ஒரு மலைப் பள்ளத்தாக்கில் பெரிய மான் கூட்டம் வாழ்ந்து வந்தது. அந்த மான்களில் தலைவனான ஒரு மான் அவர்களை ஒற்றுமையாக வைத்து பயங்கர விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளக் கற்றுத் தந்து மான் இனத்தைப் பேணித் தலைமை வகித்து நடத்தியது. நன்கு வளர்ந்து நீண்டும் உயரமாகவும் இருந்த அந்தத் தலைவன் மான் மற்ற மான்களுக்கு வலிமையின் சின்னமாக இருந்தது. பக்கத்து மலையிலிருந்து ஒரு சிங்கக் கூட்டம் இந்த மான்களிருந்த மலையை நோக்கி வந்து கொண்டிருப்பதைத் தலைவன் ஒரு நாள் […]
“புத்தரே. ஒரு பிட்சு எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொள்ளவில்லை தேவதத்தன்” “ஆனந்தா. .. தீட்சை பெற்று பிட்சுவாவதும், பௌத்த சங்கத்தில் இணைவது ஒரு முன்னுதாரணமாக இருப்பதற்கு. அவர்களை பின் பற்றி மக்கள் தம் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள வேண்டும். மக்கள் நிச்சயமாக பிட்சுக்களின் நடத்தை சரியில்லாத பட்சத்தில் தாங்களே அவர்களைக் கண்டிப்பதுடன் சங்கத்தில் புகாரும் செய்வார்கள்” “அது வரை?” “அது வரை பொறுமை காக்க வேண்டும் ஆனந்தா” “எந்த பிட்சுவும் மன்னர்களைத் […]
வெகுகாலத்துக்கு முன் பராக்ரமன் என்று ஒரு அரசன் இருந்தான். பெயருக்கு ஏற்றாற்போல அவன் பராக்கிரமசாலியாக விளங்கினான். தந்தை அகால மரணமடைந்ததால் இள வயதிலேயே பட்டமேற்ற அவன் தனது உறவுப் பெரியவர்களான சித்தப்பா, பெரியப்பா ஆகியோரையோ, மூத்த மந்திரிகளையோ மதிக்கவில்லை. தன் மனம் போன போக்கில் ராஜ்ஜியத்தை நடத்தினான். மாளிகையிலிருந்த வசதிகள் போதுமானதாயிருந்த போதும், தங்கத் தட்டுகளைக் கட்டிலில் பதித்தான். தனது மனைவிகளுக்கும் நடன மாந்தருக்கும் தங்களை முத்து, பவளம் என்று நகைகளால் அலங்கரித்தான். இப்படிப் பட்ட ஆடம்பரத்தினால் […]
ஆனந்தனால் தம் கண்களையே நம்ப முடியவில்லை. பசியே எடுக்கது உணவை ஒதுக்கி மிகவும் பலவீனமாயிருந்த பக்குனன், கிரிமானந்தன் இவர்கள் இருவரும் ஓலைப் பாயின் மீது விரித்த கம்பளியில் படுத்திருக்க, புத்தர் இருவருக்கும் இடையே அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார். விடிந்து வெகு நேரம் கழித்தே சூரியன் தென்பட்டான். புத்தர் எழுந்து நீராடி பிட்சைக்குச் சென்று திரும்பிய போது மருத்துவர் அவர்கள் அருகே இருந்தார். “இஞ்சிச் சாறும் வென்னீரும் தேனும் கொடுத்துள்ளேன் புத்த பிரானே! கொஞ்சம் கொஞ்சமாக இவர்கள் […]
சரித்திர நாவல் ராஜகஹத்தின் மூங்கிற் காட்டில் அனந்த பிண்டிகா புத்தரின் தரிசனத்துக்காகக் காந்திருந்தார். ஜனங்கள் நிறையவே சேர்ந்திருந்தனர். மலைச் சரிவாயிருந்தாலும் செங்குத்தாகச் சரியாததால், புத்தர் மற்றும் சீடரின் குடில்கள் உயரத்தில் எளிதாகக் கண்ணில் பட, அவரின் வருகைக்காகக் காத்திருந்தனர். முன் வரிசைக்குச் செல்ல அனந்த பிண்டிகாவுக்கு இயலவில்லை. மக்கள் கிட்டத்தட்ட ஒரு அரை வட்டமாக நெருக்கியடித்தபடி புத்தரின் நல்ல தரிசனத்தை எண்ணி உற்சாகமாயிருந்தனர். இதற்கு முன் அனந்த பிண்டிகா புத்தரின் உரையைக் கேட்டதில்லை. ஆனால் மகத நாடு […]
குளிர்காலம் என்பதால் கதிரவன் விடிந்து வெகு நேரம் கழித்தே தென்பட்டான். அன்று புகை-பனி மூட்டம் இல்லை. கம்பளி சால்வைகளைப் போர்த்தியபடி மன்னர் சுத்தோதனர், ராணி பஜாபதி கோதமி, நந்தா, ஆன்ந்தன், தேவதத்தன், அனிருத்தன், பல்லியன் பாண்டு அனைவரும் புத்தரின் குடிலின் வாயிலில் காத்திருந்தனர். புத்தர் தியானத்தில் இருந்தார். ராகுலன் மாங்காய்களைப் பொறுக்கி விளையாடிக் கொண்டிருந்தான். சேவகர்களும் பொது மக்களும் நல்ல இடைவெளி விட்டுத் தோப்பெங்கும் நிறைந்திருந்தார்கள். புத்தர் குடிலை விட்டு சாந்தம் பூரணமாக வியாபித்திருந்த நிறைமுகத்துடன் வெளியே […]
பிம்பிசாரரின் அரண்மனையில் ராஜசபை கூடியிருந்தது. மன்னருக்கு அடுத்து ராஜ குரு, பிரதான அமைச்சர், மற்ற மந்திரிகள், படைத்தலைவர் என இருக்கும் வரிசை அப்படியே இருந்தது. மன்னருக்கு இணையான ஆசனம் ஒன்று இருக்காது. இன்று அப்படி ஒன்று இருந்தது. ராஜகஹ நகரத்தில் எல்லா கிராமணிகள், இசைக் கலைஞர்கள், சிற்பிகள், புத்தரின் சீடர்கள் எனப் பலருக்கும் சபை நிறைத்து இருக்கைகள் இருந்தன. அதற்கு அடுத்த சுற்றிலும் இறுதியான சுற்று முழுவதும் வெளியே தோட்டத்திலும் பணியாளர்களும் பொது மக்களும் கூடியிருந்தனர். […]
பிம்பிசாரரின் எதிரே கலா உதாயின் வணங்கி நின்றிருந்தார். “நீங்கள் சொல்வது யாவும் எனக்குப் புரிகின்றன உதாயின். ஆனால் கௌதம புத்தர், மன்னர் பிம்பிசாரர் கருதுவது போலத் தங்கள் பாலிய சினேகிதராக இல்லை. கஸ்ஸாபா பழங்குடியினர் அக்கினி தேவனைத் தவிர வேறு யாரையும் ஏற்காதவர்கள். அவர்களே தங்களது தலைவர்களான கஸ்ஸாபா சகோதரர்களுடன் பௌத்தத்தில் இணைந்திருக்கிறார்கள்” “சிறியவனுடைய பேச்சு அதிகப்பிரசங்கமாக இருந்தால் மன்னிக்கவும். பெற்ற தாயையும் தந்தையையும், நம்பி வந்த மனைவியையும் தான் பெற்ற மகனையும், பிறந்த மண்ணையும் விடவா […]
“பௌத்த தர்மம் என்று இது அழைக்கப் படும். பௌத்ததை ஏற்கும் நம்பிக்கை உடையவர் உபாசகர்கள் என்று அழைக்கப் படுவார்கள். நம் ஐவரையும் முதல் அரஹந்தர்களாக புத்த பெருமான் அங்கீகரித்திருக்கிறார்” என்றார் கௌடின்யன். “அரஹந்தரின் பணி என்ன?” என்றார் பர்ப்பா. ” துறவு கொள்ள வருவோரை பிட்சுக்களாக பௌத்தத் துறவிகளாக ஏற்பது” “அதற்கு யார் முன் வருவார்கள்?” ” ஏற்கனவே யசன் மற்றும் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர்” “பிட்சுவாக ஒரே நாள் போதுமா?” இது பஸிகாவின் […]
நதிக்கு நீராடக் கிளம்பிய புத்தரின் உடலில் தளர்வு இருந்தது. ஆனால் அது நடையில் தென்படவில்லை. காவலுக்கு உடன் வந்த வீரர்களிடம் புத்தர் ” நான் அரச மரியாதைகள் காவல்களுக்கு அப்பாற்பட்டவன். நீங்கள் செல்லுங்கள்” என்று சொல்லி மேலே நடக்க, அவர்கள் பணிந்து நின்று விட்டனர். அவரைப் பின் தொடர முயன்ற நூற்றுக்கணக்கான மக்களிடம் அந்த வீரர்கள் “கௌதம புத்தருக்குத் தனிமையும் ஓய்வும் தேவை. நாற்பத்து ஒன்பது நாள் தவம் முடிந்த அவரைத் தொல்லை செய்யக் கூடாது. இது […]