நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் -9

This entry is part 11 of 24 in the series 7 ஜூன் 2015

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி

அத்தியாயம் -9

யாழினி தேவிகாவின் அறையினுள் நுழைந்து, வரிசையாய் அடுக்கப்பட்டிருந்த புத்தகங்களை பார்வையிட்டுக்கொண்டே வந்தாள். புத்தகங்களின் மத்தியில் இடைச்சொருகலாய் சொருகப்பட்டிருந்தது அந்த நாட்குறிப்பு. அது அவள் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் அதன் மீது பதப்படுத்தப்பட்ட வெண் சாமந்தி மலர் ஒட்டப்பட்டிருந்தது. அதன் நிறம் மாறாமல் புதியதாய் அன்று மலரந்த மலரைப் போலவே இருந்தது.

மெல்ல அந்த மலரை வருடினாள் யாழினி! அதனுள் இருந்து மெல்லிய இசையோடு நீஜெயிக்கப் பிறந்தவள் என்ற வாசகம் அழுத்தமாய் வந்தது. அந்த குரலின் இனிமை பெரிதும் யாழினியை கவர்ந்தது.

முதல்பக்கதில் தேவகியாகிய நான் என்று கொட்டை எழுத்துக்களில் வெளீர் காகிதத்தில் பளீர் வான நீலக்கலரில் எழுதப்பட்டிருந்தது. அடுத்தப் பக்கத்தில் தேவகியின்ஐ ஏ எஸ் கனவு குறித்த முதல் பிள்ளையார் சுழி எழுத்துக்கள். ஒரு மெயில் ஐடி, அதற்குரிய பாஸ்வேர்ட், அடுத்த பக்கத்தில் ஒரு இளைஞனின் புகைப்படம், ஐ லவ்என்று பெயர் ஏதும் எழுதாமல் ஒரு நீண்ட கோடு வரையப்பட்டிருந்தது.

அந்த இளைஞன் அழகாய் இருந்தான். மெல்லரும்பு மீசை மிளிர்ந்திருந்த உதடுகள் மென்மையின் சிவப்பைத் தாங்கித் தரித்திருந்தது. அவன் பெயர் என்னவாகஇருக்கும், ஏன் நீண்ட கோடு போட்டிருக்கிறாள். இதே இடத்தில் தான் இறந்தாள் என்று சொன்னான் டேவிட். அவள் இறப்பைப் பற்றி அறிய விரும்பினாலும் மேலும் அந்தக் குடும்பத்தை துயரத்தில் தள்ள விருப்பமில்லை. டேவிட்டின் பெற்றோரும் தேவகியின் பின் ஒவ்வொருவராக இறந்தது தேவகியை வெறிப்பிடித்த பேய் அளவிற்குசித்தரித்து வைத்திருந்தது அந்த கிராமத்தில்.

அடுத்த பக்கத்தில் தேவகியின் விவசாயக் கனவும் இயற்கை மீது அவளுக்கிருந்த காதலும் வெளிப்பட்டிருந்தது.

இயற்கைச் சார்ந்த விளைச்சலை பெருக்குவேன். பணத்தின் பின் ஓடும் இந்த மக்களை மாற்றி வாழ்க்கை என்ன வென்று புரியவைக்க உண்டானதை செய்வேன் என்று எழுதியிருந்தாள்.

மற்றவர்களை மாற்ற நாம் யார் அவர்கள் பிறப்பிற்கும் அவர்களின் வாழ்விற்கும் அவர்களே உத்தரவாதம், திடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது என்ற பாடல் தான் நினைவிற்கு வந்தது.

மெல்ல அந்த பாடலை முணுமுணுக்கவும் செய்தாள்.

திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று பாடிய படி அடுத்த பக்கத்தைத் திருப்பினாள்.

திரும்ப திரும்ப சொல்லும் விடயம் எதிராளியின் மனதில் ஆழப்பதியும் என்றிருந்தது. அந்த பக்கத்தில் ஒரு நிமிடம் குழம்பி போனாள் யாழினி. நம் மனதிற்கான கேள்வியின் பதில் இந்த நாட்குறிப்பில் தோன்றுகிறதோ என்று தோன்றியது.

