நீண்ட விடுமுறையை நிதானமாகக் கழிக்க முடிவு செய்தேன். தேர்வுக்காக இரவு பகலாக பாடநூல்களுடன் கழித்துவிட்டேன். இனி மன மகிழ்ச்சிக்காக நல்ல துணையுடன் கழிப்பது உகந்தது.
ஒரு சூட் கேஸ் நிறைய துணிமணிகளை அடுக்கிக்கொண்டேன், வட மாநிலங்களுக்குச் செல்பவர்கள் சென்னை சென்று ” சென்ட்ரல் ஸ்டேஷனில் ” இரயில் ஏற வேண்டும். நானும் அவர்களுடன் சேர்ந்துகொண்டு சென்னை புறப்பட்டுவிட்டேன். இந்த முறை காட்பாடியிலிருந்து புகைவண்டி மூலம் சென்றோம். அது பாதை வழி. அரக்கோணம் வழியாக சென்னை சென்றது. அந்த பிரயாணம் முழுவதும் ஆட்டமும் பாட்டும்தான். ஒரு ” கேரியேஜ் ” முழுக்க நாங்கள்தான். இரண்டு மணி நேர பிரயாணம்.
சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனிலிருந்து பூங்கா மின்சார இரயில் நிலையம் சென்றேன். அங்கிருந்து முக்கால் மணி நேரத்தில் தாம்பரம் வந்துவிட்டேன். நேராக அத்தை வீடு சென்றேன்.
” இன்னும் நான்கு ஆண்டுகளில் படித்து முடித்துவிடுவீர்களா? ” நேசமணி ஆசையோடு கேட்டாள்.
” ஆமாம். இன்னும் நான்கு ஆண்டுகள்தான். அதன்பின்பு ஒரு வருடம் ஹவுஸ் சர்ஜனாக பயிற்சி பெறவேண்டும். ” என்றேன்.
” அதன்பின் சிங்கப்பூர் போய்விடுவீர்களா அத்தான்? ” கவலையுடன் கேட்டாள்.
நான் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தடுமாறினேன்.
” அது பற்றி இப்போ உனக்கு என்ன கவலை. இன்னும் ஐந்து வருடம் உள்ளதே. அதற்குள் போய்விடுவேனோ என்ற கவலையா உனக்கு? ” இதற்கு அவளால் பதில் கூற முடியவில்லை.
அவள் கள்ளங்கபடு இல்லாமல் திறந்த மனத்துடன்தான் என்னுடன் பேசிக்கொண்டிருந்தாள். அவளுடைய மனம் கோணாமல் நடந்துகொள்ள முடிவு செய்திருந்தேன்.
அன்று இரவு அடுப்படியில் கோழிக்குழம்பு மண்சட்டியில் கொதித்துக்கொண்டு கமகமத்தது. நேசமணி தான் உணவு பரிமாறினாள். அவளிடம் பேசியபடியே சுவைத்து உண்டேன்.
காலையில் பசியாறியபின் மெட்ராஸ் செல்வதாகக் கூறி புறப்பட்டேன். வாடகைச் சைக்கிள் எடுத்துக்கொண்டு இரயில்வே காலனி நோக்கி மிதித்தேன். வெரோனிக்காவின் வீட்டுமுன் நிறுத்தினேன். அவள் வீட்டு வாசலில் பூஞ்செடிகளுக்கு நீர் ஊற்றிக்கொண்டிருந்தாள். என்னைக் கண்டதும் முகமலர்ந்தாள்.
” வந்துவிட்டீர்களா? எப்போது வந்தீர்கள்? ” புன்னகை பூத்து வரவேற்றாள். ஓடிவந்து கையைப் பற்றிகொண்டாள். நான் வருவதாக அவளுக்கு கடிதம் போடவில்லை. அதற்கு நேரம் கிட்டவில்லை.
அவளுடைய அப்பாவும் அம்மாவும் அன்புடன் வரவேற்றனர். என்னுடைய தேர்வு பற்றி விசாரித்தனர். வெரோனிக்கா பி.எஸ்.சி. இறுதியாண்டு செல்லப்போவதாகக் கூறினர். அதன்பின் தொடர்ந்து எம்.எஸ்.சி. யும் படிக்கவைக்கலாம் என்றனர்.
” மெட்ராஸ் போவோமா? ” சூடாக காப்பி கொண்டுவந்து தந்துவிட்டு கேட்டாள் வெரோனிக்கா.
” நான் கிளம்பும்வரை காத்திருக்கிறீர்களா? ” கையில் அன்றைய ” இந்தியன் எக்ஸ்பிரஸ் ” நாளேட்டைத் தந்துவிட்டு குளியல் அறைக்குள் ஓடினாள்.
” நீ அவசரப்படாமல் குளித்துவிட்டு கிளம்பு. நான் கல்லூரிக்குள் ஒரு சுற்று சுற்றிவிட்டு பத்து மணிக்கு வருகிறேன். ” நான் வெளியேறி மீண்டும் சைக்கிளில் அமர்ந்துகொண்டேன்.
