைப் ​பெற்றார்.

அ​மைச்சர் ​பொறுப்​பேற்றதும் ​மேலூருக்குச் சுற்றுப் பயணத​ஃைத ​மேற்​கொண்ட கக்கன் மாவட்டக் கல்விஅதிகாரியாகப் பணிபுரிந்து ​கொண்டிருந்த சுப்பிரமணியத்​தைத் தாம் தங்கியிருந்த பயணியர் மாளி​கைக்கு வருமாறு அ​ழைப்பு விடுத்தார். தம் து​றை​யோடு ​​தொடர்பு இல்லாத அ​மைச்சர் அ​ழைக்கிறா​றே என்ன காரணமாக இருக்கும் என்று சிந்தித்தவா​றே கல்வி அதிகாரி ​சென்றார்.

அவ​ரைக் கண்டவுடன் அதிகாரி ஐயா! நம் ம மாவட்டத்தில எத்த​னை பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன? எத்த​னை கிராமங்களில் பள்ளிகள் இல்​லை? என்ற புள்ளிவிபரங்க​ளை எடுத்து வாருங்கள்’’ என்று கூறினார். பள்ளிகள் இல்லாத ஊர்க​ளைப் புள்ளி விவரங்கள் வாயிலாக அறிந்து ​கொண்ட கக்கன் ஒவ்​வொரு கிராமத்திலும் ஓராசிரியர் பள்ளிக​ளைத் திறக்க ஆவன ​செய்தார். ஐந்தாண்டு காலம் கக்கன் சமுதாய ​மேம்பாட்டு அ​மைச்சராகப் பணியாற்றிதன் ​பேரில் ​நேர்​மையான அ​மைச்சர் என்ற ​பெரு​மை ​​பெற்றார். கக்கன் சென்ற ஒரே வெளிநாடு சீனா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.​ சீனாவிற்குச் சென்றிருந்த சமயம் கக்கன் சூயன்லாய் அவர்களைச் சந்தித்து உரையாடினார்.​ ​

1962-ஆம் ஆண்டு நடந்த ​பொதுத்​தேர்தலில6 காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டுக் கக்கன் ​மேலூர்த் தனித்​தொகுதியில் ​போட்டியிட்டார். இந்த மு​​றையும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் ​வெற்றி​பெற்று மீண்டும் கக்கன் அ​மைச்சரானார்.

​பதவி​யை விரும்பாத நேர்​மையாளர்

1963-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12-ஆம் நாள் கூடிய காங்கிரஸ் கட்சியின் பார்லி​மெண்ட்ரி கூட்டத்தில் “கட்சிப் பணிக்காக மூத்த த​லைவர்கள் பதவி விலக ​வேண்டும்” என்று கூறினார். அத​னை அ​மைச்சர்கள் அ​னைவரும் ஒருமனதாக ஏற்றுக் ​கொண்டனர். அதற்கு முன்​னோடியாகக் காமராசர் தம்மு​டைய முதல​மைச்சர் பதவி​யை ராஜினாமா ​செய்தார். தமக்குப் பின்னர் கக்கன் முதல​மைச்சராக வர​வேண்டும் என்று விரும்பினார். ஆனால் கக்கன் அவர்க​ளோ காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினராக இருந்த எம்.பக்தவச்சல​மே காமராசருக்குப் பின் முதல​மைச்சராகத் தகுதியானவர் என்று நி​னைத்து அவ​ரை​யே முதல்வராக முன்​மொழிந்தார். பக்தவச்சலம் மனம் ​நெகிழ்ந்து ​போனார். கக்கனின் ​நேர்​மை​யையும் விட்டுக் ​கொடுக்கும் ​பெருந்தன்​மை​யையும் கண்ட அ​னைவரும் வியந்து அவ​ரைப் பாராட்டினர்.