மீண்டும் நாட்குறிப்பைப் புரட்ட முந்தையப் பக்கத்தின் தொடர்ச்சியே என்பதை உணர்ந்தவள் தானும் இந்த அமானுஷ்யத்தை நம்புவதை எண்ணி வியந்துக்கொண்டாள்.

மனம் அமானுஷ்யத்தை இயல்பாய் நம்பிவிடுகிறதே!, கடவுள் பேய் பிசாசு என்பதெல்லாம் மனதின் பாவனைகளே என்று தோன்றியது. பாரதி ‘சக்தி சக்தி’ என்று உருகியதும், பெரியாரின் பகுத்தறிவும் சேர்ந்த கலவையாய் நின்றாள் யாழினி. சில நேரம் நெகிழ்ந்துவிடுவதும் பல நேரம் இரும்பாகி உணர்வற்றுவிடுவதுமான குண இயல்புகள் நடந்தேறிய வாழ்வனுபவங்களில் உருவாகியிருந்தது.

டேவிட் கதவோரம் வந்து லேசாய் இருமினான். உட்கார்ந்திருந்த நிலையில் இருந்து சற்று சீராகிக்கொண்டாள் யாழினி.

வாங்க என்றாள்.

என்னம்மா தேவிகா அறையிலேயே குடிப்புகுந்து விட்டாயோ என்றான்.

அப்படி இல்லேண்ணா, தூசும் தும்புமாய் இருக்கே சுத்தப்படுத்தலாம்ன்னு வந்தேன் என்றாள்.

டெய்லி கீதா பெருக்குவாங்கம்மா என்றான் டேவிட்

அதில்லேண்ணா புத்தகத்தின் மீது தூசி படர்ந்திருக்கிறதே அதைச் சொன்னேன்

புத்தகம் மீது தூசு படிவது வாடிக்கைத்தானே அம்மா என்றான்

நாட்குறிப்பு பற்றி அவனோடு பகிர மனம் ஒப்பவில்லை. அவன் தங்கையுடைய தாக இருந்தாலும், அந்த பெண்ணின் மனதிற்குள் அரும்பிய காதலை ஒருசிநேகிதியிடம் பகிர்வாள், தோழனிடம் கூட பகிரலாம். சகோதரனிடம் பகிர்வாளா? சந்தேகத்தின்ரேகைகள் முகத்தில் பிரதிபலித்தன போலும் என்னவென்றவனுக்கு ஏது மில்லை என தலையசைப்பில் தெரிவித்தாள்.

ஏன்ம்மா இந்த கனி கேட்டதைப் போல ஏதோ பொய் சொல்லிவிட்டாயே அவர்கள் மத்தில கேட்க வேணாமின்னு தோனுச்சு என்றான்

பேய் பிசாசு எல்லாம் மனுஷங்க அவங்க மனசுல தானா உருவாக்கிக்கற பயம் தானே அண்ணா அதற்கு மாற்றாதான் அந்த பொய்யை சொன்னேன்.

நானும் அப்படித்தான் நெனச்சேன் யாழினி என்றபடி வந்து சேர்ந்தாள் பாட்டி.

அந்த இரண்டாவது ரோவில் இருக்கும் புத்தகங்கள் அத்தனையும் நான் எழுதியவை என்றதும் இரண்டாவது வரிசைகளில் இருந்த புத்தகங்களில் இருந்து ஒன்றை எடுத்தாள்

தேடித் தந்த நிஜம் என்ற தலைப்பின் கீழ் எழுத்தாளர் ராஜம் என்றிருந்தது. ராஜம் அழகாய் இருந்தாள். ஆனந்த விகடன், குமுதம் போன்ற வார இதழ்களில் அவளின்தொடர்கதை வெளியாவதுண்டு.

புகழும், போற்றுதலும் ஒரு காலத்தில் தான் போலும் அக்காலத்திற்குப் பிறகு பழம் பெருமை பேசும் தனிமை வந்துவிடும் என்றெண்ணினாள் யாழினி. வாழ்தலின்போது நம்முடைய நடக்கையை வைத்தே நம் வாழ்க்கையும் பிறரால் நிர்ணயிக்கப்படுகிறது.

