பெண்களுக்கு மார்பில் கட்டி உண்டானால் அது புற்று நோயாக இருக்குமோ என்ற பயம் வருவது இயல்பானது. அது நல்லதுதான். மார்பகப் புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு நம் பெண்களிடையே வளர்ந்துள்ளது நல்ல அறிகுறிதான். ஆனால் எல்லா மார்பகக் கட்டிகளும் புற்று நோயாக இருக்காது. புற்று நோய் இல்லாத சாதாரணக் கட்டிகளும் மார்பகத்தில் தோன்றலாம். அவற்றில் ஒன்றுதான் பைப்ரோஅடினோமா என்னும் தசைநார்க் கட்டி. மார்பில் தோன்றியுள்ள கட்டி எந்த வகையானது என்பதைத் துவக்கத்திலேயே பரிசோதனை செய்து கொள்வதே விவேகமானது.
பெண்களின் மார்பகம் பால் சுரக்கும் சுரப்பிகள் ( glands ), பாலை முலைக் காம்புக்கு கொண்டு செல்லும் குழாய்கள், ( ducts ), நார்ச் சதைகள் ( fibrous tissue , கொழுப்பு ( fat ) ஆகியவற்றால் உருவானது. இவை ஒன்று சேர்ந்து ஒரு குலை (போன்று ( lobule ) காணப்படும். சில வேளைகளில் இந்த குலையைச் சுற்றி சுரப்பியும் குழாயும் வளர்ந்து ஒரு கட்டியாக மாறும். இது சாதனான கட்டிதான். இது புற்று நோயாக மாறாது. இது பெரும்பாலும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் காரணமாக உண்டாகிறது. இந்த கட்டி ரப்பர் போன்ற தன்மையுடையது. இது தோலுக்கு அடியில் எளிதாக நகரக்கூடியது. இதனால் வலி ஏற்படாது. பெரும்பாலும் ஒரு கட்டிதான் தோன்றும். ஆனால் ஒன்றுக்கு மேலான கட்டிகளும் உண்டாகலாம். பெண்கள் வயதுக்கு வந்தபின்பும், இளம் பெண்களுக்கும் இது தோன்றலாம். அதுபோன்று கர்ப்பகாலத்திலும், பாலூட்டும் காலத்திலும் இந்த கட்டி பெரிதாகி பின் தானாக குறையலாம். உருண்டையான இக் கட்டி 1முதல் 3 சென்ட்மீட்டர் குறுக்களவு கொண்டதாக இருக்கும். மார்பைத் தடவினால் ஒரு கோலிக் குண்டு உள்ளே உள்ளதுபோன்று உணரலாம்.
- தொடுவானம் 96. தஞ்சைப் பெரிய கோயில்
- எழுத்தாளர் குரு அரவிந்தனின் பாராட்டுவிழா
- இஸ்லாமிய சீர்திருத்தத்தை ஏன் ஆதரிக்க வேண்டும்?
- அவன் அவள் அது – 12
- அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம்
- நீ தந்த செலாவணிகள்
- யூசுப் ராவுத்தர் ரஜித் நூல்கள் வெளியீடு
- திரை விமர்சனம் 144
- எழுத மறந்த குறிப்புகளுடன் ஒரு பதிவு இலக்கியப்பணியுடன் மருத்துவப்பணியும் மேற்கொள்ளும் மனிதாபிமானி ச. முருகானந்தன்
- வன்னி நாவல் பற்றிய என்பார்வை
- மருத்துவக் கட்டுரை- மார்பக தசைநார்க் கட்டி ( பைப்ரோஅடினோமா ) ( Fibroadenoma )
- நாளைய பங்களா தேஷ் யாருக்கானது?
- செர்ன் விரைவாக்கி யந்திரத்தில் பேரளவு உஷ்ணத்தில் பெருவெடிப்பின் போது தோற்ற காலக் குவார்க் குளுவான்கள் பிறப்பு
- நெய்தல் வழங்கும் விருதுகள்
- கடலூர் சென்னை மக்களுக்கு உதவ