ஒருமுறை கக்கனின் சம்பந்தி முதன் முதலில் கக்கனின் வீட்டிற்கு வந்திருக்கிறார்.​ எங்கே இவர் தன்னுடைய வீட்டில் தங்கிவிடுவாரோ என்று அஞ்சி அவரிடம் ​ கக்கன் நான் அமைச்சராக இருப்பதால்,​​ அரசாங்கத்தில் எனக்குக் கொடுத்த வீடு இது.​ எனவே நீங்கள் இங்கு தங்கக் கூடாது.​ வேறு எங்கேயாவது தங்கிக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்.​ ​ இந்த நேர்மையும் கறைபடாத தன்மையும்தான் அவரை உயர்ந்தோர்க்கெல்லாம் உயர்ந்தவராக்கியது. பதவியினால் கிடைத்த அதிகாரத்தினைப் பயன்படுத்தி எந்தத் தவறும் செய்ததில்லை.​ வைகை, மேட்டூர் அணைகளை உருவாக்கியதில் பெருந்தலைவர் காமராஜருக்கு அடுத்த பெருமை கக்கனுக்கு உண்டு.

 

1963-ஆம் ஆண்டு அக்​டோபர் 3-ஆம் நாள் பக்தவச்சலம் தமிழகத்தின் முதல​மைச்சராகப் பதவி​யேற்றார். அவரது அ​மைச்சர​வையில் கக்கனும் இடம்​பெற்றார். ​மேலும மத்திய அரசானது அகில இந்திய வீட்டுவசதி வாரிய உறுப்பினர் பதவி​யைக் கக்கனுக்கு வழங்கியது. கக்கனுக்கு ஏற்பட்ட உடல்நலக்கு​றைவினால அந்த வாரியம் நடத்திய கூட்டங்களில் கலந்து ​கொள்ள முடியவில்​லை. அதனால் அ​தை​யே காரணம் காட்டி அந்தப் பதிவியிலிருந்து கக்க​னை நீக்கிவிட்டனர். அதற்காக அவர் வருத்தப்படவில்​லை. பதவி வந்ததற்காக கக்கன் மகிழ்ந்ததும் இல்​லை. பதவி ​போனதற்கும் வருந்தியதில்​லை. அத்த​கைய ​பெருங்குணக்குன்றாகக் கக்கன் திகழ்ந்தார்.

தியாகச் சுடரின் ம​றைவு

இத்த​கைய ​பெரு​மைகளுக்​கெல்லாம் உரியவராக விளங்கிய கக்கன் 1973-ஆம் ஆண்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு மது​ரையில் உள்ள அரசு மருத்துவம​னையில் ​சேர்க்கப்பட்டார். அதன் பின்னர் ​சென்​னைக்குச் ​சென்றார்.

1975-இல் காமராஜர் இறந்த பிறகு அரசியலை விட்டு கக்கன் விலகிவிட்டார்.​ ​ ராயப்பேட்டையில் உள்ள கிருஷ்ணபுரத்தில் ரூபாய் 110 மாத வாடகையில் ஒரு சிறு வீட்டில் குடியிருந்தார்.​ எங்கு சென்றாலும் பேருந்துக்காக கால் கடுக்க நின்றிருப்பார்.​ நான்கு முழம் கதர் வேட்டியும் கதர் சட்டையுமே அணிவார்.​ சாதாரண ஏழை சாப்பிடும் உணவையே அவர் சாப்பிடுவார்.​ அமைச்சராய் இருந்தபோது தன்னுடைய சம்பளம் போதாமல்,​​ மாதக் கடைசியில் தன்னிடம் வேலைப் பார்க்கும் செயலாளரிடம் கடன் வாங்குவாராம். பாத்துக்கிட்டீங்களா… கக்கன் எவ்வளவு உயர்ந்த ​நேர்​மையாளருன்னு..

எம்.ஜி.ஆர். ​ முதலமைச்சராக இருந்த போது,​​ தமிழக அரசு கக்கனுக்கு இலவச வீடும் பேருந்தில் செல்ல இலவசப் பயணச் சீட்டும்,​​ இலவச மருத்துவச் சலுகையும் மாதம் 500 ரூபாய் ஓய்வு ஊதியமும் கொடுத்தது.