என்காலத்தில் தேவகன் என்றொரு எழுத்தாளர் இருந்தார் யாழினி. அவர்தான் என்னை உருவாக்க அரும்பாடு பட்டவர். என்ன அவர் நடத்திய முதல்பாராட்டுவிழாவில் நடந்த குளறுபடியில் அதன் பிறகு அவருக்கும் எனக்கும் தொடர்பே இல்லாமல் போய்டுச்சு அவர் ரொம்ப வற்புறுத்தி எழுதவச்சது தான் தேடி தந்த நிஜம்.

யாழினி ஆதரவாய் ராஜம் அவர்களின் கையை பிடித்துக்கொண்டாள். பார்வையில் சாதாரணமாய் தோன்றும் அவளின் கடந்த வாழ்க்கை மகத்தானது அல்லவா ராஜமின் கதைகளை யாழினியும் படித்திருக்கிறாள்.

உன்ன பத்தி டேவிட் சொன்னார் யாழினி என்று தன் கொள்ளுப் பெயரனுக்கும் மரியாதை தந்ததை ஒரு கணம் மனதில் இருத்திக்கொண்டாள்.

அனுபவங்கள் நம்மை புடமிடுவதற்காக வருபவை, பாதகங்களை சாதகங்களாக்க முயற்சி செய்ய வேண்டும் யாழினி என்றாள் ராஜம்.

தான் கர்ப்பமாய் இருப்பதையும் சொல்லியிருக்கக் கூடும் என்றெண்ணிக்கொண்டாள். ஒரு நிமிடம் வந்த நெகிழ்ச்சி கண்களில் ஈரத்தை உற்பவித்தது.

நீ அழனுங்கறதுக்காக சொல்லலம்மா, தேவகி ஐஏஎஸ் ஆகனும்ன்னு நெனச்சா, அந்த விபத்து மட்டும் நடக்காம இருந்திருந்தா அவ நிச்சயம் அவ கனவுகளை நிறைவு செய்திருப்பா என்றாள் ராஜம்

அது அவள் கனவு! அது அவள் வாழ்க்கை மற்றவருடைய வாழ்க்கையை கையில் எடுத்துக்கொண்டு நீ இதைச் செய், அதைச் செய் என்று நிர்பந்திப்பது எந்த விதத்தில் நியாயமாகும். வடிவமைக்கிறேன் பேர்வழி என்று மனவடிவை இழக்கவைத்துவிடுகிறார்கள். அவள் மனதை படம் பிடித்ததை போல இல்லைம்மா இயற்கையே மனிதர்களை வடிவமைக்கும் பெட்டகம் அதுவே சூழ்நிலையை உருவாக்கி, உறவுகள்கொண்டு நிர்பந்திக்கும் என்றாள் ராஜம்.

மனதிற்குள் ஓடுவதை இவள் படித்துவிடுகிறாள். இவளிருக்கும் போது சிந்திப்பதையும் நிறுத்திக்கொள்ள வேணும் போல.

விபத்து நடந்து தேவிகா பிழைக்க மாட்டான்னு தெரிஞ்சதுமே அவ கேட்டது என் அறைக்கு என்னைக் கூட்டிட்டு போய்டுங்கன்னுதான். அவ இறந்தது இந்த அறையில்இந்த படுக்கையில தான். அவள் பெரும்பாலும் இந்த அறையை விட்டு வெளியேறியதே இல்லை. படிப்பு எழுத்து சமூகக் கட்டமைப்பு என்ற தினுசிலேயே அவளுடைய சிந்தனை இருக்கும்.

சரிம்மா நீ ரெஸ்ட் எடுத்துக்க! இந்த ரூம்ல இருக்க தயக்கமா இருந்தா என் அறைக்கு வந்துடு என்றுவிட்டு எழுந்து தன் அறை நோக்கி நடந்தாள்.

அது வரையிலும் அமைதியாய் இருந்த டேவிட்டும் என்ன யாழினி சரிதானே என்றான்.

இதை சுத்தப்படுத்திவிட்டு வந்துடறேன் என்றவளுக்கு சம்மதியாய் தலையசைத்து வெளியேறினான்.

யாழினி நாட்குறிப்பின் கடைசி பக்கத்தைத் திருப்பினாள்.

அந்த கடிதம் இப்படித் துவங்கியிருந்தது.

அன்புள்ள சிநேகிதிக்கு!

