எனக்குப் பிடித்த சிறுகதைகள்

This entry is part 18 of 23 in the series 24 ஜூலை 2016

 

புத்தாயிரத்தாண்டு தொடங்கிய சமயத்தில்தான் இலக்கியம் சார்ந்து பல கட்டுரைகளை நான் முனைப்போடு எழுதத் தொடங்கினேன். எழுதப்பட்ட ஒரு படைப்பு எதார்த்த வாழ்க்கையின் முழு பிரதிபலிப்பல்ல என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு வாழ்க்கையின் ஏதோ ஒரு கணம் அல்லது கணத்தின் நிழல் அந்தப் படைப்பின்மீது படிந்திருக்கிறது என்பதும் உண்மை. படைப்பாக்க அழகியலும் படைப்பாளியின் பார்வையும் சேர்ந்து அக்கணங்களைப் பொற்கணங்களாக்குகின்றன. அவற்றை முன்வைத்து  கட்டுரைகளை எழுதவேண்டும் என்று தோன்றியது. ஒரு சிறுகதையின் அழகியலைப் புரிந்துகொள்ளவும் அதன் உள்விரிவுகள் வழியாக  வாழ்க்கையின் ஆழத்தையும் விரிவையும் புரிந்துகொள்ளவும்  அக்கட்டுரைகள் உதவவேண்டும் என்றும் நினைத்தேன். இலக்கியத்தை அணுக முனையும் இளம் வாசகர்களுக்கு துணைபுரிபவையாக அவை இருக்கவேண்டும் என்பதும் என் விருப்பமாக இருந்தது. ஒவ்வொரு கட்டுரையும் நெருக்கமாக உணரப்படவேண்டும் என்பதற்காக என் சொந்த வாழ்க்கையனுபவங்களை முன்வைத்து நீளும் விதமாக அக்கட்டுரைகளை  அமைத்துக்கொள்ளலாம் என்றொரு உத்தேச வடிவம் என் மனத்தில் தோன்றியது.

ஒரு வேகத்தில் புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, மெளனி ஆகிய மூவரின் சிறுகதைகளை மட்டும் முன்வைத்து கட்டுரைகளை  எழுதி முடித்து நண்பர்களிடம் படிப்பதற்கு அளித்தேன். அந்தப் புதிய வடிவம் அவர்களுக்குப் பிடித்திருப்பதாகச் சொல்லி தொடர்ந்து எழுதும்படி ஊக்கமூட்டினார்கள். அவர்களுடைய சொற்கள் எனக்கு மிகவும் நம்பிக்கையளித்தன. அவற்றின் நீளத்தைப் பார்த்ததுமே இம்முயற்சிக்கு அச்சிதழ்கள் உதவாது என்பது புரிந்துவிட்டது. இணைய இதழே இத்தகு முயற்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று தோன்றியது. அதற்குப் பிறகு திண்ணை ஆசிரியர் குழுவுக்கு இக்கட்டுரைகளை அனுப்பிவைத்தேன். நண்பர் கோ.ராஜாராம் உடனே பதில் எழுதியிருந்தார். நூறு சிறுகதைகளைப்பற்றி நூறு கட்டுரைகள் எழுதவேண்டும் என்பது மட்டுமே அப்போது என் கனவாக இருந்தது. நூறு கட்டுரைகள் என்பது கிட்டத்தட்ட இரண்டாண்டுகள். வாரத்துக்கு ஒன்று என்பதால் தடைபடாமல் தொடர்ந்து எழுதினேன். உலகச்சிறுகதைகள், இந்திய பிறமொழி எழுத்தாளர்களின் சிறுகதைகள், இலங்கைச்சிறுகதைகள் என களம் விரியவிரிய தமிழகச் சிறுகதைகளின் காலத்தை எழுபதுகள் வரைக்குமான ஒன்றாக வைத்துக்கொள்ளலாம் என ஓர் எல்லையை வகுத்துக்கொண்டேன். திண்ணைக்கட்டுரைகளுக்கு வாசகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. எனக்குப் பிடித்த சிறுகதைகள், ஆழத்தை அறியும் பயணம் என்னும் தலைப்புகளில் இக்கட்டுரைகள் இரு பகுதிகளாக காலச்சுவடு பதிப்பகம் வழியாக 2003, 2004 ஆம் ஆண்டுகளில் வெளிவந்தன.

