அசிங்கம்..

Spread the love

ஜே.பிரோஸ்கான்-

நேற்று ஒரு நாள்
நானும் அவனும் நண்பர்கள்
அசுசியான வார்த்தை அறுத்தல்கள்
என்றும் எமக்குள் இருந்ததில்லை
நட்பாகிய பொழுதுகளில்.
என் வெளியில் விஸ்த்தீரணம்
பிரபஞ்சம் தாண்டி பேசப்படுவதாய்
அவனுக்குள்ளாடிய சலசலப்பில் தானே
தோற்றுப் போனதாய் கவலையாகி
கண்கள் கசக்கி உறவுகள் உடைத்தெரிந்து
வெட்கித்து தவிக்கிறான்.
எனக்கு கிஞ்சித்தும் கவலையில்லை
இன்று அவனது உறவுழப்பதில்.

Series Navigationபஞ்சதந்திரம் தொடர் 57