ஜனவரி 6 2002
அரசாங்க ரௌடிகள்- காலச்சுவடு கண்ணன்- நாகர்கோவிலில் அனுமதி பெறாத கட்டிடங்கள் மற்றும் அரசு நிலத்தில் உள்ள கட்டிடங்கள் என பெரிய இடிப்பு நடந்தது. அதை ஒட்டி கண்ணன் காட்டமாக எழுதியிருக்கும் கட்டுரை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20201061&edition_id=20020106&format=html )
XXX தொல்காப்பியம் -ஜெயமோகன்
நா.விவேகானந்தன் என்னும் ‘தமிழறிஞர்’ தொல்காப்பியத்தை ஆராய்ந்து அது ஆண் பெண் உறவு பற்றிய காமரசம் மிகுந்த நூல் என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அதற்கு பல ‘தமிழறிஞர்கள்’ வாழ்த்துரை வேறு எழுதி இருக்கிறார்கள். தமக்கே உரித்தான அங்கதத்துடன் ஜெயமோகன் இந்த நூலின் மலினத் தனத்தைத் தோலுறிக்கிறார்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60201061&edition_id=20020106&format=html )
இரயில் பயணங்களில்- லாவண்யா- பேருந்துக் கட்டணம் உயர்ந்து விட்டது. இரயில் சேவை நல்ல மாற்று. ரயில்வே தனது கட்டணம் குறைவு என்று விளம்பரம் செய்து நிறைய இரயில்களையும் விட வேண்டும்.
(www.thinnai.com/index.php?module=displaysection&edition_id=20020106&format=html )
இந்தியாவில் மக்கட் தொகைக் கணக்கெடுப்பும் மதவாதமும் உருவான விதம்- ஆர்.பி. பகத்- தமிழில் கல்பனா சோழன்- நிறைவுப் பகுதியில் பகத் பிரிட்டிஷ் ஒருவரை இந்து என்று எப்படி அடையாளப் படுத்தினார்கள் என்று விளக்குகிறார். பல இடங்களில் கணக்கெடுப்பில் உள்ள குறிப்புகள் மதம் என்னும் அடிப்படையில் பார்த்தாலும் சமூக (ஜாதி) அந்தஸ்து என்னும் அடிப்படையில் மட்டுமே மக்கள் பிரிந்திருக்கிறார்கள்- மத அடிப்படையில் அல்ல என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது. பிரிட்டிஷார் விரும்பிய விளைவு கிடைத்தது. வங்காளத்தில் இன்னும் 420 வருடத்தில் இந்தியாவில் இந்துக்கள் என்னும் இனமே அழியும் என்று கிளம்பினார். பல தார மணம் முஸ்லீம் ஜனத்தொகையைப் பெருக்கும் என்று வாதிட்டார். உண்மை என்னவென்றால் 1911 கணக்கெடுப்பின் படி 5-6% ஆண்கள் எல்லா மதங்களிலுமே இருதாரம் அல்லது பலதாரம் என்று மணந்திருந்தார்கள். முஸ்லீம்கள் தனித்து இல்லை இந்தப் பழக்கத்தில்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20201063&edition_id=20020106&format=html)
இந்த வாரம் இப்படி-மஞ்சுளா நவநீதன்- ஐந்தாம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு வைக்க நினைக்கும் தமிழக அரசு எம்பி எம் எல் ஏ வை அந்தத் தேர்வை எழுதச் சொல்லலாம். 2.பயங்கரவாதிகளைப் பிடிப்பதாக பாகிஸ்தான் நாடகமாடுகிறது. 3. இந்திய பாகிஸ்தான் நல்லுறவில் பாக் ஆர்வம் காட்டவில்லை. 4.ராதிகா ஜெ.வை எதிர்த்துத் தேர்தலில் போட்டியிடலாம் என்று தெரிகிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20201064&edition_id=20020106&format=html )
நுகர்வோரிடையே விழிப்புணர்ச்சி- நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் மட்டும் போதாது. மக்களின் மனதில் பதியுமாறு நுகர்வோர் உரிமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட வேண்டும்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20201065&edition_id=20020106&format=html )
கடவுளுக்கான போர்கள்- காரென் ஆம்ஸ்ட்ராங் நூல் பற்றிய விமர்சனம்- கிரிஸ் ஹெட்ஜஸ்- மத நூல்கள் தோன்றிய காலத்தில் அவை மக்களின் மேலான சிந்தனைக்கு வழி வகுக்கும் என்று நம்பப் பட்டது. ஆனால் மத அடிப்படைவாதிகள் அவற்றைக் கொண்டே மதவெறிக்கு வழி வகுக்கிறார்கள்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20201066&edition_id=20020106&format=html )
எவ்வாறு ஜூலியானியும் நியூயார்க் போலிஸ் பிரிவும் நியூயார்க்கில் குற்றங்களைக் குறைத்த விதம்: – வால் ஸ்டீரிட் ஜர்னல் தலையங்கம்- 1993 ஐ ஒப்பிட நியூயார்க்கில் பாலியல் வன்முறைகள் 40%மும் பிற திருட்டு மற்றும் குற்றங்கள் 70% மும் குறைந்திருக்கின்றன. இதை ‘உடைந்த ஜன்னல்’ என்னும் அணுகுமுறையில் ஜூலியானா கண்டார். அதாவது ஒருவர் சுவரில் கிறுக்குவது அல்லது ஜன்னலை உடைப்பது என்று சிறு குற்றங்களைச் செய்யும் போது அவரைத் தொடர வேண்டும். விட்டு விட்டால் அவர் பெரிய குற்றங்களை முயல்கிறார். இதை நியூயார்க் போலிஸ் பின்பற்றியது. அதன் நற்பலன்களைக் கண்ட பிற மாநில – வெளிநாட்டு போலிஸும் இதைப் பின்பற்றின. ஆனால் வேலை வாய்ப்பின்மை குறைந்ததே குற்றம் குறையக் காரணம் என்று சொல்வாரும் உண்டு.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20201067&edition_id=20020106&format=html )
நகைச்சுவையும் வித்தியாசமானவையும்- இந்திய பாகிஸ்தான் எல்லையில் போருக்குத் தயாராகும் நகரங்களும் பதட்டம் நிலவும் இடங்களும்,
அறிவியலும் தொழில் நுட்பமும்- டிஎன்ஏ கணினிகள் எவ்வாறு பணி புரியும்?
கவிதைகள்: புதிய பலம், பொட்டல தினம் – அனந்த், ஔவை- இறுதிப் பகுதிகள்- இன்குலாப், கணிதம்- கே ஆர் விஜய், எது பொய்- கோமதி கிருஷ்ணன், ஆற்றூர் ரவிவர்மா கவிதைகள்- மொழிபெயர்ப்பு ஜெயமோகன், இன்னொரு முகம்- மனஹரன் மலேசியா, சகுந்தலை வேண்டும் சாபம்- திலகபாமா, கதி கூடின் கதி கூடும் காலம் அ ‘கதி’க் காலமே- வ.ந. கிரிதரன்
கதைகள்: கவலை இல்லை- விந்தன்
சமையற் குறிப்பு- அதிரசம், ராகி தோசை, கடலை மாவுச் சப்பாத்தி
ஜனவரி 13 2002 இதழ்:
ிநோத உணர்வுகள்- பாரி பூபாலன்- யாருக்காவது தர்ம அடி விழுந்தால் தானும் சென்று சேர்ந்து அடிப்பது போன்ற விநோத உணர்வுகள் பற்றிய கட்டுரை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20201131&edition_id=20020113&format=html )
மெக்காவில் துருக்கியக் கோட்டை இடிக்கப் பட்டதற்கு துருக்கிய அரசு பெரும் கண்டனம் தெரிவித்திருக்கிறது- பிபிசி
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20201132&edition_id=20020113&format=html )
மதத்தின் வழி தவறிய ஏவுகணைகள்- ரிச்சர்ட் டாக்கின்ஸ்- உலக வர்த்தக மையம் தகர்க்கப் பட்டதை ஒட்டி மத்திய கிழக்கு நாடுகளின் மத வெறி ஆபத்தானது என்று எச்சரிக்கும் கட்டுரை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20201133&edition_id=20020113&format=html )
கயிற்றில் நடக்கும் பாகிஸ்தான் விமர்சகர்கள்- முடாசர் ரிஜ்வி- வாகா எல்லையில் அமைதிப் பேரணி நடத்த முயன்ற பாகிஸ்தான் சிந்தனையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர் அடித்து விரட்டபட்டனர்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20201134&edition_id=20020113&format=html )
மொழிச் சிலை அமைப்பு- மொழித்தாய் வாழ்த்து- போலித் தமிழர்கள்- சி.ஜெயபாரதன்- வங்காள மொழி பேசுவோர் மொழி வாழ்த்துப் பாடி மொழித்தாய் சிலை வைக்கவில்லையே என்று ஒப்பிடுவது விதண்டாவாதம். தமிழர் தம் மொழி மீது கொண்டுள்ள பற்று அவர்தம் தனித்துவம்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20201135&edition_id=20020113&format=html )
உரையாடல்: பின்னணியும் எதிர்பார்ப்பும்- சுந்தர ராமசாமி தன் “தமிழகத்தில் கல்வி- வே.வசந்தி தேவியுடன் உரையாடல்” – என்ற புத்தகத்துக்கு எழுதிய முன்னுரை- சு.ரா. வசந்திதேவி அவர்களுடன் உரையாடும் முன் தாம் செய்து கொண்ட தயாரிப்பு சந்திப்புகள் மற்று தரவு சேமித்தல் ஆகியவற்றைப் பற்றி விரிவாகக் குறிப்பிடுகிறார். மூன்று நாட்கள் 15 மணி நேரத்துக்கு மேல் நடந்த உரையாடலில் வசந்தி தேவி “கல்வி மனித நேயத்துக்கும் சமத்துவ சமுதாயத்துக்கும் வழி வகுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டதை நினைவு கூறுகிறார்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20201136&edition_id=20020113&format=html )
இந்த வாரம் இப்படி- மஞ்சுளா நவநீதன்- ஐந்தாம் வகுப்பு, போப், முஷாரப், கமல் ரஜினி ரசிகர் சண்டை, மூன்றாமணி
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20201137&edition_id=20020113&format=html )
கொரில்லாவின் பூர்வ குடி வரலாறு – நிகழ்வும் புனைவும் குறித்து- யமுனா ராஜேந்திரன்- ஷோபா சக்தியின் கொரில்லா நாவல் விமர்சனத்தை மிக ஆழ்ந்த ஒன்றாக – குறிப்பாக பின் நவீனத்துவம் மற்றும் படைப்பாளியின் கபட மொழி என்னும் இரு தளங்களில் அணுகி இருக்கிறார் ராஜேந்திரன். இது ஒரு அரை வேக்காட்டு நாவல் என்பதே அவர் கருத்து. சாரு நிவேதிதாவின் சீரோ டிகிரியும் இதே வகை என்றும் குறிப்பிடுகிறார்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60201131&edition_id=20020113&format=html )
பரிவும் பதற்றமும்- ந.பிச்சமூர்த்தியின் சிறுகதைகள்- பாவண்ணன்- சமூகத்தில் மனித உறவுகளில் பரஸ்பரம் காட்டும் பரிவு ஒரு புறமும் மறுபுறம் ஒழுக்கம் சார்ந்த எல்லைக் கோடுகளை ஒட்டிய பதற்றமும் பிச்சமூர்த்தியின் கதைகளில் நிரவியுள்ளன.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60201132&edition_id=20020113&format=html )
கவிதைகள்: தை மகளே காக்க வருக வருகவே- கவிமாமணி வேதம், இரவு வான்- வ.ந.கிரிதரன், அடிமை விடியல்- மனஹரன், பூமியெல்லாம் பூ- அலமேலு மணி, கன்னிகைத் தைக்கோர் கண்ணூறு
அறிவியலும் தொழில் நுட்பமும்- பாரதத்தின் நண்பர் அணுவுலை விஞ்ஞான மேதை- டாக்டர் டபள்யூ வி லூயிஸ்- சி.ஜெயபாரதன் கனடா, காந்த குளிர்சாதனப் பெட்டி உருவாக்கப் பட்டிருகிறது.
கதைகள்: காற்றின் அனுமதி- வண்ணதாசன்
சமையற் குறிப்பு: கோடுபலே, நிப்பிட்டு- கர்நாடகா சமையல்
ஜனவரி 20 2002 இதழ்:
மலேசியாவின் மறுக்கப் பட்ட இந்தியப் பாரம்பரியம்: -அந்தோனி ஸ்பேத்
ஜனத்தொகையில் 25% சதவீதம் இருந்தாலும் 50% உள்ள மலாய் மற்றும் 25% உள்ள சீனர்களை ஒப்பிட இந்திய வம்சாவளியினரின் நிலை மிகவும் மோசமானது. மொத்த சொத்துக்களில் 1.5% மட்டுமே இந்திய வம்சாவளியினருடையது. இந்திய தொன்மைக் கோவில்களை, பௌத்த மடாலயங்களை உரிய கௌரவம் தராது காட்சிப்படுத்தியது மலேசிய அரசு.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20201202&edition_id=20020120&format=html )
தேங்கிய குட்டையாய் காவேரி- எஸ்.ஆனந்த்- கட்டுரை காவிரியைப் பற்றியது அல்ல. கர்நாடக சங்கீதம் மற்றும் பரதம் பற்றியது. இரண்டுமே பிராமணர் அல்லாதவர் கற்கவோ கற்பிக்கவோ அல்லது வெளிப்படுத்தவோ தடை செய்யப் பட்டவை. நாதஸ்வரம் இந்தக் காரணத்தினாலேயே மார்கழி மாதக் கச்சேரிகளில் காணக் கிடைக்காது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20201203&edition_id=20020120&format=html )
ஜெயமோகனுக்கு கலாச்சாரம் மற்றும் விஷயங்கள் பற்றிய கேள்விகள்- மாலன்- இலக்கியம் மற்றும் பண்பாடு குறித்த கேள்விகளை எழுப்பி ஜெயமோகனை விவாதத்துக்கு அழைக்கிறார் மாலன்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60201201&edition_id=20020120&format=html )
இந்த வாரம் இப்படி- மஞ்சுளா நவநீதன்- தேர்தல், பட்டியல் ,ஆயுத விற்பனை, டோனி ப்ளைர், சிமோன் பொஸ் வருகை
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20201201&edition_id=20020120&format=html )
அறிவியலும் தொழில் நுட்பமும்: எவ்வாறு டாலி ஆட்டுக்கு வயதானது?
நகைச்சுவையும் வித்தியாசமானவையும்: முத்தையா முரளீதரன் 400 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த முதல் ஆஃப் ஸ்பின்னர்
கவிதைகள்: காதல் சுகமென்று – எட்வின் பிரிட்டோ, விஷப் பாய்ச்சல்-ஸ்ரீனி, ப்ராட்டின் பெருமை- கோமதி கிருஷ்ணன், அவள்/ நதி தேடும் கரை- முகுந்த்ராஜ் முனுசாமி, அதிகாலைப் பொழுதுகள்- வ.ந.கிரிதரன், இன்னொரு இருள் தேடும் – திலக பாமா ,இரண்டாம் முறை- இரா.ரமேஷ் குமார், கண்ணகி- பசுபதி, மீண்டுமொரு காதல் கவிதை- கே.ஆர்.விஜய், இன்னொரு வேனிற் காலம் – சேவியர்.
கதைகள்: மொக மொகவென்று சடை வைத்த வெள்ளை முடி ஆடுகள்- அ.முத்துலிங்கம், நதி மூலம், ரிஷி மூலம்- கே.ஆர்.ஐயங்கார், நனையாத சில நதிகள்- மனஹரன், குமாரவனம் பாவண்ணன்
சமையற் குறிப்பு: மாஹ்ஷே -அராபியப் பலகாரம்
ஜனவரி 27,2002 இதழ்:
நந்தன் வழி பத்திரிக்கையில் வந்த “கண்ணகி” கட்டுரைக்கு பதில்- கண்ணகி பற்றி ஞாநி ஜூ.வி. மற்றும் திண்ணையில் எழுதிய கட்டுரையை ஒட்டி அவரைப் பிற்போக்கானவர் என்று நந்தன் வழி பத்திரிக்கையில் வந்த கட்டுரைக்கு காட்டமான பதில் தருகிறார் ஞாநி.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20201271&edition_id=20020127&format=html )
தலைவர்களே.. படிக்காதீர்கள் பேசுங்கள்- கிரன் பேடி –
கிரன் பேடி அம்மையார் கலந்து கொண்ட ஒரு மாணவருக்கான பேச்சுப் போட்டியின் தலைப்பு ” இந்தியா உலகத்துக்கான மனித வளத்தை உருவாக்குகிறதா?” தலைமை தாங்கிய கவர்னர் (மேற்கு வங்கம்) சம்பந்தமில்லாத எதையோ தமது உரையாகப் படித்து அமர்ந்தார். இப்படித் தொலை நோக்கோ அல்லது அக்கறையோ இல்லாத அணுகுமுறையே இளைய தலைமுறை வெளிநாட்டுப் படிப்பு என்று வெளியேறக் காரணம்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20201272&edition_id=20020127&format=html )
முதலமைச்சர் போன்ற பதவிகளுக்குத் தேவையான பதவிக்கால வரையறை (term limits) -சின்னக் கருப்பன்- முதலமைச்சர் பதவிக்கு 6 ஆண்டுகள் அதிக பட்சம் என்பது போல ஒரு வரையறை வேண்டும். திரும்பத் திரும்ப ஒருவரே முதல்வராக வருவது வளர்ச்சிக்கு உதவாது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20201273&edition_id=20020127&format=html )
புதிய சமுதாயமும் இளைஞர்களும்- பவளமணி பிரகாசம்- கூட்டுக் குடும்பப் பெரியவர் அறிவுரை அல்லது நல்ல ஆசிரியர் கூறும் ஒழுக்கம் பற்றிய கதைகள் இவை எதுவுமே இல்லாமல் ஒரு தலைமுறை மேற்கத்திய நாகரிக மோகத்துக்கு இரையாகிக் கொண்டிருக்கிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20201274&edition_id=20020127&format=html )
இந்த வாரம் இப்படி- மஞ்சுளா நவநீதன்- ஆண்டிப்பட்டி, புத்தக விழா, அக்னி, மனோரமா
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20201275&edition_id=20020127&format=html )
கலாச்சாரம் பற்றிய மாலன் கேள்விகளுக்கு பதில்- ஜெயமோகன்
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60201271&edition_id=20020127&format=html )
இலங்கைத் தமிழ்ப் படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியீட்டு விழா- என்.கே.மகாலிங்கம் ரொறொன்றோ
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60201272&edition_id=20020127&format=html )
பிற வழிப் பாதைகள்- கோபால் ராஜாராம் – “விஷ்ணுபுரம்” மற்றும் “என் குருநாதர் “பாரதியார் ” ஆகிய நூல்களுக்கான விமர்சனம். விஷ்ணுபுரம் ஒரு பக்கம் தத்துவக் கண்ணோட்டமுடனான சாண்டில்யன் அல்லது கல்கி நாவலின் வடிவத்தையும் மறுபக்கம் ஐரோப்பியத் தத்துவம் மற்றும் சிந்தனையை மறுதலிக்கும் பார்வையையும் கொண்டது. இது கீழை நாட்டுத் தத்துவங்களை மீட்கும் ஒரு முயற்சியே. பாரதியாரால் பூணூல் அணிவிக்கப் பட்ட கனகலிங்கம் மற்றுமொருவராக ஒரு மாரியம்மன் கோயில் பூசாரிக்கும் பாரதியார் பூணூல் அணிவித்தார் என்பதை நினைவு கூர்ந்து அவருடன் தான் இருந்த பல தருணங்களைப் பற்றி எழுதியிருக்கிறார்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60201273&edition_id=20020127&format=html )
பிப்ரவரி 3, 2002 இதழ்:
என் தமிழ் திரைப்பட ரசனையும் தங்கர் பச்சானின் அழகியும்: ஜெயமோகன்- அழகி படத்தைப் பாராட்டும் விமர்சனம்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20202031&edition_id=20020203&format=html )
நிறைய கடவுள்கள் கொண்ட அமைதித் தீவு பாலி- மைக்கல் ரிச்சர்ட்ஸன்- 80% இந்துக்கள். கர்மாவை நம்புகிறவர்கள். பிற மதத்தினர் இருந்தாலும் பாலியில் மதப் பிரச்சனை இல்லை. ஏனெனில் இந்து மதம் பரப்பப்படுவதில்லை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20202032&edition_id=20020203&format=html )
ரத்தமும் சோகமும் பெருகிய இந்தோனேஷியாவின் வருடம் 2001 – பில் குயெரின்- இஸ்லாமியர் எதிர் கிறிஸ்தவர் , டட்ச் எதிர் ஏனையர் எனப் பல்வேறு குழுக்கள் இந்தோனேசியாவில் உள் நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ளன. ஊழலில் ஊறிய ஆட்சியாளர்கள் இதன் தீர்வைப் பற்றிக் கவலைப் படவில்லை. உலக அமைப்புகள் மட்டுமே தீர்வு காண இயலும்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20202033&edition_id=20020203&format=html )
இந்தியாவின் நிலையான மெதுவான பொருளாதார முன்னேற்றம்-பிலிங் பெளரிங்- அர்ஜென்டைனாவுக்கு ஆன நிலை இந்தியாவுக்கு ஆகாது. தனியார் மயமாக்கலிலும் உலக முதலீடு அல்லது கடன் இவற்றையும் இந்தியா நிதானமாகவே கையாள்கிறது. இது திவாலாகாமல் நிச்சயமான ஆனால் நிதானமான வளர்ச்சி காணும் இந்தியா.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20202034&edition_id=20020203&format=html )
இந்த வாரம் இப்படி- மஞ்சுளா நவநீதன்- அமெரிக்க சௌதி அரேபிய உறவு, சிதம்பரத்தின் நான்கு யோசனைகள், இந்திய சீன உறவு, பாகிஸ்தானில் பத்திரிக்கையாளர் கடத்தல், உலகப் பொருளாதார சம்மேளனமும், உலகச் சமூக சம்மேளனமும்
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20202035&edition_id=20020203&format=html )
மலேசியத் தமிழ் பள்ளிக்கூடங்களின் மோசமான நிலை- மருத நாயகம்- MIC- மலேசிய இந்திய காங்கிரஸ் என்னும் அமைப்பு தமிழ் பள்ளிக் கூடங்களில் மாணவர் தேர்ச்சி பெறாத போது ஆசிரியர்களை மேம்படுத்தி நிர்வாக வழிகளில் தீர்வு காண வேண்டும். இப்போது உயர்கல்வியில் சீனர்களும் மலேசியரும் வாய்ப்பு பெருகின்றனர். அதிக மதிப்பெண் இல்லாத தமிழ் மாணவர் பின் தங்கி விடுகின்றனர்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20202037&edition_id=20020203&format=html )
விஷ்ணுபுரம் விவாதமும் மீட்பு வாதமும்- ஜெயமோகன்- கோபால் ராஜாராம் கட்டுரைக்கு ஜெயமோகன் பதில். விஷ்ணுபுரம் வாசகர்களின் அங்கீகரிப்பால் மேலும் வாசிக்கப் பட்டுப் புகழ் பெற்றது. இடது சாரி அணுகுமுறையில் இது மீட்பு வாதமாகத் தெரியலாம். விஷ்ணுபுரம் மீட்பை அல்ல ஆழ்ந்து நம் பண்பாட்டை விவாதிக்கும் நூல்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60202033&edition_id=20020203&format=html )
விஷ்ணுபுரம் குறித்த கோ ராஜாராமின் கருத்துகள் பற்றி- ஜீவ ஆனந்தம்- புராண பாரம்பரியத்திலும் போக் பாரம்பரியத்திலும் உள்ள நுட்பமான குறியீடுகளால் உருவாக்கப் பட்ட கவித்துவம் தான் விஷ்ணுபுரத்தின் சிறப்பு.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60202032&edition_id=20020203&format=html )
சூத்திர பார்ப்பனர்களும் பிராமண சூத்திரர்களும் – மஞ்சுளா நவநீதன்- பரமசிவன், ஞாநி, அருணாசலம் ஆகியோர் ஹிந்து அடையாளமான பெயர்களையே மாற்றிக் கொள்ளாமல் எந்த விதத்தில் பெரியாரின் சீடர் ஆகப் போகிறார்கள்?
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20202036&edition_id=20020203&format=html )
அறிவியலும் தொழில் நுட்பமும்- ஆப்பிரிக்காவின் மிக வினோதமான மரம், வானலைத் தொடர்பு வல்லுனர் மார்க்கோனி- ஜெயபாரதன்
நகைச்சுவையும் வித்தியாசமானவையும்- திரைப்பட விமர்சனம்- பம்மல் கே. சம்பந்தம், இந்திய நாகம், சொன்னார்கள்
கவிதைகள்: முடிக்கக் கூடாத கவிதை-புகாரி, வ்ழித்துணை- பசுபதி, பனி பொழுதில்- தேன் சிட்டு, மன்னிப்பே தண்டனை- பசுபதி, குட்டாஸ்-ஸ்ரீனி, காத்திருக்க வேண்டுமன்றோ- பவளமணி பிரகாசம், இவன் யாரோ- கே.ஆர்.விஜய், நண்பா-சேவியர், ஒத்திகைகள்- மதுரபாரதி, காண்பமோ வன்னி மண்ணில் வசந்தமே- வ.ந.கிரிதரன், புது மரபு- அனந்த்
கதைகள்- வெற்றிடம்- திலக பாமா, ஒரு நாள் கழிந்தது- புதுமைப் பித்தன், வழித்துணைவன்- மைக்கேல்
சமையற் குறிப்பு- ஆப்பிள் சாஸ்
பிப்ரவரி 10 இதழ்: ( இனி வாசிப்பில் தேர்ந்தெடுத்த கட்டுரைகளை மட்டும் பார்க்கலாம். இந்த வாரம் இப்படி போன்றவை அவ்வப் போது படிக்கவே ஏற்றவை. கதை, கவிதைகள் பட்டியல் ஒரே சொடுக்கில் வாசகர் காணக் கூடியவையே. இந்த மாற்றத்தால் கட்டுரையின் நீளம் அளவாக வாசிக்க ஏதுவாக இருக்கும் இல்லையா?)
பெரியார் பற்றிய பல்வேறு புரிதல்கள் பற்றிய மஞ்சுளா நவநீதன் கட்டுரைக்கு எதிர்வினை: ஞாநி
மிகவும் காட்டமான கட்டுரை மற்றும் எதிர்வினை. சாரமாக இரண்டைச் சொல்லலாம். ஒன்று ஞாநி பெரியார் தம் காலத்தில் பயன்படுத்திய ஆயுதங்கள் அப்போது தேவைப் பட்டவை. இரண்டாவது பெரியாரைத் தெலுங்கர் என்று குறிப்பிடும் ம.ந. அவர் கன்னடத்தைத் தாய் மொழியாகக் கொண்டவர் என்று ஏன் தெரியவில்லை என்று கேள்வி எழுப்புகிறார் ஞாநி. பிறப்பின் அடிப்படையில் பெரியார் எப்படி ஒரு சாதியினரைத் தாக்கலாம் என்னும் முடிவடையாத விவாதத்தின் ஒரு கண்ணி ம.ந.வினுடையது. ஞாநி இவ்வளவு காட்டமாக பதில் தந்திருக்க வேண்டாம். மூத்த பத்திரிக்கையாளரும் சமூக ஆர்வலரும் அவர்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20202101&edition_id=20020210&format=html )
தொன்னையைக் கொண்டு பாயசம் குடிக்கலாம் – கடலைக் கடக்க முடியாது (ஜெயமோகன் பதில்களுக்கு எதிர்வினை)- மாலன்- தான் எழுப்பிய கலாசாரம் பற்றிய கேள்விக்குத் தன் தரப்பு பதில்களை ஜெயமோகன் தரவே இல்லை. மேலும் அவர் எந்த மொழி என்பது அவரது அடையாளச் சிக்கல். அவரது சாய்பு எதன் மீது என்பதே விடை. சமாதானம் என்பது வணிகப் பத்திரிக்கைகளில் வெளிப்படையாகவும் சிறு பத்திரிக்கைகளில் குழு அரசியல் அடிப்படையிலும் கண்டிப்பாக இருக்கத்தான் செய்கிறது. யாருக்காக எழுதுகிறோம் என்பதை உணர்ந்தே பாரதியார் செயற்பட்டார். அவர் வழி போவதும் போகாததும் உம் முடிவு.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=202021013&edition_id=20020210&format=html )
திலகபாமாவின் கவிதைகள் ஒரு மதிப்புரை- பொன்னீலன்- திலகபாமாவின் முதல் கவிதைத் தொகுதியில் பெண்ணடிமை எதிர்ப்பு, குழந்தைகளின் விளையாட்டில் குழந்தைத்தனம் இல்லாமல் இருப்பது என பல பரிமாணங்களில் கவிஞரின் படைப்புகள் உள்ளன.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60202101&edition_id=20020210&format=html )
எனக்குப் பிடித்த கதைகள் -1- புதுமைப்பித்தனின் ‘மனித யந்திரம்’- பாவண்ணன்- ‘மனித யந்திரம் ‘ கதையில் வீட்டில் மாதப் பற்றாக்குறையுடனேயே காலம் தள்ளும் ஒரு கணக்குப் பிள்ளை, ஒரு நாள் இரவு (வழக்கமாக அவர் தான் கடையைப் பூட்டுவார்) கல்லாவைப் பூட்டும் முன் கடைப் பணத்தை வீட்டுக்காக எடுத்துக் கொண்டு படபடப்புடன் ரயில்வே ஸ்டேஷன் வரை போனவர் திரும்பி வந்து பணத்தை வைத்து விட்டு முதலாளி வீட்டுக்குப் போய் விடைபெற்றுச் செல்கிறார். அரைத் தூக்கத்தில் இருக்கும் முதலாளியும் இயந்திரமாக விடை சொல்கிறார். பாவண்ணன் மனதை இந்த இயந்திரத் தன்மை சமூகத்தின் எல்லா அடுக்குகளிலும் எல்லா இடங்களிலும் தென்படுவதாகத் தொடுகிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60202103&edition_id=20020210&format=html )
பிப்ரவரி 17 2002 இதழ்:
அப்துல் கபார் கான்- அறியப்படாத அமைதிப் புறா- அமிதாப் பால் (தமிழில் கல்பனா சோழன்) சிறுவயது முதலே முற்போக்கு சிந்தனை உள்ள மதத் தலைவர்களால் ஈர்க்கப் பட்டவர் கான். காந்திய வழியைத் தமதாகக் கொண்டு பஷ்துன் (பதான் ) இன மக்களை அறவழியில் போராட வழி நடத்தியவர். இவரது அமைப்பான குடாய் கிட்மட்கார் 1930 ஏப்ரலில் செய்த போராட்டத்தின் போது ஒரே சமயத்தில் 200 பேர் கொன்று குவிக்கப் பட்டனர். அப்போதும் அவர்கள் வன்முறைக்கு மாறாமல் அஹிம்சை வழி சென்றனர். கான் தம் வாழ்நாள் முழுவதும் இந்தியப் பிரிவினையை எதிர்த்தவர்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20202171&edition_id=20020217&format=html )
சிரிப்பு வருது: கேலிக்கு எதிரான மனுஷ்ய புத்திரனின் பார்வை- மஞ்சுளா நவநீதன்- பம்மல் கே சம்பந்தம் என்னும் படத்தில் வரும் கேலிகளை எதிர்த்து அம்பலம் என்னும் பத்திரிக்கையில் மனுஷ்ய புத்திரன் எழுதியிருக்கிறார். நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார் ம.ந.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20202174&edition_id=20020217&format=html )
நேபாளியப் பெண்கள் கருத்தடையை சட்டரீதியாக்கக் கோரிப் போராடுகிறார்கள்- கருக்கலைப்பு குற்றம் நேபாளத்தில் , பரம்பரைச் சொத்தில் மகளுக்குப் பங்கு கிடையாது. இவற்றை எதிர்த்து நேபாளப் பெண்கள் போராடுகிறார்கள்
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20202175&edition_id=20020217&format=html )
கலாச்சாரம், செவ்வியல் இன்னபிற.. மாலனுக்கு பதிலாக சில- ஜெயமோகன் வாசகருக்கு ஏற்ற எழுத்து என்பதை நிராகரிக்கிறார். “தொழிலாளருக்கு ஏற்ற எளிய மொழியில் எழுத வேண்டும்” என்ற யோசனையை கார்க்கி ஏற்கவில்லை. புரட்சி போலவே இலக்கியமும் முக்கியமானதே. அது நீர்த்துவிடக் கூடாது என்று கருதுகிறார். சமாதானங்கள் என்பது வேறு எல்லாமே சமாதானங்கள் என்பது வேறு.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60202172&edition_id=20020217&format=html )
பிறவழிப்பாதை- (மொழிபெயர்ப்புகளின் பொற்காலம், மீண்டும் விஷ்ணுபுரம்)- கோபால் ராஜாராம் – பல இந்திய உலக இலக்கியங்கள் தமிழில் மொழிபெயர்ப்பாவது குறித்து மகிழ்ச்சி. சதங்கை என்னும் பத்திரிக்கை நாகர்கோவிலில் இருந்து வருகிறது. ஜெயமோகனின் விஷ்ணுபுரம் வணிகப் பத்திரிக்கையில் வரும் சரித்திர நாவல்களின் genre ஐ இலக்கிய தளத்தில் பயன்படுத்திய சோதனை முயற்சி என்றே குறிப்பிட்டேன். மறுவாசிப்பில் என்னைத் திருத்திக் கொள்ளவும் தயாராயிருக்கிறேன். (கோபால் ராஜாராமின் இந்தப் பெருந்தன்மை நம்மை மிகவும் நெகிழ வைக்கும்)
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60202173&edition_id=20020217&format=html )
எனக்குப் பிடித்த கதைகள்-2- லியோ தால்ஸ்தாயின் மோகினி (குழப்பமும் தெளிவும்)- பாவண்ணன்- ஒரு பண்ணை விவசாயி (பண்ணையார்) கதை இது. அவர் திருமணத்துக்கு முன்பு ஒரு பெண்ணைத் தொடர்பில் வைத்திருக்கிறார். திருமணத்துக்கு முன் அவள் பணம் தரப் பட்டு வேறு ஊருக்கு அனுப்பப் படுகிறாள். தனது திருமணத்துக்குப் பின் ஒரு நாள் அவளை எதேச்சையாய் சந்திக்கும் இவர் அவளுடன் பழையபடி உறவு வைக்கிறார். இப்போது அவளுக்கும் திருமணம் ஆகி விட்டது. தன் மனைவியுடன் இருக்கும் போதெல்லாம் குற்ற உணர்வில் தவிக்கும் அவர் ஒரு நாள் தன்னை நிம்மதி இல்லாமல் செய்த அந்த மோகினியைக் கொல்வதே தீர்வு என துப்பாக்கியை எடுக்கிறார். ஒரு கணம் யோசிக்கும் போது அழகாக இருப்பது அவளது குற்றமே இல்லை என்று படுகிறது. தன் தலையில் சுட்டுக் கொண்டு செத்து மடிகிறார். அவர் சிந்தித்து வெகு நாளாக மனதை உறுத்திய பிரச்சனைக்கு அடைந்த தீர்வு அவருக்கு உள்ளேயே இருந்த ஒன்று தான். அது வெளிப்படும் கணம் தால்ஸ்தாயின் படைப்பில் ஆழமாகக் காணப் படுகிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60202174&edition_id=20020217&format=html )
பிப்ரவரி 24 2002 இதழ்: அடுப்பிலிருந்து வாணலிக்கும் திரும்பவும்: ஜெயமோகன்- ஞாநி சிற்றிதழ் தொடங்குவதின் பின்னணியில் தமிழில் இதழியல் எந்த மாதிரியான செயற்பாட்டைக் கொண்டுள்ளன என்று அலசுகிறார் ஜெயமோகன். சுதந்திர சிந்தனையும் யாரையும் சாராத தனித்துவம் தரும் ‘திமிர்’ ஞாநியிடம் உண்டு என்று அவரைப் பாராட்டுகிறார்.(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20202241&edition_id=20020224&format=html )
தெய்வ நிந்தனை குற்றத்திற்காக பாகிஸ்தான் சிறையின் தூக்குமர நிழலிலிருந்து ஒரு கடிதம்: டாக்டர் யூனுஸ் ஷேக்- ஷேக் “உலக மனிதத்தன்மை மற்றும் ஒழுக்க நெறிக்கான ” அமைப்பின் இயக்குனர் பாபு கோகேனிக்கு எழுதிய கடிதம். மிகவும் மனதை வருத்தப் படுத்தும் இந்தக் கடிதம் மிக சுருக்கமாகத் தன் தரப்பில் குற்றமில்லை என்பதை எடுத்துரைக்கும் கடிதம். மதவாதிகளைத் திருப்திப் படுத்துவதற்காக ஆதாரமின்றி குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனை பெற்றார் ஷேக்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20202242&edition_id=20020224&format=html )
இந்தியாவின் தாமஸ் பெயின்: பெரியாரின் அறிவியக்கம்: கோபால் ராஜாராம்- சாதி வேறுபாட்டைக் களையும் எண்ணமே இல்லாமல் எல்லோரும் சமம் என்று போதித்த சங்கரரின் தத்துவத்தைத் தவிர்த்து இந்திய சிந்தனை மரபு இல்லை என்னும் ஜெயமோகனின் தரப்பை எப்படி ஏற்க முடியும். பெரியாரின் உலகம் ஒரு கனவுலகம்.அறிவின் சார்பை மட்டுமே கொண்ட உலகம் இறந்த காலப் புராண இலக்கியங்களிலிருந்து தன்னை வெட்டிக் கொண்டு புதிய ஒரு உலகை நிறுவ முயல்கிறது. பெரியாரை தாமஸ் பெயினுடன் தான் ஒப்பிட முடியும்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20202243&edition_id=20020224&format=html )
நிலவியல் பிரச்சனைகள் மிகுந்த நெல்லை மாவட்டமும் கூடங்குளம் அணுமின் நிலையமும் டாக்டர் இரா.ரமேஷ் எம் பி பி எஸ்- அமெரிக்க மற்றும் உலக அளவிலான பாதுகாப்பு அம்சங்களை நிலவியல் அடிப்படையில் அதாவது அந்த நிலத்தில் நிகழ்ந்த இயற்கைப் பேரழிவுகள் மற்றும் அவை மறுபடி வரும் வாய்ப்புகள் என்ற ஆய்வை முறையாக மேற்கொள்ளாமல் இந்தத் திட்டம் செயற்படுத்தப் படுகிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20202244&edition_id=20020224&format=html )
ந.பிச்சமூர்த்தியின் தாய் – சுரக்கும் அன்பும் சுரக்காத பாலும் – பாவண்ணன்- ஒரு ரயில் பயணத்தில் ஒரு ஏழைத் தாய் மார்பில் பால் சுரக்க முடியாத அளவு பட்டினியில் இருந்தவளாய் தன் குழந்தை அழுது அழுது- பால் அருந்த முயன்று முடியாமற்போய் தூங்கும் நிலை. மற்றொரு புறம் ஒரு வசதியான நபர் தாயில்லாத மூன்று குழந்தைகளுடன் பயணிக்கிறார். அவரின் கைக்குழந்தை ஓயாமல் இரும ஓரிரு சொட்டு பிராந்தியைக் கொடுத்துத் தூங்க வைக்கிறார். பின்னர் ஒரு கிழவியிடம் அதைக் குறிப்பிடவும் செய்கிறார். ஆனால் மறுபடி அவர் குழந்தை அழுத அவர் அந்த “மருந்தைக் ” கையில் எடுக்கும் போது இந்த ஏழைத் தாய் தடுத்து அந்தக் குழந்தையைக் கையில் வாங்கி அணைத்துக் கொள்கிறாள். வாழ்வு என்னும் பயணத்தில் மனித உறவுகளில் தாயன்பை நாம் அப்பழுக்கற்றுக் காணும் தருணம் இது. ரயில் பயணம் வாழ்க்கைப் பயணத்தைக் குறிக்கும் படிமம்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60202241&edition_id=20020224&format=html )
- அறிதலின் தரத்தையும் அளவையும் உயர்த்துவதை நோக்கி… ரவிக்குமாரின் இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள்
- தாகூரின் கீதப் பாமாலை – 95 உன் தேசப் பறவை.
- காரைக்குடிகம்பன் கழகத்தின்சார்பில் அகில உலகக் கருத்தரங்கு – கட்டுரை தரநிறைவுநாள்15-1-2014
- திண்ணையின் இலக்கியத் தடம்-15
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-15 உபப்லாவ்யம் இருவர் அணிகள்
- ஜாக்கி சான் 22. புது வாழ்வு – நியூ பிஸ்ட் ஆப் புயூரி
- ஜெயந்தி சங்கர் எழுதிய சிறுகதைகளின் முழுத்தொகுப்பு விமர்சன அரங்கு
- உடைபட்ட மகாபாரதம் – ப.ஜீவகாருண்யனின் “கிருஷ்ணன் என்றொரு மானுடன்” நாவலை முன்வைத்து
- தவிர்க்க இயலாத தமிழர்தம் பட்டங்கள்
- நிர்வாணி
- மருத்துவக் கட்டுரை கிள்ளிய நரம்பு
- நீங்காத நினைவுகள் – 27
- திருப்பாவை உணர்த்தும்வழிபாட்டுநெறி
- சில ஆலமரங்களுக்கு விழுதுகள் இல்லை
- புகழ் பெற்ற ஏழைகள் – 39
- என்னை ஆட்கொண்ட இசையும், நானும்
- கிராமத்து ராட்டினம், பூ மலரும் காலம் ஜி.மீனாட்சியின் இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் –
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் ஈரோப்பாவில் நீர் எழுச்சி ஊற்றுகள் முதன்முறைக் கண்டுபிடிப்பு
- மருமகளின் மர்மம் 9
- சீதாயணம் நாடகப் பின்னுரை – படக்கதை – 13
- கண்ணீர் விட்டோம் வளர்த்தோம்
- பெண்மனதின் அரூப யுத்தம் ‘அம்மாவின் ரகசியம்’
- இடையனின் கால்நடை
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 55 ஆதாமின் பிள்ளைகள் – 3
- தாயகம் கடந்த தமிழ் – அனைத்துலக மாநாடு ஜனவரி 20, 21, 22, 2014 ஆகிய நாள்களில் கோயம்புத்தூர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில்
- விளக்கு விருதுக்குரியவராக எழுத்தாளர் பெருமாள் முருகன்