பாசத்தியமோகன்
போர்த்திய
இருட்டின் தோலில் ஊற்றத் துவங்கிற்று மழை
மென்காற்று
கூசாமல்
மழைத்துளிகளின் இடுக்கில் நடக்கிறது
தீவிர சமயத்தில்
மழையைத் தன் தோளில் தூக்குகிறது மென்காற்று
மரக்கூட்டம்
ஊமை ஒருவன்
சவுக்கால் அடி பெற்றதுபோல் வாங்கிக் கொள்கின்றது
மண் நனைதல் என்பது
முதலில் வெப்பம் கிளம்பி
உள்ளே குளிரத்தான்
ஒரு சந்தேகம்
மழையில் ஊறினாலும்
மறுநாளே கெட்டிதட்டிப் போகும்
இந்தப் புற்றுகளின் கூட்டத்தை
ஒன்றும் செய்ய முடியாது போனாலும்
ஏன் நனைத்துக் கொண்டிருக்கிறது இப்பெரும் மழை?
***