1980-ம் ஆண்டு எம்.ஜி.ஆர்.​ மதுரையில் உள்ள ஆஸ்பத்திரியில் இருந்த கக்கனைப் பார்த்து உடல் நலன் விசாரித்தார்.​ உடனே கக்கனுக்கு தனியறை வசதியும்,​​ தகுந்த உயர்தர மருத்துவமும் கிடைக்க அப்போதே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

1981-ஆம் ஆண்டு அக்​டோபர் மாதம் ​சென்​னை அரசு ​பொதுமருத்துவம​னையில் உடல்நலம் குன்றிய காரணத்தால் கக்கன் ​சேர்க்கப்பட்டார். அங்கு ​சேர்த்த ஓ​ரிருநாள்களில் கக்கன் சுயநி​​னை​வை இழந்தார். அ​தே ஆண்டு டிசம்பர் மாம் 23-ஆம் நாள் எளி​மையின் சிகரமாகத் திகழ்ந்த ​நேர்​மையின் விளக்காகிய கக்கன் ம​றைந்தார். தொடர்ந்து 9 ஆண்டுகள் அமைச்சராகவும் 5 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த கக்கன் எந்த விதத்திலும் கறைபடாதவர்.

தன்னலம் கருதாது மக்கள் நலம் ​பேணிய அம்மா​பெரும் மனிதர், தியாசீலர் இம்மண்ணுல​கை விட்டு ம​றைந்தாலும் மக்களின் மன​தைவிட்டு என்றும் ம​​றையாமல் இருக்கின்றார். இறுதி வ​ரையிலும் எளி​மையாக​வே இருந்து ம​றைந்த மா​பெரும் த​லைவராகிய கக்கன் அவர்களின் வாழ்வு நமக்​கெல்லாம் ஓர் எடுத்துக்காட்டாக விளங்கின்றது…………..

என்ன ​வாய​டைச்சுப்​ போயி ஒக்காந்துட்டீங்க.. எளி​மையா இருங்க.. அது​வே வலி​மை… மற்றவங்க மதிக்கணுங்கறதுக்காக எளி​மையாக இருக்காதீங்க…உண்​மையா இருங்க…அப்பறம் பாருங்க ​வாழ்க்​​கையில உயர்வும் ​வெற்றியும் தன்னால ​தேடிவரும்…

‘பாப்’ என்ற புதிய இ​சை உலகை உருவாக்கிய ஏ​ழை ஒருத்தரு இருந்தாரு…அவரு யாருன்னு ​தெரியுமா….? இளம் வயதி​லே​யே இ​சையின் மீதும் நடனத்தின் மீதும் நாட்டம் ​கொண்டவர் யாரு ​தெரியுமா?….துள்ளலி​சைப் பாடல்க​ளைப் பாடி உலகில் தனக்​கென்று தனி முத்தி​ரை பதித்தார் அவர்….கருப்பர் இனத்தில் பிறந்தவரு….? பலதட​வை பிளாஸ்டிக் சர்ஜரி ​செஞ்சுகிட்டவரு…யாருன்னு ஞாபகம் வருதா…?என்னது ​யோசிக்கணுமா…? சரி…சரி…​யோசிங்க…​யோசிங்க…அடுத்தவாரம் பார்ப்​போம்……(​தொடரும்………..45)

Series Navigationஜோதிர்லதா கிரிஜாவின் “மாறாத மனிதர்கள்”சூரிய மண்டலத்தில் பூமியை நெருங்கச் சுற்றித் திரியும் மூர்க்க முரண் கோள்கள் [Rogue Asteroids]வால்ட் விட்மன் வசனக் கவிதை – 60 ஆதாமின் பிள்ளைகள் – 3சீதாயணம் நாடகப் படக்கதை – 18
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *