காதல் வாழ்விலும் இல்லற வாழ்விலும் தலைவன் தலைவிக்குச் சமபங்கு உண்டு. உடலும் உயிருமாகவும் இரு கண்களாகவும் திகழ்பவர்கள்; இவர்கள். ஒருவரைவிட்டு ஒருவரை உயர்த்திக்காண இயலாது. தராசின் இரு தட்டுகள் போன்றவர்கள். இவர்கள் இணைந்திருக்கும்போதுதான் இல்லறம் சிறக்கும். தலைவன் தலைவியின் களவிலும் கற்பிலும் உறுதுணையாகத் திகழ்பவள் தோழியாவாள். வழிகாட்டியாகஇ ஆறுதல் கூறுபவளாக கண்டிப்பவளாகத் தோழி இருக்கிறாள். “ஒருத்தி ஒருவனுடன் வாழ்தலாவதுஇ தனக்குரிய மற்றொரு பாதியை தன்னுடன் பொருத்துவதாகும். அவ்வொருபாதி எத்தகையதாயிருத்தல் வேண்டும். அது பொருந்தியதாய் இருத்தல் வேண்டும். பொருந்திய […]