போன வாரம் புதிய வாசகரொருவரைச் சந்தித்தேன். எப்போதோ ஒரு முறை இணையத்தில் எதையோ தேடிக்கொண்டிருந்தபோது தற்செயலாக கு.அழகிரிசாமியின் சிறுகதையைப்பற்றிய கட்டுரையைப் படித்ததாகவும், அக்கட்டுரைக்கு இடப்பட்டிருந்த எண்ணை வைத்து, அது ஒரு தொடராக இருக்கவேண்டும் என ஊகித்துக்கொண்டு, திண்ணை தளத்துக்கு நேரிடயாகச் சென்று ஒவ்வொரு கட்டுரையாகத் தேடித்தேடிப் படித்ததாகவும் சொன்னார். நூறு ஆசிரியர்களின் பெயர்களையும் அவர்களுடைய கதைகளின் பெயர்களையும் உள்ளடக்கி ஒரு பட்டியலை தானாகவே தயார் செய்துவைத்துக்கொண்டு, அக்கதைகளைத் தேடிப் படிக்கும் இரண்டாம் கட்ட முயற்சியில் இருப்பதாகவும்  சொன்னார். இதுவரைக்கும் முப்பது சிறுகதைகளை மட்டுமே தேடிப் படிக்க முடிந்திருப்பதாகவும் விரைவில் எல்லாச் சிறுகதைகளையும் படித்துவிடுவதாகவும் நம்பிக்கையோடும் புன்னகையோடும் சொன்னார்.

இந்தப் பட்டியலை இணைய தளத்தில் வெளியிடச்செய்யுங்கள் என்று மீண்டும் மீண்டும் அவர் கேட்டுக்கொண்டார். அவைதான் புத்தகங்களாக ஏற்கனவே வந்துள்ளதே என்று தயக்கத்துடன் சொன்னேன். இணையத்தில் தேடும் தன்னைப்போன்ற வாசகர்களுக்கு இப்பட்டியல் ஒரு தூண்டுகோலாக இருக்கும் என்று அவர் உறுதியாகச் சொல்லிவிட்டுப் பிரிந்து சென்றார். ஊருக்குச் சென்ற மறுநாளே முழு பட்டியலின் மென்நகலையும் அனுப்பிவைத்துவிட்டார். அவருக்கு உதவியதுபோல மற்ற வாசகர்களுக்கும் உதவக்கூடும் என்னும் எண்ணத்தில் அப்பட்டியலை கீழே கொடுத்துள்ளேன்.

 

தமிழ்ச்சிறுகதைகள்

  1. புதுமைப்பித்தன் – மனித யந்திரம்
  2. ந.பிச்சமூர்த்தி – தாய்
  3. மெளனி – சாவில் பிறந்த சிருஷ்டி
  4. கு.ப.ராஜகோபாலன் – ஆற்றாமை
  5. கு.அழகிரிசாமி – இரண்டு பெண்கள்
  6. சி.சு.செல்லப்பா – குருவிக்குஞ்சு
  7. பி.எஸ்.ராமையா – நட்சத்திரக் குழந்தைகள்
  8. க.நா.சு. – கண்ணன் என் தோழன்
  9. எம்.வி.வெங்கட்ராம் – இனி புதிதாய்
  10. கரிச்சான் குஞ்சு – நூறுகள்
  11. அ.மாதவையா – ஏணியேற்ற நிலையம்
  12. த.நா.குமாரசாமி – சீமைப்பூ
  13. கல்கி – கேதாரியின் தாயார்
  14. கி.சந்திரசேகர் – பச்சைக்கிளி
  15. சோமு – உதயகுமார்
  16. ந.சிதம்பர சுப்பிரமணியன் – சசாங்கனின் ஆவி
  17. லா.ச.ராமாமிர்தம் – சர்ப்பம்
  18. தி.ஜானகிராமன் – கண்டாமணி
  19. ஜெயகாந்தன் – குருபீடம்
  20. எம்.எஸ்.கல்யாணசுந்தரம் – தபால்கார அப்துல்காதர்
  21. விந்தன் – மாடும் மனிதனும்
  22. அசோகமித்திரன் – அம்மாவுக்காக ஒரு நாள்
  23. கி.ராஜநாராயணன் – கன்னிமை
  24. கிருத்திகா – தீராத பிரச்சினை
  25. ஆ.மாதவன் – பறிமுதல்.
  26. சுந்தர ராமசாமி – பள்ளம்
  27. பூமணி – பொறுப்பு
  28. ஜி.நாகராஜன் – ஓடிய கால்கள்
  29. சா.கந்தசாமி – தேஜ்பூரிலிருந்து
  30. வண்ணநிலவன் – அழைக்கிறவர்கள்
  31. நகுலன் – ஒரு ராத்தல் இறைச்சி
  32. வண்ணதாசன் – தனுமை
  33. சார்வாகன் – கனவுக்கதை
  34. சம்பத் – நீலரதம்
  35. சுஜாதா – முரண்
  36. அகிலன் – காசுமரம்
  37. ஆதவன் – ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்
  38. இந்திரா பார்த்தசாரதி – நாசக்காரக்கும்பல்
  39. து.இராமமூர்த்தி – அஞ்ஞானம்
  40. கிருஷ்ணன் நம்பி – மருமகள் வாக்கு
  41. நா.பார்த்தசாரதி – வேப்பம்பழம்
  42. ஆர்.சூடாமணி – ரயில்
  43. தி.சா.ராஜு – பட்டாளக்காரன்
  44. ந.முத்துசாமி – இழப்பு
  45. பிரபஞ்சன் – பிரும்மம்
  46. ஜே.வி.நாதன் – விருந்து
  47. ஆர்.இராஜேந்திர சோழன் – கோணல் வடிவங்கள்
  48. நாஞ்சில் நாடன் – ஒரு இந்நாட்டு மன்னர்
  49. சுரேஷ்குமார் இந்திரஜித் – அலையும் சிறகுகள்
  50. திலீப்குமார் – மூங்கில்குருத்து
  51. மா.அரங்கநாதன் – சித்தி
  52. சிவசங்கரி – வைராக்கியம்
  53. சி.ஆர்.ரவீந்திரன் – சராசரிகள்
  54. மலர்மன்னன் – அற்புத ஜீவிகள்
  55. ஜெயந்தன் – அவள்

