அழையா விருந்தாளிகள்

எனது தனிமையின் மௌனம் தற்போது வருகை பு¡¢ந்த உங்களை வெறுப்புக்குள்ளாக்கியிருக்கலாம் வயிற்கதவை தட்டிக்கொண்டிருக்கும் உங்களின் கோபத்தையும் பொருட்படுத்த முடியாமலிருக்கிறேன் வீடு தேடி வந்தும் என் பாராமுகத்தால் அவமானப்படுத்தப்படுகிறீர்கள் என்பதையும் நான் கவனிக்காமல் இல்லை அசைவற்றிருக்கும் நான் பார்வையைக்கூட உங்கள் பக்கம் சுழலவிடாமல்…