காற்றுக் குதிரைகள் கிளர்ந்து கிளப்பிய தூசுப் படலத்தினுள் சேர்த்து வைத்திருந்த இனிய பாடல்களும் அந்தி விசும்போடு சிதைந்தழிந்தன பகல் முழுதும் தீக் கண்களால் பார்த்திருந்த வெயில் மேகக் கூட்டத்துக்கு மேலும் நீர் கோர்த்தது கதவுகளைத் திறந்தேதான் வைத்திருக்கிறேன் எந்த ஓவியனாவது வந்து வெயிலைப்போல அல்லது சாரலைப்போல ஏதேனும் கிறுக்கிச் செல்லட்டும் ஒரு தபால்காரனாவது வந்து ஏதேனும் தந்துசெல்லட்டும் ஒரு வண்ணத்துப்பூச்சி பூக்களின் வாசனைகளோடு வந்துசெல்லட்டும் அன்றேல் மெதுநடைப் பூனையொன்றேனும் – எம்.ரிஷான் ஷெரீப் mrishanshareef@gmail.com
அவள் கல்வி கற்பதுவும் நான் கல்வி கற்கும் நிலையத்திலேயேதான். முதலில் அவளை ஒரு கறுப்புப் பெண்ணாக அறிந்து கொண்டேன். பின்பு அவளது நடத்தைகளை ஆராய்ந்து ‘சேட்டை’ப் பகுதியையும் சேர்த்துக் கொண்டேன். ஆகவே அவள் சேட்டைக்காரக் கறுப்புப் பெண்ணாகவேயானாள். எனக்கு அவளைப் பிடிக்கவில்லை. அதற்கு அநேக காரணங்கள் இருந்தன. அவளது கூந்தலுக்குச் செய்திருந்த அலங்கோலம்! அது எவ்விதத்திலும் என் மனதைக் கவரவில்லை. காதுகளில் தொங்கும் பெரிய காதணிகள்! அவற்றுக்கும் நான் விருப்பமில்லை. கூடாரத் துணியால் தைக்கப்பட்ட இறுக்கமான காற்சட்டையும் […]
அடுத்த கணம் நோக்கி எதிர்பார்ப்புக்களேதுமற்று பார்த்திருப்பதைத் தவிர முதலாமவனாகவோ இறுதியானவனாகவோ ஆவதற்கு நான் பிரார்த்தித்திருக்கவில்லை எவ்வளவுதான் சிரம் தாழ்த்தி அமர்ந்திருந்தபோதிலும் அவர்களது அன்பற்ற குட்டுக்களிலிருந்து தப்பிக்கொள்ள முடியவில்லை சித்திரவதைக் கூடத்தில் கழித்த முதல் மணித்தியாலத்திலேயே எண்ணங்கள் காணாமல் போயின துயர்தோய்ந்த இறந்த கால நினைவுகள் உடல்சதையைச் சுழற்றும் மோசமான வேதனைகள் மரண ஓலங்கள் அசாதாரண உருவங்களோடு மனங்கவர் வர்ணங்கள் பயங்கரக் கனவுகளிடையே உணர்வுகளைத் தூண்டுகின்றன பயங்கரத்தைத் தவிர இங்கிருப்பது மனிதத்தன்மையில் கையேதுமற்ற […]
இருளின் மொழியைப் பேசும் தண்ணீர்ச் சுவர்களை ஊடறுக்கும் வலிமைகொண்ட நீர்ப் பிராணிகளை உள்ளடக்கிய வனத்தின் நீரூற்றுக்கள் பெரும்பாலும் மௌனமானவை எப்பொழுதேனும் வனம் பற்றும் நாளில் பரவியணைக்கப் போதா நீர் நதியாகிப் பெருக்கெடுத்தோடுவதில் யாது பயன் காலம் காலமாக அழிந்த மர விலங்குடல்களை செரித்து தேயாப் பசி கொண்ட கானகத்தின் எப் பெருவிருட்சத்தின் வேர் அகன்ற வாயைக் கொண்டதுவோ புராதனச் சிதிலங்கள் தொக்கி நிற்கும் இக் காட்டிலெது நீ அண்டும் குருவிகள் எக்கணமும் […]
1. நானொரு கப்பற்படை மாலுமி எனது விழிகளைச் சாப்பிட்டன மீன்கள் பார்ப்பதும் அழுவதும் என்னைப் பற்றியதாகவே உள்ளன எனது வாழ்க்கையில் நான் உயர்ந்திருந்தேன் என்னை நீங்கள் நம்பாவிடில் எனது ஆடைகளைப் பாருங்கள் உயிரற்ற ஏனையவர்களுக்கும் எனக்கும் எந்த வித்தியாசமுமில்லையென்பதால் நான் படைவீரனொருவனும் தானெனச் சிலர் கூறினர். முன்னொரு காலத்தில் நாம் வீடுகளில் வசித்தோம் தற்போது நாம் சுவர்களைத் தாண்டி வந்து கதவுகளுக்கு வெளியே உள்ளோம் அத்தோடு இன்னுமொருவர் கூறினார் அவர்களை நம்பாதீர் அவர்கள் […]