உள்ளத்தின் சிநேக மதகுகள் திறந்து சிநேகத்தின் கடலின் நீந்துவதைப் போல் உணர்ச்சிப் பெருக்கால் நிரம்பினாள் யாழினி.

அன்புள்ள சிநேகிதிக்கு!

நீ இக்கடிதத்தைப் படிக்கும் பொழுது, இந்த உலகம் என்னை மறந்திருக்கும். என் குடும்பம் என்னை எண்ணி கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கும்என்றெண்ணுகிறேன்.

என் கனவுகள் அலாதியானது. என் காதலும். இரண்டாம் பக்கத்தில் பார்த்த நிரஞ்சனை நான் நேசித்தேன். ஆனால் நிரஞ்சன் எதிர்பாராத விதமாய் தன் உறவில் ஒரு பெண்ணை மணந்துக்கொண்டான். நிரஞ்சனுக்கு என்னிடத்தில் சொல்லத் துணிவில்லை. காதலிக்கும் போது காதலை அள்ளித் தெளிக்கும் ஆண்கள் வாழ்க்கை நெடுகிலும்கைப்பற்றத் துணிவதில்லை. உறவு என்ற வட்டத்தில் அவனும் கோழையானது வேதனைத்தான். ஆனாலும் என்னால் அவன் மீது வெறுப்பையோ விரோதத்தையோகாண்பிக்க முடியவில்லை. அவன் திருமணத்திற்கு முன்பே நானும் உடலாலும் மனதாலும் இணைந்தோம் அதன் விளைவாய் வந்தவன் தான் விநோதன். அவன் பிறந்தகணமே அவனை சொர்ப்பனந்தலில் உள்ள ‘ஹார்ட் பீட்’ டிரஸ்டின் அறங்காவலரின் பொறுப்பில் ஒப்படைத்தேன். அதற்கு நர்ஸ் ஸ்டெல்லா பேருதவி புரிந்தாள். அதன்பிறகு நிரஞ்சனை திருப்பத்தூர் போகும் வழியில் அவன் மனைவியோடு அன்னியோன்னியமாய் பார்த்த போது தான் இந்த விபத்து நேர்ந்தது.

தான் கணவனாய் மானசீகமாய் வாழ்ந்த ஒருவனை வேறொரு பெண்ணோடு பார்க்க நேர்ந்தது எத்தனை கொடுமை.

மரணம் குறிக்கப்பட்ட பிறகு நடந்து முடிந்ததைப் பற்றியும் வருத்தப்பட ஏதுமில்லை. நடக்கப்போவதைப் பற்றிய கவலையும் இல்லை. ஆனால் என் மகன் விநோதனைத்தாயின் அரவணைப்பின்றி விட்டு செல்கிறேன் என்ற கவலையைத் தவிர. என் குடும்பத்திற்கும் இதை தெரிவிக்க இயலவில்லை. ஒருவேளை இந்த கடிதத்தை நீ படிக்கநேர்ந்தால் அவனை பொறுப்புள்ளவனாய் துணிவை நடக்கையில் காண்பிக்கக் கூடியவனாய் உருவாக்கு.

என் ஐஏஎஸ் கனவையும் உனக்காக விட்டுச் செல்கிறேன். நீ ஒரு கலெக்டராவாய் என்றொரு நம்பிக்கையுடன்

தேவிகா

படித்து முடித்த போது இதை முன்பு யாரும் படிக்கவில்லையோ என்று எண்ணினாள். அந்த நாட்குறிப்பு புத்தகங்களின் இடையில் மறைவாய் வைக்கப்பட்டிருந்தது.இந்த அறைக்கு யாரும் வந்திருக்கவும் இல்லை. தேவிகாவை பேயாக்கி வைத்ததில் இந்த அறையை புறக்கணித்திருப்பது தெரிந்தது. ஒரு குறும்படம் பார்த்தநெகிழ்ச்சியோடு வெளியில் வந்தாள் யாழினி. ஒரு தாயாய், ஒரு மனைவியாய், தேவிகாவின் உணர்வு அவளுக்குப் புரிந்தது. ஒரு தாயால் தான் மணரத்திற்கு பின்னும்தன் பிள்ளையை பாதுகாக்கும் பொறுப்புணர்வு இருக்கும் போலும்.

[தொடரும்]

Series Navigationகண்ணப்ப நாயனார்அல்பம்
author

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *