எனக்கு நேரம் சரியில்லை எனக்கணித்த ஜோதிடகளுக்கு நான் நன்றியே சொல்வேன் நேரம் சரியில்லை எனும்பொழுதெல்லாம் நான் கடவுளாகிவிடுகிறேன் ரொம்ப நல்லநேரம் எனும்பொழுதெல்லாம் நான் இயந்திரமாகிவிடுகிறேன் எது நல்லநேரம் என்று குழப்பமாய் உள்ளது கடவுளாய் இருப்பதைவிட இயந்திரமாய் இருப்பதையே மனித மனம் விரும்புவதாலோ. =முத்துசுரேஷ் குமார்
தற்செயலாய் ஒரு குருவிக்கூட்டைக் கண்டேன் என் பிம்பங்களை பிரித்து மேய்ந்துவிட்டது நான்கு முட்டைகள் ஒன்று உடைந்து பிறந்திருக்க அதன் கண்கள் திறக்கவில்லை இறகுகள் இல்லாத பச்சைக்குழந்தை மூக்கு இன்னும் வளரவில்லை அதற்கு உணவூட்ட துடித்த தாயின் அன்பை அனுபவத்தை, ஆசையை எந்த கடவுள் கற்றுகொடுத்தான்? முத்துசுரேஷ்