ஹெர்பீஸ் சோஸ்டர் வைரஸ் கிருமியால் உண்டாகும் நோய். இதை அக்கிப்புடை என்று அழைப்பதுண்டு. இந்த வைரஸ் நரம்புகளைப் பாதிக்கக்கூடியது. உடலில் புகும் வைரஸ் சில குறிப்பிட்ட நரம்புகளின் வேர்களில் அமைதியாகத் தங்கியிருக்கும். உடலின் எதிர்ப்புச் சக்தி குறைந்தால் அவை வீரியம் கொண்டு நோயை உண்டுபண்ணும்.
நோய் அறிகுறிகள்
முதலில் பாதிக்கப்பட்ட நரம்பு உள்ள பகுதியில் நமைச்சலும் வலியும் உண்டாகும்.அதைத் தொடர்ந்து சில நாட்களில் அந்த நரம்பு பகுதியில் கொப்புளங்கள் தோன்றும். அவை உடைந்து புண்ணாகி கடுமையாக வலிக்கும். இவை வரிவரியாக அந்த நரம்பு செல்லும் பாதையில் தோன்றும். பெரும்பாலும் நெஞ்சுக்குக் கீழ் பகுதியிலும், கன்னத்தில் கண்ணுக்குக்கீழ்ப் பகுதியிலும் தோன்றும்.
நோய் நிர்ணயம்
இந்த நோயை மருத்துவர் பார்த்தாலே நிர்ணயம் செய்துவிடுவார். வேறு பரிசோதனைகள் தேவையில்லை.
சிகிச்சை
நோய் உள்ளதென்று தெரிந்ததும் உடனடியாக ஏசைக்குளோவீர் ( Acyclovir ) என்னும் வைரஸ் கொல்லி மருந்தை உட்கொள்ளவேண்டும். அப்போதுதான் நோயைக் கட்டுப்படுத்தலாம்.
இதன் பின் விளைவு PHN என்னும் கடும் நரம்பு வலி. இது பல ஆண்டுகள் தொடரலாம். இந்த வலியை Amitriptaline, Gabapentin ஆகிய மருந்துகள் மூலம் குறைக்கலாம்.
( முடிந்தது )
- பட்டினி கொலை என்னும் பிரிட்டனின் அரசாட்சி சாதனம்
- மனம் ஒடிந்து போச்சு !
- குன்றக் குறவன் பத்து
- அணுப்பிணைவு முறை மின்சக்தி நிலையத்தின் அமைப்பில் எதிர்ப்படும் பொறியியல் இடர்ப்பாடுகள்
- தொடுவானம் 226. நண்பரின் திருமணம்
- மருத்துவக் கட்டுரை – ஹெர்ப்பீஸ் சோஸ்டர் ( Herpes Zoster )
- கோவா தேங்காய் கேக்