டண்டனுக்கு இந்த கூட்டம், இந்த சலசலப்பு பிடிக்கும். தூர இருந்து வேடிக்கை பார்க்க. ஒரு குழந்தையின் உற்சாகம் அவர் முகத்தில் காணும். அவர் இதைப் பற்றியெல்லாம் பேசிக் கேட்க வேண்டுமானால், கிஷோரி அமோன்கர் கச்சேரி துவங்கக் காத்திருப்பது மாதிரி தான். கூட்டம் சேர, அமைதியாக இருக்க வேண்டும். வந்து உட்கார்ந்தால் ஒரு பார்வை சுற்றுமுற்றும் ஒருத்தரும் எழுந்து போகக் கூடாது. ஒரு இருமல், தும்மல் கூடாது. பின் சுருதி சேர வேண்டும். தம்பூரா ஸ்ருதி மாத்திரம் […]
லேசாக தாமரையின் மூச்சுக் காற்றோடு மெழுகுவர்த்தியின் சுடர் தள்ளாடித் தள்ளாடித் தலையாட்டிக் கொண்டே எரிந்து அந்த அறைக்குள் மங்கிய வெளிச்சத்தை அழுது கொண்டே வாரி இறைத்துக் கொண்டிருந்தது. மெழுகு திரியின் ஒளியில் தாமரை குனிந்து உட்கார்ந்து கொண்டு நோட்டில் எதையோ எழுதிக் கொண்டிருக்கிறாள் அவளின் குனிந்த பக்கவாட்டு முகம் அந்த ஒளியில் தங்க நிலவாக தக தக வென்று மின்னிக் கொண்டிருக்கிறது. அவளது உள்ளத்தில் மட்டும் இன்று ஏனோ ஒரு நிம்மதியான மகிழ்ச்சி. காந்தி ஜெயந்தின்னு […]
The Madman – when my sorrow was born – Khalil gibran பவள சங்கரி எம் துக்கம் செனித்த தருணமதில்…..- (சோகத்தின் சுகம்) எம் துக்கம் செனித்தபோது யான் அதைக் கவனமாக, பேணிப் பாதுகாத்தேன். மேலும் பாசத்தோடு பராமரித்தேனதை. மேலும் எம் துக்கம் மற்ற உயிரினங்களைப் போன்றே, செம்மலும், சோபிதமும், மற்றும் வியத்தகு பூரிப்புடனுமே வளர்ந்தது நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நேசித்தோம். யானும் எம் துக்கமும், எங்களுக்கான […]