Posted inகவிதைகள்
ஊசலாடும் இலைகள்…
அருணா சுப்ரமணியன் மண்ணை அதீதம் நேசிக்கும் இலைகள் விரைவில் உதிர்ந்து விடுகின்றன... மரத்தை அதீதம் நேசிக்கும் இலைகள் நெருக்கமாய் ஒட்டிக்கொள்கின்றன... மண்ணையும் மரத்தையும் ஒன்றாய் நேசிக்கும் இலைகள் தான் கூடுவதா விலகுவதா என்ற குழப்பத்தில் ஊசலாடுகின்றன ஒரு பெருங்காற்று வீசும் வரை....