பிச்சினிக்காடு இளங்கோ தமிழ் பிறந்தபோது நாகரீகம் கூடப்பிறந்தது நாகரீகம் பிறந்தபோது தமிழ் பிறந்தே இருந்தது அந்த மூத்த தமிழுக்கும் முத்தமிழுக்கும் உங்களுக்கும் என் முதல் மரியாதை மலை வேண்டும் நதி வேண்டும் மயக்கும் அலை கடல் வேண்டும் கரை வேண்டும்-மார்கழிப் பனி வேண்டும் குளிர் வேண்டும் குளுகுளு அறை வேண்டும் குதூகலம் வேண்டும் குற்றால அருவிவேண்டும் சிரிக்கும் நிலாவேண்டும் சீண்டும் தென்றல் வேண்டும் வேண்டும் வேண்டும்- இப்படி வேண்டிய தெல்லாம் வாய்த்தால்தான் –பலருக்கு வேண்டிய கவிதைவரும் இவற்றை […]
வணக்கம். கடந்த 7 ஆண்டுகளாக “கம்பன் விழா” என்னும் விழாவின் வழி – 1. கம்பராமாயண செய்யுள்களை மனனம் செய்து விளக்கத்துடன் ஒப்புவித்தல், 2.கம்பராமாயணக் காட்சிகளை நாடகமாகப் படைத்தல், 3.கம்பராமாயண சொற்பொழிவுகள் 4.கம்பராமாயணத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகளை ஓவியமாக வரைதல் என்று பல்வேறு போட்டிகளை 12 வயது முதல் 23 வயது வரையிலான மாணவர்களுக்கும், 5. கம்ப ராமாயணக் கதை மாந்தர்களை அடிப்படையாகக் கொண்ட மாறுவேடப் போட்டிகளை 7 வயது முதல் 11 வயது வரையிலான மாணவர்களுக்கும், […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++++ https://youtu.be/ldqmfX_Jfqc http://www.bendbulletin.com/nation/5827550-151/scientists-unlocking-mystery-of-the-hum-of-earth +++++++++++++++++++ அண்டவெளிக் களிமண்ணை ஆழியில் சுற்றிக் காலக் குயவன் கைகள் முடுக்கிய பம்பரக் கோளம் ! உடுக்க டித்துக் குலுக்கும் மேளம் ! பூமி எங்கிலும் கடலடியில் பொங்கிடும் நாதம் ! ஏழிசை அல்ல, ஓம் எனும் ஓசை ! முதன்முறைப் பதிவு ! இயற்கை அன்னை வீணை நாதம் மயக்குது மாந்தரை ! துளையிட்டுக் கேட்க பூமிக்குள் நுழைவது யார் ? […]
ராம்பிரசாத் பணியாளனை பொதி மாடாக்க நிறுவனம் தந்த ‘மாதத்தின் சிறந்த பணியாளர்” பட்டத்தை பெற்று வந்தவன் வீட்டிற்குள் நுழைந்ததும் பார்வையில் படும்படி வைத்தான்… சட்டையை கழற்றி மூலையில் வீசினான்… குளியலறை சுத்தமாக இல்லையென கடிந்தான்… உணவு ருசியாக இல்லையென ஏசினான்… காலைக்குள் சட்டையை இஸ்திரி செய்துவைக்க பணித்தான்… குழந்தையின் நாப்கின்னை மாற்றச்சொன்னான்… தொலைக்காட்சி பார்த்தபடியே நள்ளிரவில் உறங்கிப்போனான்… ஒரே ஒரு விவாகரத்துக்கு பயந்து இது எதையும் வெளியே சொல்லாமல் ‘சிறந்த மனைவி’ பட்டம் பெறுகிறாள் சராசரி இந்தியப்பெண்…
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) நடுமுதுகில் நிலைகொண்டிருக்கிறது வலி. ‘இங்கே – இன்றுதான் நிஜமான நிஜம்’ என்று Thich Nhat Hanh திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டேயிருப்பது எரிச்சலூட்டுகிறது எனது காலத்தின் நீளத்தை யாராலும் கத்தரித்துவிட முடியாது. காலத்தால்கூட. வலியை வானிலை அறிக்கையாக்கி ‘மேலோ அல்லது கீழோ நகரக்கூடும்; அதிகமாகலாம் அல்லது குறையலாம் என்று வேடிக்கையாய் எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன். சிரிப்பு வரவில்லை. நகைச்சுவைத்துணுக்கல்ல வலி. நிஜம். எருதின் திண்டாட்டத்தைத் தன் கொண்டாட்டமாக எண்ணுகிறதா காக்கை என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. […]
இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகமும், இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும் இணைந்து நடத்தும் “இரா. உதயணன் இலக்கிய விருது” அயலகப்பிரிவில் இருவருக்கு அளிக்கப்படுகிறது. 1. சுப்ரபாரதிமணியன் , தமிழ்நாடு (நாவலாசிரியர் ) 2. ஹெச்.பாலசுப்ரமணியன், தில்லி ( மொழிபெயர்ப்பாளர் ) மற்றும் இலங்கை எழுத்தாளர்கள் 10 பேருக்கும் இந்த விருது இலங்கை கொழும்பு தமிழ் சங்கத்தின் அரங்கில் 16/12/17 ம் தேதிய மாலை நிகழ்ச்சியில் வழங்கப்படுகிறது என்பதை “இரா. உதயணன் இலக்கிய விருது” தலைவர் இரா. உதயணன் […]
உலகெலாம் வாழும் ஈழத்தமிழர்களின் ஓவியம் வரையும் ஆற்றலை ஒருமித்த தளத்தில் சேர்க்கவும், அவர்களின் ஆயிரம் ஓவியங்களை ஒரே நூலில் இடம்பெறச்செய்து உலகெலாம் பரம்பலடையச் செய்யும் நோக்குடனும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் இணைந்ததாக ‘ஓவியம் 1000’ எனும் ஓவியப் பெருநூல் வெளிவர ஏற்பாடாகியுள்ளது. ஏற்கனவே 32 நடுகளின் 1098 கவிஞர்களை உள்ளடக்கிய ‘1000 கவிஞர்கள் கவிதைகள்’ பெருநூலின் வெளியீட்டினைத் தொடர்ந்தே இப்பணியும் முன்னெடுக்கப்படுகின்றது. ஈழத்தினை மையமாகக் கொண்டு செயலாற்றும் இக்குழுமத்திற்கு உறுதுணையாக அனைத்து நாடுகளிலும் பணி மேம்படுத்துநர்களும், […]
ஞாழல் என்பது கொன்றை மர வகைகளில் ஒன்று. இது கடற்கரைப் பகுதிகளில்தான் காணப்படும். ‘புலிநகக்கொன்றை’ என இதைக் கூறுவார்கள். இந்தப் பத்துப் பாடல்களும் ஞாழல் தொடர்புள்ளவையாதலால் இப்பகுதி ஞாழற் பத்து எனப் பெயர் பெற்றது. ஞாழற் பத்து—1 எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழத் துவலைத் தண்துளி வீசிப் பயலை செய்தன பனிபடு துறையே [எக்கர்=நீர் கொண்டு இட்ட மணல் மேடு; பயலை=பசலை நோய்; பனிபடு துறை=குளிர்ச்சியடைந்த நீர்த்துறை] அவன் அவளை விட்டுவிட்டுப் போயிட்டான்.அவன் பிரிவால அவ வாடறா; […]
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++ என் கதையைக் கேட்பார் எங்காவது எவரேனும் உள்ளாரா, என்னோடு வாழ வந்த அந்தப் பெண்ணைப் பற்றித் தெரிந்து கொள்ள ? பெருங் கதை யுள்ள பெண்ணைப் பற்றி அறிந்தால் நீ வருத்தம் அடைவாய் ! ஆயினும் ஒருநாள் கூட வேதனைப் படாய் ! அவளொரு பெண்ணே ! ஆம் பெண்ணே ! கடந்த போன கால மெல்லாம் நினைத்த போது, விலகிச் செல்ல முனைந்தி ருக்கிறேன் கடினமாக ! […]
1. அமரத்துவம் வேண்டுமென்றே அழுக்குப் பிசுபிசுப்புப் படிந்த கந்தல்துணியை எடுத்து அந்த பிரம்மாண்டத்தின் மீது போர்த்துகிறார்கள். உன்னதத்திற்கே யுரிய இன்னிசை அந்த ழுக்குப் பொதிக்குள்ளிருந்து சன்னமாகக் கேட்கத் தொடங்குகிறது. கண்ணன் புல்லாங்குழலைக் கேட்டுக் கிறங்கிய கால்நடைகளாயன்புமிக அருகேகியவர்களை அடித்துத் துன்புறுத்தித் துரத்தியோடச் செய்வதாய் சொற்களைக் கற்களாக்கிய வன்முறையாளர்கள் அற்புதத்தை அற்பமாகக் கற்பிக்கும் பிரயத்தனத்தில் இனியான தலைமுறைகளை முழுக்காட்டவென்றே நாராசமாய் ஓசையிட்டவாறிருக்கும் கழிவுநீர்த்தொட்டிகளையும் கட்டிமுடித்தாயிற்று. அழுக்குப்பிசுபிசுப்பான அந்தப் பொதியிலிருந்து இப்பொழுது எந்த ஒலியும் கேட்கவில்லை என்றபோதும் பின்னொரு சமயம் […]