வானக் கரிய வாவியில் மின்னி நீந்திடும் சிலவேளை வீழ்வதாய்ப் போக்குக் காட்டும் ஊணுண்ணிப் பட்சியென மீன்கொத்தி நிலா மேற்கிலிருந்து கிழக்காய் நகர்ந்து நகர்ந்து கொத்திட காலையில் செவ்வாகாயம் வெறிச்சோடிக் கிடக்கும் இடித்திடித்துக் கொட்டிய நேற்றின் இரவை நனைத்த மழை உனதும் எனதுமான ஏகாந்தப் பொழுதொன்றை நினைவுறுத்திக் கொண்டேயிருந்ததில் அச்சமுற்றிருந்தேன் நான் மின்சாரம் தடைப்பட்டெங்கும் அந்தகாரம் மேவிய பொழுதில் கண்மூடி விழித் திரைக்குள் உனையிறக்கியிருந்தேன் உதறப்பட்ட காலத்தின் துளிகளோடு உன் மீதான எனது சினங்களும் ஆற்றாமைகளும் வெறுப்பும் விலகியோடிப் […]
ஈரம் கசியும் புல்வெளியெங்கிலும் நீர்ப்பாம்புகளசையும் தூறல் மழையிரவில் நிலவு ஒரு பாடலைத் தேடும் வௌவால்களின் மெல்லிய கீச்சிடலில் மூங்கில்கள் இசையமைக்கும் அப் பாடலின் வரிகளை முகில்கள் மொழிபெயர்க்கக் கூடும் ஆல விருட்சத்தின் பரந்த கிளைக் கூடுகளுக்குள் எந்தப் பட்சிகளின் உறக்கமோ கூரையின் விரிசல்கள் வழியே ஒழுகி வழிகின்றன கனாக்கள் நீர்ப்பாம்புகள் வௌவால்கள் இன்னபிறவற்றை வீட்டுக்குள் எடுத்துவரும் கனாக்கள் தூறல் மழையாகிச் சிதறுகின்றன ஆவியாகி பறவைகளோடு சகலமும் மௌனித்த இரவில் வெளியெங்கும் – எம்.ரிஷான் ஷெரீப்
பாகங்களாக உடைந்திருக்கிறது அவ் வனத்தின் பட்டுப்போன மரமொன்றினூடு தென்படும் முழு நிலவு விருட்சங்களால் ஈரலிப்போடு உறிஞ்சப்படுகின்றன வனத்தின் எல்லை மர வேர்களை தழுவும் சமுத்திரத்தின் அக் கணத்து அலையில் இருளை ஊடறுத்துச் சிதறும் ஒளிக் கிரணங்கள் காற்று அணைக்கப் பாடுபடும் அந்த ஓடத்து விளக்கினை ஏற்றியவன் கரங்களிலிருந்து விசிறப்படும் வலையினில் சிக்கிக் கொள்கிறது தண்ணீரில் முளைத்த பௌர்ணமி வேட்டைக்காரனுக்குத் தப்பிய தேன்கூடொன்று ஒளிந்திருக்கும் மலைக்குன்று இதுவல்லவோ எந்தப் பாதச் சுவடுகளும் தொட்டிராச் சருகுக் குவியல் சலசலத்து எழுப்பும் […]
நிவேதாவிற்கு, எப்படியிருக்கிறாய் போன்ற சம்பிரதாயமான வார்த்தைகள் கொண்டு இதனை ஆரம்பிக்கமுடியவில்லை. உனக்கென எழுதும் இக்கடிதம் உன்னைச் சேரும் வாய்ப்புக்களற்றது. எனினும் மிகுந்த பேராசையுடனும் ஏதோ ஒரு நம்பிக்கையுடனும் இதனை எழுத வேண்டியிருக்கிறது. இதை எழுதும் இக்கணத்தினாலான என் மனநிலையை என்னால் உனக்கான இவ்வெழுத்தில் வடிக்க முடியவில்லை. ஆனால் ஏதேனும் உனக்கு எழுதவேண்டும் என்ற ஆவல் மட்டும் உந்தித் தள்ளிக் கொண்டேயிருக்கிறது. எழுத்தின் முதுகினில் அத்தனை பாரங்களையும் இறக்கிவைக்க வேண்டுமெனவும் தோன்றுகிறது. எத்தனையோ எழுதுகிறேன்.ஆனால் உனக்கு எழுத முடியவில்லை. […]
‘ஓ பரமபிதாவே’ துளி நம்பிக்கையும் சிதறிப்போன அன்று ஆச்சியின் அழுகை ஓலம் ஆஸ்பத்திரி வளாகத்தை அதிரச் செய்திருக்கக் கூடும் சளி இறுகிச் சிதைத்த நெஞ்சுக் கூட்டோடு வசதிகள் குறைந்த வவுனியா வைத்தியசாலை பல நூறு கிலோமீற்றர்கள் தொலைவில் அவளை கண்டிக்கு அனுப்பியிருந்தது வானமும் அதிர்ந்த நாளதில் உயர் மருத்துவம் மகளை எப்படியும் காப்பாற்றிடும் நம்பிக்கையும் ஜெபமாலையும் துணையாக ஆச்சியும் வந்திருந்தாள் பார்வையாள விருந்தினராக இருவர் மட்டுமே உள்ளனுப்பப்படும் அவர்களுக்கென்று யாரும் வராத வாயிலையே பார்த்தபடி எப்பொழுதும் கட்டிலருகே […]