வீரயுக மாந்தர்களை வியந்தும் பாராட்டியும் எழுதப்பட்டிருக்கும் பல பாடல்கள் புறநானூற்றில் உள்ளன. அவற்றில் சிற்றில் நற்றூண் பற்றி எனத் தொடங்கும் பாடல் பிரபலமானது. ஆண்மகன் என்பவன் போராடப் பிறந்தவன் என்கிற தொனியும் அத்தகைய வீரனைப் பெற்ற தாய் என்கிற பெருமையும் ஒருங்கே வெளிப்படும் பாடல் அது. இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பிருந்த சூழல் அப்பாடலில் சித்தரிக்கப்பட்டிருந்தது. அந்தச் சாயலில் இன்றைய சூழலை சற்றே மாற்றி எழுதிப் பார்த்திருக்கிறார் வளவ. துரையன். புறநானூற்றில் மகனைப்பற்றிய கேள்விக்கு வீரமரபைச் சேர்ந்த தாய் […]
பாவண்ணன் எல்லாக் காலங்களிலும் கற்பனையும் அபூர்வமான சொற்கட்டும் அழுத்தமான எளிய வரிகளும் கவிதையை வசீகரமாக்கும் சக்தியுள்ள அழகுகளாகவே உள்ளன. புதிய கவிஞராக அடியெடுத்துவைத்திருக்கும் திலகனின் மொழி அந்த அழகை வசப்படுத்தும் முயற்சியில் இடைவிடாமல் இயங்கிக்கொண்டிருப்பதற்குச் சாட்சியாக அவருடைய தொகுதி அமைந்திருக்கிறது. திலகனின் கவிதைப்பயணம் முயல்களை வேட்டையாடி வெற்றிகொள்ள நினைக்கிற பயணமல்ல. யானையை வசப்படுத்த நினைக்கிற பயணம். அந்த ஆர்வத்தையும் வேகத்தையும் அவருடைய கவிதைகள் புலப்படுத்துகின்றன. கற்பனைக்கு ஈடுகொடுப்பதுபோல அவருடைய சொற்கள் நீண்டும் மடங்கியும் புன்னகைத்தும் சீற்றமுற்றும் இரட்டைமாட்டுவண்டிபோல […]
மீட்சி என்னும் சிற்றிதழில்தான் நான் கோணங்கியின் பெயரை முதன்முதலாகப் பார்த்தேன். அதில் அவர் எழுதியிருந்த மதனிமார்கள் கதை என்னும் சிறுகதை வெளிவந்திருந்தது. நான் அதை மிகவும் விருப்பத்துடன் வாசித்தேன். தொடக்கத்திலிருந்து முடிவுவரைக்கும் ஒரே வேகம். சொந்த ஊர் ஏக்கமும் சொந்த மனிதர்கள் ஏக்கமும் எனக்குள் எப்போதும் நிறைந்திருக்கும் உணர்வுகள் என்பதால் அந்தக் கதை என்னை மிகவும் கவர்ந்தது. நான் அப்போது ஹோஸ்பெட் என்னும் ஊரில் வேலை பார்த்துவந்தேன். அந்த ஊரில் வெங்கடேஷ் என்னும் நண்பரிருந்தார். வழக்கறிஞர் […]
(டி.ஆர்.மகாலிங்கம்) சினிமா என்பது நல்லதொரு கலைவடிவம் என்றொரு கூற்று உண்டு. மாறாக, அதை ஒரு வணிகம் என்று சொல்லக்கூடிய கூற்றும் உண்டு. தொடர்ந்து நகரும் காட்சிகளை மிகச்செறிவாக ஒருங்கிணைத்து உருவாக்கும் சினிமாவில் ஒளி, ஒலி, நடிப்பு, ஒப்பனை, காட்சி, உரையாடல், மெளனம் என எல்லாவற்றையும் கச்சிதமாகவும் நேர்த்தியாகவும் பயன்படுத்தி ஒரு படைப்பை உத்வேகத்துடன் உருவாக்குவதற்கான வாய்ப்புகள் மிகுதியாக உள்ளன. அதனால் அதை கலைவடிவம் என்று சொல்வதே பொருந்தும் என்பது முதல் அணியினரின் […]
பூமி நள்ளிரவில் நடுவழியில் பயணச்சீட்டுக்குப் பணமில்லாத பைத்தியக்காரனை இறக்கிவிட்டுப் பறக்கிறது பேருந்து இருளைப் பூசிக்கொண்ட திசைகளில் இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கத்துக்கும் அந்த மூலையிலிருந்து இந்த மூலைக்கும் மாறிமாறிப் பார்க்கிறான் அவன் நடமாட்டமே இல்லாத தனித்த சாலையில் பிறகு நடக்கத் தொடங்குகிறான் கைவிரித்து நிற்கும் மரங்கள் புதர்கள் மண்டிய மேடு தவளைகள் இரைச்சலிடும் அல்லிக்குளம் பார்த்தினியம் மணக்கும் வெட்டவெளி இவை பிரதிபலிக்கும் நிலவின் ஒளியை அவன் கண்கள் நிரப்பிக்கொள்கின்றன […]
1.தீராத புத்தகம் எழுத்தையே உச்சரிக்கத் தெரியாதவன் தன் கனவில் ஒரு புத்தகத்தைப் படிப்பதாகச் சொல்கிறான் நினைவிலிருந்து அதன் வரிகளை மீட்டி உருக்கமான குரலில் கதைசொல்கிறான் அந்தப் புத்தகத்தின் பெயர் யாருமே கேட்டிராததாக இருக்கிறது அதன் கதை யாருக்குமே அறிமுகமற்றதாகவும் இருக்கிறது ஆனாலும் அவனைப் பொருட்படுத்துகிறவர்கள் யாருமற்றதாக இருக்கிறது அந்த ஊர் அவர்களது புறக்கணிப்பைப்பற்றி அவனுக்குத் துளியும் வருத்தமில்லை அவர்களுக்குச் சொல்ல நினைத்ததை குருவிகளிடமும் அணில்களிடமும் கூச்சமில்லாமல் சொல்லத் தொடங்குகிறான் சில […]
கிட்டா என்கிற கிருஷ்ணராவின் வாழ்க்கை ஒரு முரட்டுநதியைப்போன்றது. சில இடங்களில் அச்சமூட்டும் வேகம். சில இடங்களில் அமைதி தழுவிய ஓட்டம். பள்ளம் கண்ட இடத்தில் பாய்ச்சல். வளைந்து திரும்பும் தருணங்களில் முரட்டுத்தனம். அக்கிரகாரத்தில் கிட்டா ஓர் அதிசயப்பிறவி. நாவலின் தொடக்கத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு காட்சி அவருடைய மன அமைப்பைப் புலப்படுத்தும் தன்மையில் உள்ளது. தீண்டாமை உச்சத்தில் இருந்த முப்பதுகளில், குளத்தில் விழுந்துவிட்ட சிங்காரவேலுப்பிள்ளையின் மனைவியைக் காப்பாற்ற ஒருவர்கூட முன்வரவில்லை. குளிக்கவும் தண்ணீர் எடுக்கவும் சென்ற பெண்கள் […]
விட்டல்ராவ் எழுதிய போக்கிடம் நாவலில் ஓராசிரியர் பள்ளியொன்றைப்பற்றிய சித்தரிப்பு இடம்பெறுகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரைக்குமாக மொத்தத்தில் எழுபது எண்பது பிள்ளைகள் அந்தப் பள்ளியில் படிக்கிறார்கள். பயிற்சியில்லாத ஆசிரியர்கள் ஒன்றிரண்டு மாதங்கள் வருவதும் பிறகு நின்றுவிடுவதுமாக இருந்ததால் அந்தப் பள்ளி செயல்படாத பள்ளியாகவே இருக்கிறது. அந்தச் சூழலில் சுகவனம் என்னும் இளைஞர் பயிற்சி பெற்ற ஆசிரியராக அந்தப் பள்ளிக்கு வருகிறார். மாணவமாணவிகளுக்கு பேச்சில் இருக்கிற ஆர்வம் படிப்பதிலோ எழுதுவதிலோ இல்லை. வகுப்பறை எப்போதும் […]
1.வேண்டுதல் சாக்கடைக்குள் என்றோ தவறி விழுந்து இறந்துபோன குழந்தையை காப்பாற்றச் சொல்லி கதறி யாசிக்கிறாள் பைத்தியக்காரி அவசரத்திலும் பதற்றத்திலும் நடமாடும் ஆயிரக்கணக்கான முகங்களை நோக்கி 2. உயிர்மை நிறுத்தி வைத்த குழலென செங்குத்தாக நிமிர்ந்திருக்கும் தொகுப்புவீட்டின் ஏழாவது மாடியின் சன்னலருகே காற்றின் இன்னிசை பரவத் தொடங்குகிறது அலைஅலையாய்த் தவழும் இசையில் அறையே நனைகிறது அறையின் ஒவ்வொரு புள்ளியிலும் உயிர்மையின் முளை சுடர்விடுகிறது எங்கெங்கும் உறைகிறது இன்பத்தின் ஈரம் சுவர்கள் கதவுகள் மாடங்கள் மேசைகள் நாற்காலிகள் நிலைமறந்து நினைவிழந்து […]
மனம் பாகாக உருகிக் கரைந்துவிட்டது என்கிறோம். மனம் ஒரு குரங்காகத் தாவுகிறது என்கிறோம். மனம் ஒரு கன்றுக்குட்டியென துள்ளுகிறது என்றும் சொல்கிறோம். மனம் நெருப்பாக எரிகிறது என்றும் மனம் பாலைவனமாக வறண்டுபோய்விட்டதாக என்றும் மனம் பாறையென இறுகி உறைந்துவிட்டது என்றும் சொல்கிறோம். பல சமயங்களில் மனம் எரிமலையாக வெடித்துவிட்டது என்றுகூட குறிப்பிடுகிறோம். மனத்தின் இயக்கத்தைக் குறிப்பிட இப்படி ஏராளமான சொற்கள் புழக்கத்தில் உள்ளன. அது நிலையற்றது என்பதாலேயே, அதன் இயக்கத்தைக் குறிப்பிட இத்தனை சொற்கள் உருவாகியிருக்கலாம் என்று […]