மரணித்தும் மறையாத மகாராணி

This entry is part 3 of 13 in the series 11 செப்டம்பர் 2022

 

சக்தி சக்திதாசன்

ஒரு நாடு ஸ்தம்பித்து போய்விட்டது என்பதை வெறும் கதைகளிலும்கட்டுரைகளிலுமே கண்டு வந்த எமக்கு அதன் தாத்பரியத்தைக் கண் முன்னால் காணும் நிலை இப்போதுதான் ஏற்பட்டிருக்கிறது.

நான் இங்கிலாந்துக்குள் காலடி வைத்து இப்போது 47 வருடங்கள் ஒன்பது மாதங்கள் ஆகின்றனநான் காலடி வைத்த நாள் முதல் நேற்றுவரை இங்கிலாந்தில் மாற்றமின்றி நான் கண்ட ஒரேயொரு அடையாளம்ஒரேயொரு மனிதர் இங்கிலாந்தின் இரண்டாவது எலிசபெத் மகாராணியார் என்றால் அது மிகையில்லை.

இவர் யார் இவர் இத்தகைய ஒரு இடத்தை இங்கிலாந்து மக்கள் மத்தியில் மட்டுமல்ல உலக மக்கள் மத்தியிலும் பெற்றிருக்கக் காரணம் என்ன இங்கிலாந்து மகாராணியார் எனும் பதவி ஒன்றினால் மட்டும் எமது மகாராணியார் இத்தகைய பெரு மதிப்பை உலகளாவிய ரீதியில் பெற்றிருக்க முடியுமா ?

இக்கேள்விகளுக்கு விடைகாண முயலும்போதுதான் இவரின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ள முடிகிறதுமகாராணி எனும் பதவியிலிருக்கும் போதும் மனிதத்துவத்தை இழக்காமல் கலாச்சார அடையாள விழுமியங்களைப் பாதுகாத்து வாழ்ந்த இவரின் அயராத சேவையைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இருபத்தைந்து வயது நிரம்பிய இளவரசியாக இளம் தாயாராக கணவனுடன் கெனியா நாட்டுக்கு விஜயம் செய்த இரண்டாவது எலிசபெத் அம்மையார் இங்கிலாந்துக்கு மகாராணியாக திரும்பிய போது அந்த இௐளம் தாயாரின் முன்னால் இருந்த பாரிய கடமையை ஏற்று எத்தகைய வகையில் செயலாற்றி முடித்தார் என்பதற்குச் சரித்திரம் சான்றாக அமைகிறது.

அரசர் ஆறாவது ஜோர்ஜ் அவர்களது மூத்த புத்திரியாக லண்டன் Mayfair எனும் இடத்தில் 1926ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 21ம் தேதி பிறந்தார் இளவரசர் பிலிப் என்பவரை 1947ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் தேதி மணந்தார்இன்றைய அரசராகிய மூன்றாவது சார்ள்ஸ் அவர்களோடு சேர்த்து நான்கு குழந்தைகளின் தாயாராவார்.

73 ஆண்டுகள் எதுவித குழப்பங்களுமற்ற மணவாழ்க்கையில் இணைந்திருந்த மகாராணியாரின் கணவர் இளவரசர் எடின்பரோ கோமகன் பிலிப் அவர்கள் கடந்த ஆண்டு தனது 99 வயதில் 100 வயதுக்கு ஒரு மாதம் முன்னதாக தனது பூவுடலை நீத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

70 ஆண்டுகாலம் முடி சூடியிருந்த மகாராணியார் எதுவிதமான சர்ச்சைகளுக்குமுட்படாமல் தனது மரணம் வரை முடிக்குரியவராக இருந்தார் என்பது சரித்திரமே இத்தகைய ஒரு வெற்றியான வாழ்க்கையை அவர் அடைவதற்கான அவரது விசேடத் தன்மைகள் என்ன?

வெற்றியான மகாராணியார் வாழ்க்கை ஏதோ சுமூகமாக ஓடியது என்று சொன்னால் இல்லை என்றே பதில் வரும்அவரைச் சுற்றி அவரது சொந்தங்கள் உறவுகளினால் ஏற்பட்ட பல சர்ச்சைகளை அவர் கையாண்ட விதமே அவரது பண்புக்கு அத்தாட்சியாக இருக்கிறது.

அவரது மூத்த மகனாக முடிக்குரிய இளவரசராக இருந்த இன்றைய அரசராக அறிவிக்கப்பட்ட இளவரசர் சார்ல்ஸ் அவர்களது மணமுறிவும் அதைத்தொடர்ந்து அதனுடன் இணைந்து எழுந்த பலவிதமான இளவரசி டயானா சம்பந்தமான சர்ச்சைகளையும் அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அவர் கையாண்ட விதம் பிரமிக்கத் தக்கது.

அதையடுத்து அவரது இரண்டாவது மகனான இளவரசர் ஆண்ட்ரூ அவர்களுடைய மணமுறிவு மட்டுமல்ல சமீபத்தில் அவர் மீது எழுந்த பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அவர் பாரபட்சமின்றி அரச கெளரவங்கள் அனைத்தையும் அவரிடமிருந்து விலக்கியதன் மூலமாக ஒரு தாய் எனும் நிலையிலில்லாமல் ஒரு நாட்டின் மகாராணி எனும் நிலையிலிருந்து எடுத்த முடிவுகள் அவர் தனது நாட்டுக்கான சேவைக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.

இங்கிலாந்து அரச பரம்பரைக்குள் முதலாவதாக வந்த வேற்றின பந்தத்தை ஏற்று அதற்குக் காரணமான அவரது பேரனான இளவரசர் ஹரி அவர்களையும் அனுசரித்து அவர் நடந்து கொண்ட விதம் அவரது பண்பினை மேலோங்கி நிற்க வைக்கிறதுஅதைத் தொடர்ந்து சமீபத்தில் அவரது பேரன் இளவரசர் ஹரியும் அவரது மனைவியும் தாம் அரச குடும்பத்துடனான உரிமைகளிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தது மட்டுமல்ல அமேரிக்காவில் இரச குடும்பத்துக்கு பங்கம் ஏற்படும் வகையில் அளித்த நேர்காணல்கள் அளித்ததையும் உள்வாங்கி அதனை மிகவும் சாதுரியமாகக் கையாண்டு தன்னுடைய மதிப்பை உலகளாவிய ரீதியில் உயர்த்திக் கொண்டார்.

இப்படியாக நேற்று 08.09.2022 தனது பூவுடலை நீத்து வானுலகம் எய்திய மகாராணியார் தனது பிரத்தியேக வாழ்வில் ஏற்பட்ட பாதிப்புகளை தனது தேச சேவைக்கு எவ்வித பங்கமும் ஏற்படா வகையில் பணியாற்றியதே இவரின் அதியுன்னத பண்பாகக் கணிக்கப்படுகிறது.

இதுவரை இவர் தனது 70 ஆண்டுகால முடியாட்சியில் 15 இங்கிலாந்துப் பிரதமர்களைக் கண்டு அவர்களைச் சம்பிரதாயபூர்வமாக நியமித்திருக்கிறார்உலகளாவிய ரீதியில் எடுத்துப் பார்த்தோமானால் இதுவரை 170 நபர்களைப் பிரதமராகப் பார்த்திருக்கிறார்இவர் மகாராணியாகியது செய்த முதலாவது பிரதமர் நியமனம் நான் பிறந்த மண்ணாகிய அப்போதைய சிலோன் என்றழைக்கப்பட்ட இலங்கையின் பிரதமர் டட்லி சேனநாயக்கா ஆவார்இவர் செய்த கடைசிப் பிரதமர் நியமனம் இரண்டு நாட்களுக்கு முன்பாக இங்கிலாந்தின் பிரதமர் லிஸ் ட்ரஸ் அவர்களாவார்.

இங்கிலாந்தின் முடிக்குரிய மகாராணியாக மட்டுமல்லாமல் பொதுநலவாய நாடுகளின் தலைவியாக இவர் ஆற்றி வந்த கடமைகள் எண்ணிலடங்காஇதுவரை சுமார் 600 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் கெளரவ தலைவராக பணியாற்றிய இவரது சேவை அளப்பரியது.

தன்னுடைய தலைமையின் கீழுள்ள பொதுநலவாய நாடுகளின் பிரஜைகள் ஒவ்வொருவரையும் தன்னுடைய பிரஜைகளாகவே கருதிச் செயல்பட்டு வந்தவர் இரண்டாவது எலிசபெத் மகாராணியார்.

இரண்டாவது எலிசபெத் மகாராணியாரின் ஆட்சிக்காலத்தில் முதல் இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர் சார் வின்சென்ட் சார்ச்சில் அவர்கள்இவர் பிறந்தது 1874ம் ஆண்டுஇரண்டாவது எலிசபெத் மகாராணியாரின் ஆட்சிக்காலத்தில் கடைசிப் பிரதமராக இருப்பவர் திருமதி லிஸ் ட்ரஸ் இவர் பிறந்தது 1975ம் ஆண்டு ஆக மொத்தம் மகாரணியாரின் ஆட்சிக் காலத்தில் இவர் கண்ட பிரதமர்களின் வயது இடைவெளி 100 வருடங்களாகும்இதுவோர் உலக சாதனை என்றால் மிகையில்லை.

இத்தனை பிரதமர்களையும்இத்தனை ஆட்சி மாற்றங்களையும் சந்தித்த மகாராணியாரின் பழகும் தன்மையில் மட்டும் எதுவித மாற்றங்களுமேயில்லைசமூகவிஞ்ஞானசமய மாற்றங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஏற்பட்டுக் கொண்டிருந்தும் மகாராணியாரோ மனிதத்துவம் மீதும்இறையின் மீதும் கொண்ட நம்பிக்கையை இழக்காமல் இருந்ததே அவரது இந்த நன்மதிப்பின் முக்கிய காரணமாகிறது.

என்றுமே நாட்டின் அரசியல் மாற்றங்கள் மீதோ அன்றி அரசியல்வாதிகள் மீதோ எதுவிதமான சொந்தக் கருத்துக்களையும் இவர் திணிப்பதேயில்லை எப்போதுமே தனது சொந்தக் கருத்து எதுவாயிருந்தாலும் அரசியலில் நடுநிலைமையையே கடைப்பிடித்து வந்துள்ளார்.

தன்னுடைய அந்திம காலம் வரை தனது நாட்டுக்கான சேவையை செய்து கொண்டேயிருந்தார் என்பதே இவரது சேவை மனப்பான்மைக்கு எடுத்துக்காட்டாகிறதுவியாழக்கிழமை 08.09.2022 அன்று மறைந்த மகாராணியார் இரண்டு நாட்களுக்கு முன்புவரை அதாவது 06.09.2022 அன்று முன்னால் பிரதமர் பொரிஸ் ஜான்சன் அவர்களது இராஜினாமாவை ஏற்றதோடு புதிய பிரதமர் திருமதி லிஸ் ட்ரஸ் அவர்களை சம்பிரதாயபூர்வமாக பிரமராக நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றுவரை உலகின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் மகாரணி ( The Queen) என்று சொன்னால் அனைவரின் நினைவிலும் மேலோங்கி நிற்பது இரண்டாவது எலிசபெத் மகாராணியார் ஒருவரேஇது அவர் மகாராணியார் எனும் சொல்லுக்கு ஏற்படுத்திக் கொடுத்த ஒரு மதிப்பு என்றே எடுத்துக் கொள்வோம்.

மறைந்த மதிப்பிற்குரிய இரண்டாவது எலிசபெத் மகாராணியாரின் ஆத்மாவுக்கு அஞ்சலி செய்வதோடு அரசராகிய மூன்றாவது சார்ள்ஸ் அவர்கள் தன்னுடைய தாயாரின் பாதையில் ஒரு வெற்றியான அரசராகச் செயல்பட எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வோம்இங்கிலாந்துப் பிரஜைகளில் ஒருவனாக சக பிரஜைகளோடு எனது துயரையும் பகிர்ந்து கொள்கிறேன்.

சக்தி சக்திதாசன்

இலண்டன்

09.08.2022

Series Navigationகவிதைவீடு
author

சக்தி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *