புரட்டாசி மாதம். தேய்பிறையில் சந்திரன் இருக்குமிடமே தெரியவில்லை. இன்னும் நான்கு நாட்களில் அமாவாசை. வெய்யிற் காலமும், மழைக் காலமும் முடிந்து குளிர் நாட்களுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் பாக்கி இருந்தன. அதிக உஷ்ணமில்லாத தட்ப வெட்பம். கயை என்னும் நகரத்தை அடையும் முன்னே அதன் அருகே உள்ள ஒரு காட்டில் சித்தார்த்தன் இளைப்பாறினான். ஞானம், நிர்வாணம் என்னும் விடுதலை எனக்கு மட்டும் வேண்டுமென்றா நான் இந்தக் கடினமான வழியைத் தேர்ந்தெடுத்தேன்? துன்பங்களின்று விடுபடும் ரகசியம் எதுவோ அது […]
போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 16 “என்னைப் பிடி பார்க்கலாம்” என்று ராகுலன் ஓட நந்தா துரத்திக் கொண்டு ஓடினான். உப்பரிகையிலிருந்த யசோதரா மற்றும் ராணி பஜாபதி கோதமி கண்ணில் இருவரும் மின்னலாகத் தோன்றி மறைந்தது தான். திடீரென மாடிப்படியில் தடதடவென இருவரும் ஓடி வரும் சத்தம் கேட்டது. “அண்ணி ராகுலனை நான் பிடித்து விட்டேன். அவன் தோற்று விட்டான். அதை ஒப்புக் கொள்ளச் சொல்லுங்கள்” என்றான். “நேற்று மாலை என்ன […]
போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 15 மகாராணி பஜாபதி கோதமி, மகன் நந்தாவின் நெற்றியின் மீது ஈரத்துணியை மாற்றிக் கொண்டிருந்தார். ஒரு பணிப்பெண் மென்மையான குரலில் ” ராஜகுமாரி யசோதரா அவர்களும் குழந்தை இளவரசர் ராகுலனும் தங்களைக் காண வருகிறார்கள்” என்றாள். சற்று நேரம் கழித்து ராணி கோதமி தனது அறைக்குள் நுழைந்த போது யசோதரா எழுந்து அவர் பாதம் தொட்டு வணங்கினாள். ராகுலனிடம் வணங்கும்படி கூற அவன் மலங்க மலங்க […]
போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 14 கபிலவாஸ்துவின் தெருக்கள் எல்லாம் விழாக் கோலம் பூண்டிருந்தன. காலையின் என்னேரத்திலும் மன்னர் வருகை இருக்கலாம் என எண்ணி மக்கள் வழி நெடுக இருமருங்கும் காத்திருந்தனர். வண்ணமிகு தோரணங்கள் அவர் செல்லும் வழியைத் தெரிவித்தன. மன்னரை மட்டுமன்றி மன்னர் குடும்பத்தில் அனைவரயுமே ஒரே நேரத்தில் காண்பதற்கு இது நல்ல வாய்ப்பு. பெண்கள் பெரிய எண்ணிக்கையில் குழுமியிருந்தனர். இளவரசர் சித்தார்த்தரின் மகன் ராகுலனை அவர்களில் மிகக் குறைவானோரே […]
யசோதராவின் பணிப்பெண் ஒருத்தி “அம்மா… தோட்டக்காரன் ஒருவன் தங்களைக் காண விரும்புகிறான்” என்றாள். அந்தப்புரத்துக்குள் ஆண்களுக்கு அனுமதியில்லை என்பது விதி. ஆனால் ராணியோ இளவரசியோ அனுமதித்தால் அவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர். “வரச் சொல்”. ஒரு தோட்டக்காரன் இளைஞன் கூப்பிய கைகளுடனேயே பேசினான் “இளவரசியார் வாழ்க. தாங்கள் ஒரு பறவை அல்லது விலங்கு உயிர் நீத்திருந்தால் தெரிவிக்கச் சொல்லி இருந்தீர்கள். ஒரு பெரிய பஞ்சவர்ணக்கிளி இறந்து கிடக்கிறது” என்றான். “நான் வரும் வரை மாளிகை வாயிலில் காத்திரு” என்றாள். […]
