வே.ம.அருச்சுணன் – மலேசியா மாலை மணி ஐந்து ஆனதும், ‘அப்பாடா…!’ பெருமூச்சு விடுகிறேன். இன்று வெள்ளிக்கிழமை. நல்லபடியா வேலை முடிந்ததில் மனதுக்குள் சின்னதாய் ஒரு மகிழ்ச்சி! அடுத்து வரும் இரண்டு நாட்கள், சனியும்,ஞாயிறும் கம்பனி ஊழியர் அனைவருக்கும் விடுமுறை. இரண்டு நாட்கள் பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக இருக்கலாம். பிள்ளைகள் விரும்பும் உணவுகளை ருசியா சமைத்துக் கொடுக்கலாம். வழக்கம் போல இன்று, மாலையில் கோவிலுக்குச் செல்ல வேண்டுமே! “மைமுனா…கமி பாலெக் செக்காராங்” தோழி மைமூனாவுடன் வீட்டுக்குப் புறப்படுகிறேன். […]
நலவேந்தன் அருச்சுணன் வேலு – மலேசியா – “போச்சி…போச்சி…கிடைக்கக்கூடாதுன்னு நினைச்சேனே…! ” “ஏன் மனு கவலப்படுரே….? இது ஒரு நல்ல வாய்ப்பு….! இத நீ நல்லா பயன் படுத்திக்கனும்.இதனாலே நாம எந்த ஒரு நஷ்டமும் அடையப்போறதில்ல…” “நீ கொஞ்ச சும்மா இரு இரேனு…” “நான் சொல்லறதச் சொல்லிப்புட்டேன்….அதுக்கப்பறம் உன் இஷ்டம்” […]
மாலை வேளையில் அது. கோவில் அலுவலகத்தில் தலைவரும் செயலாளரும் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் தீபாவளி விருந்து நிகழ்வு பற்றி தீவிர ஆலோசனை செய்கின்றனர். “காளி…இந்த ஆண்டு நம்ம ‘கம்போங் மிஸ்கின்’ கோவில்ல தீபாவளி விருந்த நிகழ்ச்சியை மிகச்சிறப்பா நடத்திடனும்னு நினைக்கிறேன்…. நீ என்னப்பா சொல்ற?” மீசையை முறுக்கியபடி தலைவர் மாயாண்டி கேட்கிறார். “புதுசா நான் என்ன சொல்லப் போறேன் தலைவரே? பல வருசமா தீபாவளி விருந்து நிகழ்ச்சிய நடத்தி வரோம். இந்தப் புறம்போக்கு நிலத்துல வாழ்ற ஏழை […]
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் கடந்த 20.3.2016 ஆம் நாள் பேராசிரியர் இலக்கியச் செம்மல் ரெ.கார்த்திகேசு அவர்கள் பற்றிய முழு நாள் படைப்பிலக்கியக் கருத்தரங்கம் மலாயாப் பல்கழகத்தில் வெகு விமர்சியாக நடைபெற்றது. இந்நிகழ்வின் ஆலோசகரும் சங்கத்தின் தலைவருமான திரு.மன்னர் மன்னன் மருதை அவர்களின் ஆலோசனையுடன் ஏற்பாட்டுக்குத் குழுத்தலைவராக முன்னாள் சங்கத் தலைவரும், இன்றைய அயலகத் தொடர்புக் குழுத் தலைவருமான திரு.பெ.இராஜேந்திரன் அவர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு மிகச்சிறப்பாக நடந்தேறியது. நிகழ்வின் செயலாளர் திருமதி.விஜயராணி செல்லப்பா நிகழ்வு தடையின்றி நடைபெற […]
வே.ம.அருச்சுணன் மலேசியாமதிய உணவு வேளைக்குப் பின்னரும் ‘‘ஸ்ரீ செம்புர்ணா’ இருபத்து நான்குமணி நேர உணவகத்தில் மக்கள் கூட்டம் குறைந்தபாடில்லை. சுவைமிகுந்தஉணவுகளுக்குப் பெயர் பெற்ற உணவகம் என்பதால் ஒவ்வொரு வினாடியும் அங்குவாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொய்வில்லாமல் இயங்கி கொண்டிருக்கிறது. சுவை மிகுந்த பிரியாணியைச் சாப்பிட வேற்று இனத்தவர்களும் அங்குபெருமளவில் கூடுவது வியப்பானத் தகவல். மருத்துவ சோதனைக்கு மனைவியை அழைத்துச் சென்று திரும்பும் போதெல்லாம்வழியில் இருக்கும் அந்த உணவகத்திற்குத் தவறாமல் மனைவியை நான் அழைத்துச்செல்வது வழக்கம். சுவையான உணவுக்காக மட்டுமல்லாமல் உணவகத்தின் […]
வே.ம.அருச்சுணன் – மலேசியா தைப்பூசம் 2016 கோலாலம்பூர்,ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தலைவர் தான்ஸ்ரீ ஆர்.நடராஜா அவர்களின் தலைமையில் பத்துமலைத் தைப்பூசத் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்ததுள்ளது.இதற்கு முக்கியக் காரணகர்த்தாவாக இருக்கும் அவருக்கு இவ்வேளயில் நமது வாழ்த்துகளையும் நன்றிகளையும் மனப்பூர்வமாகத் தெரிவித்துக் கொள்வோம். அவரது பணி தொடர்ந்து வரும் ஆண்டுகளிலும் இனிதே அமைய வாழ்த்துவோம். இவ்விழா மிகச்சிறப்பாக நடைபெறுவதற்குப் பல்வேறு தரப்புகளின் பூரண ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.குறிப்பாக தைப்பூசத் திருவிழா தொடங்கிய நாள் முதல் அவ்விழா இனிதே முடியும் வரையில் […]
சிறுகதை: 29.10.2015 வே.ம.அருச்சுணன் வாசல் கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தபோது நான் திடுக்கிட்டுப்போகிறேன்.நடுகடலில் மிதக்கும் கப்பல் போல் என் வீடு தண்ணீரில் இருந்தது. அவசரமாக முற்றத்திற்கு விரைகிறேன்.கூடவே என் மனைவி கமலமும் வருகிறாள். வெளியே கண்ணுக்கு எட்டிய தூரம் பார்வையைச் செலுத்துகிறேன்.தோட்டத்தில் இருக்கும் அனைத்து வீடுகளும் வெள்ளத்தால் சூழப்பட்டிருந்தன. நேற்றிரவு பெய்த கடும் மழையினால் சுமார் இரண்டு மீட்டர் அளவிற்குத் தோட்டமெங்கும் வெள்ளக் காடு. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த […]
“காளி…இந்த ஆண்டு நம்ம ‘கம்போங் மிஸ்கின்’ கோவில் திருவிழாவை மிகச்சிறப்பா நடத்திடனும்னு நினைக்கிறேன்…. நீ என்னப்பா சொல்ற?” மீசையை முறுக்கியபடி தலைவர் முத்து கேட்கிறார். “புதுசா நான் என்ன சொல்லப் போறேன் தலைவரே? நம்மோடு இந்தப் புறம்போக்கு நிலத்துல வாழ்ற ஏழை மக்கள் வருசத்துல ஒரு நாளாவது சந்தோசமா ஆட்டிறைச்சுக் கறியோடு வயிறாறச் சாப்பிடனும். நாம கோயில் கட்டிப் பத்து வருசமாச்சு. அதனால, இந்தப் பத்தாமாண்டு கோவில் திருவிழாவில பத்துக்கிடாக்களை வெட்டி நம்ம முனியாண்டி சாமிக்குப் […]
அன்று காலை முதலே அருளினிக்குக் காலும் ஓடல கையும் ஓடல.சம்பாத்தியத்தின் இறுதி நாளை எட்டிவிட்டோமே என்ற எண்ணம் நெஞ்சுக் குழியில் ஆழமாக இறங்கி அவரை நிதானமிழக்கச் செய்துக்கொண்டிருந்தது. மதியம் உணவு வேளை நெருங்கியும் அந்த எண்ணம் தனியாமல் ஆர்பரிக்கும் கடல் அலையாய் மனதில் அலைமோதியது.இன்னும் அரை நாள் பொழுது மட்டுமே எஞ்சியுள்ளது என்று கவலை நெற்றிப் பொட்டில் தெரித்துக் கொண்டிருந்த வலி விலைவாசி போல ஏறிக்கொண்டிருந்தது. உற்சாகத்தை தொலைத்தவராய்த் தளர்ந்த நடையோடு தோழியுடன் உணவு விடுதிக்குச் செல்கிறார் […]
வணக்கம்,மலேசியாவில் மிக முக்கியமான தமிழ் எழுத்தாளர் திரு.பாலகோபால நம்பியார் அவர்கள் புது டெல்லியில் காலமானார்.அவருக்கு இக்கவிதை சமர்ப்பனம். 9.5.2015 எழுத்தாளனை அதிகம் நேசித்தவன் நீ வே.ம.அருச்சுணன் – மலேசியா பாலா, எங்களையெல்லாம் விட்டு திடீரென பிரிந்துவிட்டீரே…..! இதுவென்ன கொடுமை…..? நாங்கள் என்ன குறை செய்தோம்……? பிறந்த நாள் நிகழ்வை குடும்பத்தோடு இரண்டு நாட்களுக்கு முன்புதானே கொண்டாடினீர்………? நேற்று இருந்தோர் இன்றில்லை என்ற கதையாகிப்போனதே……….! கிள்ளான் வாசகர் எழுத்தாளர் இயக்கம் இந்நாட்டு இலக்கியவாதிகளின் அரவணைப்பு இல்லம் அவ்வில்லத்தின் வரவேற்பு […]