அசோக மித்ரனும் – என்டிஆர் இலக்கிய விருதும்.

Spread the love

அசோக மித்ரனின், 82வது வயதில், அவர் பிறந்த தெலுங்கு பூமி,தனது
என்டிஆர் இலக்கிய விருதை கொடுத்து கொளரவித்துள்ளது.

அசோகமித்ரனை, நினைக்கும் போது, பழக இனிமையானவர், எளிமையானவர், எல்லாவற்றிக்கும் மேலாக, அவர் இன்றுவரை நல்ல மனிதவராகவே வாழ்ந்து வருகின்றார்.

ஆந்திர மண்ணில் விழுந்த விதை, வாழ்வில் பல இடர்பாடுகளை தாண்டி,
சென்னைக்கு வந்தவர். எல்லோரையும் வாழ வைத்த சென்னை, அசோகமித்ரனையும், கைவிடவில்லை. இன்று, தழிழ் மண்ணையும்-தெலுங்கு தேசத்தையும் இலக்கிய மூலமாக இணைத்தவர்.

சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது (2), தமிழக அரசு இலக்கிய விருது (30), லில்லி நினைவு விருது, அக்சரா விருது, பிர்லா பிலோசிப், ஐயாவா பொலுசிப் போன்ற பல இலக்கிய அடையாளங்களை தன் எழுத்தினால் பெற்றுள்ளார்.

1966- 89 வரை, கணையாழிக்கு கொளரவ ஆசிரியராக பணியாற்றி, பல இளம் எழுத்தாளர்க்கு ஊக்கம் கொடுத்து, நல்ல எழுத்துக்களை வெளி கொணர்ந்தவர்.

அசோக மித்ரன் எழுத்தில் மலர்ந்த, அப்பாவின் சினேகிதர், தண்ணீர், மானோச்ரவர் போன்ற நாவல்கள் மைல் கல்லாக பேசப்படுகின்றது.

தமிழ் சினிமாவின், திரைக்கு பின்னால், மனிதர்கள் படும் அவலங்களை,
கொடூரங்களை, அவமானங்களை, தன் அனுபவித்தில் உணர்ந்து, எழுதிய நாவல் கரைந்த நிழல்களில் தெரியும்.

இவர் சிந்தனை முழுதும், நடுத்தர மக்களின் வாழ்வைச் சுற்றியே வரும்.

அசோகமித்ரன் எழுத்தில், உணமையை உணர்ந்த அம்சன் குமார், அவரது வாழ்க்கைச் சித்தரத்தை குறும்படமாக தயாரித்துள்ளார். இது தமிழுக்கும்-அசோகமித்ரன் எழுத்திற்கும் கிடைத்த பெருமை.

18வது அட்சக்கோடு , 1977ல் வந்த நாவல். இது, 40களில், ஜதாரபாத்தில் நிகழ்ந்த பெரிய அரசியல் போராட்டத்தை வைத்து எழுதிய நாவல். அந்த சமயத்தில், அவர் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள், அவரது சக-மனிதர்கள்,வாழ்க்கை போராட்டம், சாதியின் பெயரால்,நடந்த கொடுமைகள், மனிதர்களின் பயங்கள், போலீஸ் வன்முறைகள் போன்ற பல்வேறு நிகழ்வுகளை பின்னி பிணைந்து எழுந்த நாவல் 18வது அட்ச கோடு.

82 வயதிலும், சென்னையில் நம்மோடு வாழும் அசோகமித்ரன் வாழ்வின் இருட்டையும்- வெளிச்சத்தையும் பார்த்தவர். அவரது எழுத்தும் அப்படியே !

==========================================================

Series Navigationபஞ்சதந்திரம் தொடர் 43 – பூனை வழங்கிய தீர்ப்புகுகைமனிதனும் கோடிரூபாயும் நூல்