இதனை, மீறல் இலக்கியக் கழகத்தின் சார்பாக நடைபெற்ற, கனிமொழி ஜி யின் ,’கோடை நகர்ந்த கதை’, விமர்சன அரங்கிற்கு தலைமையேற்றுப் பேசியதன் கட்டுரை வடிவம் எனக்கொள்ளலாம். கவிதைகளை வாசிப்பதும் கவிதைகள் குறித்துப் பேசுவதும் கவிதைகளை முன்வைத்து இதுபோன்ற அரங்குகளில் உரையாற்றுவதும் என் மனத்திற்கு மிகவும் நிறைவு தருகிற விஷயங்களாகவே எப்போதும் உணர்கிறேன். . ஒரு கவிதையை வாசகன் அணுகும் போது அவனுள் இருக்கும் ரசனை, மனோபாவம்,கருத்தியல், கோட்பாடு என பல காரணிகளும் பங்கு பெறுகின்றன என்பதை […]
சதுரங்க விளையாட்டில்,காய்களுக்கு பிரத்யேகமான செயல்பாட்டுத்தளம் கட்டமைக்கப் பட்டுள்ளது.செக் அண்ட் மேட் என்னும் இலக்கின் புள்ளியாய் இருக்கும் ராஜா, மேல் கீழ் வல இடமென ஒற்றைக் கட்டம் நகர்தலே சாத்தியம்.ராணியோ எல்லாவிதமான விஸ்தீரணங்களோடும் நேர், கோணம் என்று அனைத்து நகர்தலுக்குமானது. பிஷப் எப்போதும் நேரின்றி கோணங்களில் மட்டும். சிப்பாய் முதல் நகர்தலில் இருகட்டமும் பின் ஒன்றாய். யானையின் நகர்தல் நேர்த்திசை மட்டும்.குதிரை தான் தாவுதலோடு ,’ட; வடிவில் சட்டெனப் பெயறும்.எல்லா நகர்தலும் எதிர்வண்ணக் காய்களை வெட்டுவதையும் உட்படுத்தியது தான்.வெட்டுவது […]
(கவிஞர் அகிலா எழுதிய, ‘மழையிடம் மௌனங்கள் இல்லை’, கவிதை நூலினை முன்வைத்து) கவிஞர் அகிலாவின், “மழையிடம் மௌனங்கள் இல்லை” , என்னும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டு உரையாற்றுகிற வாய்ப்பினை வழங்கியதற்காக முதலில் என் அன்பும் நன்றியும். நவீன தமிழ்க்கவிதைச் சூழலில் கவிதைகளுக்கான பாடுபொருள்கள் மிகுந்த பெரும் பரப்பைக் கொண்டிருக்கின்றனவெனலாம். சமகாலத்தின் வாழ்வியல் சூழல் கொடுக்கிற பல்வேறு பிரத்யேகமான அனுபவங்கள் பயன்பாட்டுப் பொருள்கள் என இதுகாறும் தமிழ்க்கவிதை எதிர் கொள்ளாத பல விஷயங்களைப் பேசுபவையாக இருக்கின்றன. இப்படியான, சமகாலத்தின் […]
(09-08-2016 அன்று ’இலக்கிய வீதி’, நிகழ்வில் பாரதிகிருஷ்ணகுமார் ஆற்றிய உரையைச் செவிமடுத்தவனாய்) கடந்த 09-08-2016 அன்று இலக்கிய வீதி சார்பாக சென்னை பாரதிய வித்யா பவனில் தொ.மு.சி. ரகுநாதன்- மறுவாசிப்பு என்னும் இலக்கியச் சொற்பொழிவு நடந்தது. நிகழ்வில் கலந்து கொண்டு தமிழின் மிகச்சிறந்த சொற்பொழிவாளர்களில் ஒருவரான பாரதிகிருஷ்ணகுமார் உரையாற்றினார். அரங்கம் நிரம்பியிருந்தது. நிரம்பியிருப்பது முக்கியமல்ல. இருந்தவர்கள் அனைவரும் செவிகளைத்தவிர எல்லாவற்றையும் ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்திருந்தனர் என்பது தான் சிறப்பு. திறந்து வைத்த […]
கவிநுகர் பொழுது தொடரின் எட்டாவது கட்டுரையாக ,செந்தில் பாலாவின்,’மனிதர்களைக் கற்றுக்கொண்டு போகிறவன்’,கவிதை நூல் குறித்து எழுதுவது மகிழ்ச்சி.ஏற்கனவே இந்நூல் குறித்து நிகழ்வொன்றில் பேசியதன் கட்டுரை வடிவம் என்று கூடச் சொல்லலாம். நூலின் பின் அட்டையில்,’இருட்டும் வெளிச்சமுமாய் பிரவாகிப்பவை அவரது கவிதைகள்.வாழ்வெதிர்வுகளில் உதித்த கவிதைகளும், ஓய்வுகளில் விழித்த ஓவியங்களும் அவருக்கு மட்டுமன்றி எல்லோருக்குமாய் பல்வேறு அனுபவங்களைச் சுமந்து நிற்கின்றன’ , என்னும் குறிப்பு இருக்கிறது. கவிதைகளை வாசிக்கும்போது, தொடக்கத்தில் சிறு சிரமம் இருந்தது.மொழியில் சற்று சிடுக்குகள் இருப்பது மட்டும் […]
கவிதைக்கான பாடு பொருளைக் கவிஞன் எவ்விதம் கண்டடைகிறான். அவன் வாழும் சூழல் தான் அவனுக்குத் தருகிறது. தன்னைச் சுற்றி நடக்கும் பல விஷயங்கள் அவனைப் பாதிக்கிறது; நேர்மறையாகவோ அல்லது எதிர் மறையாகவோ. அவனின் கவனத்திற்கு வரும் அநேக விஷயங்களில், எல்லா தருணங்களிலும் எல்லாவற்றையுமே எழுதும் மன நிலை உருவாதில்லை;எழுதுவதுமில்லை. அன்றாட வாழ்வின் பல நிகழ்வுகள் தான் பல கவிஞர்களின் பாடு பொருளாகின்றன.அதனாலே தான் கவிதை காலத்தின் கண்ணாடி என்கிற ஒரு அடையாளத்தைப் பெறமுடிகிறது. சமகாலத்தில் தன்னை,தன்னைச் சுற்றி […]
(அன்பாதவனின்,’உயிர் மழை பொழிய வா!’, கவிதை நூலினை முன் வைத்து) தமிழ் இலக்கியச் சூழலில் அன்பாதவன் தொடர்ந்து இயங்கி வருபவர்.கவிதை,சிறுகதை,கட்டுரை,விமர்சனம் என்று அனைத்துத் துறைகளிலும் தனது பங்களிப்பைச் செய்து வருபவர். அண்மையில், அன்பாதவனின், ’உயிர் மழை பொழிய வா!’, என்னும் கவிதை நூலினை நறுமகை வெளியிட்டிருக்கிறது. அந்த நூலின் வெளியீட்டு விழா 06-08-2016 அன்று விழுப்புரத்தில் நடைபெற்றது. அவ்விழாவினில் பங்கு கொண்டு உரையாற்றினேன். நூலின் முன்னுரையில், சக்திஜோதி முக்கியமான ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டிருக்கிறார். “பொதுவாக ஆண்கள் […]
தமிழ்மணவாளன் சமகாலக் கவிதைகளைத் தொடர்ந்து வாசிக்கிறபோது, வடிவம் சார்ந்தும் உள்ளீடு சார்ந்தும் பல்வேறு விதமான கவிதைகள் எழுதப்படுவதை அறியமுடியும் . ஒவ்வொருவருக்கும் வாய்க்கும் வாழ்க்கைச் சூழல் அவருக்கான படைப்பின் கருவைத் தீர்மானிக்கிறது; அல்லது தீர்மானிக்கும் உந்துதலைத் தருகிறது.ஈழவாணியின் , ‘மூக்குத்திப் பூ ‘,தொகுப்பை வாசிக்கக் கிடைத்த வாய்ப்பின் பின் , அதன் மீதான எனது கருத்துகளைப் பதிவு செய்ய விரும்புகிறேன். முதலில், இதில் உள்ள கவிதைகளில் கணிசமானவை ஏற்கனவே, இதற்கு முன்னர் வந்த இவரின் தொகுப்புகளில் இடம்பெற்றவை.அவற்றிலிருந்து, […]
தமிழ்மணவாளன் படைப்பாளி தான் உணர்ந்தவற்றை உணர்ந்தவாறு வெளிப்படுத்த, எழுத்தினை ஓர் ஊடகமாகப் பயன்படுத்துகிறான். அதிலும், கவிஞன் தன் அனுபவத்தை வாசக அனுபவமாக மாற்றும் முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறான்.”உள்ளத்து உள்ளது கவிதை, உண்மை உரைப்பது கவிதை’, என்றாலும், உள்ளத்தில் உள்ளதை உள்ளவாறு உரைப்பதை விடவும் உணர்ந்தவாறு வாசகன் உணருமாறு உரைக்கும் போது அது சிறந்த படைப்பாக மாறிவிடுகிறது. “ஒவ்வொரு கோணத்திலும் கவிதை என்பது உணர்ச்சிகளின் மொழி,”என்பார் வின்செஸ்டர். சீராளன் ஜெயந்தனின் ,’மின் புறா கவிதைகள்’, ஏற்படுத்திய வாசிப்பனுபவத்தை பகிர்ந்து […]
—————————– — கவிதை, கவிதை குறித்த உரையாடல்,கவிதை குறித்த கருத்துப் பகிர்வுகள், பார்வைகள், நிகழ்வுகள், கூட்டங்கள் எனஅமைந்த என் இலக்கியச் செயல்பாட்டின் நீட்சியாகவே எனது முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்பையும் ‘ நவீன தமிழ்க்கவிதைகளில் நாடகக் கூறுகள்: காலமும் வெளியும்’, என்பதாக தேர்வு செய்ய நேர்ந்தது. கவிதை ஒரு போதும் என்னை விட்டு விலகுவதில்லை. கவிதை குறித்த அறிமுகம் கிடைத்ததற்குப் பின் கவிதை எப்போதும் உடன் பயணி. அப்பயணத்தில், கவிதை குறித்த வரையறைகள் மாறி மாறி வந்திருக்கின்றன. […]