பொ.மனோ கோபி இணையத்தில் தான் படித்துக்கொண்டிருந்த கட்டுரை ஒன்றை என்னிடம் கணனித் திரையில் காண்பித்தான். அதில், “நாம் ‘நிதர்சனம்’ எனக்கருதுவது எமது பிரக்ஞை வியாபித்துள்ள பரிமாணம் சார்பானது. ஒவ்வொரு பரிமாணத்திலும் அது வெவ்வேறு தளங்களை எடுக்கின்றது. எமது முப்பரிமாணத்திற்குட்பட்ட பிரக்ஞையூடாக நாம் கருதும் ‘நிதர்சனம்’ வேற்றுப் பரிமாணங்களில் தன் பிரக்ஞையை வியாபித்திருக்கும் ஒரு மனிதனுக்கு போலியானதாவே தோற்றம்பெறும். அம்மனிதன் கருதும் நிசர்சனம் அவனது பிரக்ஞை வியாபித்திருக்கும் பரிமாணத்துடன் மாறுபடக்கூடியது. எனவே பிரக்ஞை வியாபித்திருக்கும் பரிமாணப்படிநிலைகள் […]
பொ.மனோ பகுதி 1 : பரிணாமத்தின் பல பரிமாணங்கள் உயிர்வாழ்வதற்கு ஏற்ற சூழலைக்கொண்ட ஒரே ஒரு கிரகமாக தற்போதுவரை ஏகோபித்த உரிமையை கொண்டாடிவரும் நாம் வாழும் பூமியானது தன்னகத்தே பல மில்லியனுக்கும் மேற்பட்ட உயிரினங்களைக் கொண்டு காத்துவருகிறது. நான்கு பில்லியன் வருடங்களுக்கு முன்பு ஒரு கலத்தைக்கொண்ட அங்கியாக தோற்றம் பெற்ற உயிரின ஆட்சியானது இன்று பல சிக்கலான கட்டமைப்புகளையுடைய தாவரங்கள், விலங்குகளாக பரிணாம வளர்ச்சியடைந்து அவற்றின் உச்சமாக ஆற்றிவு படைத்த மனிதனை உருவாக்கியுள்ளது. […]
பரிணாம வளர்ச்சியில் மனிதன் அடைந்த மிகப்பெருமாற்றல் மனமாகும். சில உளவியலாளர்களின் கருத்துப்படி மனமானது நமது மூளையில் உருவாகும் ஒட்டுமொத்த சிந்தனைகளின் மையமாக கருதப்படுகிறது. ஆனால் உடலில் இதன் அமைவிடத்தையோ அதன் உருவத்தையோ இதுவரை எவராலும் அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. மேலும் சில பெளதீகவியலாளர்களின் கருத்துப்படி மனமானது எம்மைச் சுற்றியுள்ள கோளவடிவான சிந்தனைவெளி என்றும் கொள்ளப்படுகிறது. அந்தவகையில் அவ்வெளியின் கனவளவானது அவரவர்களின் எண்ணங்களின் பரிமாணங்களிற்கேற்ப சுருங்கி விரியும் தன்மையுள்ளதென்றும் அதன் கனவளவு குறுகும்போது மனதின் ஆற்றல் பெருமளவு அதிகரிக்கின்றதென்றும் நம்பப்படுகிறது. […]
பொ.மனோ முற்குறிப்பு : இக்கட்டுரையில் உள்ளடங்கியிருக்கும் தகவல்கள் ஒருசாராருக்கு தமது வாழ்நாளில் கேள்விப்பட்டிராத, ஒரு சுத்தப் பைத்தியக்காரத்தனமான, நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட விடயமாக தோற்றமளிக்கலாம். ஆனால் இது சம்பந்தமான ஆர்வமுள்ள மறுசாராருக்கு ஒரு புதுச்சிந்தனை ஓட்டத்தை தூண்டிவிடுவதாக இருக்குமென்பதுடன் இக்கட்டுரை ஒரு விருந்தாகக்கூட அமையலாம். அவையெல்லாம் அவரவர்கள் கொண்ட அறிவையும் அதில் ஊற்றெடுக்கும் சிந்தனைகளின் பரிமாணங்களையும் அடிப்படையாகக் கொண்டது. இங்கு நான் வேற்றுகிரக உயிரினங்கள் உண்டு என்று அவற்றின் இருப்பை நிறுவ வரவில்லை. இக்கட்டுரை அத்தளத்தினை தாண்டி அவர்களுடன் […]