எனககு ஒரு பழக்கம் உள்ளது. தாம்பரம் வரும்போதெல்லாம் கல்லூரி வளாகம் சென்று விடுதியைப் பார்த்துவிட்டு வருவேன். அங்கு தங்கியிருக்கும் மாணவர்கள் புதியவர்கள்தான். அனால் பெரும்பாலான ஊழியர்கள் பழையவர்கள்தான். ஒரு வருடம் பழகியவர்கள் அல்லவா? வரும்போதெல்லாம் அவர்களுக்கு செலவுக்கு பணமும் தருவேன்.
இந்த முறை நாங்கள் மெட்ராஸ் சென்றபோது பிரிவு எங்களுக்குப் பழகிவிட்டதுபோலும். நீண்ட நாட்கள் பார்க்கவில்லையே என்ற ஏக்கம் அவளிடமும் இல்லை. என்னிடமும் இல்லை. வேறு வழியில்லை. கட்டாயம் படித்துத்தானே ஆகவேண்டும்? இதில் பிரிந்துதானே இருக்கவேண்டும். கவலைப் பட்டு என்ன கிடைக்கப்போகிறது என்ற மனநிலையோ எங்களுக்கு? அல்லது மனப்பக்குவம் அடைந்துவிட்டோமா?
புத்தகக் கடையில் ஆசை தீர மதிய உணவு நேரம் வரை கழித்தோம். குளிர் சாதன வசதியிருந்ததால் அந்த புத்தகக் ” கடலில் ” நேரம் போனதே தெரியவில்லை. தமிழில் சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள், கட்டுரை நூல்கள், கவிதைத் தொகுப்புகள், சமூகம், அரசியல், அறிவியல், பொருளாதாரம், சரித்திரம், வாழ்க்கை வரலாறு, தன்முனைப்பு, சிறுவர் இலக்கியம் என வரிசை வரிசையாக நூல்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. ஒரு பகுதியில் உலகின் பிரசித்திப்பெற்ற ஆங்கில நூல்களும் காணப்பட்டன. நூல்கள் படிக்கும் ஆர்வமுள்ளோருக்கு அது உண்மையில் கண்கொள்ளாக் காட்சிதான்! எதை வாங்குவது எதை விடுவது என்பதில் சிரமம் உண்டானது. வெரோனிக்காவும் சில நூல்களை எடுத்துக்கொண்டாள். நூல்களைப் பார்த்துக்கொண்டே நடக்கும்போது பிடித்ததை கையில் அப்போதே எடுத்துக்கொண்டு முன்னேறுவேன். அதுபோன்று செல்கையில் கைகளில் பத்து பதினைந்து நூல்கள் சேர்ந்துவிடும். அவற்றை ஓர் இடத்தில் வைத்துவிட்டு மீண்டும் தொடர்ந்து நடப்பேன். அதுபோன்று சேகரித்த எல்லா நூல்களையும் இன்னொரு சுற்று ஆராய்வேன்.அவற்றில் சிலவற்றை அடுத்த முறை வாங்கலாம் என்று விட்டுவிடுவேன். அவ்வாறு தேர்ந்தெடுத்த நூல்களை வாங்கியபின் நேராக மவுண்ட் ரோடு புஹாரிக்குச் சென்றோம். சுவையான கோழி பிரியாணி உண்டு களைப்பு தீர்த்தோம்.
அதன்பின்பு கடல்காற்று வாங்க மெரினா சென்றுவிட்டோம்.
( தொடுவானம் தொடரும் )
- முடிவற்ற போர்: மிதவாத முஸ்லீமாக இருந்தால் மட்டுமே போதாது.
- வெளி ரங்கராஜன் – இரு நூல்கள்
- Tamil novel Madiyil Neruppu
- பொன்னியின் செல்வன் படக்கதை – 13
- உலகெங்கும் மசூதிகளில் இமாம்கள், “காபிர்களை முஸ்லீம்கள் வென்றெடுக்க ” அல்லாவை வேண்டுகிறார்கள்
- நித்ய சைதன்யா கவிதை
- துல்லிய ஒப்பற்ற நவீனப் போலிப் பூதக் கணினி வடிவமைப்பு முறையில் பிரபஞ்சப் படிப்படித் தோற்ற வளர்ச்சி ஆய்வுகள்
- செந்தி கவிதைகள் — ஒரு பார்வை
- தொடுவானம் 95. இதமான பொழுது
- அவன் அவள் அது – 11
- “வானுயர்ந்து எழுந்துள்ள கட்டிடங்களின் அத்திவாரக்கற்கள் வெளியுலகிற்கு தெரிவதில்லை. “
- தீ, பந்தம்
- திரை விமர்சனம் ஸ்பெக்டர்
- மருத்துவக் கட்டுரை – தன்மைய நோய் ( Autism )
- ஹாங்காங் தமிழ் மலரின் நவம்பர் 2015 மாத இதழ்
- சூடகம் கரத்தில் ஆட ஆடிர் ஊசல்