உகுயுர் இனக் கதைகள் (சீனா)

Spread the love
1. தேவையற்ற முன்னெச்சரிக்கை
ஒரு நாள் மிதியாளர் நசிர்தின் அரசரின் மாளிகையைக் கடக்க நேர்ந்தது.  அங்கு மாளிகையின் முன்னே கூட்டம் இருப்பதைக் கண்டு அருகே சென்று பார்த்தார்.  அவர்கள் தீவிரமாக ஏதோ வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
ஆர்வத்துடன் அருகே சென்று பார்த்த போது, அவர்கள் மாளிகையைச் சுற்றியிருக்கும் மதிலை உயரமாக்கிக் கொண்டிருந்தார்கள்.
எப்போதும் போல நசிர்தின், தன்னுடைய கடமையைச் செய்ய வேண்டும் என்ற காட்டாயத்தில், தன்னுடைய கருத்தைக் கூற விரும்பினார்.
அருகே மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த அமைச்சரைப் பார்த்து, “மதில் தான் நல்ல உயரமாக இருக்கிறதே! அதையேன் மேலும் உயரமாக்க வேண்டும்?” என்ற கேள்வியை எழுப்பினார்.
“நசிர்தின்.. உனக்கு என்ன தெரியும்?” என்று ஆரம்பித்த அமைச்சர், “மதிலை உயரமாக்குவதற்கு முக்கிய காரணம் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?  மாளிகையைக் பாதுகாக்கவே உயரமாக்குகிறோம். திருடர்கள் மதில் மேல் ஏறி ராஜ்யத்தின் பொக்கிஷங்களைத் திருட வரலாமில்லையா?” என்றார் கேலியும் கிண்டலுமாக.
அவர்கள் இருவரும் உரையாற்றிக் கொண்டிருப்பதைக் கண்ட அரசு ஆலோசகர்கள் அவர்கள் அருகே வந்தனர்.
“அப்படியா?” என்று கூறிவிட்டு, அமைதியாக அமைச்சரையும் அங்கு கூடிய ஆலோசகர்களையும் சில கணங்கள் உற்றுப் பார்த்து விட்டு “திருடன் வெளியிலிருந்து மதில் மேல் ஏறி உள்ள வந்து பொக்கிஷத்தைக் கவர முடியாது என்பது சரி.. ஆனால் முன்பே உள்ளே இருக்கும் திருடர்களிடமிருந்து எப்படி பொக்கிஷத்தைக் காக்க முடியும்?” என்று கேட்டு விட்டு, வந்தச் சுவடு தெரியாமல் அவ்விடத்தை விட்டு அகன்றார்.
2. கோப்பையும் ரம்பமும்
ஒரு நாள் மதியாளர் நசிர்தின் ஒரு பணக்காரக் கஞ்சன் வீட்டிற்கு விருந்தாளியாகச் சென்றார். கனவான் தன்னுடைய கோப்பையின் நுனி வரைக்கும் ஆட்டுப்பாலை விட்டு நிரப்பினார்.  ஆனால் மதியாளரின் கோப்பையில் மட்டும் பாதியளவு மட்டுமே நிரப்பினார்.
“நண்பரே.. குடியுங்கள்.. உங்களுக்கு இந்தக் கோப்பைப் பாலைத் தவிர என்னிடம் வேறெந்தச் சிறந்த பொருளும் இல்லை.. “ என்று விருந்து உபசரித்தார்.
“ஐயா..” மிகுந்த பவ்யத்துடன் மதியாளர், “முதலில் எனக்கு ஒரு ரம்பம் கிடைக்குமா?” என்று கேட்டார்.
“ரம்பமா.. எதற்கு?” என்று ஆச்சரியத்துடன் கனவான்.  “இங்கே பாருங்கள்..” என்று சொல்லி பாதியளவு பாலிருந்தக் கோப்பையை அவரிடம் கொடுத்து விட்டு, “மேல் பாதி உபயோகமற்றது என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?  ஆதை ரம்பம் கொண்டு அறுத்து எரிந்துவிட்டால், அது பயனற்றதாக இருக்காதில்லையா?” என்று மேலும் பவ்யத்துடன் கேட்டார்.
Series Navigationபாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-9)கள்ளக்காதல்