 

பிறமொழிக்கதைகள்

 

  1. லியோ தல்ஸ்தோய் – மோகினி
  2. தஸ்தோவெஸ்கி – நாணயமான திருடன்
  3. மக்சீம் கோர்க்கி – சிறுவனின் கார்க்கி
  4. ஐஸக் பாஷெவிஸ் ஸிங்கர் – முட்டாள் கிம்பல்
  5. புஷ்கின் – அஞ்சல் நிலைய அதிகாரி
  6. அலெக்ஸாண்டர் குப்ரின் – அதிசயக்காதல்
  7. அந்தோன் செகாவ் – வான்கா
  8. செல்மா லாகர்லாவ் – தேவமலர்
  9. மாப்பஸான் – மன்னிப்பு
  10. ஆஸ்கர் வைல்ட் – சுயநல அரக்கன்
  11. நதேனியேல் ஹாதர்ன் – கல்முகம்
  12. ஸ்டீபன் கிரேன் – அவமானம்
  13. ஜாக் லண்டன் – உயிர் ஆசை
  14. எட்கர் ஆலன்போ – இதயக்குரல்
  15. துர்கனேவ் – முமூ
  16. வில்லியம் ஃபாக்னர் – இரு சிப்பாய்கள்
  17. ஐல்ஸ் ஐக்கிங்கர் – ரகசியக்கடிதம்

 

 

 

இந்திய மொழிகளின் கதைகள்

 

  1. ரவீந்திரநாத் தாகூர் – காபூல்காரன்
  2. பிரேம் சந்த் – தோம்புத்துணி
  3. தாராசங்கர் பானர்ஜி – அஞ்சல் சேவகன்
  4. சரத்சந்திரர் – ஞானதா
  5. கிஷண் சந்தர் – நான் யாரையும் வெறுக்கவில்லை
  6. மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் – மஸூமத்தி
  7. காண்டேகர் – மறைந்த அன்பு
  8. கர்த்தார்சிங் துக்கல் – ஒரு விந்தைச்செயல்
  9. முல்க்ராஜ் ஆனந்த் – குழந்தைமனம்
  10. வைக்கம் முகம்மது பஷீர் – ஐஷுக்குட்டி
  11. கேசவ தேவ் – நான்
  12. ஜயதேவன் – தில்லி
  13. சாதனா கர் – சிறைப்பறவைகள்
  14. குலாப் தாஸ் ப்ரோக்கர் – வண்டிக்காரன்
  15. கே.ஏ.அப்பாஸ் – அதிசயம்
  16. காளிந்திசரண் பாணிக்கிரஹி – நாய்தான் என்றாலும்
  17. தூமகேது – போஸ்ட் ஆபீஸ்

 

இலங்கைச் சிறுகதைகள்

  1. மு.தளையசிங்கம் – கோட்டை
  2. எஸ்.பொன்னுத்துரை – அணி
  3. என்.கே.இரகுநாதன் – நிலவிலே பேசுவோம்
  4. வ.அ. இராசரத்தினம் – தோணி
  5. என்.எஸ்.எம்.இராமையா – ஒரு கூடைக்கொழுந்து
  6. தெளிவத்தை ஜோசப் – மீன்கள்
  7. அ.முத்துலிங்கம் – அக்கா
  8. சாந்தன் – முளைகள்
  9. மாத்தளை சோமு – தேனீக்கள்
  10. அ.செ.முருகானந்தன் – பழையதும் புதியதும்
  11. உமா வரதராஜன் – எலியம்

 

Series Navigationஉற்றுக்கேள்பரிதியும் புவி நோக்கிப் பாயும் தீவிரத் தீப்புயல் பாதிப்பு ஒளிப்பிழம்பை [Plasma] உருவாக்கலாம்.
author

பாவண்ணன்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *