பிச்சினிக்காடு இளங்கோ
(சிங்கப்பூர்)
அது ஓர்
அடையாளம் என்பதால்
ஓர் ஈர்ப்பு
இல்லாமலிருந்ததில்லை
இப்போது மனநிலை
அப்படியில்லை
அப்படியொன்றாக
அதுவுமில்லை
அவ்வளவுக்
கடைச்சரக்காகிவிட்டது
கடை சரக்காகிவிட்டது
ஆம்
மிகச்சாதாரணமாகிவிட்டது
முகப் பாவங்களினாலேயே
பாவங்கள் நிகழ்கின்றன
பாவத்தின்
அடையாளமாகவே
பார்க்கப்படுகிறது
மரியாதை
இவ்வளவு
மலிவாகவா?
பெருமூச்சை
தவிர்க்கமுடியவில்லை
ஒரு வரவு
தள்ளிப்போடப்பட்டிருக்கிறதே தவிர
சிந்தைச்செலவில்
தடங்கல் இல்லை
அது
கைகூடியோர் எல்லாம்
கையில் எடுப்பதை
நிறுத்திவிட்டார்கள்
ஒரு
மந்த மனநிலையில்
இப்போது
அது
வராமலிருப்பதும்
வரவுதான்
இறக்குமதிதான்
வரவென்று உணர்ந்தபின்
வாழ்க்கையில்
அந்த ஏக்கத்திற்குச்
சிறிதும் இடமில்லை
இதோ!
நிமிர்ந்த நன்னடையில்
நேர்கொண்ட பார்வையில்….