பொன் சுந்தரராசு, சிங்கப்பூர் வானை முட்டிநின்றது ‘வெஸ்டின்’ கட்டடம். அறுபதாவது மாடியில் தன் அறைக் கதவைத் திறந்து கொண்டு நளினமாக நுழைந்து நாற்காலியில் அமர்ந்தாள் அஞ்சலி. ‘அஞ்சலி ச்சீவ் எக்சகுட்டிவ்’ பெயர்ப்பலகை கண்சிமிட்டி அவளை வரவேற்றது. வானத்தின் நீலத்தை வாரிக் கொண்டிருந்த கண்ணாடிச் சன்னல்கள் குளுமையை வாரி இரைத்தன. தொலைபேசியைக் கையில் எடுத்தாள். “பீட்டர் நீங்க வரலாம்..” என்று அழகான ஆங்கிலத்தில் அழைப்பு விடுத்தாள். அடுத்த நிமிடம் பீட்டர் அவள் முன். “குட்மார்னிங் மேடம்..” பீட்டர் பிரியத்தோடு […]