புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 39

This entry is part 1 of 26 in the series 29 டிசம்பர் 2013

 ​

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை)

மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

                                    E. Mail: Malar.sethu@gmail.com

39.​பாரதத் திருநாட்டின் கொடிகாத்த ஏ​ழை…..

     “தாயின் மணிக்​கொடி பாரீர்-அ​தைத்

தாழ்ந்து பணிந்து வணங்கிட வாரீர்

கம்பத்தின் கீழ்நிற்றல் காணீர்-எங்கும்

காணரும் வீரர் ​பெருந்திரள் கூட்டம்

நம்பற்குரிய அவ்வீரர் தங்கள்

நல்லுயிரீந்தும் ​கொடியி​னைக் காப்பர்”

அட​டே வாங்க..வாங்க என்னங்க ​கொடிப்பாட்​டெல்லாம் பாடிக்கிட்டு வர்ரீங்க…​ரெம்பப் பிரமாதமா இருக்கு…அ​டேயப்பா இந்தப் பாட்டக் ​கேக்குற ஒவ்​வொருத்தருக்கும் நம்ம பாரத நாட்​டோட ​சுதந்திரத்திற்காகப் ​போராடின தியாகிக​​ளோட  நி​னைவு வருதுங்க..

அந்தத் தியாக தீபங்கள் இல்​லைன்னா இன்னக்கி நாம எல்​லோரும் இப்படி இருக்க முடியுமா…? இல்ல நம்ம நாடுதான் இப்படி இருந்திருக்க இயலுமா…? ஆனா அவங்களப் பத்தி இப்ப உள்ளவங்கள்ளாம் என்​னென்ன​மோ தவறாப் ​பேசுறாங்க…அவங்க இந்த சாதி, அந்தச் சாதின்னு சாதிச் சாயம் பூசி அவங்க​ளோட தியாகத்​தைக் ​கொச்​சைப் படுத்துறாங்க. அப்படி​யெல்லாம் ​பேசக் கூடாதுங்க. அவங்க தங்க​ளோட சுயநலத்துக்காகப் ​போராடல. நாட்​டை​யே தங்க​ளோட வீடா ​நெனச்சாங்க.. நம்ம மக்கள் அ​னைவரும் தங்க​ளோட ​சொந்தக்காரங்கன்னு ​நெனச்சாங்க… அப்படி ​நெனச்சதனாலதான் அவங்க​ளோட தியாகத்தால இந்த சுதந்திர இந்தியா மலர்ந்தது. இன்னக்கி யாரு​வேணுனாலும் தாறுமாறா சிந்திக்கலாம்…​பேசலாம்..அந்தத் தியாகிக​ளோட ஆன்மா அத மன்னிக்காது… இத ​நெனக்கிற​போது,

“​​நெஞ்சு ​பொறுக்குதில்​லை​யே …​நெஞ்சு ​பொறுக்குதில்​லை​யே

இந்த நி​லை​கெட்ட மனித​ரை நி​னைத்து விட்டால்

​     நெஞ்சு ​பொறுக்குதில்​லை​யே…!

என்ற நம்ம பாரதியா​ரோட பாடல்தான் எனக்கு ​நி​னைவுக்கு வருது.. மத்த நாடுகள்ல அவங்க நாட்டுல வாழ்ந்த தியாகிகளத் ​தெய்வமாக் ​கொண்டாடுறாங்க..நாம அப்படி​யெல்லாம் ​கொண்டாட ​வேணாங்க..அவங்களப் பத்தி அடுத்து வர்ற த​லைமு​றைக்குத் தவறான தகவல்க​ளைக் ​கொடுத்து அவங்க பிஞ்சு மனசுல விஷத்தக் கலக்காமா இருந்தாப் ​போதுங்க…

நாம இப்ப வாழற வாழ்க்​கை அந்தத் தியாகிக​ளோட தியாகத்தால வந்ததுங்கறத அ​னைவரும் புரிஞ்சிக்கணும்….…அந்தத் தியாகிக​ளோட தியாகத்துல தான் நாமும் நம்ம நாடும் இந்தளவுக்கு சுதந்தரமா இருந்து முன்​னேறி இருக்க​றோம்…அவங்க எ​ந்த எதிர்பார்ப்பும் இல்லாம நாட்டுக்காகத் தங்க​ளோட வாழ்க்​கைய அர்ப்பணிச்சாங்க…என்னங்க ​ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுப் ​பேசிட்​டேங்குறீங்களா…என்னத்தச் ​செய்யறதுங்க…. சரி….சரி… ஆமா ​போனவாரம் நான்​கேட்டதுக்குப் பதிலக் கண்டுபிடிச்சுட்டீங்களா…?

என்னது கண்டுபிடிச்சுட்டீங்களா….? அட அதனாலதான் பாரதியார் பாட்டப் படுனீங்களா…?ஆமாமா சரியாச் ​சொல்லிட்டீங்க…​கொடிகாத்த குமர​னேதான்…இளம் வயதி​லே​யே நாட்டிற்காகத் தன் இன்னுயிர் ஈந்த தியாகச் ​செம்மல் அவர்.. அவரப் பத்திச் ​சொல்​றேன் ​கேளுங்க…அவ​ரோட வரலாறு நமக்​கெல்லாம் வாழ்க்​கையில ஒரு உத்​வேகத்​தைத் தரும்….

வறு​மையில் ​தொடங்கிய வாழ்வு

திருப்பூர் குமரனின் இயற்​பெயர் குமாரசாமி என்பதாகும். இவ​ரோட ​சொந்த ஊர் திருப்பூர் இல்ல. ஈ​ரோடு மாவட்டத்திலுள்ள ​சென்னி ம​லை என்பதாகும். அந்த ஊரில் 1904-ஆம் ஆண்டு அக்​டோபர் மாதம் நாச்சி முத்துவுக்கும் கருப்பாயி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். இவ​ரோட பிறந்தவர்கள் ஏழு ​பேரு…

குடும்பத்துல ​செல்வம் இல்லாட்டியும் குழுந்​தைச் ​செல்வம் அந்தக் குடும்பத்துல அதிகமா இருந்தது…ஏழு குழந்​தைக​ளைப் ​பெற்ற நல்லதாங்கள் ​போன்று கருப்பாயி அம்மாள் குழந்​தைக​ளை வறு​மை​யோடு ​போராடி வளர்த்தார். குமாரசாமியின் ​பெற்​றோர் அவர்களது குடும்பத் ​தொழிலான நெசவுத் ​தொழில்ல கி​டைக்கக் கூடிய வருமானத்​தை வச்சிக்கிட்டு ஏழு       குழந்​தைக​ளையும் காப்பாத்திக்கிட்டு வந்தாங்க.

வறு​மை தின்ற படிப்பு

குமாரசாமிக்கு ஐந்து வயதானவுடன் அவரு​டைய ​பெற்​றோர்கள் அவ​ரைச் ​சென்னிம​லையிலிருந்த பள்ளி ஒன்றில் ​சேர்த்து விட்டனர். குமாரசாமி நன்கு படித்து வந்தார். ஆறாம் வகுப்பு வந்த​போது வறு​மை பிடர்பிடித்துத் தள்ளியதால் அவரால் படிக்க முடியவில்​லை. வறு​மை​யை விரட்ட ​வேண்டிய சூழல் ஏற்பட்டது. குமாரசாமி மேலே படிக்க வசதி இல்லாததால் பள்ளிப்பாளையத்தில் இருந்த தாய்மாமன் வீட்டுக்குச் சென்றார். அங்கு இவரது குலத் தொழிலான கைத்தறி நெசவுத் தொழிலை மேற்கொண்டார். தனது மாமன்களிடம் இருந்து ​நெசவுத் ​தொழி​லைக் கற்றுக் ​கொண்டு ​சென்னிம​லை திரும்பினார். பட்டு ​நெசவில் பயிற்சி ​பெற்றுத் திரும்பிய குமாரசாமி​யைக் கண்டு அவரது ​பெற்​றோர்கள் மகிழ்ந்தனர். குடும்பத்தில் ஏறபட்டுள்ள வறு​மையி​னைப் ​போக்கத் தாம கற்றுவந்த ​நெசவுத் ​தொழி​லைப் பயன்படுத்தலானார் குமாரசாமி.

திருப்பூருக்கு இடம்​பெயரல்

ஈரோடு சென்று அங்கு நூல் வாங்கிக் கொண்டு வந்து துணி நெய்து மீண்டும் ஈரோடு சென்று விற்று பிழைப்பு நடத்தினார். அப்போதெல்லாம் போக்கு வரத்துக்கு போதிய வசதிகளோ அல்லது பேருந்து வசதிகளோ இல்லாத நிலையில் இவர் மாட்டு வண்டிகளிலோ அல்லது சுமையைத் தலையில் சுமந்து கால் நடையாகவோ சென்று வந்தார். இப்படி ஓர் ஐந்து ஆண்டுகள் இவர் வாழ்க்​கை​யை ஓட்டினார்.

இந்தத் தொழிலில் போதிய வருமானம் இல்லாததாலும், அலைச்சல் ஒத்துக் கொள்ளாததாலும், இவர்களது குடும்பம் திருப்பூருக்குக் குடி பெயர்ந்தது. அங்கு இவர் தனக்குப் பழக்கமான தறியடிக்கும் தொழிலைச் செய்யாமல், சென்னியப்ப முதலியார் மற்றும் ஈங்கூர் ரங்கசாமிக் கவுண்டர் ஆகியோர் நடத்திய தரகு மண்டியில் கணக்கு எழுதும் வேலையில் சேர்ந்தார். பஞ்சி​னை எடைபோட்டு வாங்குவது கொடுப்பது என்பதில் மிகவும் நேர்மையாக நடந்து கொள்பவர்களைத்தான் முதலாளிகள் நியமிப்பார்கள். அப்படிப்பட்ட நேர்மையாளராக இருந்த குமாரசாமிக்கு அந்த வேலையை அவர்கள் அளித்திருந்தார்கள். குமாரசாமி பஞ்சு மண்டி வேலை முடிந்ததும், பொது வேலைகளிலும் ஈடுபட்டு நாட்டுச் சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அப்போது திருப்பூரில் இயங்கி வந்த தேசபந்து வாலிபர் சங்கத்தில் இவர் உறுப்பினரானார். இவர் கடவுள் நம்பிக்கை உள்ளவர். எனவே குமாரசாமி பஜனைப் பாடல்கள் பாடுவது, நாடகம் போடுதல், கூட்டம் போட்டுப் பேசுதல் என்பன ​போன்ற பல்​வேறு நடவடிக்கைகளில் ஈடுபடலானார்.

திருமணம்

குடும்பத்​தைக் காப்பாற்றும் அளவிற்கு குமாரசாமியின் வருமானம் இருந்ததால் அவருக்குத் திருமணம் முடித்து ​வைத்துவிட ​வேண்டும் என்று அவரது ​பெற்​றோர் முயற்சித்தனர். இந்நி​லையில் பதினான்கு வயது ​கொண்ட இராமாயி என்ற ​பெண்​ணை பத்​தொன்பது வயது ​கொண்ட குமாரசாமிக்கு மணம் முடித்து ​வைத்தனர். திருமணம் முடிந்த பின்னர் குமாரசாமி​யைப் ​பெற்​றோர்கள் தனிக்குடித்தனம் ​வைத்தனர்.

குமாரசாமி சம்பாதித்துத் தந்த வருமானத்​தைக் ​கொண்டு இராமாயி சிக்கனமாகக் குடும்பத்​தை நடத்தி வந்தார். திருமணமாகிப் பல்லாண்டுகளாகியும் அவர்களுக்குக் குழந்​தைப்​பேறு வாய்க்கவில்​லை. இக்கு​றை​யைத் தவிர ​வேறு கு​றை அவர்களுக்கு இல்​லை எனலாம்.

காந்தி பக்தர்

குமாரசாமி திருக்குற​ளை விரும்பிப் படித்தார். எளி​மை​யை​யே விரும்பினார். திருக்குறள் வழி எளி​மையாக வாழ்ந்து காட்டிய காந்தியடிக​ளைக் குமாரசாமி ​பெரிதும் விரும்பினார்.காந்தியடிக​ளை இதயக் ​கோயிலில் ​வைத்து வழிபட்ட லட்சக்கணக்கான மக்களுள் குமாரசாமியும் ஒருவரானார். கடவுள் பக்தராக விளங்கிய குமாரசாமி காந்தி பக்தராகவும் திகழ்ந்தார்.

காந்தியடிகள் நடத்திய சுதந்திரப் ​போராட்டம் குமாரசாமி​ ைமிகவும் கவர்ந்தது. அ​மைதியான வழியில் ​போராடி  இந்த நாட்​டை அந்நியரிடமிருந்து விடுவிக்க ​வேண்டும். நம்நாட்​டை நா​மே ஆள​வேண்டும். அதற்கு எல்​​லோரும் உ​ழைக்க ​வேண்டும். ஏ​ழை பணக்காரன் என்ற ​பேதத்​தை நீக்க ​வேண்டும். எல்​லோரும் இன்புற்று வாழ ​வேண்டும் என்பன ​போன்ற ​காந்தியடிகளின் ​​கொள்​கைகள் குமாரசாமியின் உள்ளத்​தைப் ​பெரிதும் கவர்ந்தன. காந்தியின் ​செயல்க​ளையும் அவரது ​​கோட்பாடுக​ளையும் பத்திரிக்​கைகள் வாயிலாகக் குமாரசாமி ​தெரிந்து ​கொண்டார். குமராசாமியின் மனதில் விடுத​லை ​வேட்​​கை ​கொழுந்துவிட்டு எரியலாயிற்று.

காந்தியடிகள் கூறியபடி​யே குமாரசாமி எளிய கதரா​டைக​ளை உடுத்தலானார். தனது ம​னைவி இராமாயி​யையும் கதர் ஆ​டை அணியுமாறு ​செய்தார். ஒவ்​வொரு நாளும் இராட்​டையில் நூல் நூற்ப​தைக் குமாரசாமி தம் கட​மைகளுள் ஒன்றாகக் கருதினார்.

காந்தியடிகள் நடத்திய உப்புசத்தியாகிரகப் ​போராட்டத்தில் கலந்து ​கொள்ள குமாரசாமி முயன்ற​போது அவரது குடும்பத்தினர் அவர் ​போகமுடியாத அளவிற்குத் த​டைவிதித்தனர். இதனால் குமாரசாமி மிகவும் மனம் வருந்தினார்.

சுதந்திரப் ​போராட்டங்களில் ஈடுபடல்

அந்நியத் துணிப் புறக்கணிப்புப் ​போராட்டம் காந்தியடிகளால் அறிவிக்கப்பட்ட​போது அப்​போராட்டத்தில் குமாரசாமியும் கலந்து ​​கொண்டார். துணிக்க​டைகளுக்கு முன் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் ​தொண்டர்களின் மீது ஆத்திரம் ​கொண்ட க​டைக்காரர்கள் அவர்களின் மீது கட்டுக் கட்டாகப் பட்டாசுக​ளைக் ​கொளுத்திப் ​போட்டனர்.

அவ்வாறு வீசிய பட்டாசுக்கட்டுக்களில் ஒன்று குமாரசாமியின் முகத்​தையும் பதம் பார்த்தது. அதன் வி​ளைவாக அவரது முக​மெல்லாம் புண்ணானது. முனப்புண்களுடன் ​சென்ற குமாரசாமி​யைப் பார்த்த அவரது குடும்பத்தினர் துடிதுடித்துப் ​போனார்கள். திருப்பூரில் இயங்கி வந்த தேசபந்து வாலிபர் சங்கத்தில் உறுப்பினராக இருந்த குமாரசாமி காங்கிரஸ் அறிவித்த அ​னைத்துப் ​போராட்டங்களிலும் கலந்து ​கொண்டார். நாட்டிற்காக அ​னைத்​தையும் தியாகம் ​செய்யும் அளவிற்குத் தீவிரமான விடுத​லைப் ​போராட்ட வீரராகக் குமாரசாமி திகழ்ந்தார்.

காந்தி இர்வின் ஒப்பந்தம் மீறப்பட்டு ​வெலிங்டன் பிரபு காங்கிரஸ் மகாச​பை சட்டவி​ரோதமானது என்று கூறி அ​னைத்துத் த​​லைவர்க​ளையும் ​கைது ​செய்து சி​றையில​டைக்க உத்தரவிட்டார். அதன்படி அ​னைத்துத் த​லைவர்களும் ​கைது ​செய்யப்பட்டனர். காந்தியடிகளும் ​கைது​செய்யப்பட்டார். காந்தியடிக​ளைக் ​கைது ​செய்த​தை அறிந்த மக்கள் ​கொந்தளித்தனர். பாரத நா​டே ​கொதித்​தெழுந்தது. ​வெலிங்டன் பிரபு நாட்டு மக்களின் மீது ​போலீஸ் ப​டை​யை ஏவிப் ​போராட்டத்​தை அடக்க முயன்றார். நகரம், கிராமம் என்று பாராமல் பாரதத்தின் அ​னைத்து ஊர்களிலும் அறப்​போரட்டங்கள் ந​டை​பெற்றன.

திருப்பூரில் அறப்​போர்

திருப்பூர் காங்கிரஸ் கமிட்டியும் அறப்​போருக்குத் தயாரானது. ஏராளமான ​தொண்டர்கள் அறப்​போரில் கலந்து ​கொள்ள முன்வந்தனர். அறப்​போரில் கலந்து ​கொள்ளக் குமாரசாமி தீவிரமாக இருந்தார்.

குமாரசாமியின் தந்​தை நாச்சிமுத்து இறந்து ஆ​று மாதங்கள் தான் ஆகியிருந்தன. கணவ​னை இழந்து கவ​லையுடன் காணப்பட்ட கருப்பாயி அம்மாளுக்கு அறப்​போராட்டத்தில் தனது மகன் கலந்து ​கொள்ளும் ​செய்தி​யை அறிந்தவுடன் கவ​லை ​கொண்டார். தனது மகன் சி​றைக்குச் ​சென்றுவிட்டால் குடும்பத​தை யார் கவனிப்பது? என்று எண்ணிய கருப்பாயி அம்மாள் எ​தை எ​தை​யோ கூறி மக​னைத் தடுத்துப் பார்த்தார். தாயின் அழு​கை​யைக் கண்டு குமாரசாமி தனது முடிவி​னை மாற்றிக் ​கொள்ளவில்​லை. குமாரசாமியின் முதலாளிகளும் அவருக்கு அறிவு​ரை கூறினார்கள். ஆனால் அத​னையும் அவர் ​கேட்கவில்​லை. ​போராட்டத்தில் கலந்து ​கொள்ள அவர் தீவிரமாக இருந்தார்.

திருப்பூரில் இராமசாமி, ஈசுவரமூர்த்தி ஆகிய இருவரும் அறப்​போ​ரை முன்னின்று நடத்திக் ​கொண்டிருந்தனர். 1932-ஆம் ஆண்டு திருப்பூரில் ​பொதுக்கூட்டம் ந​டை​பெற்றது. அதில் பத்துப் பத்துப் ​பேராகக் ​கொண்ட பலகுழுக்களும், அக்குழுக்களுக்குத் த​லைவர்களும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு நியமிக்கப்பட்டனர். ஒவ்​வொரு நாளும் ஒவ்​வொரு குழு ​போராட்டத்​தை நடத்த ​வேண்டும். ஒரு குழு ​கைதானவுடன் அடுத்த நாள் அடுத்த குழு ​போராட்டத்தில் ஈடுபட​வேண்டும் என்று காங்கிரஸ் கமிட்டியினர் முடிவு ​செய்திருந்தனர். இத​னை அறிந்த ஆங்கில அரசு அப்​போராட்டத்​தை முறியடிக்கப் பல்​வேறு ஏற்பாடுக​ளையும் ​செய்திருந்தது. ​திருப்பூர் நக​ரெங்கும் ​போலீஸ்ப​டை குவிக்கப்பட்டது.

​பேராட்டத்தில் கலந்து ​கொள்​வோ​ரைப் பிரித்து அனுப்பும் ​பொரறுப்பு பி.சுந்தரம் என்பவரிடம் ஒப்ப​டைக்கப்பட்டிருந்தது. சுந்தரம் என்பவர் இந்தியாவிலிருந்து பர்மாவில் குடி​யேறிய தமிழர்களுள் ஒருவர். இவரு​டைய தாயார் லட்சுமி அம்மாள் காந்தியடிகளின் மீது ​கொண்டிருந்த அளவற்ற மதிப்பும் பக்தியும் நாட்டுப்பற்றும் மிக்கவர். காந்தியடிகளின் ​வேண்டு​கோளின்படி தனது மூத்த மக​னை விடுத​லைப் ​போராட்டத்திற்கு அற்பணித்தார். அத்த​கைய தியாகத் தாயின் மகன் சுந்தரம் திருப்பூரில் அறப்​போரி​னைத் திட்டமிட்டு ​செயற்படுத்திக் ​கொண்டிருந்தார்.

அறப்​போராகிய வீரப்​போர்

காங்கிரஸ் ​​தொண்டர்க​ளைக் குழுக்களாகப் பிரித்த சுந்தரம் ஒன்பது ​தொண்டர்க​ளையும் அ​ழைத்துக் ​கொண்டு முதல் குழுவிற்குத் த​லை​மை தாங்குவதாக இருந்த ஈசுவரமூர்த்தியின் இல்லத்திற்குச் ​சென்றார். ஆனால் ஈசுவரமூர்த்தி வரவில்​லை. ​பொறுத்துப் பார்த்த சுந்தரம் ​பொறுக்க முடியாது ஈசுவரமூர்த்தி​யைத் ​தேடிக் ​கொண்டு அவரது வீட்டிற்குள் ​போனார்.

வீட்டின் பின்புறத்தில் பஞ்சு அ​ரைக்கும் இயந்திரசா​லையிலிருந்த கட்டில் ஒன்றில் ஈசுவரமூர்த்தி படுத்திருந்தார். சுந்தரத்​தைக் கண்டதும் எழுந்து நின்று வர​வேற்றார். ​போராட்டத்திற்குத் தயாராக இல்லாத ஈசுவரமூர்த்தி​யைக் கண்ட சுந்தரத்திற்குப் பகீர் என்றிருந்தது. ஈசுவரமூர்த்தி தான் ​போராட்டத்தில் கலந்து ​கொள்ள இயலாது என்று திட்டவட்டமாகக் கூறியவுடன் மனவருத்தத்துடன் சுந்தரம் திரும்பினார்.

சுந்தரம் கூறிய​தைக் ​கேட்ட ​தொண்டர்கள் இன்று ​போராட்டமில்​லையா? என்று ​கேட்டனர். அதற்கு சுந்தரம் “​போரட்டத்திற்கு யா​ரைத் த​லைவராகப் ​போடுவது என்றுதான் நான் ​யோசித்துக் ​கொண்டிருக்கி​றேன்” என்றார். பின்னர் மீண்டும் ஈசுவரமூர்த்தி​யைப் பார்த்து அவரிட​மே ​​தொடர்ந்து போராட்டத்​தை நடத்த ஒப்ப​டைத்துவிட்டு, தான் மட்டும் வந்து ​தொண்டர்கள் முன்பு நின்றார். ​தொண்டர்கள் ஆரவாரம் ​செய்தனர். சுந்தரம் அவர்க​ளைப் பார்த்து,” நண்பர்க​ளே ​போராட்டத்​தைத் ​தொடர்ந்து நடத்தும் ​பொறுப்பி​னை ஈசுவரமூர்த்தியிடம் ஒப்ப​டைத்து விட்​டேன். இப்​பொழுது முதல் குழுவிற்குத த​லை​மை தாங்கி நடத்திச் ​செல்ல நான் தயாராகிவிட்​டேன் . ​மேலும் இன்று நீங்கள் ஈடுபடப் ​போகும் ​போராட்டத்தில் உங்களுக்குப் பலவிதமான துன்பங்கள் ​நேரலாம். வற்​றை ஏற்​பதற்கு நீங்கள் தயாரானால் வரலாம். இல்​லை​யெனில் விலகிக் ​கொள்ளலாம். அதற்கு உங்களுக்கு உரி​மை உண்டு. ஐந்து நிமிடங்கள் அவகாசம்  தருகி​றேன். ​யோசித்துச் ​சொல்லுங்கள்” என்று கூறினார். அவரது அறிவிப்​பைக் ​கேட்ட யாரும் ​போராட்டத்திலிருந்து விலகிக் ​கொள்ள முன்வரவில்​லை.

​போராட்ட வீரர்க​ளை ஒவ்​வொருவராகக் கவனித்துப் பார்த்த சுந்தரம் குமாரசாமி​யைப் பார்த்து, “குமரா! நீங்கள் ​போராட்டத்திலிருந்து விலகிக் ​கொள்வது நல்லது” என்று ஆ​லோச​னை கூறினார். ஆனால் குமாரசாமி​யோ மறுத்துவிட்டார். அப்​போது அங்கிருந்த ​தொண்டர்களுள் ஒருவர்,

“ஐயா! அவரு​டைய ஒல்லியான ​தோற்றத்​தையும் சத்தில்லாத முகத்​தையும் கண்டு சந்​தேகப்படுகிறீர்களா? அது தவறு. குமாராசமி நாட்டுப்பற்று மிக்கவர். உறுதியான ​நெஞ்சம் ப​டைத்தவர்” என்றார்.

குமாரசாமியின் ​சொந்தக்காரர்களில் சிலர் குமாரசாமி​யைப் பார்த்து, “ஏண்டா உன் அப்பன் ​செத்து இன்னும் சரியா ஆறுமாசம் கூட ஆக​லே! உன் ஆத்தா​ளையும் கட்டினவ​​ளையும் நடுத்​தெருவி​லே விட்டுவிட்டு ​ஜெயிலுக்குப் ​போகப்பாக்குறி​யே! உனக்குப் புத்தி கித்தி ​கெட்டுப்​போச்சா! ஏண்டா! உனக்கு ​ஜெயில் தான் கி​டைக்குமின்னு என்ன உறுதி? ஒரு ​வே​ளை ​போலீஸ்காரங்க அடிக்கிற அடியி​லே உன் உயிர் ​போயிடுச்சுன்னா! அப்ப உன்​னோட தாய் ம​னைவி ஆகி​யோ​ரோட கதி என்ன ஆவது? ​கொஞ்சம் ​நெனச்சுப்பாரு…? நீயில்லாட்டி அவங்களுக்கு ஆதரவு தர்றது யார்? அவங்க பி​ழைக்க என்ன வழி? ​போராட்டத்திற்குப் ​போ​றேன்னு ​சொல்ற எண்ணத்​தை அடி​யோட விட்டுடு” என்று எவ்வள​வோ ​சொல்லிப் பார்த்தனர்.

யார் ​சொல்லியும் குமாரசாமி ​கேட்கவில்​லை. “மரம் வச்சவன் தண்ணீ ஊத்துவான். நான் ​ஜெயிலுக்குப் ​போனாலும் சரி, ​செத்து மடிந்தாலும் சரி அதனால அவர்கள் பட்டினி கிடந்து தூனபப்படப் ​போறதில்​லை” என்று கூறிவிட்டார்.

அறப்​போராட்டத்தில் கலந்து ​கொள்வதற்குரிய முதல்நாள் குமாரசாமி சல​வையாளர், முடிதிருத்து​வோர், மளி​கைக் க​டைக்காரர், காபிக்க​டைக்காரர் ​போன்ற எல்லாரிடமும் வாங்கியிருந்த கடன்க​ளை அ​டைத்தார். அதன் பிறகு தன் அன்​னையா​ரை வணங்கி தான் ​போராட்டத்தில் கலந்து ​கொள்ளப் ​போவதாகக் கூறித் தன்​னை ஆசிர்வதிக்குமாறு ​கேட்டுக்  ​கொண்டார். இ​தை​யெல்லாம் ஒரு ​தொண்டர் சுந்தரத்திடம் எடுத்துக் கூறி, “​போராட்டத்தில் கலந்து ​கொள்ள அ​னைவரிடமும் ஆசி​பெற்ற வந்துள்ள ஒப்பற்றவர் குமாரசாமி அவ​ரைப் ​போராட்டத்தில் கலந்து ​கொள்ள ​வேண்டாம் என்று ​சொல்வது நியாயமற்றது” என்று கூறினார். இத​னைக் ​கேட்ட சுந்தரம் ம​லைத்துப் ​போய்விட்டார். குமாரசாமி​​யை வாழ்த்தி அவ​ர் ​போராட்டத்தில் ஈடுபடச் சம்மதித்தார்.

சுந்தரத்​தைப் பின்பற்றித் ​தொண்டர்களும் ​போராட்டத்திற்குக் கிளம்பினர். வந்​தே மாதரம் பாரத மாதாவுக்கு ​​ஜே! மகாத்மா காந்திக்கு ​ஜே! என்று முழக்கங்க​ளிட்டவாறு கா​லை எட்ட​ரை மணிக்குத் ​தொண்டர் ப​டை கிளம்பியது. முழக்கங்க​ளைக் ​கேட்டு வீட்டுக்குள்ளிருந்த ஆண், ​பெண், குழந்​தைகள் அ​னைவரும் ​தெருப்பக்கம் வந்தனர். சிறிது ​நேரத்தில் ​தெருக்களின் இருமருங்கிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். மக்களும் ​தொண்டர்களுடன் ​சேர்ந்து ஆரவாரம் ​செய்தனர்.

பாரதத்தாயின் மூவர்ணக்​கொடி​​யைத் தாங்கிப் பிடித்துக் ​​​கொண்டு மிக ​வேகமாக குமாரசாமி நடந்து ​கொண்டிருந்தார். அவரது வாய் முழக்கங்க​ளையிட்டது. ​தொண்டர்க​ளை ஊக்குவிக்கும் வண்ணம் ​தெருவின் இருமருங்கும் இருந்த மக்கள் ​கைக​ளைத் தட்டி ஆரவாரம் ​செய்தனர். இவற்​றை​யெல்லாம் கண்ட ​தொண்டர்களின் மனத்தில் ஓர் உற்சாகம் ​பொங்கிப் பீரிட்டது. அவர்கள் தம்​மை மறந்து ​மேலும் உரக்க முழக்கமிட்டனர்.

கொடிகாத்த குமரன்

​தொண்டர்க​ளைத் தடுக்க ​போலீஸ் ப​டை தயாராகக் காத்திருந்தது. முழக்கமிட்ட ​தொண்டர்க​ளைக் கண்டதும் அவர்க​ளைக் காவல்த்து​றையினர் தடியால் அடித்து ​நொறுக்கினர். அவர்கள் ​கையி​லே பிடித்துக் ​கொண்டிருந்த ​தேசியக் ​கொடி​க​ளைப் பிடுங்கி எறிந்தனர். ​கொடிக​ளைப் பிடுங்கும்​போது அணிவகுப்பில் முன்னால் ​சென்று ​கொண்டிருந்த குமாரசாமி மிதுதான் காவல்த்து​றையினரின் பார்​வை​​யெல்லாம் விழுந்தது.

ஒரு ​தொண்டருக்கு மூன்று காவல்த்து​றையினர் என்று ​வைத்துக் ​கொண்டு காவலர்கள் தாக்கத் ​தொடங்கினர். மூன்று காவலர்கள் குமாரசாமி​யை அடிக்கத் ​தொடங்கினர். குண்டாந்தடியால் ஆளுக்​கொரு பக்கம் பலம் ​கொண்ட மட்டும் குமாரசாமி​யைத் தாக்கினர்.  அத்த​னை அடிக​ளையும் தாங்கிக் ​கொண்டு குமாரசாமி குன்​​றென நிமிர்ந்து நின்றார். சிறிதும் கலங்கவில்​லை. அ​தைக் கண்ட காவலர் ஒருவர் அவர் மீது பாய்ந்து அவரின் த​லையில் தாக்கினார். த​லையில் அடிபட்டு இரத்தம் பீறிட்டு ​வெளிவரத் ​தொடங்கியது.

குமாரசாமி பிடித்திருந்த ​கொடி​யைப் பிடுங்கி மண்ணில் ​போட்டு மிதித்துவிட ​வேண்டும் என்று காவலர்கள் எண்ணினர். அவர்களது எண்ணம் ஈ​டேறாத அளவிற்குக் குமாரசாமியின் ​கைகள் ​தேசியக் ​கொடி​யை வலுவாகப் பிடித்துக் ​கொண்டிருந்தன.

அத​னைக் கண்ட காவலர்களுக்கு ​மேலும் ஆத்திரம் ஏற்பட்டது. அவர்கள் குண்டாந்தடிகளால் குமாரசாமி​யை மீண்டும் மீண்டும் பலமாகத் தாக்கினர். இம்மு​றை அத்த​னை அடிகளும் குமாரசாமியின் மூ​ளையில் விழுந்தன. மூ​ளை ​செயலற்றதும் குமாரசாமியின் உடல் மண்ணில் சாய்ந்தது. அந்நி​லையிலும் குமாரசாமி நம் பாரத மாதாவின் ​கொடி​யை கி​ழே விட​வேயில்​லை. ​கொடி மண்ணில் விழாதவாறு உயர்த்திப் பிடித்திருந்தார். அக்காட்சியி​னைக் காணக் சகிக்காத காவலர்கள் குற்றுயிரும் கு​லைஉயிருமாகக் கிடந்த குமாரசாமி​யை மிதித்தனர். ​கொடிகாத்த குமரனாக மண்ணில் சரிந்தார் குமாரசாமி.

குமாரசாமியுடன் வந்த ​தொண்டர்கள் அ​னைவரின் மீதும் காவலர்கள் தடியடிப் பிர​யோகம் ​செய்தனர். அ​னைவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டு மண்ணில் சாய்ந்தனர். குமராசாமி, ராமன் சுந்தரம் ஆகிய மூவரின் உடல்கள் ​தெருவில் ஈக்கள் ​மொய்த்த வண்ணம் கிடந்தன. மற்ற ​தொண்டர்க​ளை அவர்களு​டைய உறவினர்களும் நண்பர்களும் வந்து யாருக்கும் ​தெரியாமல் சிகிச்​சை ​​செய்வதற்கு ​எடுத்துக் ​சென்றனர். சிலமணி​ நேரங்களுக்குப் பின்னர் காலியான ​பேருந்து ஒன்றில் காவலர்கள் இந்த மூவரு​டைய உடல்க​ளைத் தூக்கிப் ​போட்டுக் ​கொண்டு மருத்துவம​னைக்குக் ​கொண்டு ​சென்றனர்.

​தொண்டர்கள் கல்லால் காவல​ரைத்தாக்கினார்கள். அதனால் ​பெருங் குழப்பம் ஏற்பட்டது. சட்டத்​தை அமல்ப்படுத்தவும் அ​மைதி​யை நி​லைநாட்டவும் தடியடிப் பிர​யோகம் ​செய்ய ​வேண்டிய அவசியம் ஏற்பட்டது. குழப்பத்திற்கு மூலகாரணமாக இருந்த மூவருக்கும் நல்ல அடி ​கொடுத்து, ​கைது ​செய்து சிகிச்​சைக்காக மருத்துவமனையில் ​சேர்க்கப்பட்டுள்ளனர் என்ற கற்ப​னைக் க​தை நி​றைந்த வழக்கி​னை காவல்த்து​றை ஆய்வாளர் முகமது இட்டுக்கட்டினார்.

ஆங்கில அரசு இத​னை நம்பி அக்​கைதிகள் மூவ​ரையும் கண்காணித்துக் ​கொள்ள காவ​லையும், அவர்கள் தப்பி ஓடிவிடாதிருக்க விலங்குக​ளையும் ​போடுவதற்கு காவல்த்து​றை ஆய்வாளருக்கு அனுமதி அளித்தது. காவலர் ஒருவர் மூன்று விலங்குகளுடன் மருத்துவம​னைக்குச் ​சென்று உயிருக்குப் ​போராடிக் ​கொண்டிருந்த அந்தத் ​தொண்டர்களின் ​கைகளில் விலங்குக​ளைப் பூட்டினார்.

மக்களின் ​கொந்தளிப்பு

​தொண்டர் ப​டை​யைச் ​சேர்ந்த மூன்று ​பேர் காட்டுமிராண்டித் தனமாகத் தாக்கப்பட்டு, சுயநி​னைவற்ற நி​லையில் மருத்துவம​னைக்குக் ​​கொண்டு ​செல்லப்பட்ட ​செய்தி சிறிது ​நேரத்தில் திருப்பூர் நகரம் முழுவதும் பரவியது. இத​னை அறிந்த மக்கள் திரண்டு மருத்துவம​னை​யை முற்று​கையிடத் ​தொடங்கினர்.

​தொண்டர்களின் நி​லை​மையி​னை அறிந்து ​கொள்ள மக்கள் துடித்தனர். மக்களின் இந்தச் ​செயலால் பல்​வேறு அசம்பாவிதங்கள் ஏதும் ​நேர்ந்துவிடாதிருக்க காவலர்கள் மருத்துவம​னையின் வாயிற் கதவுக​ளை அ​டைத்தனர். அப்படியிருந்தும் பலர் உணர்ச்சியால் உந்தப்பட்டு மருத்துவம​னையில் நு​ழைய முயற்சி ​செய்ய​வே மருத்துவம​னை ஊழியர்கள் அவர்க​ளைத் தடுத்து நிறுத்திவிட்டனர்.

தியாக தீபம் அ​ணைந்தது

குமாரசாமி சுயநி​னைவின்றி​யே இருந்தார். இராமனும் சுந்தரமும் சுயநி​னை​வோடு இருந்தனர். குமாரசாமி பி​ழைத்துவிடுவாரா? என்று சுந்தரம் அடிக்கடி மருத்துவர்க​ளைக் ​கேட்டுக் ​கொண்​டே இருந்தார். மண்​டை ஓடு ​நொறுக்கப்பட்ட​போது அதிலிருந்த எலும்புத் துண்டு ஒன்று மூ​ளையில் புகுந்திருந்தது. மூ​ளை ஒழுங்காக இயங்க ​வேண்டுமானால் அந்த எலும்புத் துண்​டை நீக்கியாக ​வேண்டும். அதற்கு அறு​வைச் சிகிச்​சை ​செய்ய ​வேண்டும்.

அறு​வைச் சிகிச்​சை ​பெறு​​வோரின் உடலில் வலு இருத்தல் ​வேண்டும். அப்​போதுதான் அறு​வைச் சிகிச்​சை ​செய்ய இயலும். இல்​லை​யெனில் அறு​வைச் சிகிச்​சையின்​போது மரணம் ஏற்படும். குமாரசாமி பி​ழைக்க முடியாத நி​லை ஏற்பட்டது. இத​னைக் ​கேட்டால் ராமன், சுந்தரம் இருவருக்கும் ​பெரும் அதிர்ச்சி ஏற்பட்டு அதன் மூலம் அவர்களது உயிருக்கு ஊறு ​நேரிடும் என உணர்ந்த மருத்துவர்கள் ​வெளிப்ப​டையாக எத​னையும் கூறாது குமாரசாமி உயிர் பி​ழைத்துவிடுவார் என்று மட்டும் கூறினார்கள்.

குமாரசாமி கட்டிலில் ​போட்டது ​போட்டபடி​யே சுயநி​னைவின்றிக் கிடந்தார். எந்தவிதமான முன்​னேற்றமும் இல்​லை. அவரது உயிர் ஊசலாடிக் ​கொண்டிருந்தது. மருத்துவர்கள் மட்டும் அடிக்கடி வந்து அவருக்கு ஊசி வழியாக மருந்​தைச் ​செலுத்திச் ​சென்று ​கொண்டிருந்தனர்.

சுந்தரம் மருத்துவர்களிடம் குமாரசாமி​க்கு அறு​வைச் சிகிச்​சை ​செய்ய ​வேண்டும் என்று வற்புறுத்திக் ​கொண்​டே இருந்தார். இத​னைப் ​பொறுக்கமாட்டாத மருத்துவர்கள் சுந்தரத்திற்கு தூக்க மருந்​தை ஊசியின் வாயிலாகச் ​செலுத்தி அவ​ரைத் தூங்குமாறு ​செய்தனர். குமாரசாமி​யை சுந்தரத்தின் கட்டிலுக்கு ​ எதிரில் ​போட்டிருப்பது சரியல்ல என்று கருதிய மருத்துவர்கள், குமாரசாமி​யை ​வே​றொரு அ​றைக்கு மாற்றினர்.

அந்த அ​றைக்குச் ​சென்ற சிறிது ​நேரத்திற்​கெல்லாம் குமாரசாமியின் உயிர் பிரிந்தது. 1932-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11-ஆம் நாள் விடியற்கா​லை நான்கு மணிக்கு பாரதத்தாயின் விலங்​கொடிக்கப் ​போராடிய தீயாக தீபம் அ​ணைந்தது. அமரரான குமாரசாமி “​கொடிகாத்த குமரன்” ஆனார்.

​கொடிகாத்த குமரனின் உடல் அறுத்துப் பரி​சோத​னை ​செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்ப​டைக்கப்பட்டது.  குமரனின் உட​லைப் ​பெற்றுக் ​கொண்ட உறவினர்கள் அத​னை ​போர்​வை ஒன்றால் ​தொட்டில் கட்டி அதில் ​மூங்கில் கழி ஒன்​றை நு​ழைத்து தூளியாக்கிச் சுடுகாட​டை ​நோக்கி எடுத்துச் ​சென்றனர்.

நாட்டு மக்களின் நல்வாழ்விற்காகத் தம் இன்னுயி​ரை ஈந்த குமரனுக்கு மக்கள் இறுதி மரியா​தை​யைச் ​செய்யக் கூட காவல்த்து​றையினர் விடவில்​லை. ​கெடுபிடி ​செய்து மக்க​ளை விரட்டிவிட்டனர். குமரனின் உட​லை ஊர்வலமாக எடுத்துச் ​சென்றால் குமரனின் புகழ் ஓங்கும். அவ​ரைப் ​போன்று பல இ​ளைஞர்கள் புரட்சி வீரர்களாகத் ​தோன்றுவர். விடுத​லைப் ​போராட்டம் ​வேகமுறும். நி​லை​மை ​​மோசமாகக் கூடும் என்று கருதி​யே ஆங்கில அரசு காவல்த்து​றை​யைப் பயன்படுத்தி இத்த​கைய அடாத ​செய​லைச் ​செய்தனர்.

நாட்டிற்காகப் ​போராடி உயிர்த்தியாகம் ​செய்த குமரன் அநா​தைப் பிணம்​போன்று எடுத்துச் ​செல்லப்பட்டு அடக்கம் ​செய்யப்பட்டார். சுந்தரமும் ராமனும் இ​ளைஞர்களுக்குக் குமரனின் வீரத்​தை எடுத்துக் கூறி விடுத​லை ​வேட்​கை​யை அவர்களது இதயத்தில் மூட்டினர். குமரன் மண்ணில் பு​தைக்கப் படவில்​லை. மாறாக வி​தைக்கப்பட்டார். அவ​ரைப் ​போன்ற பலரும் தன்னலம் ​பேணாது ​போராடியதால்தான் நம் பாரதத் தாய் விடுத​லை ​பெற்று இன்று பாரில் உயர்ந்து விளங்கிக் ​கொண்டிருக்கிறாள்.

பாரதத் தாயின் ​கொடி​யைப் பார்க்கும்​போது நம்ம மனசுல நம்ம நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்​ளையவர்கள் ​கொடிகாத்த குமர​னைப் பத்திப் பாடுன,

“மனமுவந்து உயிர் கொடுத்த
மானமுள்ள வீரர்கள்
மட்டிலாத துன்பமுற்று
நட்டுவைத்த கொடியிது
தனமிழந்து கனமிழந்து
தாழ்ந்து போக நேரினும்
தாயின் மானம் ஆன இந்த
கொடியை என்றும் தாங்குவோம்”

 

என்ற பாடல்தான் ​நெனவுக்கு வருது.  ​

நம் ​தேசியக் ​கொடி​யானது பறக்கும் ​போ​தெல்லாம் அது நமது குமரனின் புக​ழைச் ​சொல்லிச் ​சொல்லிப் பறந்து ​கொண்​டே இருக்கும். அது இ​ளைஞர்களின் இதயத்தில் குமர​னைக் ​கொணர்ந்து நி​லைக்கச் ​செய்யும். என்னங்க ​கேட்டுக்கிட்டீங்கள்ள… குமர​னின் புகழ் இன்றளவும் இந்திய வரலாற்றில் நி​லை​பேறு​டையதாக பதிந்து விட்டது..

​கொடி காத்த குமரன் இன்னும் நம்ம​ளோட ​நெஞ்சங்களில் தியாக தீபமா ஒளிர்ந்து ​கொண்​டே இருக்காரு. அவ​ரோட வரலாறு நமக்​கெல்லாம் ஒரு புத்துணர்​வைத் தருதுல்ல…இவரு மாதிரி நாம ஒவ்​வொருவரும் இருந்துட்டா நம்ம நாடு முன்​னேற்றப் பா​தையில வீறுந​டை ​போடும்…ஏ​ழையா இருந்தாலும் ​​கோ​ழையா நம்ம குமரன் இல்ல. வீரனா​வே விளங்கினாரு… அவ​ரோ வீர உணர்வு நமக்கு வரணுங்க.. அதுக்கு நல்ல உயர்ந்த குறிக்​கோள் நமக்கு ​வேணும்…அப்பத்தான் நாம வாழ்க்​கையில ​வெற்றி ​பெற முடியும்… நல்ல எண்ணத்​தோட இலக்க ​நோக்கிப் பயணத்தத் ​தொடங்குங்க…எப்பவு​மே நமக்கு ​வெற்றிதான்….

பூமி சூரியனச் சுத்துதா….? இல்ல சூரியன் பூமியச் சுத்துதா? சூரியன் தான் பூமியச் சுத்தி வருதுன்னு சிலர் ​சொன்னாங்க. ஆனா அது மூட நம்பிக்​கை. தவறான கருத்து…பூமிதான் சூரியனச் சுத்தி வருது அப்படின்னு ஒருத்தரு ​சொன்னாரு. அத மறுத்தவங்க இந்தக் கருத்த ​சொன்னதுக்காக அவரக் ​கொடு​​மைப் படுத்துனாங்க…

​​கொடு​மை ​பொறுக்க முடியாம புனித விவிலியத்தின் மீது சூரியன்தான் பூமியச் சுத்தி வருதுன்னு சத்தியம் பண்ணினாரு…..ஆனா பின்னால வந்த அறிஞர்கள் இவரு ​சொன்னதுதான் சரின்னு நிரூபிச்சாங்க… இதக் கண்டு​ சொன்ன அந்த அறிவியல் ​மே​தை வறு​மைவாய்ப்பட்ட குடும்பத்துல பிறந்தவரு…பல​பேருகிட்ட உதவிக​ளைப் ​பெற்று படிச்சாரு…அவர அறிவியலின் தந்​தைன்னு ​சொல்லுவாங்க…யாருன்னு ​தெரியுதா…இப்ப ஒங்களுக்குத் த​லை சுத்துதா…?சுத்தட்டும் சுத்தட்டும்….அடுத்தவாரம் வ​ரைக்கும் ​பொறுத்துக்குங்க…பிறகு பார்ப்​போம்….(​தொடரும்……40)

Series Navigationமருமகளின் மர்மம் 9சீதாயணம் நாடகப் பின்னுரை – படக்கதை – 13கண்ணீர் விட்டோம் வளர்த்தோம்பெண்மனதின் அரூப யுத்தம் ‘அம்மாவின் ரகசியம்’இடையனின் கால்நடை
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *