அற்புதநாதர் ஆலயத்தைப் பார்த்ததும் எனக்குப் புத்துயிர் பிறந்தது. அது கிராமத்தின் சிற்றாலயமாக இருந்தாலும் அங்கே பல அற்புதங்கள் நடந்துள்ளது எனக்கு ஞாபகம் வருவதுண்டு.
அம்மாவுக்கு நல்ல பாம்பு கடித்து விஷம் ஏறி நினைவிழந்தபோது சிறுவனான அண்ணன் அங்கு மெழுவர்த்திகளுடன் ஓடி ஜெபம் செய்தபோது ஊரே வியக்கும்வண்ணம் அற்புதமாக உயிர் பிழைத்துள்ளார்! ?
இஸ்ரவேல் உபதேசியார் ஜெபம் செய்து எண்ணெய் தருவார். அதைப் பயன்படுத்திய பல நோயாளிகள் குணமாகி, அந்த செய்தி சுற்று வட்டார கிராமங்களுக்குப் பரவியபின்பு கூட்டம் கூட்டமாக அங்கு வந்து ” ஜெப எண்ணெய் ” வாங்கிச் சென்றுள்ளனர்.
( இன்றுகூட அதுபோல் வேளாங்கண்ணி மாதா கோவிலில் ” புனித எண்ணெய் ” விற்கப்படுகிறது.) இவையெல்லாம் மருத்துவ ஞானத்துக்கு அப்பாற்பட்டவை. இதையே நாம் விசுவாசம் என்கிறோம்.
அப்போதெல்லாம் ஊரில் மின்சார வசதி கிடையாது. குடிநீர் வசதியும் இல்லை. குளிப்பதும் குடிப்பதும் ஆற்று நீரில்தான். இத்தகைய அடிப்படை வசதிகள் இல்லாவிட்டாலும் கிராம வாழ்க்கை இன்பமாகவே இயற்கையுடன் இயைந்து வாழ்வது போன்றிருந்தது.
தாத்தாவுக்கு அதிக வயதாகி விட்டது. திண்ணையில்தான் கயிறு கட்டிலில் அமர்ந்திருந்தார். அவர் அருகில் பாட்டி தரையில் பாயில் அமர்ந்திருந்தார். பாட்டியை நாங்கள் ” சோத்தம்மா ” என்று அழைப்போம். காரணம் எப்போதும் உணவை அவர்தான் பரிமாறுவது வழக்கம். அம்மாவுக்கு சமைக்கும் பொறுப்புதான்.உணவு உண்ணும்போது அனைவரும் தரையில் பாயில் வரிசையாக அமர்வோம். அப்போது சோத்தம்மா உணவு பரிமாறுவார். அனால் இப்போது அவருக்கு வயதாகிவிட்டது. அவருக்கு அம்மா பரிமாறும் நிலை வந்துவிட்டது.
என்னைப் பார்த்து இருவரும் மகிழ்ந்தனர். இருவருக்கும் பார்வை மங்கிய நிலைதான். ஆனாலும் மூக்குக் கண்ணாடி அணிந்ததில்லை. அறுவைச் சிகிச்சையும் செய்துகொண்டதில்லை. கணகளில் புரை வந்ததில்லை. தாத்தாவுக்கு வயது தொண்ணூற்று ஐந்து இருக்கும். இன்னும் திடகாத்திரமாகத்தான் உள்ளார்.
அம்மாவைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.மகன் மருத்துவம் பயில்வது அவருக்குப் பூரிப்பு! தங்கைகள இருவரும் ஓடி வந்து என் கரத்தைப் பற்றிக்கொண்டனர். அந்த குடும்ப பாசத்தை என்னென்று கூறுவது?
லேசாக இருட்டிவிட்டது. எங்கிருந்தோ பால்பிள்ளை வந்துவிட்டான்.
” அண்ணே வந்துட்டீங்களா? ” என்று அன்பைக் காட்டினான்.
” ஆமாம். இப்போதான் வந்தேன். தரங்கம்பாடியில் அண்ணன் வீட்டில் இருந்தேன். ஆற்றுக்கு குளிக்க போகலாமா? ” அவனிடம் கேட்டேன். மூன்று கிலோமீட்டர் நடந்து வந்தது வியர்த்துவிட்டது. குளிர்ந்த ஆற்று நீரில் மூழ்கி எழுந்தால் அசதி தீரும். நன்றாக தூக்கமும் வரும்.
- வேலி – ஒரு தமிழ் நாடகம்
- செம்மொழி கன்னடத்தின் ஹல்மிடி கல்வெட்டு
- இந்தியா புவியைச் சுற்றி ஆராயும் விண்ணோக்கி ஆய்வகத்தை முதன்முதல் அண்டவெளிக்கு ஏவியுள்ளது
- நகுலன் கவிதைகள்
- மழைக்குப்பின் பூக்கும் சித்திரம்
- மருத்துவக் கட்டுரை பெண்களுக்கு அடி வயிறு வலி
- தினம் என் பயணங்கள் -46
- ஹரன் பிரசன்னாவின் “சாதேவி” – நம்மிடையே வாழும் கன்னட தமிழ் உலகம்
- அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் தமிழ் எழுத்தாளர் விழா – 2015
- திரிஷா இல்லன்னா நயன்தாரா – திரைப்பட விமர்சனம்
- மிதிலாவிலாஸ்-14
- மிதிலாவிலாஸ்-15
- மிதிலாவிலாஸ்-16
- அவன் முகநூலில் இல்லை
- மக்கள் கவிஞர் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரனாரின் நினைவுநாள் பாட்டரங்கம் – 10 அக்டோபர் 2015
- பொன்னியின் செல்வன் படக்கதை – 7
- பெரியபுராணத்தில் – மெய்பொருள் நாயனாரின் கருணையுள்ளம்
- திரும்பிப்பார்க்கின்றேன் – கார்த்திகா கணேசர்
- அமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலக சிறுகதைப் போட்டி 2015
- தொடுவானம் 88. வீரநாராயண ஏரி
- அவன், அவள். அது…! -4
- சுந்தரி காண்டம் 8. மென்பொருள் சுந்தரி பத்மலோசனி
- ஊற்றமுடையாய்