மதுராந்தகன்
—
மாலு
சுப்ரபாரதிமணியன் நாவல்
இரண்டாம் பதிப்பு பொன்னுலகம் பதிப்பகம் திருப்பூர்
—
இந்த நாவலை கையில் எடுக்கும்போது மாலு எனும் தலைப்பு ஏதாவது பெண்ணின் பெயராக இருக்கும் என்று நினைத்தேன் .சற்றே ஏமாற்றம். மலேசிய மண்ணில் ரப்பர் மரங்களுக்கு இடுகின்ற கத்திக் கோடுகள் தான் என்பதை புரிந்து கொண்டேன்.
இது ஒரு பின்நவீனத்துவ நாவல் வகையைச் சார்ந்தது,.
யதார்த்த நாவலைப் போல் இல்லாமல் படிக்கையில் கொஞ்சம் குழப்பமாக இருந்தாலும் ஆசிரியர் சொல்லி செல்கின்றமுறையிலும் சற்று தெளிவு ஏற்படுகிறது .பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு திருச்செல்வன் மலேசியா சென்றுபோதை மருந்து கும்பலோடு சிக்கி கொள்வதோடு மலேசிய சட்டப்படி தூக்கு தண்டனை கைதியாக ஆதரவின்றிகஷ்டப்படுகிறான். இவன் ஒரு நெசவாளர் குடும்பத்தை சேர்ந்தவன். இவனுக்கு குடும்பம் உள்ளது .அவன் தகப்பனார் அப்பாசாமிகலெக்டரை சந்தித்து மலேசிய சிறையில் இருக்கும் தன் மகனை விடுதலை செய்ய செய்து தருமாறு மனு கொடுக்க நடையாய்நடக்கும் .செல்வனைப் பற்றி மேல் விவரம் கூறப்படவில்லை .அவன் படிப்பு தகுதி மற்றும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதுதான் லட்சியம் என்றான். அதற்கு தகுதியையும் வளர்த்துக் கொள்ளாமல் மலேசிய மண்ணில் சிக்கிக் கொள்கிறான் .முறையாகமனு எழுதிக் கொடுக்கத் தெரியாத செட்டியார் அப்பாசாமி .இதனை மகனை காப்பாற்ற வேண்டும் என்று தவிப்பது மட்டும்அதற்குரிய சரியான வழிமுறைகளை தெரியாதவராக இருக்கிறார் .
இன்னொருவர் விக்னேஷ் .இவரும் பணம் சம்பாதிக்க சென்றவர்தான் ஆனால் ஓட்டல் கடையில் வேலை செய்துகொண்டிருந்தவர். விசா முடிந்தபின் தலைமறைவு தமிழனாக உயிருக்கு பயந்து ஓடிக்கொண்டே உள்ளார் .பசியால்மயக்கமடைந்து விக்னேஷ் , நிலா என்ற பெண்ணும் அவரின் பாட்டியும் அடைக்கலம் கொடுத்து அவருக்கு பாதுகாப்பாகஇருக்கிறார்கள். இவரும் ஒரு நெசவாளி .ஆனாலும் இவரைப்பற்றிய குடும்ப விவரங்கள் தெரியவில்லை .திரும்பி இந்தியா வரவழி தெரியாமல் ரப்பர் காடுகளில் அலைந்து திரிகிறார் .நிலா என்ற பெண்ணை ரசிக்கிறார் .நடக்க முடியாத நிலையிலும்இவர்களுக்கு பாரமாக இருக்கக் கூடாது என்று மனதில் நினைத்துக் கொள்கிறார் .ஆனால் அவர்களை விட்டு விலக முடியாமல்தங்கியிருக்கிறார்.
மலேசிய மண்ணில் விசா முடிந்தபின் தமிழன் உயிருக்கு பயந்து கொண்டு அவர்களை போன்ற எண்ணம் உள்ளவர்கள் பணம்சம்பாதிக்க வெளிநாடு செல்ல ஆசைப் படுபவர்கள் படும் சிரமம் இந்நாவலில் . மொத்தத்தில் இந்த நாவலில் உள்ளகதாபாத்திரங்கள் கையாலாகாதவர்கள் .ஆகவே அடிபடுகிறார்கள்.
அப்பாசாமி இறுதிவரை கலெக்டரை சந்திக்க வில்லை. விக்னேஷ்க்கு பாதுகாப்பு கொடுத்து அவர்களை விட்டு வெளியேறமுடியவில்லை ..திருச்செல்வன் தூக்கி லிடவும் இல்லை .ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் மலேசியாவின் வரலாறுபலராலும் கூறப்படுகிறது. பணம் சம்பாதிக்க செல்லும் இவர்கள் விசா டைம் எவ்வளவு காலம் விசா காலம் முடிந்த பின்னும்அங்கே தலைமறைவு வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்பது போன்ற விவரங்களை எழுதி இருக்கலாம். அது சிலருக்குப் பயன்படலாம்
ஒவ்வொரு அத்தியாய ஆரம்பத்திலும் மலேசியா சிங்கப்பூர் எழுத்தாளர்களின் படைப்புகளிலிருந்து சிலவிசய்ங்களைச் சேர்த்திருப்பது அந்நாடுகள் பற்றிய ஒரு பார்வையை உருவாக்குகிறது.
மலேசிய மண்ணில் இந்தியத் தமிழர்கள் படும் துய்ரம் என்ற வகையில் இந்நாவல் முக்கியத்துவம் பெருகிறது .மொத்தத்தில் மாலு படிக்க வேண்டிய நாவல் தான்
இரண்டாம் பதிப்பு பொன்னுலகம் பதிப்பகம் திருப்பூர் ரூ 140
- புற்றுச் சாமியும் உண்மையின் விளக்கமும்
- மாலு – சுப்ரபாரதிமணியன் நாவல் (விமர்சனம்)
- அவர்கள் இருக்க வேண்டுமே
- யாம் பெறவே
- அசுர வதம்
- இதயத்தை திறந்து வை
- எதிர்வினை ===> சுழல்வினை
- சல்மா கவிதைகள் ‘ பச்சைத் தேவதை ‘ — தொகுப்பை முன் வைத்து …
- திருவரங்கனுக்குகந்த திருமாலை
- ஏமாறச் சொன்னது நானா..
- ஒழுங்கீனமென்ற சமூகத் தொற்று
- ஆயுள் தண்டனை
- பிரகடனம்
- ஏழை ராணி
- வைரஸ் வராமலிருக்கும் அணியும் மருத்துவ உடைக்குள் வரக்கூடிய வெப்ப அபாயம்.
- இந்த வாரம் இப்படி (கனக்டிகட் தமிழ் சங்கத்தில் திண்ணை ஆசிரியர் நிகழ்த்திய புதுமை பித்தன் பற்றிய உரை, கருப்பர் கூட்டத்துக்கு ஆதரவு, ராஜஸ்தான் நிகழ்வுகள்)
- துயர் பகிர்தல் – திருமதி பத்மாவதி சோமகாந்தன்.
- வெகுண்ட உள்ளங்கள் – 8
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 226 ஆம் இதழ்
- தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம்