வினைகளின் சருகுகளைத் தீண்டிடவென புதிதாக விழுந்திருக்கிறது ஐங்கூர் பழுத்த இலை சிவப்புக் கலந்த நிறமதற்கு உடைசல்களின் சிதிலங்களுக்கிடையில் சிக்கியிருக்கிறது புதுத் தளிரொன்றும் எப்படிப் பூத்ததுவோ பசுமையெரிந்த செடிகளுக்கிடையில் எதற்கும் வாடிடா மலரொன்று அன்றியும் எந்தக் கனிக்குள் இருக்கின்றது அடுத்த மரத்துக்கான விதை எல்லா வாசனைகளும் பூக்களாகி நாசிக்குள் நுழையும் கணமொன்றில் செழித்த ஏரியின் கரைகளைக் காக்கின்றன ஓர மரங்கள் வசந்தத்தின் முகில் கூட்டங்களலையும் சுவரோவியங்களில் தோப்புக்கள் எவ்வளவு ரம்யமானதாயிருக்கின்றன இங்கு நீர் தேங்கிய குட்டைகளில் தலைகீழாக வளருகின்றன […]
‘அந்த மரத்தை அவன் நன்றாக அறிவான். அந்த இடத்திற்கு அநேக தடவைகள் வந்திருக்கின்றான். அவனுடைய தந்தையின் மரணத்தின் பின்னர் அந்தக் குரல் அவனுடன் அடிக்கடி பேசியிருக்கின்றது. மிவிஹாகி என்ற உருவத்திலே தனக்கு ஒரு நங்கூரம் கிடைக்கக் கூடும் என்கிற ஒரேயொரு நம்பிக்கை மட்டுமே அவனைத் தடுத்து வைத்திருந்தது….அவன் கயிற்றினைத் தயார் செய்துவிட்டான்.’ நியோரோகே கயிற்றினைத் தயார் செய்துவிட்டான். அவனது வாழ்வின் எல்லா நம்பிக்கைகளும், சிறு பராயம் தொட்டு இருந்து வந்த கனவுகளும் தோற்கடிக்கப்பட்ட பிற்பாடு, வலிந்த கைகளின் […]
ஒளி பட்டுத் தெறிக்கும் முகம் பார்க்கும் கண்ணாடி சுமந்துவரும் விம்பங்கள் பற்றி மெல்லிய காற்றிற்கசையும் திரைச்சீலைகளிடமும் சொல்லப் படாக் கதைகள் இருக்கின்றன தரை,சுவர்,தூண்,கூரையெனப் பார்த்திருக்கும் அனைத்தும் வீட்டிற்குள்ளான ஜீவராசிகளின் உணர்வுகளையும் அத்தனை ரகசியங்களையும் அறிந்தே இருப்பினும் வாய் திறப்பதில்லை ” ஆதித்யா, உன் தனிமை பேசுகிறேன். கேட்கிறாயா? ” ” நான் தனித்தவனாக இல்லை. இந்தச் சாலையோர மஞ்சள் பூக்கள், காலையில் வரும் தேன்சிட்டு, புறாக்கள், கிளிகள், மைனாக்கள், எனது […]
இலங்கையில் இன்னுமொரு இனக் கலவரத்தைத் தூண்டக் கூடிய, பிரிவினை வாத சக்திகளின் சூழ்ச்சிகள் சிறிது சிறிதாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. இந்த இனக் கலவரம், இஸ்லாமியர்களையும் அவர்களது வளர்ச்சியையும் குறி வைத்திருக்கிறது. இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந் நிலை தொடருமானால், இன்னும் சில தசாப்த காலங்களுக்குள் இலங்கையில் பெரும்பான்மையானோராக முஸ்லிம்கள் ஆகிவிடுவார்கள் என்ற அச்சம் இனவாத சக்திகளை பெருமளவில் அச்சுருத்தியிருக்கிறது. இந் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும், முஸ்லிம்களை […]
வெள்ளி வீதி – (அல்ஜீரியா நாட்டுச் சிறுகதை) கலாநிதி அப்துல் எய்த் தாவூது தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை அவள் கட்டிலில் அங்குமிங்கும் புரண்டபடி படுத்துக் கிடந்தாள். வீடு அடர்ந்த இருளில் மூழ்கிப் போயிருந்தது. அவளது கணவன் கடைத் திண்ணையிலிருந்து இன்னும் திரும்பி வரவில்லை. அவன் வரும்வரைக்கும் கதவைத் திறந்து வைக்க மறந்து போனது அவளுக்கு நினைவுக்கு வந்தது. அவள் மனதுக்குள் ஒரு முறை திட்டித் தீர்த்தாள். அவளது அன்றாட வேலைகளுக்கு முடிவேதுமற்றதாயிருந்தது. விறகு சேகரித்து […]
