நீ கதிரறுக்கும் வயல்பூமியை மஞ்சளால் போர்த்திய அம் மாலை நேரம் எவ்வளவு அழகாயிருந்தது இறுதியாக செஞ்சாயத் தேனீரும் கறுப்பட்டித் துண்டும் சுமந்து வந்து அருந்த வைத்த உன் மனைவியின் காலடித் தடத்தில் முழுவதுமாக இருள் உறைந்த உனது தற்கொலைக்கு முன்னதான அக் கணம் வரை பயிர்களை விதைக்கையில் நீயெழுப்பிய இனிய கீதம் அம் மலைச்சரிவுகளில் இன்னும் அலைகிறது மேய்ப்புக்காக நீயழைத்துச் செல்லும் செம்மறிகள் ரோமம் மினுங்க வந்து காத்துக் கிடந்தன களைகளகற்றுமுன் வலிய […]
மயிர் கூச்செரியும் கடுங்குளிரில் நிலவுமறியாது பனிக்கட்டிகளுக்குள் மறைந்திருக்கும் கண்ணீர்ப் பனித்துளி நான் ஆயிரக்கணக்கில் தாரகைகள் பூக்கும் ஆகாயம் அனுப்பும் ஒளிக்கீற்று மேல் காதலுற்று சூரியனுக்கே காதல் கடிதங்களை வரையும் கண்ணீர்ப் பனித்துளி நான் நாளை உதிக்கவிருக்கும் விடிகாலையில் உனது வெளிச்சத்தை முத்தமிட்டு அந்த உஷ்ணத்திலேயே உருகிக் கரைந்துவிடும் கண்ணீர்ப் பனித்துளி நான் – ரொஷான் தேல பண்டார தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்
பார்வையின் எல்லைக்குள் எங்கும் மழையேயில்லை எரியும் மனதை ஆன்மீகத்தால் குளிர்விக்க ப்ரிய நேசத்தால் நிறைந்த இன்னுமொரு மழை அவசியமெனக் கருதுகிறேன் நான் சற்று நீண்டது பகல் இன்னும் மேற்கு வாயிலால் உள்ளே எட்டிப் பார்க்கும் பாவங்களை அதற்கேற்ப கரைத்து அனுப்பிவிடத் தோன்றுகிறது வாழ்நாள் முழுவதற்குமாக சுமந்து வந்த அழுக்குகள் அநேகம் வந்த தூரமும் அதிகம் எல்லையற்றது மிதந்து அசையும் திசை இன்னும் நிச்சலனத்திலிருக்கிறது நதி எனினும் கணத்துக்குக் கணம் மாறியபடியும் […]
மலைப்பாம்புக் குட்டிகளென விழுதுகளைப் படர விட்ட மரத்தின் ஆதிக் கிளைகள் காட்சி கூடத்தில் வனம் பார்க்கும் சிற்பங்களாகின்றன விருட்சங்களை வெட்டிச் செல்லும் விஷமேறிய பார்வைகளை சிற்பி காடுகளெங்கிலும் சுமந்தலையும் செம்மாலை நேரங்களில் வன மரங்களின் இலைகளினூடு சூரியனாடும் மஞ்சள் நடனம் எவ்வளவு ப்ரியத்துக்குரியது நச்சேற்றிய சிற்பியின் பாதங்களிலேயே வீழ்ந்து கிடக்கும் மரங்களில் அவனது எண்ணங்களிலிருந்தும் ஆற்றல்களிலிருந்தும் உருவாகிய வனக் கொலைகளுக்கான ஆயுதங்கள் தீட்டப்படுகையில் வன்மங்கள் கூராகின இங்கு தாயின் கரத்திலிருந்துகொண்டே தடவிப் பார்க்கிறது புராதனச் சடங்குகளின் பிரிந்த […]
விடிகாலையிலெழுந்து வேலைக்குப் போகும் அப்பா இருள் சூழ்ந்த பிறகு வீட்டுக்கு வருவார் விடிகாலையிலெழுந்து வேலைக்குப் போகும் அம்மா இருள் சூழ்ந்த பிறகு வீட்டுக்கு வருவார் விடிகாலையிலெழுந்து பள்ளிக்கூடம் செல்லும் நான் பள்ளிக்கூடம் விட்டு வகுப்புக்கள் முடிந்து இருள் சூழ்ந்த பிறகு வீட்டுக்கு வருவேன் எமக்கென இருக்கிறது நவீன வசதிகளுடனான அழகிய வீடொன்று – தக்ஷிலா ஸ்வர்ணமாலி தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை
மேலுதட்டில் வியர்வைத் துளிகளரும்பிய கருத்து ஒல்லியான இளம்யுவதிகளைக் காண்கையில் இப்பொழுதும்… அதிர்ந்து போகிறதென் உள்மனது தவறொன்று நிகழ்ந்தது உண்மைதான் நினைவிருக்கிறதா அந் நாட்களில் தாங்கிக்கொள்ள முடியாத குளிர் விசாலமாக உதித்த நிலா பொன் நிற மேனியழகுடன் எனதே சாதியைச் சேர்ந்த எனது அரசி எமதிரட்டைப் படுக்கையில் ஆழ்ந்த உறக்கத்தில் தனியாக குழந்தையொன்றை அணைத்தபடி அரண்மனை மாடியில் நின்று கீழுள்ள காட்சிகளைப் பார்க்கின்ற கனவொன்றில் அவள் திளைத்திருக்கக்கூடும் இருந்திருந்து இப்பொழுதும் […]
ஒரு கோட்டினைப் போலவும் பூதாகரமானதாகவும் மாறி மாறி எதிரில் விழுமது ஒளி சூழ்ந்த உயரத்திலிருந்து குதிக்கும்போது கூடவே வந்தது பின்னர் வீழ்ந்ததோடு சேர்ந்து ஒரு புள்ளியில் ஐக்கியமாகி ஒன்றாய்க் குவிந்ததும் உயிரைப் போல காணாமல்போன நிழலில் குருதியொட்டவே இல்லை – எம்.ரிஷான் ஷெரீப்
அன்பின் ஆசிரியருக்கு, வணக்கம். இலங்கை தொழிற்சங்க மத்திய நிலையத்தின் இலக்கிய இணைக் குழுவானது, அகில இலங்கை ரீதியில் நடத்திய ‘வியர்வையின் ஓவியம்’ இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் விழா நேற்று 01.11.2012 பிற்பகல் 2.30 மணிக்கு இலங்கை, மருதானை, டவர் அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது.சிறுகதை, கவிதை, பாடல், காவியம், புகைப்படம் ஆகிய பிரிவின் கீழ் நடத்தப்பட்ட போட்டிகளில் முதற்பரிசு பெற்றவர்களுக்கு விருதுகளோடு, சான்றிதழ்களும், பரிசுகளும், ஏனையவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் இந்நிகழ்வின் போது வழங்கப்பட்டன. […]
முடிவேயற்று மிகவும் நீண்ட அந்தப் பேரூந்துப் பயணத்தில் வாந்தியெடுத்த, காய்ச்சலுக்கு தெருவோரக் கடையொன்றில் தேயிலைச் சாயம் குடித்த, அப்பாவைத் தேடி அம்மாவுடன் *பூஸாவுக்குச் சென்ற… கல்லெறிந்து மாங்காய்ப் பிஞ்சுகளை பையன்கள் பறித்துப் போகையில் அவர்களுக்கொரு பாடம் புகட்டிட அப்பா இல்லாததால் உதடுகளைக் கடித்து பெருமூச்சைச் சிறைப்படுத்திக் கொண்ட… ஒருபோதும் தான் காண அழாத அம்மா மறைவாக அழுவதைக் கண்டு உறங்காமல் உறங்குவது போல் தலையணை நனைய அழுத… ஆற்றில் சுழிகள் உடையும் […]
சந்திரசோம நீ காலமானதும் பத்மினி அழவில்லை வேறு பெண்களென்றால் நிலத்து மண் தின்று உளறி உளறி ஓலமிட்டு ஒப்பாரி வைத்தழுது துயருறும் விதம் நினைவிலெழ பத்மினி உன்னை நேசிக்கவில்லையென கவலை கொண்டாயோ சந்திரசோம எனினும் நீயறியாய் சந்திரசோம மூன்று நான்கு மாத காலத்துக்குள் பேச்சு வார்த்தை குறைந்து நடக்கவும் முடியாமல் போய் திடீரெனச் செத்துப் போனாள் பத்மினி – தக்ஷிலா ஸ்வர்ணமாலி தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை