8 சித்தப்பா நான் பிறந்த சிலாங்கூர் மாநிலம் சிறப்பான மாநிலம் என்பார்.அதைக் கேட்டு மகிந்து போவேன்! கிள்ளானில் பிறந்ததற்காகப் பெருமையும் அடைவேன்.கிள்ளான் அரசர் வாழும் ‘அரச நகரம்’ .அந்தகைய நகரில் நான் வாழ்வது எனக்குப் பெருமை அல்லவா….! மலேசியாவில்,சிலாங்கூர் மாநிலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்றால் அது மிகையில்லை! காப்பார் பட்டணத்தில்தான் மலேசியாவிலேயே அதிகமாக தமிழர்கள் வாழும் இடம் என்ற தகவலையும் சித்தப்பா கூறக்கேட்டிருக்கிறேன். பொதுத்தேர்தலில் காப்பார் தொகுதியில் எந்தக் கட்சியைச் […]
6 கடவுள்கள் சில வேளைகளில் தோட்டத்தை ஒட்டியுள்ள பச்சைக் காட்டிலிருந் பன்றிகள் இப்படித் தென்படுவதுண்டு. ஒருநாள் பால்மரம் வெட்டும் தொழிலாளர்களைக் கண்காணித்துக் கொண்டுவருகையில் தெய்வநாயகம் கங்காணியைத் திடீரெனக் கரடி தாக்கிக் காயப்படுத்தி விட்டது! எம்பிமணியம், காளி, மலையாளத்துக்கிருஷ்ணம், தாசன்மற்றும் கோட்டைக்கறுப்பன் ஆகியயோர் வழக்கமாக ஒவ்வொரு வார இறுதியிலும் பன்றி வேட்டைக்குப் பத்து நாய்களோடு செல்லும் அவர்கள் சிறிய, பெரிய அளவிலானப் பன்றியோடுதான் வீடு திரும்புவார்கள்.வெறும் கையுடன் ஒரு நாளும் வீடு திரும்பியதில்லை! பன்றியோடு […]
4 காலையில் வெற்றி குளிர்சாதனப்பெட்டியின் கதவைத் திறந்து உள்ளே இருந்த போத்தலிலுள்ள குளிர்ந்த நீரை எடுத்து வாயில் ஊற்றிக் கொள்கிறான்! வயிற்றில் சில்லென்று இறங்கிய நீர் அவனுக்குச் சிறிதளவு இதமான உணர்வைக் கொடுத்திருக்க வேண்டும்.தன்னுள் எதையோ நினைத்துக் கொண்டவனாகத் தலையை ஆட்டிக்கொள்கிறான் . ஆரோக்கிமான காலை உணவு அன்றையப் பணிகளைத் தொடங்க எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து கொண்டவனாக இருந்தும் எந்தவொரு சத்துமில்லா உணவு எதனையும் உண்ணாமல் காலியான வயிற்ரோடு அலுவலகம் செல்வதை எண்ணி நொந்து கொள்கிறான்! […]
3 சிறிய குடும்பம் மூவர் கொண்டது அவனது சிறியக் குடும்பம்.பெற்றோருக்கு ஒரே பிள்ளை பார்த்திபன். அவனைத் தவிற அந்த வீட்டில் யாரும் இல்லை. அந்தக் காலை வேளையில் வீடு மிகவும் அமைதியுடன் காணப்படுகிறது.அறையின் சன்னல் வழி வெளியே பார்க்கிறான்.அக்கம் பக்கத்திலுள்ள வீடுகளும் அமைதியில் மூழ்கியிருந்தன. வேலைக்குச் செல்வோரின் வாகனங்கள் மட்டும் சாலையில் நிதானமுடன் சென்று கொண்டிருந்தன.பண வசதி படைத்தவர்களும் கல்வியில் சிறந்தவர்களும் வாழும் குடியிருப்பு என்ற ஒரு மதிப்பீட்டுக்கு உள்ளடங்கிப்போன இடம் என்பதால் அனாவசியப் பேர்வளிகளும் அரட்டை […]
“முனுசாமி….முனுசாமி…! ” “அட….மாரிமுத்துவா….? என்னப்பா…..சவுக்கியமா…?” மனைவிக்கு உதவியாக சனிக்கிழமை சந்தையில் காய்கறிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்த முனுசாமி தன் கையில் வைத்திருந்த கூடையை மனைவியிடம் கொடுத்துவிட்டு அழைத்த நண்பனை நோக்கிச் செல்கிறார் முனுசாமி. “நல்ல சவுக்கியமா இருக்கேன் முனுசாமி…..!” சந்தித்து பல வருடங்களாகியும்,தன்னை நினைவில் வைத்திருக்கும் நண்பனை நோக்கி ஆவலுடன் செல்கிறார் மாரிமுத்து. “சௌக்கியத்துக்கு என்னப்பா குறை மாரிமுத்து….?ஆண்டவன் புண்ணியத்தால நான் நல்லா இருக்கேன்…!” முனுசாமி தன் பால்ய நண்பனைக் கண்ட மகிழ்வில் அவரைக்கட்டிப் பிடித்துக் கொள்கிறார் […]
3 சிறிய குடும்பம் மூவர் கொண்டது அவனது சிறியக் குடும்பம்.பெற்றோருக்கு ஒரே பிள்ளை பார்த்திபன். அவனைத் தவிற அந்த வீட்டில் யாரும் இல்லை. அந்தக் காலை வேளையில் வீடு மிகவும் அமைதியுடன் காணப்படுகிறது.அறையின் சன்னல் வழி வெளியே பார்க்கிறான்.அக்கம் பக்கத்திலுள்ள வீடுகளும் அமைதியில் மூழ்கியிருந்தன. வேலைக்குச் செல்வோரின் வாகனங்கள் மட்டும் சாலையில் நிதானமுடன் சென்று கொண்டிருந்தன.பண வசதி படைத்தவர்களும் கல்வியில் சிறந்தவர்களும் வாழும் குடியிருப்பு என்ற ஒரு மதிப்பீட்டுக்கு உள்ளடங்கிப்போன இடம் என்பதால் அனாவசியப் பேர்வளிகளும் அரட்டை […]
1 அம்பிகை “பார்த்திபா ……! பார்த்திபா…..!’’ “என்னம்மா……?” “படுக்கைய விட்டு எழுந்திரிக்காம…..இன்னும் நீ என்ன செய்யுற?” அம்மா அம்பிகை அதட்டுகிறார். “அம்மா…..!” சிணுங்குகிறான். “சின்னப்பிள்ளையா நீ….?’’ “அம்மா….சாயாங் இல்ல…. கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேம்மா….பிளீஸ்!” “நீ கொஞ்சினது போதும்……! தினம்….உன்னை எழுப்புறதே எனக்குப் பெரும் பாடாப் போவுது…!” “ஏம்மா….கோவிச்சிக்கிறீங்க….? நான்தானே உங்களுக்கு ஒரே பிள்ளை?” “அதெல்லாம் இருக்கட்டும்….!.இன்றைக்குத் திங்கட்கிழமை தெரியுதா உனக்கு!” “எனக்குத் தெரியும்மா….!” “தெரிஞ்சிக்கிட்டா….இன்னும் படுக்கையை விட்டு எழாம இருக்கே…?” “அம்மா….ஆபிஸ் எட்டு மணிக்குத்தாமா!” “பார்த்திபா…..இப்பவே மணி […]
கடந்த 10.3.2013 ஞாயிறு தலைநகர்,கிராண்ட்பசிபிக் தங்கும் விடுதியில் ‘கரிகாலன்’ விருது வழங்கும் நிகழ்வினை மலேசிய எழுத்தாளர் சங்கம் மிகச் சிறப்பாக நடத்தியது பாராட்டுக்குரியது.இந்நிகழ்வில்,மலேசிய எழுத்தாளர் முனைவர் ரெ.கார்த்திகேசு,திருமதி.ந.மகேஸ்வரி மற்றும் சிங்கை எழுத்தாளர் திரு.மா.இளங்கண்ணன்,திருமதி.கமலா அரவிந்தன் ஆகிய நால்வருக்கும் பல சான்றோர்களின் முன்னிலையில் வழங்கிய இந்நிகழ்வு சங்கத்தின் மற்றுமொரு பாராட்டுக்குரிய நிகழ்வு என்பதை சங்கத்தின் உறுப்பினர் என்ற முறையில் அந்நிகழ்வைப் பாராட்டுவது என் கடமை என்பதுடன்,விருது பெற்ற நான்கு எழுத்தாளர்களுக்கும் என் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவிப்பதில் மற்ற எழுத்தாளர்கள் […]
சங்ககால இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட டத்தோ இனியனுக்கு, குறுஞ்சி நிலத்தின் கூறுகளாகக் காணப்படும் மலையும் மலையைச் சார்ந்த இடமும் மிகவும் பிடிக்கும். மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழை ஒரு பாடமாக எடுத்து தமிழ் இலக்கியங்களை ஆழமாகப் பயின்று தமிழின் இனிமையைக் கண்டவர்.அதன் எதிரொலியாக அவரது வாழ்க்கையும் இயற்கையோடு இரண்டரக் கலந்தவொன்றாகிவிட்டது. மலைச்சரிவில் அமைந்துள்ள தனது இரட்டை மாடி வீட்டின் ‘பல்கனி’ யில் நின்றவாறு இளஞ்சிவப்பில் காணப்படும் காலைச் சூரியனின் உதயத்தைப் பார்த்து இரசிக்கிறார். வெள்ளாடைப் […]
வே.ம.அருச்சுணன்- மலேசியா. மாத்திகா மும்முரமாகக் கிளம்பிக்கொண்டிருந்தாள்! “ஏம்மா,மாத்திகா கோயில் திருவிழாவில்தானே கலந்து கொள்ளப் போரே!” அம்மா சிவபாக்கியம் அக்கறையோடு கேட்கிறார். “ஆமாம்மா நம்ம குடியிருப்புப் பகுதியில இருக்கிற அம்மன் கோயில் திருவிழாவுக்குத்தான் போறேன். அதுக்குத்தானே இன்றைக்கு வேலைக்குச் செல்லாமல் விடுப்பு எடுத்தேன்!” பட படப்புடன் கூறுகிறாள். “கோயில் திருவிழாவுக்கு உன்னைப் போல வயசுப் பொண்ணுங்க அவசியம் போய்க் கலந்து கொண்டு இறைவனை வணங்கனும். அப்பத்தான் நம்ம கலை,கலாசாரம் இந்த நாட்டில நீடித்து வாழும் வளரும். கோயில்னா…நாலு நல்லவங்க […]