கதைகள் கூரையில் தங்கத் தகடுகள் பதிக்கப் பட்டு முன்பக்கம் ஒரு மயிலின் வடிவமும் பக்கவாட்டில் சிறகுகளை விரித்தது போலவும் சித்தார்த்தனின் ரதத்தின் அமைப்பு நான்கு சிறு தூண்களில் இருந்து நவமணி மாலைகள் நீண்டு தொங்கி அசைந்தன. பக்கவாட்டில் இருந்த பட்டுத் திரைகளை யசோதரா ஓரமாக ஒதுக்கச் சொல்லி ரதத்தில் ஏறினாள். நுட்ப்மான மர வேலைப்பாடுகள் ரதமெங்கும் செய்யப்பட்டிருந்தன. சக்கரங்களில் பதிக்கப்பட்டிருந்த வெண்கலப் பட்டைகள் பளபளத்தன. ராகுலன் அவள் மடியில் அமர்ந்தபடி உற்சாகமாய்ப் புன்னகைத்தான். “குதிரையை வேகமாகப் போகச் […]
போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 11 சத்யானந்தன் மகாராணி பஜாபதி கோதமி அனுப்பிய பணிப்பெண் யசோதராவின் மாளிகையில் அவளது சயன அறை வாசலில் நின்றாள். அங்கே தயாராக நிற்கும் இரு பணிப்பெண்களைக் காணவில்லை. மெதுவாக அறைக்குள் எட்டிப் பார்த்தாள். அங்கே யசோதாரா ராகுலன் இருவருமே இல்லை. பூஜையறையின் வாசலில் நின்ற பணிப்பெண்ணிடம் விசாரித்தாள். இளவரசி ராகுலனுடன் நந்தவனத்துக்குச் சென்றார் என்று பதில் வந்தது. பிரதான நுழை வாயிலுக்கு வந்து படிகளில் இறங்கி […]
போதி மரம் – பாகம் ஒன்று – யசோதரா – அத்தியாயம் – 10 சத்யானந்தன் யசோதரா ராணி பஜாபதி கோதமியின் அறைக்குச் சென்ற போது அவர் மலைநாட்டுப் பெண்கள் கொண்டு வந்திருந்த கம்பளி, சால்வைகள், விரிப்புகள், ஜமக்காளங்களைப் பார்த்தபடி இருந்தார். “வா..யசோதரா.. நீயும் தேர்ந்தெடு.. குளிர்கால மாளிகை தயாராகிக் கொண்டிருக்கிறது”. யசோதராவும் மரியாதைக்காக சிலவற்றைத் தேர்வு செய்தாள். மலைப்புரத்துப் பெண்களுக்கு மூக்கு மிகவும் சிறியதாகவும் கூர்மையற்றும் இருந்தது. குள்ளமாக இருந்தனர். அவர்கள் அணிந்திருந்த பாசி மணி மாலைகள் வண்ண […]
யசோதராவின் சயன அறை வாயிலில் நிழலாடியது. “இளவரசிக்கு வந்தனம். தங்களது தாய் கோலி நாட்டு மகாராணி பமீதா அவர்களிடமிருந்து லிகிதம் வந்துள்ளது” என்றாள் பணிப்பெண். ” அந்தத் தூதுவனை வரச் சொல் ” என்றாள் யசோதரா. தூதுவன் அறையின் வாயிலில் கிடையாக விழுந்து வணங்கினான். “இளவரசி யசோதரா, இளவரசர் சித்தார்த்தர், மன்னர் சுத்தோத்தனர் வாழ்க. கபிலவாஸ்துவில் என்றும் மங்களம் தழைக்கட்டும்” “வருக தூதுவரே. உங்கள் பயணம் இனிதாயிருந்ததா?” “ஆம் இளவரசி. தாங்களும் ராகுலனும் நலம் தானே?” “நலமே. […]
“நேற்றிரவு இளவரசி யசோதரா மாளிகையில் ராஜ வைத்தியர் விரைந்து வந்தாராமே? இரவில் நீங்கள் யாருமே தூங்கவில்லையா?” என்றாள் ரத்ன மாலா. பெரிய மர உரலில் கெட்டித்தயிர். அதன் மத்தியில் மூன்றடி நீளமுள்ள ஒரு மத்து. அவள் லாகவமாக கயிற்றால் கட்டி முன்னும் பின்னுமாய் அசைக்கக் கடைந்து கொண்டிருந்தது மத்து. அது சரியாமல் சுவரிலிருந்து நீண்ட ஒரு வெண்கலக் கொக்கியின் முனையில் இருந்த வளையத்துள்ளே சுழன்றது. “அதை ஏன் கேட்கிறாய்? இளவரசிக்கு சித்தார்த்தர் காடுகளில் வைராகியாகத் திரிகிறார் என்று […]