விவாகரத்துக் கோரி நிற்கும் ஒரு இஸ்லாமியத் தம்பதியிடமிருந்து காட்சி ஆரம்பிக்கிறது. விவாகரத்துக்கான காரணம் தமது பதினொரு வயது மகளின் எதிர்காலம். ஈரானின் நெருக்கடியான சூழ்நிலையில் தனது மகள் வாழ்வதை விரும்பாத மனைவி ஸிமின், தனது கணவன் நாதிருடனும் மகள் தேமேயுடனும் வெளிநாடு சென்று வாழத் தீர்மானிக்கிறாள். கணவனால் அவர்களுடன் வர முடியாத சூழ்நிலை. ஞாபகமறதி (அல்ஸீமர்) நோயினால் பாதிக்கப்பட்ட முதியவரான தனது தந்தையைப் பார்த்துக் கொள்ளும் கடமை தனக்கு இருப்பதால் அவளது வெளிநாட்டுப் பயணத்திற்கு உடன்பட மறுக்கிறான். […]
கவிஞர் ஃபஹீமா ஜஹானும், நானும் இணைந்து மொழிபெயர்த்த கவிஞர் மஞ்சுள வெடிவர்தனவின் ‘தலைப்பற்ற தாய்நிலம்’ எனும் சிங்களக் கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல், இவ் வருடத்தின் முதலாவது தொகுப்பாக தற்பொழுது வெளிவந்துள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன். எழுநா, நிகரி பதிப்பகங்களின் இணைந்த வெளியீடாக வெளிவந்திருக்கும் இத் தொகுப்பின் நூல் வெளியீட்டு விழா, எதிர்வரும் மாதங்களில் கீழுள்ள நாடுகளில் நடைபெற உள்ளது. ஏப்ரல், 2013 – லண்டன், நோர்வே மே, 2013 – கனடா, ஸ்விட்ஸர்லாந்து இலங்கை, […]
பறந்திடப் பல திசைகளிருந்தனவெனினும் அப் பேரண்டத்திடம் துயருற்ற பறவையைத் தேற்றவெனவோ சௌபாக்கியங்கள் நிறைந்த வழியொன்றைக் காட்டிடவெனவோ கரங்களெதுவுமிருக்கவில்லை ஏகாந்தம் உணர்த்தி உணர்த்தி ஒவ்வொரு பொழுதும் காற்று ரணமாய்க் கிழிக்கையில் மௌனமாகத் துயர் விழுங்கும் பறவை மெல்ல தன் சிறகுகளால் காலத்தை உந்தித் தள்ளிற்றுதான் முற்காலத்திலிருந்து தேக்கிய வன்மம் தாங்கிட இயலாக் கணமொன்றில் வெடித்து தன் எல்லை மீறிய பொழுதொன்றில் மிதந்தலையும் தன் கீழுடலால் மிதித்திற்று உலகையோர் நாள் பறவையின் மென்னுடலின் […]
நான் அப்படிக் கேட்டிருக்கக் கூடாதுதான். மிகவும் சோகத்துக்குள்ளான அந்த நண்பரது கண்கள் எனது கண்களை நேரே பார்த்தன. பின்னர் தாழ்ந்துகொண்டன. அறையிலிருந்த என் கணவர் ‘என்னடா இது?’ என்பது போல முறைப்புமில்லாமல் அதிகளவான திகைப்புமில்லாமல் கேள்வியோடு என்னைப் பார்த்தார். ‘பொண்ணு வீட்டுக்கும் இந்த போட்டோவைத்தான் கொடுத்தீங்களா?’ என்ற எனது கேள்வி, இயங்கிக்கொண்டிருந்த குளிரூட்டியின் சத்தத்தோடு யன்னல்களேதுமற்ற அந்த அறையின் எல்லாப்பக்கங்களிலும் பதில்களற்று உலாவருமென எனக்கு எப்படித்தெரியும்? நான் விளையாட்டாகத்தான் அதைக் கேட்டேன். சில நிகழ்வுகளையொட்டிக் கேள்விகள் தானாக […]
எறிகல்லோடு சேர்ந்து வீழ்ந்த தாரகையொன்று வர்ணத் திரைச்சீலைக்கப்பால் சமையலறையில் உறைகிறது வரவேற்பறையிலிருந்து எழும்புகின்றன படிக்கட்டுக்கள் யன்னலால் எட்டிப் பார்க்கும் வெயிலுக்கு ஏறிச் செல்லப் பாதங்களில்லை கூடத்தில் வீட்டின் பச்சையைக் கூட்டுகிறது பூக்கள் பூக்காச் சிறு செடியொன்று காலணி தாங்கும் தட்டு தடயங்களைக் காக்கிறது ஒரு தண்ணீர்க் குவளை தோலுரித்த தோடம்பழச் சுளைகள் நிறைந்த பாத்திரமொன்று வாடாத ஒற்றை ரோசாப்பூவைத் தாங்கி நிற்கும் சாடி வெண்முத்துக்கள் சிதறிய மேசை விரிப்புக்கு என்னவோர் எழில் […]