author

திண்ணையின் இலக்கியத் தடம்-13

This entry is part 27 of 32 in the series 15 டிசம்பர் 2013

சத்யானந்தன் செப்டம்பர் 2,2001 இதழ்: பெரியார்?- அ.மார்க்ஸ் நூல் குறித்த எனது கருத்து- மா.ச.மதிவாணன்- பெரியார் எதிர்த் தேசியவாதி அல்லர். அதாவது தேசியத்துக்கு எதிரானவர் அல்லர். அவர் தமிழ்த் தேசியத்தை முன் வைத்தவர். (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20109022&edition_id=20010902&format=html ) இந்த வாரம் இப்படி- மஞ்சுளா நவநீதன்- 1.மூப்பனார், 2.டர்பனில் மாநாடு,3. அகதிகள், 4.தெஹல்கா, 5.திருத்தங்கள் (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20109021&edition_id=20010902&format=html ) பொருளாதரத்தின் அலை வடிவம்- ஒரு கடிதம்: டாக்டர் காஞ்சனா தாமோதரன்- அமெரிக்கா சமீபத்திய சில ஆண்டுகளில் காட்டிய வளர்ச்சி அபரிமிதமானது ஆனால் அடிப்படையான ஸ்திரத்தன்மை […]

திண்ணையின் இலக்கியத்தடம் -12

This entry is part 18 of 26 in the series 8 டிசம்பர் 2013

சத்யானந்தன் ஜூலை1 2001 இதழ்: கதைகள்: செக்குமாடு – குறுநாவலின் முதல் பகுதி- வ.ஐ.ச.ஜெயபாலன் ஜூலை 7,2001 இதழ்: ஜெயமோகனின் கன்னியாகுமரி- வ.ந.கிரிதரன்- ஒரு நாவலைப் படித்து முடித்தபின் அது வாசகர் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே ஒரு நாவலின் வெற்றியின் அளவுகோல். கற்பு என்பது பற்றிய விழுமியங்களை மு.வ., விந்தன், புதுமைப்பித்தன் , ஜெயகாந்தன் அனைவருமே கேள்விக்கு ஆளாக்கியிருக்கின்றனர். ஜெயமோகன் நாவலில் அவரது முன்னுரையைக் கருத்திற் கொள்ளாமல் பார்த்தால், நாவலை ஆபாச இலக்கியம் என்னும் […]

திண்ணையின் இலக்கியத்தடம் -10

This entry is part 4 of 24 in the series 24 நவம்பர் 2013

மார்ச் 4 2001 இதழ்: தாலிபான் செய்யும் புத்தர் சிலை உடைப்பு சரிதான்- சின்னக் கருப்பன் -தாலிபான் பார்வையில் சிலை உடைப்பு முஸ்லிம்களின் மதக் கடமை என்றால் நாம் யார் அதைக் கேட்க? (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20103041&edition_id=20010304&format=html ) இந்த வாரம் இப்படி- மஞ்சுளா நவநீதன்- அமெரிக்காவின் எம் ஐ டி பல்கலைக் கழகமும் இந்தியாவும் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபடுவது நல்ல திட்டம். 2.பாரதிதாசனுக்கு ஜாதி முத்திரை குத்த முயன்ற ஒரு ஜாதி சங்கத்தின் முயற்சியை அவரது பேரன் முறியடித்துள்ளார். […]

திண்ணையின் இலக்கியத் தடம் -9

This entry is part 1 of 28 in the series 17 நவம்பர் 2013

சத்யானந்தன் ஜனவரி 2001 இதழ்: கட்டுரைகள்: தலித் உளவியல் – கருத்தம்மா – அரசியல் கட்சிகளும் மேல் சாதியினரும் காட்டும் மரியாதையில்லாத அடித்தளமான இடத்தை தலித்துகள் ஏற்றுக்கொள்ளூம் மனநிலையிலேயே இருத்தி வைக்கப் பட்டு விட்டனர். இதிலிருந்து விடுபட வேண்டும். வர்க்கப் போராட்டம் என்று பேசும் கட்சிகள் சமூக நீதி என்று பேச முன் வருவதில்லை. கல்வி முறை, தொடர்பு சாதனங்கள் இவை எல்லாமே தலித்துகளுக்கு எதிராக ஆதிக்க சக்திகளுக்கு உதவியாகவே உள்ளன. இவற்றிலிருந்து விடுபட தலித்துகள் விழிப்புணர்வு […]

திண்ணையின் இலக்கியத் தடம் -8 நவம்பர் – டிசம்பர் -2000

This entry is part 21 of 34 in the series 10 நவம்பர் 2013

நவம்பர் – டிசம்பர் -2000 நவம்பர் 4, 2000 இதழ்: மார்க்ஸீஸம், முதலாளித்துவம், இந்தியாவின் எதிர்காலம் – ஜவஹர்லால் நேருவின் வாழ்க்கை வரலாற்று நூலின் ஒரு பகுதி – ஒத்துழையாமை இயக்கம் தோற்று சிறையில் இருக்கும் போது லெனின் தலைமையில் ரஷியா காணும் முன்னேற்றத்தை நேரு பாராட்டுகிறார். பொருளாதாரக் கொள்கைகளில் கம்யூனிஸமே சிறந்தது. ஆனாலும் நேருவுக்கு அங்கு ஜனநாயகக் குரல் நசுக்கப் படுவதில் உடன்பாடில்லை. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=200110411&edition_id=20001104&format=html ) அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒரு கறைபடியாத கரம் : ரால்ஃப் […]

திண்ணையின் இலக்கியத் தடம் -6 ஜுலை 2, 2000 இதழ்

This entry is part 26 of 26 in the series 27 அக்டோபர் 2013

ஜுலை 2, 2000 இதழ்: கட்டுரை: அதிபார்வை: வெங்கட ரமணன்: கிட்டப் பார்வை, தூரப் பார்வை என இரண்டு விதமான பார்வைக் குறைகளை நீக்கும் கண்ணாடிகளையே நாம் அறிகிறோம் – அணிகிறோம். அதிபார்வை என்பது புதிய கண்டுபிடிப்பு. லேசர் ஒளிக்கதிர்கள் மூலம் விழிகளின் தற்போதைய திறனை ஆராய்ந்து, தொலை நோக்கிகளில் பயன்படுத்தப் படும் “லென்ஸ்” களுக்குக் கிட்டத்தட்ட இணையான லென்ஸ்களை உருவாக்கி ஒருவரை வெகு தூரத்தில் இருக்கும் கட்டிடத்தைக் கூடத் துல்லியமாகப் பார்க்க வைக்கும் விஞ்ஞானக் கண்டுபிடிப்பை […]

திண்ணையின் இலக்கியத் தடம் -5

This entry is part 19 of 31 in the series 20 அக்டோபர் 2013

சத்யானந்தன் மே 7, 2000 இதழ்: கட்டுரை : இலங்கைப் போர் சின்னக்கருப்பன். பங்களாதேஷ் விஷயம் போல ஏன் இலங்கைத் தமிழர் பிரச்சனையை அணுகவில்லை என்று கேள்வி எழுப்புகிறார் சி.க. இந்திய அரசு இதில் தனி ஈழ ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தால் அது காஷ்மீரில் தனி நாடு கோருவோருக்கு வலு சேர்த்துவிடும் என்று கருதுகிறது. காஷ்மீரில் நடப்பது நில ஆக்கிரமிப்பு. பங்களாதேஷில் நடந்ததோ வேறு. உருது பேசும் பாகிஸ்தான் உருது பேசும் பீகாரிகளைத் துணைக் கொண்டு வங்க […]

திண்ணையின் இலக்கியத்தடம்-4

This entry is part 7 of 31 in the series 13 அக்டோபர் 2013

மார்ச் 5, 2000 இதழ்: கவிதைகள்: காதல் என்பது பலவிதம் – பாரி பூபாலன் மூன்றில் வேம்பு – வ.ஐ.ச.ஜெயபாலன் ஒரு குறிப்பு: தேதிவாரியான பழைய இதழ்களுக்கான சுட்டியின் வழியே பழைய இதழ்களை வாசித்து எழுதி வருகிறேன். ஆனால் சில சமயம் பிந்தைய இதழில் குறிப்பிடப்படும் இதழ்கள் முந்தைய இதழின் வாசிப்பில் கிடைக்கவில்லை. உதாரணத்துக்கு 27 மார்ச் 2000 இதழில் இதாலியோ கால்வினோ பற்றிய முந்தைய கட்டுரையை கோபால் ராஜாராம் குறிப்பிடுகிறார். ஆனால் அதற்கு முன் அப்படி […]

திண்ணையின் இலக்கியத் தடம் -3

This entry is part 9 of 33 in the series 6 அக்டோபர் 2013

ஜனவரி 3 2000 திண்ணை இதழ் பழ.நெடுமாறனின் “தமிழக நதி நீர் பிரச்சனைகள்” என்னும் புத்தகத்தின் 30வது பக்கம் ” மேற்கு நதிகளின் நீரை கிழக்கே திருப்பும் பிரச்சனை” என்னும் கட்டுரையாக வெளிவந்த்துள்ளது. நெடுமாறன் குறிப்பிடும் தரவு மிகவும் அதிர்ச்சி அளிப்பது. கேரள ஆறுகளில் 2500 டிஎம்சி நீர் பெருகுகிறது. 500 டிஎம்சிக்கு மேல் கேரளாவுக்கு விவசாயத் தேவை இல்லை என்கிறார். இந்த ஆறுகளை சுரங்கம் மூலமாகத் திருப்பி தமிழ்நாட்டின் கோவை, மதுரை, ராமநாதபுர மாவட்டங்களை செழிக்கச் […]

திண்ணையின் இலக்கியத் தடம் – 2

This entry is part 1 of 27 in the series 29 செப்டம்பர் 2013

நவம்பர் 6, 1999 ல் இரண்டு பதிவுகளைக் காண்கிறோம். முதலாவது பசவைய்யாவின் கவிதை – உன் கவிதையை நீ எழுது. அமரராகி விட்ட சுந்தர ராமசாமி கவிதைகளை ‘பசவைய்யா’ என்னும் பெயரில் எழுதினார் என்பது வாசகர்களுக்குத் தெரிந்திருக்கும். சென்ற பகுதியில் நாம் குறிப்பிட்டது போல நாம் இலக்கிய / சமூகக் கட்டுரைகளை மையப்படுத்துகிறோம் இத்தொடரில். மற்றொரு பதிவு சுரேஷ்குமார் இந்திரஜித்தின் “சிறுமியும் வண்ணத்துப் பூச்சிகளும்” என்னும் கட்டுரை வடிவிலான கதை. இந்தத் தலைப்பில் நாவல் எழுதிய ஜப்பானிய […]