கவிதை என்பது யாதெனின்

சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளை போல். சொல்லாமல் சொல்லும் ஊழ்விதி போல். மெல்லச் சொல்லும் செவிட்டுக் காதில். ஊசிமருந்து போல்  உள்ளிருக்கும் நெஞ்சினில். உரக்க இடிக்கும் முழக்கி முரசு போல் ! அலை அலையாய் அடிக்கும் ஆலயமணி போல். அசரீரி போல் சொல்லும் வானிலிருந்து.…
ஆம் இல்லையாம்

ஆம் இல்லையாம்

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) அன்பு என்பதுஉணர்வாகவும்சொல்லாகவும்உண்மையாகவும்பொய்யாகவும்விரிந்தும்சுருங்கியும்விலகியும்நெருங்கியும்கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருக்கிறது.களைத்துப்போகச் செய்தாலும்புண்ணாக்கினாலும்ஒன்று மீதமில்லாமல் எல்லாத் தூண்களின் பின்னாலும்ஓடியோடித் தேடியபடியேநாம்…….

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் -4

ஸிந்துஜா  கோதாவரிக் குண்டு - 4  ஏமாற்றப்படும் போது ஏமாறுபவனின் மனநிலை எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? அதுவும் போகிறவன், வருகிறவன், கூட இருக்கிறவன் என்று எல்லோரும் அதைச் செய்தால்? நாமாக இருந்தால் நிதானத்தை இழந்து விடுவோம். எரிச்சல் வரும். கோபத்தில் கத்துவோம். அடிக்கக் கூட  முயலுவோம்.  ஆனால் "கோதாவரிக்…

சூம்

முகத்துக்கு நேரே முகம் பார்க்கும் கண்ணாடி இது என்ன இடமாறு தோற்றப் பிழை சுயம் உள்ளே பிம்பம் வெளியே சிறகு முளைத்தது பிம்பத்துக்கு பொம்மையானது சுயம் பிம்பங்கள் சேர்ந்து தேசம் கண்டது அது ‘சூம்’ என்றானது சூமின் கைதியாய் சுயம் ஆனது…

எக்ஸ்க்யூஸ் மீ ! எங்க வீடு எங்க இருக்கு ?

கோ. ஒளிவண்ணன் எனக்குத் திடீர்னு ஒரு பிரச்சினை. வீட்டுக்கு எப்படிப் போறது?  எவ்வளவு யோசிச்சுப் பார்த்தாலும் எங்க வீடு எங்க இருக்குன்னு நினைவுக்கு வரல. ரொம்ப நேரமா யோசிக்கிறேன். என்ன யோசிச்சுப் பார்த்தாலும் நினைவுக்கு வந்து தொலைய மாட்டேங்குது. இதுக்கு முன்னால…

கைகளிலே உயிர் இழந்தால் பாசம் தோன்றுமா….

கோ. மன்றவாணன்       ஜாவர் சீத்தாராமன் அவர்கள் எழுதிய “பட்டணத்தில் பூதம்” என்ற நாவலை அதே பெயரில் திரைப்படமாகவும் எடுத்தார்கள். அதில் பூதமாக அவரே நடித்தார்.       அந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்களை அந்தக் காலத்தில் முணுமுணுக்காதவர்கள் இருந்திருக்க முடியாது. அதில்…

பெருந்தொற்றின் காலத்தில்

கு.அழகர்சாமி (1) ஊரடங்கி நடமாட்டமில்லாமல் வீதி- இருபுற வீடுகளிடையே திடநதியாய் ஓடி சுவடுகள் பதியாது விலாசமிழந்து நிசப்தம் சப்திக்க நடக்க நீட்டித் தலைக்கு வெளியை வைத்து உறங்கி- (2) நாளும் நடந்து- நன்கு தெரியும் என்னை அதற்கு – ஆனால் தெரியாதது…

கண்ணீரின் கருணையில் வாழ்கிறேன்

வசந்ததீபன் கண்ணீரின் கருணையில் வாழ்கிறேன் கடலின் ஆழத்தைப் போல  அமைதியாக இருக்கிறேன் மனசு தான்  அலையடித்துக் கொண்டிருக்கிறது தனிமையாய் பயனற்ற  பழைய பிணமெரிக்கும் கொட்டகையாய் இருக்கிறேன் ஒரு பிடி அரிசி இல்லை வயிற்றுக்குள் கரையான்கள் நிலவும் சூரியனும் தவறாமல் வந்து போகின்றன…

சின்னக் காதல் கதை

வசந்ததீபன் வெக்கையினால் கொதித்த இதயத்தை சற்றுக் காத்தாடக் கழற்றி வைத்தேன். பசியால் அல்லாடிய  பூனையொன்று அதைக் கவ்விக்கொண்டு போய் தின்னப் பார்த்து ரப்பர் துண்டென எண்ணி குப்பையில் வீசிப் போனது. வானில் வட்டமிட்டலைந்த பருந்தொன்று அதைக் கொத்தித் தூக்கி கொத்திக் கொத்தி…
கரையைக் கடந்து செல்லும் நதி – சிறுகதைகள் – ஸிந்துஜா

கரையைக் கடந்து செல்லும் நதி – சிறுகதைகள் – ஸிந்துஜா

அழகியசிங்கர் ஸிந்துஜாவின் 15 கதைகள் அடங்கிய தொகுப்பு இது.  ஸிந்துஜா சில ஆண்டுகள் இலக்கிய உலகத்திலிருந்து காணாமல் போய்விட்டார்.  அதன் பின் ஒரு வேகத்துடன் திரும்பவும் வந்து  இப்போது எழுதி வருகிறார். ஒவ்வொரு கதையையும் ஒவ்வொரு விதமாகவும் கட்டமைக்கிறார்.  ஒட்டு மொத்தமாகக்…