கவனம் பெறுபவள்

ரன்யா மர்யம்   பக்கம் பக்கமாக சொற்கள் பரந்து கிடக்கும் புத்தகத்தில் அடைப்புக்குறிக்குள் பாதுகாக்கப்படும் அவ்வொற்றை வார்த்தைபோல கவனம் பெறுகிறாய் நீ..!

கடல் வந்தவன்

ரன்யா மர்யம் பேராழியின் மென்சலன மையத்தில் மிதக்கிறது ஆளற்ற மரக்கலமொன்று. சில அலுமினிய பாத்திரங்கள் மீன் வலை சூழ கிடந்தாடுகிறது அதை செலுத்தியவனின் உடற்கூறுகளை சுறாக்கள் ஆராய்ந்து செரித்திருக்ககூடும். ஒருவேளை அடியாழத்தில் பிணமரித்து போய் எலும்புகள் மிச்சமாய் கிடக்கக்கூடும். கனவாய் மீன்களுக்காய்…
மறைந்த விஞ்ஞான மேதை டாக்டர் ஸ்டீஃபன் ஹாக்கிங்

மறைந்த விஞ்ஞான மேதை டாக்டர் ஸ்டீஃபன் ஹாக்கிங்

[ 1942 – 2018 ] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.biography.com/people/stephen-hawking-9331710 http://www.ted.com/talks/stephen_hawking_asks_big_questions_about_the_universe https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=OPV3D7f3bHY “என்னைப் போல் நீயும் விஞ்ஞானத்தை நம்பினால், எப்போதும் பின்பற்றப்படும் ஏதோ  சில பிரபஞ்ச விதிகள் இருந்தன என்பதை நீ ஏற்றுக் கொள்ளலாம். …

பாலின சமத்துவம்

இல.பிரகாசம் குறியீடுகள் எல்லாவற்றுக்கும் சூட்டப்படுகின்றன அவைகள் சமத்துவமானவையா? சில குறியீடுகள் அஃறினைக்குச் சூட்டப்படுகின்றன சில குறியீடுகள் உயர்தினைக்குச் சூட்டப்படுகின்றன குறியீடுகளில் சில இயல்பிலேயே சமநிலையற்றதாக படைக்கப்படுகின்றன குறியீடுகளில் சில இயல்பிலேயே சமநிலைத் தத்துவத்தை போதிக்கின்றன அஃறினைக் குறியீடுகளில் அது அவை என்றும்…

அக்கா !

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் மூவரும் சமமாகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டிய அப்பாவின் பாசத்தைத் தான்மட்டுமே தட்டிக்கொண்டு போனவள் அக்கா வீட்டின் முதல் பெண்ணான அவள் மூக்கில் எப்போதும் நிற்கும் கோபம் நூறு கிலோமீட்டர் வேகத்தில் பிறரைத் தாக்கும் பிள்ளைப் பருவத்தில் என்னை 'ஏமாற்றும்…

“பிரபல” என்றோர் அடைமொழி

கோ. மன்றவாணன் நாளிதழ்களில் பிரபல ரவுடி, பிரபல கிரிமினல் என்று எழுதுகிறார்கள். அதுபோலவே பிரபல நடிகர், பிரபல எழுத்தாளர் என்றும் குறிப்பிடுகிறார்கள். நற்செயல்கள் அடிப்படையில் அறியப்படும் ஒருவரைப் பிரபல என்ற அடைமொழியிட்டு அழைக்கையில், தீச்செயல்கள் மூலம் அறியப்படும் ஒருவரை அதே “பிரபல”…

அந்தரங்கம்

சு. இராமகோபால் அந்தரங்கம் சிந்தனைக்குச் சிரிப்பு ஶ்ரீரங்கம் தெரிகிறது என் மனதில் புகுந்து வாழும் ரீங்கார வண்டுகளே இன்று எந்தன் சிந்தனையே சிரிப்பே வந்தே மாதரம் பிறக்குமுன்னர் வந்ததிந்த சிரிப்பு தந்தையின் நாமமே தரணியெங்கும் படர்ச்சி விந்தை விந்தை விந்தை வீதியெல்லாம்…

கடலைக் கொழுக்கட்டையாக்கிய கவிராசன்

எஸ் .ஆல்பர்ட் கடற்கரைக் காற்று மெய் தொட்டுத் தடவியுட் புகுந்து கவிராசன் பட்டத்துப் புரவியைத் தட்டிக் கொடுக்கக் கொடுக்கத் தரை விட்டெழும்பிப் பறந்ததம்மா. கவிராசனும் லேசாகி லேசாகி நிசராசன் ஆனதுடன், முன்பின் யோசனை யில்லாமல், சாசகான் பிறப்பெடுத்து; ஆசை மனைவி மும்தாசைப்…
சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு பின்னரும் பெரும்பாலான பட்டியல் இனத்தவர்கள் நிலமற்ற விவசாயிகளாகவே இருக்கிறார்கள்.

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு பின்னரும் பெரும்பாலான பட்டியல் இனத்தவர்கள் நிலமற்ற விவசாயிகளாகவே இருக்கிறார்கள்.

ஹாரி ஸ்டீவன்ஸ் (இந்துஸ்தான் டைம்ஸ்) பெரும்பாலான இந்திய விவசாயிகள் தங்கள் நிலங்களை தாங்களே உழுது பயிர் செய்தாலும், தலித் என்னும் பட்டியல் இனத்தவர்கள் பெரும்பாலும் நிலமற்றவிவசாயிகளாக மற்றவர்களுக்கு கூலி வேலை செய்பவர்களாக, விவசாய கூலிகளாகவே இருக்கிறார்கள் என்று சென்ற வாரம் வெளியிடப்பட்ட…
’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

ஊருக்கு உபதேசம் நாவடக்கம் வேண்டும் நம்மெல்லோருக்கும்.  ஆபத்தானவர்கள் அவரவர் கோபுரத்துள் அமர்ந்தபடி அக்கிரமக் கருத்துரைத்து அமைதியிழக்கும் ஊருக்காகவும் அடிபட்டுச் சாவும் சகவுயிர்களுக்காகவும் கவனமாய் ’க்ளோசப்’ பில் கண் கலங்குபவர்கள்.  புதிர்விளையாட்டு. காயம்பட்ட ஒருவரை ஸ்ட்ரெச்சரில் ஏந்தி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வதற்கும்…